ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்



பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 


74 நாள் சிறையிலும், 67 நாள் வெளியிலுமாக


141 நாட்களை வைக்கம் போராட்டத்துக்காகச் செலவிட்டார்.


இன்னொரு முக்கியமான செய்தி, களத்தில் தனியாக அல்ல;


மனைவி நாகம்மையுடன் நின்றார்.


எப்படித் தொடங்கியது போராட்டம்?


அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்தை உற்சவ மூர்த்தியா கவும் மூளையாகவும் முறையே கேரள காங்கிரஸ் தலை வர்கள் கே.பி.கேசவ மேனனும் ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீல கண்டன் நம்பூதிரி போன்றோர் நடத்துநராகப் போராட்டத் தைச் செயல்படுத்த, ஆலோசகரான காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சித்திரத்தை வரையலாம். இடையில் மன்னத்து பத்மநாபன் போன்றோர் பெரும் துணைவலியாக அமைந்தனர்.


1924 மார்ச் 30 அன்று கேரள காங்கிரஸ் ஆதரவில் தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர் களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். தான் கட்டாயம் வந்தே தீர வேண்டுமா என்று இரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பெரியார் கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற தகுதியிலேயே சென்றமையால், தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ராஜாஜியைப் பார்க்கச் சொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். வைக்கம் சென்ற 13 ஏப்ரல் 1924 முதல் அவர் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ந்த 29 நவம்பர் 1925 வரையான காலத்தில் பெரியார் போராட்டத்துக்குப் பங்களித்தார்.


எப்படி நடந்தது போராட்டம்?


தடைசெய்யப்பட்ட சாலைகளின் தடுக்கப்பட்ட இடங் களில் தினமும் குறைந்தது மூன்று பேர் சத்தியாகிரகம் செய் வர். 604 நாள் போராட்டம் நிகழ்ந்தது. பல நாள் பெரியார் தலைமை தாங்கினார். காவல்துறையினரின் தடியடியும் வாயடியும் குறைவின்றி நிகழ்ந்தன. வைதிகர் ஏற்பாடு செய்த அடியாட் களின் அக்கிரமங்களுக்கும் குறைவில்லை. சத்தியாகிரகிகளின் கண்ணில் சுண்ணாம்பைப் பூசிய சம்பவங்களும் நிகழ்ந்தன. மக்கள் ஆதரவைத் திரட்ட வைக்கத்தைச் சுற்றிலும் கிராமங் களிலும் சேர்த்தலை, வர்க்கலை, கோட்டயம் போன்ற நகரங் களிலெல்லாம் ஓயாமல் பிரச்சாரம் செய்தார் பெரியார். தெற்கே திருவனந்தபுரம், நாகர்கோவில் வரை அவரது பிரச் சாரப் பயணம் நீண்டது. மக்களிடமும் வியாபாரிகளிடமும் நிதி வசூலித்தார்.


வைக்கம் சத்தியாகிரகத்தை அகில இந்திய இயக்கமாக்கக் கேரளத் தலைவர்கள் கோரியபோது காந்தி இணங்கவில்லை. இயக்கம் பலவீனமாகிறதே என்று அவர்கள் வற்புறுத்திய போது அதைச் சாகவிடாமல் சென்னை மாகாணத்தவர் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார். எனவே, பெரியார் உட்பட தமிழ்நாட்டுத் தலைவர், தொண்டர்களின் பங்களிப்புக்கு காந்தியின் பொது அனுமதி இருந்தது எனக் கருதலாம். இத்தகைய வெளியார் உதவியின் இன்றியமை யாமையை காந்தியை விடவும் சமஸ்தான ரெசிடெண்ட் சி.டபிள்யூ.இ. காட்டன் சரியாக உணர்ந்திருந்தார்: “சாலையை அனைவருக்குமாகத் திறப்பது என்ற பிரச்சினை உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவே இருப்பினும், வெளியிலிருந்து மட்டும் இதற்கு உதவி வராதிருந்தால் உண்மையில் இந்த இயக்கம் எப்போதோ பிசுபிசுத்துப்போயிருக்கும்” என்று 21 ஏப்ரல் 1924 அன்றைய குறிப்பில் அவர் சொல்கிறார்.


பிந்நாளில் 1980-களில் வைக்கம் போராட்டத்தைப் பற்றிய முதல் ஆய்வு நூலை எழுதிய கேரள வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.ரவீந்திரன் “பெரியாரின் வரவினால் இயக்கத்திற்குப் புதிய உயிர் கிடைத்தது” என்று பதிந்துள்ளார். மிகச் சமீபத்தில், காந்தியின் அகிம்சை தொடர்பில் வைக்கம் போராட்டத்தை ஆய்வுசெய்து அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசபெத் கிங் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு கேரளப் பேராசிரியர் கே.கே.குசுமான் அளித்த நேர்முகத்தில் “ஒடுக்கப்பட்டவர் களின் தலைவராக இந்தியா முழுவதும் அறிமுகமாகியிருந்த பெரியார் தன் வெடிப்புறப் பேசும் திறனால் இக்கட்டான நேரத்தில் போராட்டத்தை வளர்த்தெடுத்தார்” என்று விவரித் துள்ளார்.


என்ன செய்தார் பெரியார்?


அரசினரும் கேரளரும் மெச்சும்படியாக வைக்கத்தில் பெரியார் என்னதான் செய்தார்? மக்கள் ஆதரவைத் திரட்டும் பிரச்சாரமே அவரது முதன்மையான பணி. “நாடு என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? நாட்டை பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துவிட்ட பிறகு, நாடே கோயில் சொத்துதானே!” என்று மன்னரைப் பார்த்துப் பேசினார் பெரியார். மன்னர் திருமனசைப் பாராட்டலாமே தவிர எதிர்த்து பேசுவது கூடாது என்பது திருவாங்கூர் சமஸ்தான சம்பிரதாயம்.


கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் அந்தத் தெருவில் நடக்கலாம். இந்துவான ஈழவர் நடக்க அனுமதி இல்லை. இந்த முரண் ஏன் என்பது சத்தியாகிரகிகளின் வாதங்களுள் ஒன்று. அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், அவர்களையும் வேண்டுமானால் தடுத்துவிடுகிறோம் என்று கூறினர். இதைக் கிண்டல் செய்தார் பெரியார். “நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவைப் பறித்துவிடுகிறோம் என்கிறது” என்றார்.


ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.


தீண்டாமையைக் கண்டித்து இவ்வளவு வேகமாகப் பேசியோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தலைவர்களான பெரியாரும் கோவை அய்யாமுத்துவும்தான். கிளர்ச்சிக்காரர் அனைவரையும் சிறைப்படுத்த அரசாங்கம் முயன்றது. வைக்கம் வந்த பதினைந்து நாட்களுக்குள் பெரியார் பேசுவ தற்குத் தடை விதிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் தடை போடப்பட்டது. பின்னர், அந்தத் தடை கொல்லம் மாவட்டத்துக்கும் நீண்டது. எந்தத் தடையையும் மதிக்காமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார், சமஸ்தானம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அரசாங்கம் பொறுக்க முடியாமல் ஒருகட்டத்தில் அவரைக் கைதுசெய்தது. நீதிமன்ற விசாரணையும் வைக்கத்தில் நிகழ்ந்தது. “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம் பிக்கை இல்லை. விசாரணை வெறும் வேஷம். நீதிமன்றத் துடன் ஒத்துழைக்க முடியாது” என்று அறிவித்ததோடு, “சமா தானம் உண்டுபண்ணவே நான் வைக்கத்துக்கு வந்தேன், எவ்விதமான தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயார்” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் பெரியார். இதையடுத்து நீதி மன்றம் 22 மே 1924இல் ஒரு மாத வெறுங்காவல் தண்டனை அளித்தது. ஆறுக்குட்டியில் பெரியார் அத்தண்டனையை அனுபவித்தார்.


அடுத்தடுத்த சிறைத் தண்டனைகள்


சிறையிலிருந்து விடுதலை அடைந்த பெரியார் மீண்டும் நேராக வைக்கம் போனார். ஈரோட்டுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்த அரசாங்கம், ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. “கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை அமலில் இருக்கும்போது அவரை வைக்கத்திற்குள் நுழைய ஏன் அனுமதித்தீர்கள்?” என்று மாவட்டக் காவல் துறைக் கண் காணிப்பாளரை மாவட்ட நீதிபதி கடிந்துகொண்டார். ஆனால், அரசாங்கம் உடனே கைதுசெய்யவில்லை.


அரசாங்கத்தின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் ஈடு பட்டுக்கொண்டிருந்தார். ராட்டையைப் போராட்டக் களத்தில் கொண்டுசெல்வதில் காவல் துறைக்கும் சத்தியாகிரகிகளுக்கும் பிரச்சினை எழுந்தபோது பெரியார் அதைத் தீர்த்துவைத்தார். தொடர்ந்து அவரை அரசாங்கம் வெளியில் விட்டுவைக்க வில்லை. முதல் சிறைவாசம் முடிந்து விடுதலையான 27ஆவது நாள் (18 ஜுலை 1924) மீண்டும் கைதுசெய்தது. இந்த முறையும் பெரியார் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்தார். முதல் முறை உபாயமான தண்டனை விதித்தும் 'எதிரி' திருந்த வில்லை என்பதாலும், இரண்டாம் தடவையாக அரசு உத்தரவை மீறி நடந்திருப்பதாலும் நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார்.


இம்முறை ஆறுக்குட்டி சிறையில் பெரியாரை அடைக்க வில்லை. மற்ற சத்தியாகிரகிகள் இருந்த திருவனந்தபுரத்துக்கும் அனுப்ப அரசாங்கம் விரும்பவில்லை. கோட்டயம் மாவட்டச் சிறையில் அடைக்க விரும்பியது. அதற்காக வைக்கத்திலி ருந்து புறப்பட்ட படகு, 20 மைல் தூரத்துக்குப் பிறகு பெரு மழை, புயல் காரணமாக மேலும் போக முடியாமல் திரும்பி விட்டது. வைக்கம் காவல் நிலையச் சிறையில் சில நாள் வைத் திருந்து பின் திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்கே அனுப்பி வைத்தது அரசாங்கம்.


திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலிருந்த கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் அனை வரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், பெரியார் அவ்வாறு நடத்தப்பட வில்லை. 'கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகிற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டை. இவற்றுடன் ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருந்தார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்வானோ அதைவிட இருமடங்கு வேலை செய்கிறார்.” இது பெரியாருடன் சிறையிருந்த கே.பி. கேசவ மேனனின் நேரடி சாட்சியம்.


பெரியாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள இயலாத கேசவ மேனன், பெரியாருக்கு அரசியல் கைதி தகுதி அளிக்குமாறு சிறையிலிருந்தே அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார். எனினும், விடுதலை அடையும் வரை அதற்குப் பதில் வரவில்லை என்று தன் வாழ்க்கை வரலாறான 'கடந்த கால'த்தில் குறித்துள்ளார்.


பெரியாருக்கு ஆதரவாக ராஜாஜி


பெரியாரின் நிலை ராஜாஜியையும் வருத்திற்று. பெரி யாருக்கு ஆதரவாக அரசாங்கத்தைக் கண்டித்துப் பத்திரிகை யில் எழுதினார் அவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கரைக் கடுங் காவல் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட் டிருப்பதும், அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரகிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் நியாயப்படுத்தவே முடியாதவை என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியிருந்தார் ராஜாஜி (27 ஆகஸ்ட் 1924). இந்தச் சமயத்தில் பெரியாருக்கு ராஜாஜி சூட்டிய புகழாரம் முக்கியமானது. “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல; உண்மையிலேயே!”


திரு.வி.க.வும் இக்கொடுமையைச் சாடினார். “திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட்கிறோம்” என்று மனம் நொந்தார் திரு.வி.க.


சிறை தளர்த்த முடியாத வீரர்


இரண்டாம் முறையாகச் சட்டத்தை மீறியிருப்பதால் தனிச்சலுகை எதுவும் அவருக்கு வழங்க வேண்டாம் என்ற மாவட்ட நீதிபதியின் கருத்துக்குள் அரசாங்கம் ஒளிந்து கொண்டு விடுதலை வரை துன்புறுத்தியது. புதிய மன்னர் பொறுப்பேற்றதையடுத்து 30 ஆகஸ்ட் 1924 அன்று பெரியார் உட்பட 19 சத்தியாகிரகிகள் விடுவிக்கப்பட்டனர். விதிக்கப்பட் டிருந்த கடுந்தண்டனைக்காக கேரளமும் தமிழகமும் வருந்த, விடுதலையான பெரியாரோ, நாகர்கோவிலில் பேசும்போது, “நான் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண்டாம். விடுதலைதான் என்னை வருத்தப்பட வைத்து விட்டது” என்று வேதனையையும் வேடிக்கையாக எதிர் கொண்டார்.


அடுத்து பெரியார், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்டோர் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். “பொதுச்சாலைகளில் எல்லோரும் நடமாடலாம் என்பதை அனுமதிப்பதற்குரிய அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்கிறோம். அப்படி நடக்காவிடில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்து வோம்” என்று அவ்வறிக்கையில் தெரிவித்தனர். இவ்வறிக்கை மூலம் அரசின் விடுதலையைச் சலுகையாக ஏற்காமல் அதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினர் சத்தியாகிரகிகள். கேட்டிலும் துணிந்து நின்றார் பெரியார்.


ஒன்றரை மாதங்களுக்கு மேல் சிறையிருந்த பெரியார், இந்த விடுதலைக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்பவில்லை. வைக்கத்துக்கே சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். நெடுங்கணா, நாகர்கோவில் போன்ற ஊர்களில் பத்து நாள் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி திரும்பினார். காத்திருந்ததுபோல் சென்னை மாகாணக் காவல் துறை 11ஆம் தேதி பெரியாரைக் கைது செய்தது. இந்தக் கைது ஆறு மாதம் முன்பு மயிலாப்பூரில் பேசிய அரசு விரோத பேச்சு ஒன்றுக்கானது. வேறு அரசாங்கத்தால், வேறு காரணத்துக்காக, வேறிடத்தில் கைது நிகழ்ந்திருப்பினும் அவரை மீண்டும் வைக்கத்துக்குச் செல்ல ஒட்டாமல் தடுப்பதே நோக்கம் என்று ஊகிக்கலாம். எது எப்படியோ வைக்கத்துக்கு உடனடியாகச் செல்லவிடாமல் இந்தக் கைதும் வழக்கும் அவரைத் தடுத்துவிட்டன.


பெரியார் வைக்கத்தில் இருந்த காலத்திலும் சரி பிறகும் சரி, போராட்டம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பண நெருக்கடி அதில் முதலாவது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பெரியார் வழியாக ரூ.1000 கொடுத்தது. மற்ற பிரச்சினைகளை ஆலோசித்து முடிவெடுக்க பல ஆலோசனைக் கூட்டங்கள், சமாதானத் தூதுகள், பிரச்சாரக் குழுக்கள், மகளிர் அணிகள் அவ்வப்போது உருவாயின. அவை பலவற்றில் பெரியாரும் நாகம்மையாரும் இடம்பெற்றிருந்தனர். இவ்வகையில் திவானைச் சந்தித்து சமாதானம் பேச ஏற்பட்ட எட்டுப் பேர் கொண்ட குழுவில் பெரியாரும் ஒருவர்.


பெரியார் வைக்கத்தில் போராடிக்கொண்டிருந்த காலத் தில் அங்கு வந்த தலைவர்கள் அனைவரும் அவரைக் கலந் தாலோசித்தனர். ஆரிய சமாஜத் தலைவர் சிரத்தானந்தர் போராட்டம் நலிவுற்றிருந்த ஒரு கட்டத்தில் அதை எடுத்து நடத்தவும் ஒப்புக்கொண்டார். ராஜாஜி வைக்கம் வந்தபோது காவல் நிலைய சிறையில் இருந்த பெரியாரைச் சந்தித்த பிறகே ஆசிரமம் சென்றார். வரதராஜுலு நாயுடு, எஸ்.சீனிவாச அய்யங்கார், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் சத்தியாகிரக ஆசிரமத்தில் அவரைச் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சி.வி.வேங்கட ரமண அய்யங்கார் பெரியாருடன் பிரச்சினைக் குரிய சாலைகளைப் பார்வையிட்டார். ஆக இந்திய, தமிழகத் தலைவர்கள் பலரும் பெரியாருடன் போராட்டம் குறித்து விவாதித்தனர்.


காந்தி - பெரியார் சந்திப்பு


போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். டில்லியிலி ருந்து சென்னை வழியாக வந்த காந்தியை ஈரோட்டில் (8 மார்ச் 1925) வரவேற்றுவிட்டு, வர்க்கலையில் (12 மார்ச் 1925) அவரோடு இணைந்துகொண்டார். அதேபோல், நாராயண குருவைச் சந்தித்த காந்தியுடனான சிறு குழுவில் அவர் இருந்ததையும் காவல் ஆணையர் பதிவுசெய்துள்ளார். பெரியாரைக் கலந்தாலோசித்த பிறகே ராணியாரை காந்தி சந்தித்துப் பேசியதாகப் பலவிடங்களில் பிற்காலத்தில் தெரிவித்துள்ளார் பெரியார்.


வைக்கம் வருகையின்போது காவல் துறை ஆணைய ருடன் காந்தி மேற்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் விளைபயனாய், ஓராண்டுக்கு முன்னால் பெரியாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 'ஈ.வெ.ராமசாமி நாயக்க ருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவைத் திருவாங் கூர் கவர்ன்மென்டார் வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதைக் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்” என்று காந்தி 'யங் இந்தியா'வில் (23 ஏப்ரல் 1925) தன் மகிழ்ச் சியைப் பகிர்ந்தார்.


மனைவியுடன் களம் சென்றார்


காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தலைவராகவே பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டார். தனிப்பட்ட முறையில் அல்ல; அவர் வழியாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆயிரம் ரூபாயைப் போராட்டத்துக்கு அனுப்பியது. கிடைக்கும் பெயர் விவரப்படி, 50 பேர் அளவிலான தொண்டர்களு டன் சென்று அவர் அங்கு போராடினார். தன் குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 15 மே 1924இல் வைக்கம் வந்த நாகம்மையார், தொடர்ந்து நான்கு மாதம் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. நாகர்கோவில் தலைவர்கள் சிலரும் குடும்பத்துடன் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மிக முக்கியமான செய்தி, பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 74 நாட்கள் சிறையிலும், 67 நாட்கள் வெளியிலுமாக 141 நாட்களைப் போராட்டத்துக் காகச் செலவிட்டார் என்பதாகும்.


ஆலோசகர் காந்தி கொள்கை அடிப்படையில் போராட் டத்தில் ஈடுபட்ட அயல் மதத்தவரை வெளியேற்றினார், சத்தியாகிரகிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நிறுத் தினார், அகாலியர் நிறுவியிருந்த தரும உணவுச்சாலையை மறுத்தார், அயலிலிருந்து தொண்டர்களோ நிதியோ வருவ தைத் தடைசெய்தார். இப்படியான காந்தியின் அறிவுறுத் தல்களால் போராட்டம் பல இன்னல்களைச் சந்தித்தது, இரு முறை சத்தியாகிரகிகள் நேரடியாகச் சென்று அவரிடம் முறையிட்டனர். இயக்கமும் பலவீனப்பட்டுவந்தது. எனினும், ஜார்ஜ் ஜோசப் தவிர, பொதுவெளியில் காங்கிரஸ்காரர் எவரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை, பெரியாரும் பேசவில்லை. ஒரு உண்மை சத்தியாகிரகியாகவே களத்தில் அவர் விளங் கினார். பின்னாளில் கருத்து வளர்ச்சியும், அதனால் பார்வை மாற்றமும் நேர்ந்த நிலையில் பெரியார் காந்தியின் அறிவுறுத் தல்களை விமர்சித்தார். சத்தியாகிரகத்தை நிறுத்திவிடவே காந்தியும் இராஜாஜியும் விரும்பினர் என்று இதே அறிவுறுத் தல்களையே காட்டி விமர்சித்தார்.


தீர்வு தந்த போராட்டம்


எப்படியோ நவம்பர் 1925இல் போராட்டம் - பெரியாருக்கு ஏன் காந்திக்கும்தான் - முழு மகிழ்ச்சியைத் தராத, நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் அனுமதி என்ற ஒருவகை சமாதானத்துடன் முடிவுக்குவந்தது. சத்தியாகிரகத்தின் வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்க பெரியாரைக் கேரளர் அழைத் தனர். அயலிலிருந்து கலந்துகொண்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சத்தியாகிரகத்தின் வெற்றியைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்துவிடவில்லை. தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முன்வந் திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்துக்கும் மகாத்மாவுக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்குகிறது என்று பெரியார் வியந்தார் (குடிஅரசு, 6 டிசம்பர் 1925). போராட்டத்தின் வெற்றிவிழாவை பெரியாரின் தலைமையில் கொண்டாடியது மிக முக்கியத்துவமுடைய செய்தியாகும். கேரளர்கள் நன்றி மறக்காதவர்கள். இன்றும் வைக்கத்தில் கேரளர்கள் நன்றி யைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது பெரியார் சிலை. தமிழ்நாட்டில்தான் சிலர் கேட்கிறார்கள், பேசுகிறார்கள், “பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம் பந்தம்?” என!


நன்றி: "இந்து தமிழ் திசை", 24.12.2019

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்!

 


பெரியார் பிறந்த நாளில் அரசு அலுவலகங்களிலும்,கல்வி நிலையங்களிலும் உறுதி மொழி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்டார் மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, செப்.6 தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடுவது என்றும், அந்நாளில் தலைமைச் செயலகம் தொடங்கி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஒன்றை எடுப்பது எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-இன்கீழ் முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-இன்கீழ் அறிவிப்பு

முதலமைச்சர்:    பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித் தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-இன்கீழ்   பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன். 

''ஈ.வெ. இராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.  இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்" என்று அறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் தந்தை பெரியார் அவர்கள். 

‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதையே அடிப் படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள், மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார்.  அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துக்கள்; அவர் பேசிய பேச்சுக்கள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்; தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய மாநாடுகள், அவர் நடத்திய போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த மாமன்றத்தையே பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்துப் பேச வேண்டும்.

“மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்” - இவை இரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள்.  ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத் தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன.  அந்த இரண்டுக்கும் எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை அனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக் கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத் தூண்டினார்.

அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது.  ஜாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூகநீதிக் கதவைத் திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.

நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.

‘‘என் வாழ்வில் வசந்த காலம் என்பது தந்தை பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்'' என்று நம்மையெல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

‘‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்''

என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.   பேரறிஞர் பெருந்தகையும், தலைவர் கலைஞர் அவர்களும் உருவான குருகுலம் பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப் பயிற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துகளை தமிழ்நாட்டில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும்.  சீர்திருத்தவாதிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; ஆட்சியாளர்களுக்கு அதன் வாசனையே இருக்காது. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு சீர்திருத்த இயக்கம்,  அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி,  சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மை அடைய வைத்திருக்கிறது. 

அவரால் கல்வி பெற்றவர்கள், அவரால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி.  இந்த விதை தந்தை பெரியார் போட்ட விதை; பேரறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார்; கலைஞர் அவர்கள் வளர்த்தார்கள்.  அதனை மாபெரும் விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது. 

இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள் ளோம்.  ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலை மைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களி லும், கல்வி நிலையங்களிலும் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

தந்தை பெரியார் மறைந்தபோது, 'தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்' என்றார் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். எனவே, நாம் தொடர்வோம்! தொடர்வோம்! தொடர்வோம்!  நன்றி!

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை யில் அறிவித்தார்.

அனைத்துக்கட்சியினர் வரவேற்பு

இந்த வரலாற்று சிறப்புமிக்க  அறிவிப்பை வரவேற்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), நாகை மாலி (சிபிஎம்), மாரிமுத்து (சிபிஅய்), டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக), செல்வப் பெருந்தகை (காங்கிரசு), வைத்தியலிங்கம்(அதிமுக), தமிழரசி (திமுக), அமைச்சர்கள் சு.முத்துசாமி(திமுக), துரைமுருகன் (திமுக), பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆகியோர் முதலமைச்சர் அறிவித்த இந்த அறிவிப்பை வரவேற்று, பாராட்டியும் பேசினர்.

உறுதிமொழி!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் -

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்

  எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

  சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!” 

என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம் என்று இந்த மாமன்றத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவில் நுழைவும் தீண்டாமையும்

 

தந்தை பெரியார்

தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமானதென்பதையும்அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும்தீண் டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும்சகோதரத்துவமும் நிலவமுடியுமென்பதையும் இப்பொழுது அநேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர்தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றிஅதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமுக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன் வந்திருக்கின்றனர்.

தீண்டாமை ஒழிந்துவிட்டால் அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்களுக்கும்வைதிக மதங்களுக்கும்அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதிகர் களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகிவிடும் என்பதை அறிந்திருக்கின்ற திருஎம்கேஆச்சாரியார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதிகர்களையும் அவர்களுடய சூழ்ச்சிகளில் அகப்பட்டுக் கிடக்கும் பொது ஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்க வில்லையென்று துணிந்து கூறலாம்.

தீண்டாமையை ஒழித்துஅதனால் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களைக் கை தூக்கி விட வேண்டியது ஒழுங்கும் நியாயமும்அவசியமும் ஆகும் என்ற உணர்ச்சி தற்போது நமது நாட்டு உயர்ஜாதி மக்கள் எனப்படுவோர்கள் சிலருடைய மனத்தில் பட்டிருப்பதற்குக் காரணம்தாழ்த்தப்பட்டச் சகோதரர்கள் செய்யும் கிளர்ச்சியும்சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக நமது இயக்கம் செய்துவரும் பிரசார முமே என்பதை மறுக்க முடியாது.

ஆனால் தீண்டாமையை எந்த வகையினால் ஒழிக்க முடியும் என்பதை ஆலோசிக்கும் போதுஎல்லோரும் கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்காமலிருக்க முடியாது.

இந்து மதத்தைச் சாராதவர்களும்இந்து மதத்திற்கு எதிரானவர்களும் இந்துமதப் பற்றுடைய மக்களால், 'அந்நியர்'கள் 'மிலேச்சர்கள்என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்ஜாதிஇந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்நீண்டகாலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்ஜாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும்அவர்கள் வசிக்கும்தெருகுளம் கிணறுபள்ளிக்கூடம்கோயில் முதலியவைகளைச் சமத்துவமாக அனுபவிக்க முடியாத வர்களாகவும் 'சண்டாளர்கள்என்றும் 'பாபிகள்என்றும் 'பஞ்சமர்கள்என்றும், 'பாதகர்கள்என்றும், 'புலையர்கள்என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்இந்தத்தகாத நடத்தைக்குக் காரணம் என்ன வென்பதைக் கொஞ்சம் பொறுமையோடுஆலோசித்தால் விளங்காமற் போகாது.

அந்நியராகயிருந்தாலும் அவர்களிடம் மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்களைப்போல கல்வியும்செல்வமும்திறமையும்செல்வாக்கும் கட்டுப்பாடும்ஒற்றுமையும் அமைந்திருப்பதே அவர்கள் மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும்.

சகோதர இந்துக்கள் என்று சொல்லப்பட்டாலும் தாழ்த்தப் பட்டவர்களிடம் படிப்பும் செல்வமும்கல்வியும்திறமையும்செல்வாக்கும்கட்டுப்பாடும் ஒற்றுமையும் இல்லாமையே இவர்கள் உயர்ஜாதி என்று சொல்லப்படுகின்ற இந்துக்களால் தீண்டப் படாதவர்களாகக் கொடுமை படுத்தப்படுவதற்குக் காரணமாகும்.

ஆகையால் உண்மையில் தீண்டப்படாத சகோதரர்கள் சமுக சமத்துவம் பெற வேண்டுமானால் அவர்கள்கல்வியிலும்திறமையிலும்செல்வத் திலும் செல்வாக்கிலும்ஒற்றுமையிலும் மற்றவர் களைப் போல சமநிலையை அடையவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாதுஆனால்இக்காரியத்தை இப்பொழுதோ அல்லது இன் றைக்கோஅல்லது நாளைக்கோஅல்லது மறுநாளோ அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டுச் செய்து விட முடியாதுநாளடை வில்தான் இதைச் செய்யமுடியும்ஆனால்தற்போதுஅவர்களுக்குச் சமத்துவமளிக்கச் செய் யப்படும் சாதகமான செயல்கள் கோயில்பிரவேசம்தெருகுளம்கிணறுபள்ளிக் கூடம் முதலியவை களைத் தடையின்றி அனுபவிக்க இடமளிப்பது போன்ற காரியங்களாகும் என்பதும் உண்மையேயாகும்.

ஆகவே இவைகளில் தீண்டப்படாதவர்கள் சமத்துவ உரிமை பெறும் விஷயத்தில்அரசாங்கத் தாரும்சமுக - அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்பதில் அய்யமில்லைஆனால் பொதுஜனங்களோ இன்னும் வைதிகர் வசப்பட்டவர்களாகவும்ஜாதிமதம்தீண்டாமை முதலியவைகளில் கொண்டுள்ள நம்பிக்கை மாறாதவர்களாகவும் இருந்து வருவதினால்தீண்டப்படாத சகோதரர்கள் மேற்கூறியவைகளில்சமத்துவம் பெறுவதற்கு கஷ்டமாக இருந்து வருகிறது.

(இவற்றுள் மற்றவைகளைக் காட்டிலும் கோயில் பிரவேசம் என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறதுஇந்தக் கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூர்நாசிக் முதலிய இடங்களில் சத்தியாக்கிரகங்கள் நடந்து கொண்டிருக்கின்றனஇதற்குமுன் பல தடவைகளில் மதுரைதிருச்சிராப்பள்ளிநாகர்கோவில்ஈரோடு முதலிய இடங்களில் கோயில் சத்தியாக்கிரங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை பயனின்றிக் கழிந்தன.)

ஆனால் அக்காலத்தில் கோயில் சத்தியாக்கிரகத் திற்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் இப்பொழுது கொஞ்சம் அதிக ஆதரவே இருந்து வருகிறது என்று கூறலாம்இந்த ஆதரவைக் கொண்டு விடாமுயற்சி யுடன் கோயில் நுழைவுக்காகப் பாடுபட்டால் அவ் வுரிமை கிடைத்துவிடும் என்பதிலும் அய்யமில்லை என்றே வைத்துக் கொள்ளலாம்ஆனால் இவ்வாறு தீண்டாத சகோதரர்கள் கோயில் நுழைவு உரிமை பெறுவதினால் அவர்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதைப் பற்றியே இப்பொழுது நாம் குறிப்பிட விரும்புகின்றோம்அவர்கள் மற்றவர்களுடன் சமத்துவ மாகக் கோயில்களுக்குச் செல்லும் உரிமை பெறுவதன் மூலம் ஓரளவு தீண்டாமை ஒழிகின்றதென்பதையும் சமத்துவம் கிடைக்கின்ற தென்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்இதுவும் ரயில் வண்டிகளிலும் திருவிழாக் காலங் களிலும் கோயில்களின் தேர்களை இழுக்குங் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற் படுகிறதோ அந்த அளவில் தான் கோயில் நுழைவினாலும் தீண்டாமை ஏற்படும் என்பதே நமது கருத்தாகும்ஆகவே கோயில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமையொழிவோசமத்துவமோஏற்பட்டு விடமுடியாது என்பதைப் பற்றி யாரும் அய்யுற வேண்டியதில்லைஆகையால் பொது இடத்திற்குப் போகக் கூடிய உரிமை தீண்டாதவர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் கோயில் பிரவேச முயற்சிநடைபெறுமானால் அதை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கவே கடமைப் பட்டுள்ளோம் என்பதில் அய்யமில்லை.

இவ்வாறில்லாமல் தீண்டாதவர்களும்கோயிலில் சென்று அங்கு இருப்பதாகச் சொல்லப்படும் 'கடவுள்என்கின்ற குழவிக்கல்லுகளையும்பதுமைகளையும் தொழுவதற்கும்அவைகளின் பேரால் மற்ற மூட மக்களைப் போல் பணம் செலவு பண்ணுவதற்கும்இவ்வாறு செய் வதன் மூலம் அவர்கள் 'பக்தி'மான்கள் ஆவதற்கும் 'மோட்சம்பெறுவதற்கும் கோயில் பிரவேசம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப்படுமானால் "இம்முயற்சி கண்டிப்பாகத் தீண்டாத வர்களுக்குக் கேடு சூழும் முயற்சியேஎன்று தான் கூறுவோம்.

இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள் காரண மாகவும் அவைகளின் சார்பாகவும் நடை பெற்று வரும் 'திருவிழா'க்களின் காரணமாகவும் இவைகளின் மேல் பாமர மக்களுக்கு உள்ள நம்பிக்கை 'பக்திமுதலியவைகளின் காரணமாகவுமே பொது ஜனங்களின் செல்வம் பாழாகின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாதுஇதோடு மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அறியாமை நிறைந்தவர்களாக வும் மூட நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருந்து வருகின்ற தற்கும் கோயில்களே காரணமாகும்.

இந்த நிலையைக் கருதும் பொழுது தீண்டப்படாத சகோதரர்களும் மூட நம்பிக்கைக்காரணமாக கோயில்நுழைவு உரிமை பெறுவார்களாயின் அவர்களும் தங்கள் பொருளைச் சிறிதும் பயனில்லாமற் பாழாக்கி என்றுமுள்ள வறுமைநிலையில் இருந்து வரவேண்டி யதைத்தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றோம்ஆகையால் தீண்டப்படாத சகோதரர்களும் அவர்கள் சமுக சமத்துவத்தில் ஆவலுடைய மற்றவர்களும் 'பக்திஎன்ற மூடநம்பிக்கையைக் கொண்டு கோயில் நுழைவுக்குப் பாடுபடாமல் "பொது இடத்தில் எல்லா மக்களுக்கும் உரிமை வேண்டும்என்ற உறுதியுடன் கோயில் நுழைவுக்கு முயற்சி செய்ய வேண்டுகின்றோம்இவ்வகையில் தீண்டப்படாத சகோதரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்உண்மையில் தீண்டாமைக் கொடுமையொழிந்து மற்ற மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்கு அடிப்படையான காரணங் களாக இருக்கும் செல்வம்கல்விதிறமைசெல்வாக்கு ஒற்றுமை முதலியவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டுகிறோம்.

- 'குடிஅரசு' - தலையங்கம் - 08.05.1932

சனி, 11 செப்டம்பர், 2021

திராவிடரும் - ஆரியரும் (1)

 

 08.05.1948 - குடிஅரசிலிருந்து....

திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பற்றியும்திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும்திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம்திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம்அதாவது ஆரியரல்லாததற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம்திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டுமென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோஅல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும்சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள்பஞ்சமர்கள்சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள்ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம்வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காகஎன்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.

சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே

சூத்திரர் என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர்சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும்சாதிரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள்இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர்கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்ஆகவேஇது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்லபார்ப்பனர் கற்பித்ததுதான்.

திராவிடர் என்பது கற்பனையல்ல

திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்டதல்லஆரியர் என்ற பெயரும் அப்படித்தான்  என்றுமக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்பஅமைந்திருந்த அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனரோஅன்று இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட பெயர்தான் திராவிடர்ஆரியர் எனப்படும் பெயர்கள்இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும்நீக்ரோக்கள் என்பதும்உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடுமுரடான மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்தனர்நல்ல குளிர்ப் பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர்அதற்கடுத்தாற்போல் சற்று குட்டையாகவும் சப்பை மூக்குடனும் சீனாஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர்இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.

பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி பிறப்பு வேறுபாடல்ல

ஆகவேஅன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார்களேயொழியஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோமற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன்காதிலிருந்து வந்தவன்மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லைஇதை நான் பேர் ஊர் தெரியாத எவனோமாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாதிரங்களைப் பார்த்தோவேதங்களைப் பார்த்தோ கூறவில்லைசரித்திர ஆராய்ச்சி நிபுணர்களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதும்அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டதும்உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகமாக இருந்து வருவதும்அசல் ஆரியப் பார்ப்பனர்களால் எழுதப்பட்டிருப்பதுமான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.

பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை

என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம் என்று யாராவது இன்று ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பாரானால்அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமாஎவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம்அவன் மைலாப்பூர் பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட்டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம்அதிலிருந்து பார்ப்பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான்அதுக்கேன் போப்போறீங்கஅவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும் என்றே கூறியிருப்பான்அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.

யார் என்ன கூறியிருந்தாலும் சரியேநான் கேட்கிறேன்பண்டிதர்கள்பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.

இந்தியாஇந்து இன்று வந்த பெயர்கள்

இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோஇந்துக்கள் என்ற பெயரோஎங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமாகூற முடியுமானால்அதற்கு உங்கள் வேதத்திலோசாஸ்திரத்திலோஇதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமாஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்யாராவது சொல்வார்களானால்மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனேநன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்குஇந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமாஇந்தியா என்பதும்இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில்அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்லஆனால்ஆரியர்திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள்ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும்சூத்திரர் என்றும்இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும்அரக்கர்கள்இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர்இதை நாம் கூறவில்லைசரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

திராவிடரும் - ஆரியரும் (2)

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... 

பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.

யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் - சூத்திரர்களாம்

நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.

யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசுகளுக்கு அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.

சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? 

சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். 

ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?

திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலியார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப்பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத்திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.

இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர்களுக் காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந்திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண்டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்? 

இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.

யார் கவலைப்பட்டார்கள்?

இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக்கொண்டதுண்டா? எத்தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத்தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப்பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால்தானே அவ்வளவும் செய்யப்பட்டது.

கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!

பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணாசிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உணருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?

ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று?

ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்!

ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட வரிந்து கட்டு!

இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டுவதில்லையென்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது; இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்திரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற்போகிறது? இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?

முதலில் இவைகளைச் செய்!

பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்துவிட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப்பனவற்றையெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங்களையெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.

சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?

பார்ப்பானெல்லாம் இப்போது சமபந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப்பிடுவான். உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப்பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்!

ஆலயப்பிரவேசம் உண்மை என்றால் அவனையும் மணி அடிக்கச் செய்!

பஞ்சமனைக் கோயிலில்கூட அனுமதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வையா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே!  அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?

இந்த அக்கிரமமெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகிவிட்டது. ஆகவே, பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?

குடிஅரசு - சொற்பொழிவு - 08.05.1948

திராவிடரும் - ஆரியரும் (3)

08.05.1948 - குடிஅரசிலிருந்து....

சென்ற வாரத் தொடர்ச்சி

யார் கவலைப்பட்டார்கள்?

இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக்கொண்டதுண்டாஎத்தனையோ ரிஷிகள்எத்தனையோ நாயன்மார்கள்எத்தனையோ குருமூர்த்திகள்எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இதுஇவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும்ஆரியம் அதற்கு அடிபணியவில்லையேமூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்திகர் என்று கூறிமக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதேஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும்சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதேவருணாசிரமத்தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப்பட்டதுஅதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால்தானே அவ்வளவும் செய்யப்பட்டது.

கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!

பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டதுமகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லைஅவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லைஇவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டாகிருஷ்ணனும்கீதையும் வருணாசிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையைஆதரிப்பதுதான்ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உணருவாயாஉன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயாஇன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும்கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும்அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?

 ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட வரிந்து கட்டு!

இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயேபூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்ஜாதி பேதம் பாராட்டுவதில்லையென்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனேஉன் சுதந்திர ராஜ்யத்தில்நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில்ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறதுஇந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதேஇச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறதுஇச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாதுஇச்சாஸ்திரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே ஜாதிபேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டாஅந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால்அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும்அதேபோல்ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால்அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதேஇது உன் கண்களுக்கு ஏன் படாமற்போகிறதுஇந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?

முதலில் இவைகளைச் செய்!

பாடுபடும் நான் ஏன் சூத்திரன்பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால்என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமாஏன் இந்தப் பித்தலாட்டம்நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயாஅல்லது அவற்றை எரித்துவிட்டாயாஎங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்குஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப்பனவற்றையெல்லாம் திருத்தியமைசாஸ்திரங்களையெல்லாம் கொளுத்தி விடுஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழிகோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்குஅதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பிஇன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.

சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?

பார்ப்பானெல்லாம் இப்போது சமபந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல்எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப்பிடுவான்உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோசக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்நீ சாப்பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயேஅதுதான் போகட்டும் என்றாலும்நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும்அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்!