சனி, 23 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!

திங்கள், 18 ஏப்ரல், 2022

இரண்டிலொன்று வேண்டும்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே !


சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் ஆகும். - தந்தை பெரியார்

கடவுளும் மதமும்-1,2

பெரியாரின் வேண்டுகோளும் எச்சரிக்கையும்! ஆத்திரம் வேண்டாம்!


 27.03.1948 - குடிஅரசிலிருந்து...

அரசியலார் ஒருக்கால் வம்புக்கு வருவதனால் உங்களில் எத்தனை பேர் அதற்குத் தயாராயிருக்கிறீர்கள்? அதற்காகப் பலாத்காரத்தில் இறங்கக்கூடாது. எல்லா மக்களும் ஆணும், பெண்ணுமாகக் கட்டாயம் கருப்புச்சட்டை அணியவேண்டும்! இல்லங்கள் தோறும் கழகக் கொடி ஏற்றவேண்டும்! உங்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாது! அப்படியும் தொல்லை கொடுத்தால் அதற்காவன செய்வதில் இயக்கமும் தலைவர்களும் கட்டாயம் பொறுப்பேற்றே தீருவார்கள். நீங்கள்! அப்போதுங்கூட ஆத்திரப்படக் கூடாது.

என்னழிவு இயக்க அழிவல்ல! பிராமணிய அழிவே!

நான் இருக்கும் வரை நமது இயக்க வண்டி நிதானமாக ஓடி எதிரிகளுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. என்னையும் காந்தியார் போன்று சுட்டுவிட்டால் நமது இயக்க வண்டி வேகமாகச் சென்று சூத்திரப் பட்டமும் பிராமணியமும் விரைவில் ஒழியுமே தவிர என்னோடு திராவிட இயக்க கொள்கை அழிந்துவிடும் என்று எவராகிலும் கருதினால் அதைவிடப் பயித்தியக்காரத்தனம் வேறிருக்க முடியாது.

பெரியார் ஈ.வெ.ரா.


கோவில் பிரவேசம் பொதுவுடைமைத் தத்துவமே!

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்!(1), (2)

புதன், 6 ஏப்ரல், 2022

தொண்ணூறு வயதுக்குமேல் பெரியார் பேசிய கூட்டங்கள்

#பெரியார் 

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். 

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

நான் சொல்வதை கேட்டால் தான் 
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம் 
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்............

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,  

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே........
- முகநூல் வழியாக வந்த செய்தி