செவ்வாய், 23 மார்ச், 2021

பெண்களுக்குத் தற்காப்பு!

திங்கள், 22 மார்ச், 2021

திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

பெரியார் பேசுகிறார்: "அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!”

பேரறிஞர் அண்ணா மறைவுக்கு தந்தை பெரியாரின் இரங்கல் உரை

உபி இலக்னோவில் பெரியார் சிலை திறப்பு

கன்சிராம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ நகரில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 29.7.1995 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநில முதல்வரான மாயாவதி அரசு நிறுவிய பெரியாரின் சிலையை ஆளும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான கன்சிராம் திறந்து வைத்தார். திரு.கன்சிராம் அவர்கள் பெரியாரின் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரின் கொள்கைகள் வட இந்தியாவிலும் பரவ வேண்டும். அப்போதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட -_ பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அகலும் என்ற ஆழமான கருத்தை கொண்டவர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் விழாவில் உத்தரப்பிரதேசத்தில் தந்தை பெரியார் சிலையை அமைப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாயாவதி

அதன்படி லக்னோ நகரின் பரிவர்த்தன் சதுக்கத்தில் பெரியார் சிலையை அரசு சார்பில் முதல்வர் மாயாவதி நிறுவினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பேயிடம் இதைப் பற்றி கேள்வி எழுப்புகையில் “பெரியார் தீவிரமான கொள்கை கொண்டவர். பெரியாருடைய சேவையைப் பார்த்த பிறகு நாடு முழுவதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய இந்து மத கொள்கைகளில் சிலவற்றை குறைத்துக் கொண்டேன்’’ எனவும் பதில் அளித்தார். இதற்கெல்லாம் மாயாவதி அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என வாஜ்பேயி கூறினார்.

தந்தை பெரியார் சிலையை உத்தரப்பிரதேச அரசு நிறுவியதைப் பாராட்டி வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பினேன். அதில்,

“மிகச் சிறந்த சமுதாயப் புரட்சி வீரரான தந்தை பெரியார் சிலையை லக்னோவில் திறந்ததன் மூலம் _ பாராட்டத்தக்க சாதனையைச் செய்துள்ளீர்கள். உளம் நிறைந்த பாராட்டுகளையும், உணர்வுபூர்வமான மகிழ்ச்சியையும் _ நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என மனம் மகிழ்ந்து செய்தி அனுப்பினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.2.21

வியாழன், 18 மார்ச், 2021

பெரியாரின் பெரும் பணி

#பெரியார் 

90-வது வயதில்  _  180 கூட்டம்.
91-வது வயதில்  _  150 கூட்டம்.
93-வது வயதில்  _  249 கூட்டம்.
94-வது வயதில்  _  229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்...

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

நான் சொல்வதை கேட்டால் தான் 
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம் 
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்............

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,  

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே...
- இளங்கோ மணிவண்ணன், முகநூல் பதிவு, 18.3.21

வெள்ளி, 12 மார்ச், 2021

ஒரு சந்தேகம்

வள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது!


2011 உண்மை இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31

வள்ளுவரை

வியாழன், 11 மார்ச், 2021

அய்யா கொண்டாடிய கடைசிப் பிறந்த நாள்


2011 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 

அய்யா

புதன், 10 மார்ச், 2021

இந்து மதத்தில் கடவுள் கிடையாது - தந்தை பெரியார்


இந்து

ஜனநாயகம்

பெண்ணின் அணிமணி, அலங்காரத்திற்கு வரம்பு தேவை - தந்தை பெரியார்

பேராசையும் சோம்பேரித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை

செவ்வாய், 9 மார்ச், 2021

ஜாதியொழிந்த சமுதாயமும், தனிச் சுதந்திர ஆட்சியுமே நமக்குத் தேவை

பெரியார் என்னை ஈர்த்தார் - நம்பூதிரிபாத்

வெள்ளி, 5 மார்ச், 2021

சமதர்மம்