திங்கள், 30 மே, 2016

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை 


- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது, “குடிஅரசு” 17.6.1928
பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா?
பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள்.
பார்வதி: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படி-யானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும் போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டி யில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்; அடித்துக்கூட தின்று விடுகிறார்களே, அது ஏன்?
பரமசிவன்: நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை; நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.
பார்வதி: அதுதான் போகட்டும்; நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ பாவம்!
பரமசிவன்: கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய் வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்லுவது!
பார்வதி: அதுதான் போகட்டும்; தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகின்றார்களே, அது என்ன காரணம் நாதா?
பரமசிவன்:கண்மணி, அதுவும் பக்தர்களில் அறியாத் தனம்தான்; ஆனாலும், அது மலம் சாப்பிடுகின்றதல்லவா! அதனால் அதன்மீது சிலர் அசுசியப்படுகின்றார்கள்போல் இருக்கின்றது.
பார்வதி: என்ன நாதா, பைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்து களையெல்லாம் சாப்பிடுகிறதே; அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும் போது, மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது?
அதுதான் போகட்டும். நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொள் வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்! இது என்ன அநியாயம்!
பரமசிவன்: அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்?
பார்வதி: நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கவுரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும் நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே; தவிர, விஷ்ணுவின் பெண் ஜாதியான மகாலட்சுமி கூட இதனா லேயே அடிக்கடி என் னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள்.
தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொண்டு மரியாதை செய்கிறார்களே, இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.
பரமசிவன்: என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்து விட்டான். விதியா ரைவிட்டது, சொல் பார்ப்போம்! என் கண்மணி, நீ இதற்காக அழ வேண்டாம்; உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.
பார்வதி: சரி, சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறா அழுக வேண்டும்! போனால் போகட்டும். இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.


சித்திரவிளக்கம்
1935-பிப்ரவரி குடியரசிலிருந்து

புருஷன்: திருவிழாவுக்குப் போகவேண்டும் விடு என்னைத் தடுக்காதே
மனைவி: அங்கு போவதில்யாதொரு பயனும் இல்லை வீணாய் அர்ச்சகரொருபுறமும், புரோகிதரொரு புறமும், வேசி ஒருபுறமும், திருடர்கள் ஒரு புறமும் நம்மை பிச்சுப் பிடுங்கித்தின்பார்கள். இது தான் திருவிழாவில் நீர் அடையக்கூடிய பலன் மற்றும் அங்கு ஊத்தைச்சோறும், நாற்றத் தண்ணீரும் சாப்பிட்டு வியாதிகள் ஏற்படும் போகவேண்டாம் (என்று மனைவி சொன்னதைத் தட்டி விட்டு புருஷன் திருவிழாவுக்குப் போனான் அங்கு மனைவி சொன்னது போலவே ஆளுக்கு ஒருபுரம் இழுக்க கடைசியில்)
புருஷன்: மனைவியே நீ சொன்னது சரியாய் நடந்து விட்டது. இனி நான் திருவிழாவுக்கும், கோயிலுக்கும் போவதில்லை நீ சொல்லுகின்றபடியே நடக்கின்றேன் (என்று கும்பிடுகின்றான்)
மனைவி: புத்தி வந்ததா? வா சுயமரியாதை மாநாட்டுக்குப் போகலாம், அங்கு நமக்கு அறிவு விளக்கம் ஏற்படும்படி அனேக விஷயங்கள் தெரிந்து வரலாம்.
புருஷன்: சரி வா நான் முன்னே செல்லுகிறேன் என்று புருஷனும் மனைவியும் சுயமரியாதை மாகாநாட்டுக்கு கீழ்க்கண்ட பாட்டைப் பாடிக்கொண்டே புறப்படுகிறார்கள். கோவில்கள்ளர்குகை, (கிறிஸ்து) கோவில் விபசார விடுதி, (காந்தி) திருவிழாக்கள் கண் அடிக்கும் சந்தை (சுயமரியாதை)
காணவேணுமென்று நீர், கடல் மலைகள் ஏறுவீர், ஆணவமதல்லவோ, அறிவு கெட்ட மூடர்கள்
(சிவவாக்கியர்)
-விடுதலை,19.2.16

ஞாயிறு, 29 மே, 2016

மகாமக மூத்திரக் குளம்புராண மரியாதைக் காரன் கேள்வி :- அய்யா, சுயமரியா தைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.
சுயமரியாதைக் காரன் பதில்:- என்ன அற்புதமய்யா?
பு.ம    :- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு.ம    :- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்வி தான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.
பு-ம    :- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகி றார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
சு.ம    :- இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல் லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறையவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
பு.ம    ;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேரு மானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
சு.ம    :- நாற்றமிருக்கத்தான் செய்யும்.தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்ற தல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே செலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.  
- குடிஅரசு - உரையாடல் - 26.02.1933
-விடுதலை,7.2.16

எலி வளை தோண்டும் பரிதாபம் பஞ்சமர்க்கு1.4.1934 குடியரசிலிருந்து
பங்குனி மாதம் முதலோடு விளைந்த தானியமெல்லாம் மிராசுதார் வீட்டு கொல்லை தலைமாட்டு சேரடியில் கட்டுக் கிடை செய்யப் பட்டாகிவிடும். பங்குனிமாதத்தோடு போராடி கருக்காய் பட்டறை இவைகளில் ஒட்டி கொண் டிருக்கும்  ஒன்று இரண்டு நெல் தானியங் களையும் கசக்கி எடுத்து பண்ணை வீட்டில் கொண்டு வந்து பந்தோபஸ்து செய்தாகி விடும்.
சேரடியில் பந்தோபஸ்து செய்யும் நெல் எல்லாம் வியாபாரிக்கு போட்டவை போக மிகுதியாக இருப்ப வைகளே கட்டுக்கிடை செய்யப்படும். கட்டுக்கிடை செய்வ தெல்லாம் ஆடி அறுதலையில் கிறாக்கியாக கிரயம் செய்வதற்காகவே இருப்பு செய்ய ப்படுவதின் அந்தரங்க நோக்கமாகும். இந்த மாதங்களில் தான் மிராசுதார்கள் செய்து கொள்ளும் வியா பாரக் கடன்களை ஈடுசெய்துகொள்வது வழக்கம்.
மிராசுதார்களின் தாசி வேசிகளுக்கு மனம் பூரிப்படையும் படி சன்மானம் அளிக்கும் சந்தோஷகரமான காலமும் இதுவாகும், வேசியர்கள் வீட்டுக்கு பரிதாப ஜாதியார் உழைத்து சேமித்திருக்கும் தானியம் வருஷ பூராவும் உட்கார்த்து தின்று கொழுக்கட்டுகிடை செய்யும்  காலமும் இதுதான். பரிதாப ஜாதியார் உழைத்து சேமித்திருப்பதில் உடல் நலுங்காமல் உட்கார்ந்த இடத்தில் குடி கூத்தியில் சுகமாக சஞ்சரிக்கும் மிராசுதார்கள் ஒரு பகுதியார். குடும்ப கவலையுள்ள மிராசுதார்கள் என்ற ஒரு கூட்ட முண்டு.
இவர்கள் பிறர் ஜோலிக்கு போக மாட்டார்கள் என்றும், பிறத்தியான் காசுக்கு ஆசைப் பட மாட்டார்கள் என்று நல்ல பெயருக்கு பாத்திரப்பட்டு காலம் கழிப்பவர்கள். இக் கூட்டத்தார் குடும்பத்துக்கு அவசியமான சாமான்களை வாங்கி அபிவிர்த்தி செய்வதிலும்,
பெண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு காலத்துக்கேற்ற நவீன முறையில் நகைகளை செய்து போட்டு அலங்கரித்து ஆசை பார்ப்பதும், பாத்திர பண்டங்கள் வாங்குவதும், மிகுந்தவைகளை தக்க இடத்தில் வட்டிக்கு விட்டு இருக்கும் சொத்தோடு சொத்தாக அபிவிர்த்தி செய்யும் வேலையில் காலம் கழித்துக் கொண்டிருப்பவர்கள்.
இன்னொரு சாரார் தர்மிஷ்டர் என்று சொல்லப்படுபவர்கள். இப்பகுதியார் ஸ்தல யாத்திரை, தீர்த்த ஸ்தானம், பிராமண சமாறாதனை போன்ற கைங்கர்யங்களின் பரிதாப ஜாதியாரின் உழைப்பை செலவிடக் கூடியவர்கள் இந்த கைங்கர்யங்கள் செய்வதால் போற கெதிக்கு நல்ல கெதி கிடைக்கக்கூடிய மகான் என்ற பட்டத்தை சிலசோம்பேறிகளுக்கு கொடுக்கப் படும் இனத்தை சேர்ந்தவர்கள்.
இப்படியே தங்கள், தங்கள் மனோபிஷ்டத்தை யாதொரு கவலையில்லாமல் தாராளமாக பூர்த்தி செய்து கொள்வதில் பரிதாப ஜாதியாரின் உழைப்பின் பலனை உபயோகப்படுத்தி கொண்டாலும், தங்கள் வருவாய்க்கு மூல கருவியாக இருந்த பரிதாப ஜாதியாருக்கு தானியம்.சொரிந்த அந்த காலத்திலும் அவர்களுடைய கேவல நிலைமைக்கு விமோசனமில்லை. பங்குனி, சித்திரை, வைகாசி இந்த மூன்று மாதங்கள் மகசூல் முடிவடைந்த காலமாய் இருந்தாலும் பரிதாப ஜாதியார் வீட்டில் கால்படி நெல்லுக்கும் வழியிருக்காது.
அதோடும் இந்த மூன்று மாத காலமும், கால்படி அரைப்படி கிடைக்கக்கூடிய வேலையுள்ள கலமுமல்ல என்பதை  சொல்ல வேண்டியதில்லை. இம்மாதங்களில் வயிற்றுக்கு வழியில்லாமல் எலி வளை தோண்டுவதென்ற பழக்கம் எல்லா கிராமத்திலும் பரிதாப ஜாதி யாரிடம் காணப்படும் இது சாதாரண சம்பவம். எலிகள் தங்கள் வயிற்றுக்கு உணவுக்கு திருடி வைத்திருக்கும் தானியங்களை பரிதாப ஜாதியார் தங்கள் பசிப்பிணியைத் தீர்த்துக்கொள்ள வெட்டி எடுப்பார்கள்.
இந்த வளைகள் பெரும்பாலும் வயல் கரைகளிலேயே இருக்கும் எலிவளை தோண்டுவதிலும் பகிரங்கமாக தோண்டு வதற்கு முடியாது. ஆண்டைமார்களுக்குத் தெரியாமல் ரகசியமாய் தான் வெட்டிஎடுக்கவேண்டும்.
ஆண்டைமார் களுக்கு தெரிந்துவிட்டால் வயல்களையே பறப்பயல்கள் வெட்டி நாசப்படுத்தி விட்டான் என்ற குற்றத்துக்கு உட் படும்படி ஏற்படும். எலி வளையிலிருக்கும் தானியத்தை பரிதாப ஜாதியார் பசிக்கொடுமையால் வெட்டி எடுக்கிறார்கள்.
அவர்கள் உழைப்பை எல்லாம் இருப்பு செய்து  கொண்டு மேலே சொன்னபடி தங்கள் இஷ்டத்துக்கு சிலவு செய்து கொண்டிருக்கிறோமென்கின்ற கருணை இல்லாமல் அவர்கள் செய்யும் அடாதச்செய்கையை கொஞ்சம் கவனிக்கவேண்டும்.
பசிப்பிணியால் எலிவளைதோண்டும் பரிதாபகரமான காட்சி யை ஈவு, இரக்கமில்லா மிராசுதார்களோ, அல்லது அவர் களிடத்தில் கைகூலி வாங்கும் மணியாரன், கிராமதலையாரி போன்றவர்களோ அகஸ்மாத்தாய் கண்டுவிட்டால் கண்ட விடத்தில் கொடுக்கும் உதையோடு ஆண்டை வீட்டு அடி வாசலில் கொண்டு நிறுத்துவார்கள். ஆண்டைவீடு ஆனதால் அங்கு கட்டிவைத்து செம்மையாக உதை கொடுக்கப்படும்.
இதோடாவது பசியால்வாடி நிற்பவனை விடுவார்களா என்றால் அதுதான் இல்லை. கரையை வெட்டி சேதம் விளைவித்த நஷ்டத்துக்கு என்று சொல்லி குறிப்பிட்ட ஒரு தொகையை அபராதம் விதித்து பரிதாப ஜாதியாரின் உழைப்பில் பிடித்து வைத்திருக்கும் வருமானத்தின் ஒரு பகுதியில் ஈடு செய்துகொள்வர்கள்.
இப்படியே அவர்கள் வருமானத்தில் பெரும்பாகம் மிராசுதார்களால் சூறை யாடப்படும். இம்மாதிரியான வாழ்வே அவர்களின் வாழ்வு என்பதை எங்கும் சர்வசாதாரணமாக காணப்படும் சம்பவமே அல்லாமல் மிகைப்படுத்தி சொல்லியதல்ல.
சுருங்க உரைக்கின், தானியம் குவித்த கோடையில் எலி வளை தோண்டுவதும் தானியம் குவிய வயல்களை பண் படுத்தும் ஆடையில் நண்டுவளை நத்தைவளை அக் கட்டத்தின் உழைப்புக்கு பலன் என அறிக.
விடுதலை,29.4.16

இந்தியா அடிமைப்பட காரணம்? - சித்திர புத்திரன்கேள்வி: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
பதில்: நமது மதமும் ஜாதியும்.
கேள்வி: நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள் ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடு பட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

பதில் : மதமும் ஜாதியும்.
கேள்வி: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?
பதில்: வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பனராக்கு கிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?
கேள்வி: எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
பதில்: வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.
கேள்வி: கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
கேள்வி: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
கேள்வி: உண்மையான கற்பு எது?
பதில்: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.
கேள்வி: போலிக் கற்பு என்றால் எது?
பதில்: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மன திற்குப்
பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
கேள்வி: மதம் என்றால் என்ன?
பதில்: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.
கேள்வி: தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப்படுகின்றது?
பதில்: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
கேள்வி: பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
பதில்: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.
கேள்வி: மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.
கேள்வி: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?
பதில்: தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.
கேள்வி: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)
கேள்வி: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகா ரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?
பதில்: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.
கேள்வி: பெரிய மூடன் யார்?
பதில்: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.
கேள்வி: ஒழுக்கம் என்பது என்ன?
பதில்: ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.
கேள்வி: சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
பதில்: மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.
கேள்வி: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

பதில்: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப்படுகிறது.
கேள்வி: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பதில்: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.

கேள்வி: நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, வித வைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும்.

கேள்வி: நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?

பதில்:  நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.

கேள்வி: இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

பதில்: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.

கேள்வி: கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளு கிறார்கள்?

பதில்: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதி லும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க் கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட் டாள்தனமுமாகும்.

கேள்வி: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?

பதில்: மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப்பனர்கள்) எல் லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷ யத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.
கேள்வி: ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்குபோய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

பதில்: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுப வரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார் கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

கேள்வி: பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.

பதில்: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

கேள்வி: பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?

பதில்: கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி: கடவுள் ஏன் காண முடியாதவராயி ருக்கிறார்?

பதில்: அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.

கேள்வி: கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில்: ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

“குடிஅரசு” - கேள்வி பதில் - 15.01.1949
-விடுதலை,17.4.16

வெள்ளி, 27 மே, 2016

என் கருத்தும் அம்பேத்கர் கருத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும்!- தந்தை பெரியார்


தந்தை பெரியார் அவர்களுக்கு 15-2-1959 ஞாயிறு காலை சுமார்
10-30 மணியளவில் டெல்லி பகார்கஞ்சில் எம்.எம்.ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பாக சிறப்பானதொரு வரவேற்பு வழங்கப்பட்டது.
பேரன்புமிக்கத் தாய்மார்களே! அம்பேத்கர் பவன உறுப்பினர்களே! நண்பர்களே!
உங்கள் அனைவரையும் காணுவதிலும், உங்களது பேரன்பை பெறுவதிலும் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சியடைகின்றேன். சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிற என்னைப் பாராட்டு முகத்தான் நீங்கள் அன்புடன் அளித்த நல்வரவேற்பிற்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம் பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட் களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவைகளைப்பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதி யாகவும் பலமாகவும் லட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றி பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை முட்டாளின் உளறல் என்று சொன்னவர்!
இப்படி சில விஷயங்களில் மாத்திரமல்ல. பலவிஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப் பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.
உதாரணமாக, பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி! இப்படி நாம் பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன பலன் ஏற்பட முடியும் வா நாம் இரண்டுபேரும் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன் ரொம்ப சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது ஜாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றேன். இந்து கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது எடுத்துச் சொல்லி மக்களிடையே எடுத்துசொல்லி பிரசாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தை பிரசாரம் செய்து வருகிறேன் என்பதாகச் சொன்னேன்.
என் பிரசாரத்தில் ஜாதி ஒழிய வேண்டு மென்று மாத்திரம் நான் சொல்லிவரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை ஜாதி, மதம் ஆதாரம் ஒழியவேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிரமாணம் எடுத்துப் படித்தாரோ (இராமனையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவை) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருடகாலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ராமனையும் பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்த பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியதுதான் அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றுகிறது.
புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.
நேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பன நிருபர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார் நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல் லுகிறாயே அதுவும் ஒரு மதம்தானே  என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படி பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் பார்ப்பனர்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார். ஏன் அதில் புத்தர் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.
புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்று மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கி யதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண் டிருக்கிறாயோ அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.
தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக துருவித்துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதேயாகும்.
அது போலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் நீ ஏற்றுக்கொண்டுள்ள தர்மங்களை கொள்கைகளை உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப்பிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது.  உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருதவேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.
ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம்.
நீ உன் தலைவனை மதி!
உனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!
உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.
நீங்களெல்லாம் உங்கள் புத்திக்கு மரியாதை கொடுத்து அது கூறும் கொள்கைகளை ஏற்று புத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உங்களை அறியாமல் உள்ளே புகவிடக் கூடாது.
எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்க வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.
நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காக பார்ப்பாறும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும். அதெல்லாவற்றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்துமத பார்ப்பன ஆட்சியாகும்.
உங்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அரசாங்கம் கொடுமைக்கு தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன்வரவேண்டும்.
நம்மிடையே பல ஜாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல ஜாதிகள் கிடையாது: நாம் இரண்டே ஜாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும் சாஸ்திரங்கள்படியும். நாம் இரண்டு பிரிவினர் கள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி ஜாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக, உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே ஜாதிதான்.
இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழி வைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.
ஆசையால் பார்ப்பனர்களுக்கு பதவி அதிகாரத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்பப் போகிறவர்களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.
எனக்கு இப்போது 80 வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும்? எனக்கு இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது!
எங்கள் நாட்டைப் பொறுத்த வரை பார்ப்பனர்கள் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவித செல்வாக்கும் பெறமுடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கிவைத்துவிட்டோம். இங்கே அவர்கள் தன்மைபற்றி தக்க ஆதாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர்கள் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்க தயங்குவார்கள்.
பார்ப்பனர்கள் கொஞ்சப் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம்மீது தப்புப்பிரசாரம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் எங்கள் கட்சியை பார்ப்பானை எதிர்க்கிறகட்சி என்றே அழைக்கிறார்கள்.
அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம்.
எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்கு சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும். (பலத்த கைத்தட்டல்)
எந்தவித சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் ரொம்ப பார்ப்பனர்கள் எங்கள் நாட்டைவிட்டு இங்கு வந்துவிட்டார்கள். மேலும் வர வாய்ப்புத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். (கைத்தட்டலும் சிரிப்பு) நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான் நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.
பசி உயிர் போகிறது என்றாலும்கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன பகிஷ்காரத்தை தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.
உங்களுக்கும் சொல்லவேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக நினைக் கிறார்கள்.
பார்ப்ப னரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும் பண வினியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப் பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.
பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ அதையெல்லாம் இவன் அவனைப் பார்த்து அதேபோல் இவனும் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.
ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பார பெண் வந்தால் அவள் கையில் ஒரு சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்த குழாய்க்கு மேல் ஊற்றி கழுவிவிட்டு பிறகு தான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப்பார்த்து நம்மவன் வீட்டுப்பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி விட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்துவீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் வந்து சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றி கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.
முதலாவது பார்ப்பார பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்ற ஜாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.
இதைப்பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பொம்பளைகளுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அது போலத்தான் பார்ப்பனரல்லாதாரில் ஜாதி வெறியும் பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர்கள் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும் பார்ப்பானைப் பார்த்து காப்பி அடிப்பதுமே தவிர அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல) கிடையாது. சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான். ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி; பார்ப்பன மதம் பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள். இவைகள்தான் நமக்கு எதிரிகளே ஒழிய வேறில்லை. பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
ஆகவே நீங்கள் இவைகளை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறி முடித்தார்கள்.
- விடுதலை 22.09.1959
- விடுதலை 10.04.16

ஆரியர் யோக்யதை தெரியாதா?

ஆரியர் யோக்யதை தெரியாதா?
நினைத்தவனோடு கூடி ஜனித்த சங்கர வம்சம்தானே குருபரம்பரை?

1936 ஆம் ஆண்டு குடியரசிலிருந்து
சென்னை சர்வ கலா சாலை வித்துவான் பரீஷைக்கு பாடம் வைத்திருக்கும் புத்தகங்களில் தொல்காப்பிய பொருள திகார ஆராய்ச்சி என்னும் புத்தகமும் ஒன்று. இப்புத்தகம் தோழர் மு.இராகவ அய்யங்கார் என்ற ஒரு பிராமணனால் எழுதப்பட்டது. அய்யங்கார் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி புத்தகத்தைப்பற்றி சில நாளாய் தமிழ்நாட்டில் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரஸ்தாப கிளர்ச்சியில் தமிழர்களுடைய விசேஷ கவனமெல்லாம்.
சென்று கொண்டிருக்குக்குமென்பதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. அய்யங்கார் எழுதிய ஆராய்ச்சி நூலில் தமிழர்களை கேலலப்படுத்தியும், ஆரியப்பார்ப்பனர்களை மேன்மைப்படுத்தியும் எழுதிய பகுதிகளேதான் கிளர்ச்சிக்கு மூலகாரணம். இந்த உண்மையை தற்போது, தமிழர்கள் மானத்தைக் காப்பாற்றவும் ஆரியர்களுடைய ஆபாசத்தை சந்திக்குக் கொண்டு வரவும் செய்த பெருமை அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழாசிரியர் தோழர் சோமசுந்தர பாரதியார் அவர்களுக்கே உரியது.
அய்யங்காரின் ஆராய்ச்சி நூலிலிருக்கும் ஆபாசத்தை தமிழர்களை நன்கு அறிந்துகொள்ளும்படி தோழர் பாரதியார் அவர்கள் செய்த பிற்பாடும் அய்யங்காரின் வடிகட்டிய யோக்கியத்தனம் மாறவில்லை என்றால் தமிழர்களை எவ்வளவு  தூரம். வடிகட்டிய முட்டாள்களாக அய்யங்கார் கருதிக்கொண்டிருக்கிறார் என்பது புலனாகும். தமிழர் களிடத்தில் உஞ்சி விர்த்தி வாங்கி வயிறு கழுவிப் பிழைக்க ஒண்ட வந்தவர்களே ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் புரோகிதக் கூட்டத்தார் ஆவார்கள்.
அதாவது நமது மு.இராகவய்யங்காரின் மூதாதையர்கள் இவ்வாரியக் கூட்டத்தாருக்கு இன்று நாகரீகமென்ப தொன்றிருக்குமானால் அது தமிழர் நாகரீக நிழலில் சஞ்சரித்த வாடை என்பது அய்யங்கார் மறந்துவிட்டார் போலும்! உண்மை இவ்வாறிருக்க நமது அய்யங்கார் நமது ஆராய்ச்சி நூலில் தமிழர்களைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை சற்று கவனித்தால் அய்யன்காரின் ஆணவமும், அவரை ஆதரித்து எழுதும் அயோக்கிய பத்திரிகைகளின் தன்மையும் வெட்டவெளிச்சமாய் விடும்.
பண்டை தமிழருக்குள் ஒழுங்கான மண முறையில்லை. நினைத்தவன். நினைத்தவளை, நினைத்தபடி அவள் விருப்பத்திற்கு மாறாக அவள் சுற்றமறியாதபடி வலிந்து ஒழுகி வந்தான். இந்த களங்கம், நிறைந்த களவு முறையை நீக்கி ஆரிய மேலோர் கரணங்களமைந்த கற்பியல் முறையை தமிழ் நாட்டாருக்கு நன்கு விதித்துப் போந்தனர் என்பதேயாம்!
அய்யங்காரின் இக்கூற்றுப்படி தமிழ் நாட்டினருக்கு கற்பில்லை என்றும், நினைத்தவன் நினைத்தவளை நினைத்தபடி அவள் விருப்பமில்லாமல் பலாத்காரமாய் நடந்து கொண்டு வந்தார்கள் என்றும், இவ்வநாகரீக முறையை ஆரிய மேலோர் என்ற ஒரு கூட்டத்தார் நீக்கி கற்பியல் முறை போதித்தனரென்று பெறப்படுகிறதல்லவா? அய்யங்காரின் ஆராய்ச்சிப்படியும், அய்யங்காரை பரிபூரணமாக ஆதரிக்க முற்பட்டிருக்கும் ஆனந்த விகடப் பத்திரிகையின் சாதி அபிமான ஆராய்ச்சிப்படிக்கும் ‘ஆரிய மேலோர் என்ற சொல்லப்படுவது ஒரு கழுதைக் கூட்டமாகவே இருக்கட்டும்.
அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆரிய மேலோர் என்ற ஒரு கூட்டமே தமிழருக்கு கற்பியல் முறையை போதித்த னரென்ற பதம், அய்யங்கரரின் ஆராய்ச்சியில் காணப்படுவதால் அது எந்த மூல தஸ்தாவேஜியிலிருந்து ஆராய்ச்சி செய்திருந் தாலும், அந்த மூல தஸ்தாவேஜி தயாரித்தவனெல்லாம் வடிகட்டிய காலிகளாகவும், காலிப்பயல்களாகவும்தான் தமிழர் கள் கருதமுடியும்.
எப்படி இருந்த போதிலும் தமிழர்களுக்கு கற்பியல் முறையை போதித்தான் ஆரியன் என்பதை கொஞ்சம் கவனிக்கவேண்டியிருக்கிறது. ஆரியன் என்றால் இப்போது பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு ஜாதியிருக்கிறதே அதற்குத்தான் சொல்வதாகும். இப்போதி ருக்கும் பிராமணர்கள் தங்கள் முன்னோர்கள் ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்வதுண்டு. இந்த ஆரிய வம்ச பரம்பரையிலுதித்தவர் நமது மு.இராகவையங்கார்.
இவருடைய ஒத்துக்கு மத்தளம் அடிக்கும் கோமாளிப் பத்திரிகையான ஆனந்தவிகடன் ஆரிய வம்ச பரம்பரையிலுதித்தவர்களாலேயே நிர்வாகம் செய்யப்படுவதாகும். தமிழர்களுக்கு கற்பு போதித்துக் கொடுத்த இக்கூட்டத்தாரு டைய கற்பு நிலையோ சொல்ல வேண்டியதில்லை.
தமிழர் களை இழிவுபடுத்தி அய்யங்கார் எழுதி இருப்பதின் அடிப்படையான அந்தரங்கமெல்லாம் தங்கள் வம்ச பரம்பரையின் ஆபாசங்களை மறைத்து முலாம் பூசவேயாகும். சொந்த ஆபாசத்தை பரிசுத்தப்படுத்திக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி விட்டு தன் இனத்தை பரிசுத்தப்படுத்தப்பார்க்கும் அய்யங் காரின் அகம்பாவத்திற்கும், அய்யங்காருக்கு ஒத்துக்கு மத்தளம் அடிக்கும் யோக்கியர்களுக்கும் தக்க புத்தி கொடுக்க வேண்டுவது ஒவ்வொரு தமிழர்களுடைய நீங்காக் கடமை யாகும். தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடுமென்பதை அய்யங்கார் மறந்துவிட்டார் போலும்!
ஆரியர் (பார்ப்பனர்) களுடைய மூலமே இன்னதென்று தெரியாது. தகப்பன் பெயர் தெரியாத வம்சமே பிராமண (ஆரிய) வம்சம் எப்படியெனில் இருடிகள் - (ஆரிய மேலோர்) ரிஷிகள் யாருக்கு ஜனித்தார்கள் என்று கேட்காதே என்பதற்கு பதிலாக ரிஷிமூலம் நதி மூலம் கேட்காதே’ என்ற ஒரு வார்த்தையை தெருவில் திரியும் எதுவும் சொல்கிறது. ஏனென் றால் கக்கூசு தண்ணிரும்,
ஜலதாரைத் தண்ணீரும் நதியாகி விடுகிறது. ஆதலால் அது தெரிந்தால் அதை யாரும் தொட மாட்டார்கள். ஆதலால் அது போல் மூலம் தெரியாத - தெரிந்து கொள்ளக்கூடாத ஜாதி ஆரிய ஜாதி என்பது ஒரு பக்கமிருக்கட்டும். குரு பரம்பரையின் யோக்கியதையைக் கேட்டால் ஒரு கழுதை கூட சிரிக்கக் கூடிய நிலையிலிருக்கிறது. பிராமணர்களுக்கு குரு பீடம் சங்கராச்சாரியார். அவருக்கு தகப்பன் பெயர் தெரியாது.
சங்கரர் விதவைக்குப் பிறந்தவர். ஆகவே சொந்த புருஷனுக்கில்லாமல் நினைத்தவனை கூடிப்பெற்றெடுத்த சங்கர பரம்பரையே குரு ஸ்தானம். இன்னொரு ஆபாசத்தைச் சொன்னால் வெட்கக்கேடு. அதாவது பஞ்ச கவ்யமென்ற பெயரால் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் (அதாவது மல மூத்திரத்தையும்) அருந்துபவர்கள்.
இந்த நாகரீகக் கூட்டத்தார். தமிழர்களுக்கு கற்பு சொல்லிக் கொடுத்தார்களென்று அய்யங்கார் ஆராய்ச்சி முடிவு கட்டுவ தோடு, ஆனந்தவிகடனும் ஆதரிப்பதென்றால் அதை என்னவென்று சொல்வதோ தெரியவில்லை. ஆரியர் தமிழருக்கு கற்பு கற்றுக்கொடுத்தார்கள் என்பதை விட தங்களைப் போலவே தமிழர்களையும் மல மூத்திரம் அருந்த கற்றுக்கொடுத்தார்கள் என்றால் பொருந்தும். அதையும் தமிழர்கள் விட்டு வருகிறார்கள்.
அய்யங்காரும் கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு மச்சு வீட்டின் மேல் கல் எறிவதென்றால் அதை சும்மா விட முடியுமா? தன் முதுகு தனக்குத் தெரியாத உயர் ஜாதி என்று இறுமாப்படைந்து கிடக்கும் கூட்டத்துக்கு சிலவற்றை தமிழர்கள் சார்பாகச்சொல்கிறேன்.
இன்று சிறப்பாக தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். சம்சாரம் கற்பு தவறிவிட்டாள் என்ற ஒரு சந்தேகத்தை காரணமாகக் கொண்டு மனைவியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்ட தமிழர் பலர். கணவன் கற்பு நிலை தவறிவிட்டான், பரஸ்திரீ மோகம் பிடித்து விட்டான் என்ற காரணத்துக்காக கயிற்றுக்கு இரையான தமிழ் பெண்மணிகள் அனந்தம் கற்பை காப்பதற்கு தமிழ்நாட்டில் நடந்திருக்கும் கோலாகலங்கள் கோடிக்கணக்காகும்.
நீதியிலாக் காவின் பழைய காதல்களைப் புரட்டிப்பார்த்தால் கற்பு என்ற ஒன்றிற்காக மானத்தைப் பெரிதெனக் கருதி தமிழர்கள் செய்திருக்கும் செய்கைகள் தெற்றெனப் புலப்படும். கற்பை காக்க வேண்டி பலாத்காரம் செய்ய வந்த ஒரு அயோக்கியனின் ஆண்குறியை அறுத்த ஒரு தமிழ்ப்பெண்மணியின் சரிதை சமீபத்தில் திருச்சியில் நடந்ததாகும். இம்மாதிரியான சம்பவம் எப்போதாவது நடந்ததாக உயர்ந்த குலமென்று சொல்லப் படுகிற பிராமணக்குடும்பங்களில் உதாரணம் காட்டவாவது முடியுமா என்று நமது அய்யங்காரையும் அவரை ஆதரிக்கும் முட்டாள்களையும் அறை கூவி அழைக்கிறேன்.
ஆரியப் பார்ப்பனக் குடும்பங்களில் கற்புக்கு உதாரணம் காட்ட முடியாவிட்டாலும்போகட்டும். நடை முறையிலாவது கற்பு முறைப்படி அமுலில் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. தன் காரிய லாபத்திற்கு எதையும் செய்யத் துணிந்தவன் பார்ப்பானே என்பது உலகமறிந்த ரகசியம். அதனாலேயே பழய அகராதிகளில் ஆரியர் என்றால் மிலேச்சர் என்று (தமி ழர்கள் சு. ம. காரர்கள் அல்லாத ஆரியர் பிரசுரித்த அகராதி களிலேயே இன்றும் காணலாமே!
அரசியல் துறையிலும் மதத்துறையிலும் மேல் அதிகாரிகளுக்கும் கட்டளைகார தமிழ் சீமான்களுக்கு வலிய கூட்டிக்கொடுத்து விட்டு யோக ஷேமத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் தமிழர்களா? இதற்கு ஆதாரம் வேண்டுமென்றால்    சிதம்பர ரகசிய மென்று தென்பாதி தோழர் டி. எஸ். கனகசபையால் எழுதப்பட்ட புத்தகத்தைப் பார்க்கவும். (அது குடி அரசு ஆபிசில் விற்கப்படுகிறது.)  (1) கருங்குழி பார்சல் வழக்கு தமிழர் குடும்பத்தில் நடந்ததா?  2) மாயவரத்தில் சக்தி பூஜை அய்யர் வழக்கு தமிழரிடையே நடந்ததா? 3) மதுரை பார்சல் வழக்கு தமிழர் குடும்பத்தில் நடந்ததா? 4) விமானக்காதல், வழக்கு வேலூர் வழக்கு இவையெல்லாம் தமிழர் குடும்பத்தில் நடந்ததா?
இவைபோன்ற ரசமான சம்பவங்கள் இன்னும் எத்தனை உதாரணத்துக்கு வேண்டும்? ஆகவே நடைமுறையிலிருக்கும் தனது சொந்த சமூகத்தின் ஆபாசத்தைப் போக்குவதற்கு செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனந்த கோடிகளிருக்கும் போது மூடத்தனமான சேவைகளில் வீண் ஆராய்ச்சி செய்ய வேண்டுவதில்லை.
தொல்காப்பிய மென்ற நூல் எப்படி எழுதப்பட்டதென்பதே தெரியாது. இதிலிருந்து நச்சினாராக் கினியன் என்ற ஒரு பார்ப்பன அயோக்கியனும் நமது அய்யங்கார் சுவாமிகளும் தமிழர்களைப்பற்றி பொய் ஆராய்ச்சி செய்ய புறப்பட்டதேனோ? ஆகவே உத்தமத் தமிழர்கள் வாழும் நாட்டில் விபசாரம் போன்ற ஆபாச அழுக்குகளே உருவாயமைந்து சஞ்சரிக்கும் உஞ்சி விர்த்தி பார்ப்பனக் கூட்டத்திற்கு கற்பியல் முறையை போதிக்கத்தக்க கைங்கர்யத்தில் அய்யங்கார் ஈடுபடுவதுதான் அறிவுடமை யாகும். அதோடு உத்தமத் தமிழர்களை இழித்துக்கூறும் கூற்றுகளை தனது ஆராய்ச்சி நூலிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு வாய்தா நிபந்தனை இல்லாமல் செய்வது அய்யங்காரின் முதல் வேலையாகும்.
-விடுதலை,8.4.16

புதன், 25 மே, 2016

அன்பினால் மதத்தைப் பரப்பியதாக உலகில் எந்த மதவாதியாலும் கூறமுடியுமா?


பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.
பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகு காலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள் தனமாக நம்பிக் கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.
மனிதன் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், சாதி என்கின்றவைகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர்களாக, முட்டாள்களாக இருக்கின்றனர். சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவை களேயாகும். இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப்பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டியாக இருக்கிறான்.
ஆடு, கோழி, பன்றிகளைத்தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான் எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.
அதன் காரணமாக மனிதன் அறிவு வளர வேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக் கிறான். இங்குள்ள இந்தவிஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவை களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக் கின்றார்கள்.
பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகின் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள்.
நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டு கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்ற பலனென்ன? இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்க வில்லையே! இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது. முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும் படியான வசதி கிடைத்து விட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டுமானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது. இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக் கவும், மனிதனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும் படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ள தென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சி யினாலேயேயாகும்.
பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக் கிறது? அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? அத னால் எவ்வளவு நன்மை விளைகிறது? அதனால் எவ்வளவு கேடுகள் நீங்குகின்றன? என்பவைகளைச் சிந்தியுங்கள். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கடவுள் என்கின்ற முட்டாள் தனமான நம்பிக்கை யால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளா கின்றான்.
மனிதனை மாற்றவேண்டும்; மனி தனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடையவனாக்கவேண்டும். உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது. எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக்குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள் கின்றானே தவிர, கடவுள் அருளால் தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்ப தில்லையே! கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.
இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காகக் கடவுளுக்காக - செய்யப்பட்டவைகளேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக் கின்றான்? முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக்கொன்றிருக் கின்றார்கள்? மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால் தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கையற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.
பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனு பவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாததாகும். அதனைப் பரப்புவதே இக்கழகத்தின் கொள்கையாகும்.
15.12.1970 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 30.1.1971)
-விடுதலை,3.4.16

புரோகிதரும் திதியும் தம்பியின் சீற்றம் - அய்யரின் ஓட்டம் (சித்திர புத்திரன்)


27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று.

-விடுதலை,6.5.16

நல்ல பெயர் வைத்துக் கொள்வதும் ‘பாவமா’?1.4.1934 குடியரசிலிருந்து
சர்வ உயர்ஜாதியார்களின் திருக்கண்களுக்கும், கள்ள னாய், கபடனாய் எத்தனையோ வம்ச பரம்பரையில் தீயனாய் இந்த பரிதாப ஜாதியார் காணப்பட்டு வந்தார்கள். பல தரப்பட்ட அபிப்பிராய பேதத்துக்குரிய உயர் ஜாதியினர்கள், சாதி மாச்சர்யம் தலைகொண்டு நிற்கும் உயர்ஜாதியினர்கள் இந்தப்பரிதாப ஜாதியாரைப் பொறுத்தமட்டில் ஒருங்குசேர்த்து செய்துவந்த கொடுந் துன்பங்கள் பல.
அவர்களை அழைப்பதற்காவது நல்ல பெயர்களையாவது குட்டிக்கொள்ள உரிமை கொடுத்தார்களா, என்றால் இல்லை. அவர்கள் வயிற்றில் அடித்தார்கள். அது லாபத்தைகருதி செய்தார்கள் என்று சொல்லலாம். பரிதாப ஜாதியார் தங்கள் புத்திரபாக்கியங்களுக்கு நல்ல பெயர்வைத்து அழைப்பதில் கூடவா கல்நெஞ்சம் படைத்த மிராசுதார்களின் கண்ணை உறுத்த வேண்டும்.
புருஷோத்தமன், வெங்கிடாஜலபதி, திருஞானசம்பந்தன், ஸ்வதாரண்யம், வண்மீகலிங்கம், கிருபா நிதி, கிருத்திவாசன், வேதாந்தம், நடராஜன் போன்ற இம்மாதிரி யான பெயர்களை பரிதாப ஜாதியாரிடையே காணவே முடியாது.
இப்பெயர்கள் பரிதாப ஜாதியாரின் வாயில்கூட நுழை யவே துழையாதென்பதை அவர்களின் ஆரம்ப நிலையை முன் குடி அரசு அத்தியாயங்களின் நான் எழுகியவைகளை படித்தவர்களுக்கு தெளிவாய் புலப்படும். இம் மாதிரியான பெயர்களை தரித்துக் கொள்வதால் வரும் லாபமும் அப்பெயருக்குள்ள யோக்கியதையும் என்ன என்பது வேறு விஷயம். இப்பெயர்களே உயர்ஜாதி மிராசுதார்கள் என்னமோ பிரமாதமாய் கருதி  கொண்டு பரிதாப ஜாதியார் தரித்துக் கொள்வதில் உலகமே முழுகிப்போய் விடுவதாய் நினைக்கிறார்கள்.
அவர்களுடைய மனப்பான்மையில் எவ்வளவு தூரம் பேதபுத்தி தாண்டவமாடுகிறதென்பதை காட்டவே இதை எழுத வேண்டியிருக்கிறது. இப்பெயர்களெல்லாம் உயர்ஜாதி யாருக்கு சொந்தமான கடவுளர்களுடைய திருநாமங்களா தலால், அப்பெயர்களை பரிதாப ஜாதியார் தரித்துக்கொள்வது மகாபாதகமென்கிறார்கள்.
அவர்கள் சொல்லும் இம்மகா பாதகத்தை ஏற்று கொள்ள பயந்து நடுங்கும் பரிதாப ஜாதியார் தங்கள் சமூகத்தில் ஜனிக்கும் புத்திரபாக்கியங்களுக்கு வம்ச பரம்பரையாக குட்டிக்கொண்டுவரும் பெயர்களை கேட்க, கேட்க மிக விந்தையாகவே இருக்கும். தூண்டி, துடப்பக்கட்டை, நொண்டி, தாப்பாக் கட்டை, கட்டேரி, காட்டேரி, எலியன், பரட்டயன், மொழியன், காத்தான் போன்ற பல பெயர்களே பரிதாப சமூகத்தில் வழங்கிக் கொண்டுவருவதாகும்.
தப்பித் தவறி சில விடங்களில் பொன்னுசாமி, ரெங்கசாமி, பெரியசாமி, சின்னசாமி, என்பது போன்ற பெயர்கள் காணப்பட்டாலும் அப்பெயர்களை முழு தும் சொல்லி அழைக்க மிராசுதார்கள் சங்கோசப்படுவார்கள். தங்கள் பிரபல தத்துவத்துக்கு பங்கம் வந்து விட்டதாக கருதுவார்கள்.
ஏனென்றால் அப்பெயர்களில் சாமி. என்ற ஒரு வார்த்தை கலங்திருப்பதால் தான்! மிராசுதார்களுக்கேற்பட்ட இந்த இடைஞ்சலை தீர்த்துக் கொள்ளவும் வேண்டும், ஆனால் பரிதாப ஜாதியானை வேலைக்கழைக்க ஏதாவது ஒரு பெயரைக்குறிப்பிட்டு அழைத்தும் ஆகவேண்டும். ஆகவே சாமி என்ற பதத்தை எடுத்து விட்டு பொன்னா, சின்னா,
பெரியா, ரெங்கா என்று அழைத்துக்கொள்ளும் மிராசுதார் களோடு கழுதை, நாய் என்ற செல்லப்பெயரை வைத்து அழைக்கும் மிராசுதார்களும் உண்டு. அல்லது ஏலே தூண்டி மகனே! ஏலே தாப்பாக் கட்டை மகனே! ஏலே துடப்பக்கட்டை மகனே என்று தகப்பன் பெயரை வைத்து அழைத்துக் கொள்ளுவதின் மூலம் சாந்தி செய்துகொள்ளும் மிராசுதார் களும் சிலருண்டு.  பரிதாப ஜாதியார் படும் பல்லாயிரக்கணக் காண அவஸ்தைகளில் இதுவும் ஒன்று  என அறியவும்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • இன்றைய வாலிபர்கள் தங்களுக்கு மிக்க பொறுப்பு இருக்கிறதாகக் கருத வேண்டும். பெண்மணிகளும் மானம் ஈனம் என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாது முன்வர வேண்டும். ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மானமிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.
  • அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்புப் பலமாய்விடுமே என்கிற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவ மாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது.
  • மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன் னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலைநிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.
  • ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங் களால் யாதொரு பயனும் இல்லை யென்றும், அவைகள் போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரிய மாய்ச் சொல்லுகின்றேன். ஆகையால், அதை விட்டுவிட்டு, மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள் கையை ஏற்று நடத்தவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.
-விடுதலை,29.4.16

ஆயிரக்கணக்கான மேயோக்கள் - சித்திரபுத்திரன்-


9.2.1928 குடிஅரசிலிருந்து...
ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் புத்திவராது என்பது உறுதி!
இந்த நாட்டில் பார்ப்பனியம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமயணமும், பாரதமும், பெரிய புராணமும் இருக்கும் வரையும் விஷ்ணு புராணமும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும்,
கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்து விட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.
சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக்கொண்டு போனவர் களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும்,
2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும் கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமாயிருக்கும்  வரையிலும்,
பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறவரையும், குடிக்கப் பாலில்லாத குழந்தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் கொத்திக் கொண்டும் எலிக்குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலைமையிலும் பாம்புப் புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும்,
ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாத குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும்,
குளங் களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேதபாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிப்புகள் மிகுந்திருக்கும் மட்டும், சாணியை யும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர்களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச்சாரிகளாக விட்டுக் கொண்டிருக்கு மட்டும்,
அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்ச வத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண் டிருக்கு மட்டும், மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும், மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது, கேட்கக் கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும்,
இனியும் அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவி லிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொல பொலவென கலகலவெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும் பண்டிதர்களும் உணர்வதோடு, பார்ப்பனர் களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும், தேசத்தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.
-விடுதலை,22.4.16