வெள்ளி, 30 ஜூலை, 2021

இரண்டிலொன்று வேண்டும்

 

சித்திரபுத்திரன் - 

25.10.1931- குடிஅரசிலிருந்து...

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லைஎப்போதும் இருந்ததில்லைஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரை யாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால்ஆரியர்களுடைய (பார்ப்பனசூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும்பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும்எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார் களே ஒழிய இந்தியாவுக்கோஅல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திருகாந்திக்குப் பலமும் இல்லைபுத்தியும் இல்லைஆனால்ஆரியரின் கையாளாய் இருப்பதால்ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும்அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்ககூடியதாகும்மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

ஆகவேஇந்தியப் பொதுமக்களுக்கு வெற்றிஅதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும்.

பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும்ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும்ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும்மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு

வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும்கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும்பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.

இரண்டும் இல்லாமல்காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும்பலமும் உள்ள சமுகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு லோககுரு அவதாரம்

 

15.07.1928- குடிஅரசிலிருந்து....

நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்காக அவதரித்த லோக குருக்கள் அநேகர் என்பது யாவரும் அறிந்த விஷயம்அவர்களால் ஏற்பட்டி ருக்கும் தொல்லைகளும் நமது சுயமரியாதைக்கு இடையூறுகளும் நமது சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது.

இவ்வளவும் போதாமல் திருமதி பெசண் டம்மையார் அவர்களால் சுமர் 20, 30 வருஷங்களாக லோக குரு வருகிறார்லோகமாதா வருகின்றார் என்பதாக கூப்பாடு போடப்பட்டு வந்துஅநேக டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பி.., எம்.., பட்டம் பெற்றவர்கள் முதல் நம்பச் செய்து இரவும் பகலும் எதிர்பார்த்துதிடீரென்று சீமையில் திரு.கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் லோககுருவாகவும் திருமதி.அருண்டேல்ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு அம்மையார் லோகமாதாவாகவும் அவதாரம் செய்து உலகோர்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பக்கத்தில் உலகரட்சிப்பு நடப்பு நடந்து வருகின்றது.

இவ்வளவும் போதாமல் நமது திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமது தவத்தால் இன்னும் ஒரு லோக குரு அவதாரம் செய்யப்போவதாய் திருநெல்வேலியில் 8-7-1928ஆம் தேதி வெளியாக்கி விளம்பரப்படுத்தி யிருக்கின்றார்ஆனால்அந்த லோககுரு அவதாரம் செய்யப்போவதற்கு அப்போது அவர் சொன்ன காரணம்தான் மிக வெட்கக்கேடானது என்று சொல்லுவோம்என்னவென்றால் மக்களுக்குக் கடவுள் எண்ணம் மறைந்துபோன காலத்தில் கடவுள் அவ்வெண்ணத்தை உண்டாக்க அவதாரம் செய்வது எப்போதும் வழக்கமாம்அதுபோலத்தான் முன்பு ஒரு காலத்தில் சமணர்களால் கடவுள் எண்ணம் மக்களுக்குள் மறைபட்டிருந்த காலத்தில் திருஞான சம்பந்தரென்கின்ற பார்ப்பனர் தோன்றிதனது மூன்றாவது வயதிலேயே சமணர்களை வென்றுஅவர்கள் தத்துவங்களை அழித்துகடவுள் பெரு மையைக் காட்டிமக்களை மோட்சமடையும்படிச் செய்தாராம்.

அதுபோலவே இப்போது ............................. என்பவரால் மக்களுக்குள் கடவுள் எண்ணம் மறைபட்டு வருவதால் அதை ஒழித்து அவனை வாதில் வென்று மக்களுக்குக் கடவுள் எண்ணத்தை ஊட்டி மோட்சம் கொடுக்க ஒரு லோககுரு அவதரிக்கப் போகின்றார்அவர் தயாராயிருக்கின்றார்எல்லோரும் தவம் கிடங்கள் என்று பேசியிருக்கின்றார்.

அந்த லோககுரு இனிமேல் பிறக்கப் போகின்றாரோ அல்லது திரு.கிருஷ்ணமூர்த்தி லோககுரு ஆய்விட்டதுபோல்நமது திருதிரு.வி.கல்யாணசுந்தரரே லோககுரு ஆய்விடுவாரோ அல்லது நமது சுந்தரராலேயே யாராவது காட்டப்படுவாரோ அறிகிலோம்.

பத்து அவதாரங்களும்பன்னிரண்டு ஆழ்வார்களும்நான்கு சமயக் குரவர்களும்அறுபத்து மூன்று நாயன்மார்களும் அவதரித்து வெகுகாலமாக யாரும் அவதரிக்கவே இல்லை என்பது யாவரும் அறிந்ததேஇதற்குக் காரணம் உலகம் க்ஷேமமாய் நீதியாய் சத்தியமாய் நடந்து வந்ததாலோ அல்லது யாராவது 144 போட்டு தடுத்துவிட்டதாலோ என்பது நமக்கு விளங்கவில்லைஆகிலும் நமது முதலியார் அவர்கள் தவத்தால் இப்போதாவது கடவுளை உணர்த்த ஒரு அவதாரம் வரப்போவதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி எய்துகிறோம்ஆனாலும் நமக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம் தோன்றுகின்றதுஅதாவது கடவுள் உணர்ச்சி மறைந்த மக்களுக்கு ஒரு சமயம் கடவுள் ஒரு அவதாரம் அனுப்பித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைவிட கடவுள் தானாகவே மக்கள் மனதில் வெளிப்படும்படி செய்துகொள்ள முடியாதா என்பதுதான்இதற்கு ஒரு கதை உண்டுஅதாவது ஒரு ஊரில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்ததுஅந்தக் கோயிலின் மேடையில் ஒரு ராமசாமிபிள்ளையாருக்கு நேரே காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான்.

இதைப்பார்த்து பிள்ளையாருக்கு மிகவும் அவமானம் ஏற்பட்டுத் தன்னை வெகு பக்தியுடன் பூசை செய்யும் ஒரு கல்யாணசுந்தரக் குருக்களைக் கூப்பிட்டு  குருக்களேஇந்த ராமசாமியைக் காலை எடுத்து அப்புறம் வைத்துக்கொள்ளச் சொல்லுகின்றாயாஅல்லது உன் கண்ணைப் பொட்டை ஆக்கட்டுமாஎன்று

கேட்டதாம்.

அந்தக் குருக்கள் பிள்ளையாரைப் பார்த்து என் கண்ணைப் பொட்டை ஆக்க சக்தி உள்ள பிள்ளையாரேஅவன் காலை முடமாக்காவிட்டாலும் சற்று மடக்கச் சொல்லக்கூடாதா என்று கேட்க ஞானமில்லாமல்ராமசாமியின் காலை எடுக்கும்படி தவம் செய்தாராம்அது போல் இருக்கின்றதுநமது திரு.முதலியார் அவர்கள் வெளிப்படுத்தும் அவதார மகிமை.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஒரு யுக்தி ஆராய்ச்சி ( புராணமும் கடவுளும் வளர்ந்த முறை)

 

01.07.1944 - குடி அரசிலிருந்து....

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும்ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும்பக்தி ரூபமாகவும்கடவுள் செய்கைகடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள்இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது எமது கருத்துஇந்தக் கருத்துக்கு உதாரணங்கள் அவைகளிலேயே இருக்கின்றன.

அவதாரம்

விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர்களின் எதிரிகளை அதாவது மனுதர்மத்திற்கு விரோதமாயும்ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும்தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும்அழிக்கவும் சதி செய்யவும் ஏற்பட்டவைகள்அது போலவே சிவன் அவதாரமான சுப்பிரமணியனும் மற்றவர்களும்அதுபோலவே ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவைகள்சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சூரர்அசுரர்அரக்கர்இராட்சதர் என்கின்றவர்களைக் கொல்ல அழிக்க வந்தவர்கள் என்றே சொல்லலாம்.

ஆரியர்களின் தனிக்கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற்கடவுள்அதாவதுமுதலில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும்ஸ்கந்தம் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட புராணம் ஆகவும் இருக்க வேண்டும்இவை விஷ்ணுவுக்கும்இராமாயணத்துக்கும் முந்தியதாயும் இருக்க வேண்டும்இராமாயணம் சமீப காலத்தில் கந்தபுராணத்தைப் பார்த்து சற்று திருந்திய காலத்திருத்தத்தோடு எழுதியதென்றே சொல்லலாம்பாரதம்கூட இராமாயணத்திற்கு முந்தியதாகவே இருக்க வேண்டும்.

எப்படி ஆயுதங்களில் கல்கவண்ஈட்டி, (வேல்)வில்துப்பாக்கிபீரங்கிவெடிகுண்டுவிஷப்புகை ஆகியவை ஒன்றிற்குப் பின் ஒன்று வரிசைக்கிரமமோ அதுபோல்தான்.

முதலில் சிவன்கந்தபுராணம்பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள்பாரதம்இராமாயணம் ஆகியவை என்று சொல்ல வேண்டும்சுரர்அசுரர் என்பவை எல்லாம் ஆரியர் - ஆரியர் அல்லாதவர் என்பதற்கு முதலில் ஏற்படுத்திக் கொண்ட (இட்டபெயர்களாகவும் தேவர்கள்இராட்சதர்கள் என்பவை பின்னால் ஏற்படுத்திக் கொண்ட பெயர்களாகவும் தெரிகின்றனசிவன் முதற்கடவுள் என்பதற்கும் கந்தபுராணம் முதல் புராணம் என்பதற்கும் உதாரணம் என்னவென்றால்,

சிவன் கற்பிதம்

சிவன் கற்பிதம் மிக்க பழமையான காட்டுமி ராண்டி காலத்தியதாக இருக்கிறதுஅதாவது தலை - சடையாகவும்ஆடை - மிருகத்தின் தோலாகவும்அணி (நகை) - பாம்புகள்எலும்புகளாகவும்புஷ்பம் - கொன்றை எருக்கம் பூக்களாகவும்பாத்திரம் - மண்டை ஓடுஆகாரம் - தேன்தினைமாவு கொழுக்கட்டையாகவும்ஆயுதம் - 1வது மழு, 2வது சூலம்இடம் - மலைவிளையாடுவது - சுடலைபூசிக்கொள்வது - சாம்பல்ரூபம் (சாயல்) - அகோரம்வாகனம் - மாடுகுணம் - வெளிப்படையான இம்சைநடனம் - காட்டுமிராண்டி ஆட்டம்சங்கீதக்கருவி - உடுக்கைபெண் ஜாதி இதுபோன்றேகோர ரூபமுள்ள காளிஅவள் வாகனம் - சிங்கம்பிள்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம்மற்றொன்றுக்கு யானைத்தலை விகார ரூபம்.

இந்த மாதிரியாக காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும்காட்டுமிராண்டி காலத்திய எண்ணங்களின்படியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறபடியால் சிவன்தான் முதலாவதாக சித்திரிக்கப்பட்ட கடவுளாக இருக்க வேண்டும் என்பது விளங்கும்.

கந்த புராணம்

அதுபோலவே கந்த புராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்க வேண்டும்ஏனெனில் கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப் பட்டிருக்கிருக்கிறது.

ஆயிரம் தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும்இந்திரியத்தை ஆற்றில் விட்டதால் ஏற்பட்டான் என்றும்அந்த... மிஞ்சின இந்திரியம்தான் என்றும்நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும் மற்றும் பலவித ஆபாசமானதும் அசம்பாவிதமானதும் சிறிதும் அறிவற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறதுகந்த புராணத்தில் பாத்திரங்கள் அக்கினிமுகன்சிங்கமுகன்ஆட்டுமுகன் முதலிய இயற்கைக்கு மாறுபட்டவைகள்யுத்த முறை இந்திரன் குயிலாக மாறினான்சூரன் சக்ரவாகப்புள் குருவியாக மாறினான்இந்திரன் மயிலாக வந்தான்தீகாற்று முதலிய உருவுடன் தோன்றினான்வேலால் குத்துதல்சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டி காலத்திய கற்பனையேயாகும்.

இந்திரனுடைய நிலைமையும்இராமாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனைவிட காட்டுமிராண்டித் தன்மை கொண்டதாகவும் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது.

Comments

ஜென்மக்குணம் போகுமா?

 

23-01-1927- குடிஅரசிலிருந்து...

சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும்அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும்பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம்.

அது போலவே இப்போது சட்டசபை தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்க பலம் இருக்கிறது என்பதாகக் கருதி இப்போது சட்டசபைக்குப் பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள்.  அதாவது முதலாவதாகதேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது.  தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக்கட்சி விஷயமல்ல.  இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லித் தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற்றுவிட்டுஇப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.

இத்தீர்மானம் கொண்டுவந்தது கோவை பிரதிநிதி சிறீமான் சி.விவெங்கிட்ட ரமண அய்யங்காரே ஆவார்கோவை ஜில்லாவில் சிறீமான் டி..இராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக்கொடுத்திருக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.  சிறீமான் அய்யங்காரை இது யோக்கியமா?  என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன்.  அதாவதுஎன் பணத்தினால் ஓட்டுச் சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத்தத்தத்தினாலும் ஓட்டுப் பெறவில்லை;  என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலைசெய்தார்கள்?  ஓட்டுச் செய்தார்கள்என்று கேட்பார்களாதலால்  அய்யங்காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான்.  மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  அதாவதுபார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்துவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இந்தக் கமிட்டி இருப்பதால் நாலுஇரண்டு பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளைக் காலேஜில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.  இந்த நாலோஇரண்டோ பிள்ளைகள் படிப்பதுகூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்குக் கண்ணில் குத்துகிறபடியால்அடியோடு காலேஜுகளைப் பார்ப்பனச் சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இதெல்லாம் பார்ப்பன ருடைய தப்பிதம் அல்லபின்னையாருடையதென்றால் - அவர்கள் பின் திரிந்ததிரியும்திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுத் தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம்.  இன்னமும் என்ன என்ன நடக் குமோ பார்ப்போம்.

கடவுளும் - மதமும்


* தந்தை பெரியார்

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும்  மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில்சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோமாதலினாலேயாம்அதோடுகூட பார்ப் பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல்தேசியம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும்சமயம் புராணப் பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப் புக்காரர்களும்இவ்வியக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தையும் பற்றிய பொதுமக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும்மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதானாலும்நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு பயப்படுவதாகத் தெரிவதாலும்மற்றும் சிலர் பெரியோர்களும்சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும்கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டு மென்பதாகக் கருதி இத்தலைப்புக் கொடுத்து எழுதப் புகுந்தோம்இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம் ஆயினும் அவை களையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம்வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும் படி வேண்டுகின்றோம்இக்கட்டுரை யானது இதே தலைப்பின் கீழ் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரை யின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனு சரித்தும் சில நண்பர்கள் அதை விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.

முதலாவதாகநமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும்கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்க அவர்களுக்கு அறிவுஆற்றல் இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்துவிடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கின்றோம்அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப் பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டிய தாயிற்றே யொழிய உண்மையில் கடவுளை யும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லைஅதுபோலவேதான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம்எப்படி எனில்திரு.விகலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராக தம்மால் கூடிய சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும்சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த் தைகளையே தமது ஆயுதமாகவும்சமய சம்பந்தமான சில பைத்தியக்காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்கு வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டதுஎனவே இன்றைய தினம் பெரியபுராணம்திருவிளையாடல் புராணம்ராமாயணம்பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம்பூஜைஉற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும் மற்றவர்கள் நாத்திகர்கள்சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டதுஇது எப்படி இருந்தபோதிலும்கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும்இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களாஅல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களாஅல்லது அறியாமையினா லுண்டாக்கினார்களாஎன்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பதுபற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

முதலாவதாகஇங்குகுணம்உருவம் பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமேஇங்கு விவரிக்கக் கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும்மதப்பிரிவுகளான கிறிஸ்துமகமதியம்ஜைனம்பௌத்த சீக்கியசைவவைணவநிரீச் சுரவாதஉலகாயுதசாக்கியவாம முதலிய பல உள் மதங் களைப் பற்றியும் நாம் இங்கு தனித்தனியாக பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை ஏனெனில் அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய் வெளிப்பட்டு ஒருவருக் கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்ததும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொரு வர்களும் அவரவர்கள் கடவுளையோகடவுள் தூதர் களையோஅவதாரங் களையோசமயங்களையோ சமயாச் சாரியார்களையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ ஆராய்ச்சியின் மீதோநியாயத்தின் மீதோநிலை நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலக மறிந்ததாகும்ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.

முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம்மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும்இதை யாரும் மறுக்கமுடியாதுஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவ தில்லைஎப்படி எனில் சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ வஸ்துவையோ காட்டிசாமிஎன்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றதுஅதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்கவேண்டும்அது எப்படி என்றும் எப்போ தென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும்கடவுள் என்பது கடவுள்தெய்வம்அல்லாகாட்என்ற தமிழ் சமஸ்கிருதம்துலுக்குஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கையின் இயங்குதலுக்கும்பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும்அந்த சக்திதான் கடவுள்எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லாகாட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானாலும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதாயிருக்கின்றதுஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படி யிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால்நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும்அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமிமலைகாற்றுநெருப்புநதிசூரியன்சந்திரன்நட்சத்திரம்மழைஇடிமின்னல்மேகம்நோய்கள்அவை தீர்க்க வேண்டி யவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப் படுகின்றதுஇவைகளெல்லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள்அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளிமலையாகவும் அங்கு கடவுள் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப்பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டு பிடிக்க முடியாதிருந்ததும்மேல்நாட்டை மேல்லோகமென் றும்கீழ்நாட்டை பாதாள லோகம்நரகலோகம் என்றும் இப்படி பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண் மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டதுஇப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லிவிடுகின்றான்உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக் காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும்தெய்வசக்தி என்றும்உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள்அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம்கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லைஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.

எனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியதுபிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனுமேயாகும்அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லைஉதாரணமாக சூரியசந்திரகிரணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து  சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும்அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம்இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும்இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமிசூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்அது போலவே எங் கிருந்து எப்படி தண்ணீர் வருகின்ற தென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டனஅது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதாரஉடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதிமாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டனஇதுபோலவே காற்றுகருப்புபேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றனஇந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென்றும்கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம்இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும்மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன் றப்படாம லிருப்பதையும் பார்க்கின்றோம் அது அவ்விருவ ருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.

இப்போது நம் மனத்திற்கு எட்டாதகாரியங்களை மேனாட்டார் செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லைஇந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாதுஅன்றியும்வாழ்க்கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றதுஅதாவது கஷ்டப்பட்டு ஏமாற்றமடைந்தவனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும்கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான்ஆறுதலையும் திருப்தியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றதுநல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும்ஈடு செய்ய முடியாத இடத் திலும் கடவுள் செயல் என்பதைக் கொண்டுதான் திருப்தி அடைகின்றார்கள்அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித் தீர வேண்டியவர்களாக இருக் கின்றார்கள்ஆனால் உறுதியான பக்குவமடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோஅல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள்எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும் சற்று அறிவுடைய மக்கள் கடவுளுக்கும் ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும் பக்குவமடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாச முண்டுஒருவொருக் கொருவர்  கடவுள் வணக்கத்திலும்கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாச முண்டு.

- 'குடிஅரசு' - தலையங்கம் - 28.07.1929