செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

எனது புகழைப்பார்!1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்ன வேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வ கட்சி மாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டு வரும்படிச் செய்தார். அதில், சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.
அப்போது காந்தியார், எனக்கு என்ன வேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டு பதில் சொல்லுகிறேன் - என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார்? என் மனைவியும் என் தங்கையும்தான். இது 1922ஆம் வருஷம் ஜனவரி மாதம் 19ஆம் தேதியிலோ, 20ஆம் தேதியிலோ இந்து பத்திரிகையில் இருந்தது. இதை திருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார்.
இதற்கு மேல் எனக்கு இன்னும் என்ன வேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத் துரோகி, மதத் துரோகி, நாஸ்திகன், கோழை, சர்க்கார்தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும், நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமென்றும் கருதி, சில திட்டங்களைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து, அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன்.
இனியும் சாகும் வரை அந்தப்படியே உழைத்து வரத்தான் செய்வேன்.
- தந்தை பெரியார் (குடிஅரசு 29.3.1936)
-விடுதலை13.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக