பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

சனி, 11 ஜூன், 2022

நவரத்தினம்


   June 10, 2022 • Viduthalai

  02.08.1925- குடிஅரசிலிருந்து... 

சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.

2. பிராமணர்களும், அவர்களைப் போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்கிற எண்ணங்கொண்டே கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக் கொண்டும், காஞ்சிபுரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும்  வரும் பட்டுப்புடவைகளை உடுத்திக் கொண்டும் நன்றாய்ச் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

3. ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லா திருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக்கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

4. ஆங்கிலம் படித்துப் பரீட்சையில் தேறுவதே புத்திசாலித்தனமென்றும், கெட்டிக்காரத்தன மென்றும் சொல்வது அறியாமையாகும். உருப்போடப் பழகினவனும், ஞாபகசக்தியுள்ளவனும் எதையும் படித்து பாஸ் பண்ணி விடலாம். உருப்போடப் பழகாதவனும், ஞாபகசக்தியில்லாதவனும் பரீட்சையில் தவறிவிடலாம். ஆனால், படித்துப் பாஸ் பண்ணினவன் அயோக்கியனாகவும், முட்டாளாகவும் இருக்கலாம். படித்தும் பாஸ் செய்யாதவன் கெட்டிக்காரனாகவும், யோக்கியனாகவுமிருக்கலாம்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:50 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மற்ற ஜாதி படிப்பு

தெய்வ வரி



   June 10, 2022 • Viduthalai

26.07.1925- குடிஅரசிலிருந்து... 

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதிற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதிவைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்துவதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற தெய்வத்துக்கு மாத்திரம் வருஷம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கே போகும் ரயில் சத்தம், வண்டி சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதுபோலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள் போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவைகளுக்காகவும் அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும்தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வயாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினும் பெற்றுவிடலாமென்றும் நினைக்கின்ற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்மயோக்யதையைப் பொறுத்தல்லாமல்,  தாம் வைதீகச்சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும் ஏற்பட்டி ருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன?வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன? இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதைஎன்ன என்பதை மக்கள் கவனிப்பதில்லை. காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படி கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கைப் போடுவதாலும், நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல், ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ அப்படியே இந்த க்ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை தலம் என்று சொன்னால் நல்ல வியாபார தலம் என்பது தான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை ஸ்தலங்களுக்கு போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபச்சாரத்திற்கும். சூதுக்கும், போதை வதுகளுக்குமே பெரும்பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக் கிறோம். ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர்: அய்யா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?

பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகுதூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார் : நீர் ! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?

புரோகிதர் :  (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனை யோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:46 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தெய்வ வரி

பிராயச்சித்தம் (பிராமணர்)


  June 10, 2022 • Viduthalai

23.08.1925 - குடிஅரசிலிருந்து

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரிகள் வந்தார்.

பெரியமனிதர் :- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.

சாஸ்திரிகள் :- அப்படியா, என்ன விசேஷம்? 

பெரிய மனிதர் :- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான் இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள் :- ஆஹா உண்டு; அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டால் அந்தப்பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப்பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர் :- தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது. தங்களுடைய மகன் தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள் :- ஓ! ஹோ! பிராம ணனா! அப்படியானால், இனிமேல் அப்படிச்செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:45 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பிராயச்சித்தம்

வெள்ளி, 20 மே, 2022

உண்மையான சுதந்திரம் பெற்றால் முதலில் பரீட்சைகளை ஒழிப்போம்

 

  April 17, 2022 • Viduthalai

தந்தை பெரியார்

வகுப்புரிமை தேவை என்று ஏன் கருதுகிறோம்? என்பதை நாம் நன்றாக உணர வேண்டும். உண்மையில் நாம் நூற்றுக்கு எண்பத்தைந்து பேர்களுக்கு மேல் கல்வி இல்லாத மக்களாக இருக்கிறோம். நம் தாய்மார்களில் நூற்றுக்கு தொண்ணூறு தொண்ணூற்றைந்து பேர்களுக்கு மேல் கல்வி இல்லாதவர்கள் இருக்கிறார்கள். ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டிலே மேற்சொன்ன வீதம் கல்வி இல்லாத மக்களாக இருக்கிறார்கள் என்றால், இது உலகிலேயே நம் நாட்டைத் தவிர வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

இன்று அய்ரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நூற்றுக்கு நூறு பேரும் படித்து இருக்கிறார்கள். படித்தவர்களை மிகவும் பெரிய அறிவாளிகளாகக் கருதுகிறார்கள். படிக்காதவர்களை மிக மிக கேவலமாகக் கருதுகிறார்கள் அந்நாட்டு மக்கள். நம் நாட்டிலே கூட பார்ப்பன ஆதிக்கமில்லாத கொச்சி, திருவிதாங்கூர் போன்ற இடங்களிலே நூற்றுக்கு 50, 60 பேர் படித்து இருக்கிறார்கள்.

ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும், அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டது? அவர்கள் ஏன் அப்படி? நாம் ஏன் இப்படி? இதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என்ன?

மதத் தத்துவத்தின்படியும், சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாக, அதாவது சூத்திரனாக இருக்கிறோம்.  மேலான ஜாதி தான் படிக்க வேண்டும். கீழான ஜாதி படிக்கக் கூடாது அவர்களுக்கு யாரும் படிப்புச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

நாம் படிக்க வேண்டுமானால் படிப்பதற்கு இடமும், படிப்பதற்கேற்ற வசதிகளும் இல்லாமல் போய் விட்டது. இந்தக் காரணத்தால்தான் நாம் படிப்பு இல்லாதவர்களாய் இருக்கிறோம். நான் சொல்லுவேன், இவர்கள் அதாவது பார்ப்பனர்கள் இங்கு வந்த பிறகு நாம் எல்லாம் ஏராளமாகப் படித்து இருப்போமென்றால் அது அதிசயம் ஆனது.. காரணம்? நாம் முன்னேமேயே பரஸ்பரமாக சில தொழில்களையே நம் மேலே சுமத்தப்பட்டதனாலேயே அந்தத் தொழில் முறையிலே இருந்து விட்டபடியால் படிக்க நமக்கு வசதியும், உரிமையும் இல்லாமல் போய்விட்டது.

படிப்பதைத் தடுக்கும் பார்ப்பான்

உண்மையிலேயே வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் அதுவும் நீண்ட நாட்களுக்குப் பின்புதான், நமக்கும் படிக்கும்படியான சந்தர்ப்பம் சிறிது கிடைத்தது. அதையும் பார்ப்பனர்கள் எப்படித் தடுத்திருக்கிறார்கள் என்பதை அரசியலில் அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். 

படிப்பிலே நம்மவர்களுக்கு நோக்கம் குறைவாக இருக்குமே தவிர, அறிவிலே குறைச்சலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பார்ப்பானை விட கொஞ்சமாவது உயர்ந்து இருந்தார்களே தவிர, கொஞ்சமாவது குறைந்தவர்கள் அல்ல. 

ஆனால், பார்ப்பனர் நாற்பது பேர்கள் பரீட்சைக்குப் போயிருப்பார்கள். நம்முடைய ஆள்களில் 10-க்கு ஆறு பேர்கள் தேறி இருப்பார்கள். பார்ப்பனர்கள் 40-க்குப் பதினெட்டு பேர்கள் தேறி இருப்பார்கள். அவர்களைவிட திறமையிலே நாம் கூடுதல் தான். பொதுவாக எந்த விஷயங்களிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல; ஆனால், படிக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விட்டது.

ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வரும் காலத்திலே கல்வித் துறைகளில் எல்லாம் பார்ப்பனராகவே இருந்தார்கள். ஆனால், ஜஸ்டிஸ் கட்சியார் வந்த பிறகு தான் நம்மவர்களுக்குக் கொஞ்சம் வசதிகள் செய்தார்கள். அதிலேயும் பார்ப்பனரிடையே எதிர்த்து செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகுதான் பி.ஏ., எம்.ஏ., முதலிய வகுப்புகளை நம்மவர்களிடம் அதிகமாகக் காண முடிந்தது. அதன் பின்னர் நாம் உத்தியோகங்களிலே போட்டிப் போட ஆரம்பித்தோம். பெரும்பாலான உத்தியோகங்களுக்கு சர்க்காருக்கு விண்ணப்பம் போட ஆரம்பித்தனர் நம்மவர்கள்.

இதைக் கண்ட பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து தகுதியை அதிகப்படுத்தினார்கள்.  ஆனால், நாற்பது வருடங்களுக்கு முன்னே உத்தியோகத்திற்கு தகுதி எப்படி இருந்தது?

பரீட்சையை முக்கியமாக்கி விட்டான்

ஒரு வக்கீலாக வரவேண்டுமானால் அவனொரு மாஜிஸ்திரேட், குமாஸ்தாவாக, ஏட்டாக இருந்தால் போதும். டாக்டருக்குச் சாதாரணமாக எல்.எம்.பி. என்று இருப்பானானால் போதும். இன்றைய அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வேலைக்கு ஒரு ஓவர்சியர் போதும். இதற்கும் மேலே பெரிய பரீட்சைக்குப் படிக்க வேண்டுமானால் வெள்ளைக்காரர்கள் தான் இருப்பார்கள். இதைக்கண்டுதான் பார்ப்பனர்களும் நம்முடன் போட்டிப் போட ஆரம்பித்தனர். ஆகையினால் கிளார்க்குக்கு பி.ஏ. என்றும், சப்-இன்ஸ்பெக்டருக்கு பி.ஏ. என்றும் ஒரு எஸ்.எஸ்.எல்.சி. வக்கீலாக வரவேண்டுமானால் அதற்கு மேல் 7 வருடங்கள் படிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இப்படியாக உத்தியோகத்திற்கு பரீட்சையை மிக முக்கியமாக்கி விட்டனர். இப்போது படிப்பு படிக்கும் நாளை குறைத்து வருஷத்தை அதிகமாக்கி செலவையும் அதிகமாக்கி, சொற்ப செலவிலே நம் மக்கள் படிக்காமல் இருக்கும்படி செய்து விட்டார்கள்.

இப்படி நம்மால் எத்தனை பேர்களுக்குப் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்? நம்மவர்கள் 100-க்கு 90 பேர் உடலுழைப்புக் கூலிகள். இவர்களுக்குப் பண வசதிதான் உண்டா? அதுவும் இல்லை. இப்படி எல்லாம் பணமும் படிப்பதற்கு இல்லை. ஏதாவது உத்தியோகத்துக்கு வரவேண்டுமென்று நினைத்தால் எந்த உத்தியோகத்தைக் கொடுப்பார்கள்? இல்லாமலிருந்தால் ஏதாவது பியூன், பில்லைச் சேவகன், போலீஸ் சேவகன் ஆகிய வேலை வேண்டுமானால் கிடைக்கும். நம்முடைய ஆட்களுக்குக் கொடுத்தால் பார்ப்பானுடைய தலையில் கை வைத்து விடுவார்களோ என்ற பயம். ஆகையால்தான் நம்மவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதில்லை.

இப்படியாக நீண்ட நாட்களாக நம்மவர்களுக்குக் கீழ்நிலையில் இருக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது. இவ்வளவு கஷ்டங்களை எல்லாம் தாண்டி நாம் மேலே போக தயாராக இருந்தால், அதற்கும் தகுதி - திறமை என்று முட்டுக்கட்டை போட்டு வழி இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாதிரியாக நம் காரியங்களில் பார்ப்பனர்கள் தொல்லை கொடுத்து நம்மவர்களுக்கு மேலே போக வகை இல்லாமல் தடுத்து விடுகிறார்கள்.

இவற்றிலிருந்து மீளவே நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கிறோமே தவிர, எங்களுக்கு இந்த வேலை கொடு, அந்த வேலை கொடு என்று பெருமை அடைய கேட்கவில்லை.

மோட்சம் என்கிற பித்தலாட்டம்

நம் நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் பார்ப்பான். அவனுக்கு என்றைக்குமே நாடு கிடையாது. ஜிப்சிக்கள், லம்பாடி மக்கள் போல் இந்த ஊரிலே இருந்து அந்த ஊருக்குப் போவான். அன்றியும் அவனுக்குத் தந்திரம் தவிர அறிவே கிடையாது. அவனுக்கு மூளையே இல்லை. செத்துப் போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அழுவான். காட்டுமிராண்டித்தனமான ஆபாசப் புராணங்களைக் கொண்டு நம்மை ஏய்ப்பான். இவர்கள் நம் தமிழை ஒழித்துக் கட்ட தீவிர வேலை செய்து நம் தமிழை நாசமாக்கி விட்டார்கள். இவர்கள் தமிழ் பேசுவது மிகக் கேடானது. வடமொழியைப் புகுத்தி மீதியையும் கெடுத்துவிட்டார்கள். இவர்களைத்தான் நம்மவர்களும் பின்பற்றி பார்ப்பனத் தமிழை நம்மவர்களும் பேசுகிறார்கள். மதம், கடவுள், புராண உணர்ச்சி காரணமாக, பக்தி காரணமாக பார்ப்பான் சூழ்ச்சி, இழிவு பற்றி நம்மவர்களுக்கு சிறிதும் கவலையே இல்லாமல் இருந்தது. ஏதாவது ஒரு தொழிலையே கடமையாகக் கொண்டு செய்து வயிறு பிழைத்து வருபவனுக்கு இதைப் பற்றிய கவலை எப்படி வரும்? இந்த உலகத்தைப் பற்றியும், மான - அவமானத்தைப் பற்றியும் கவலை இல்லாமல் மோட்சம் என்கின்ற பித்தலாட்டத்தில் மயங்குகிறவனுக்குக் கவலை எப்படி வரும்? இப்போது உலக அறிவு பெற்ற பின்பும், சுயமரியாதை இயக்கப் பிரசாரத்திற்குப் பின்பும் சிறிது உணர்ச்சி தோன்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்கிறோம்.

நம் மாகாண மக்களுக்குச் சலுகை வேண்டாம். உங்களின் கல்வித் திட்டத்தின்படி எங்களுக்கும் இடம் கொடு என்று தான் கேட்கிறோம். இண்டர் மீடியட் படித்து பாஸ் செய்து இருக்கும் எங்களுக்கும் மேல் வகுப்பில் இடம் கொடு என்று தான் கேட்கிறோம். மார்க் முறையில் சூழ்ச்சி. பாஸ் செய்த பிறகு மார்க்கைப் பார்க்க வேண்டுமென்று கேட்பது ஏன்? பாஸ் செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட பாடத்திலே நூற்றுக்கு 35, 40 வாங்க வேண்டுமென்று திட்டம் செய்து இருக்கிறார்கள். அதை வாங்கின பிறகுதான் பாஸ் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். அதற்குப் பிறகு அவன் மேல் போக வேண்டுமானால், இது பத்தாது, அது பத்தாது என்று சொன்னால் அது போக்கிரித்தனம் தானே! இதையும் இந்த மந்திரிகள் ஒப்புக் கொண்டால் அது மடத்தனம் தானே! ஏன் எதற்காக சொல்லுகிறேன் என்றால், இந்தத் துறைகளில் எல்லாம் நம்மவர்கள் தலை எடுக்கக்கூடாது என்றும், அவர்கள்தான் பதவிக்கு வரவேண்டுமென்றும் நினைப்பதுதான்.

தகுதி - திறமை சூழ்ச்சி

நான் கேட்கிறேன், பார்ப்பனர்கள் என்பது தவிர இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பண்டித நேரு, முதல் மந்திரி வேலை பார்ப்பதற்கு பார்ப்பனர் தவிர வேறு என்ன தகுதி? உணவு மந்திரி முன்ஷிக்கும் பார்ப்பனர் என்பது தவிர வேறு என்ன தகுதி? மரம் நடும் வேலைக்கு வந்திருக்கிறார்களே, அதற்கு இவர்கள் தகுதியா? ஒரு விவசாய பாட்டாளியைப் போட்டிருந்தால் அவனுக்குத் தெரியும், எந்த மரங்களை எப்படி நட வேண்டும்.  பார்ப்பான் என்பதற்காக, அவனுக்கு உத்தியோகம் கொடுப்பதற்காக தகுதியும், திறமையும் இல்லாதவர்களை எடுப்பதா? நம்மவர்களுக்கு என்றால் தகுதியும் வேறு, திறமையும் வேறு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஒரு தடவை எஸ்.குருசாமி விடுதலையில் எழுதி இருந்தார். சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரு பியூன் வேண்டுமென்றால், ஒருவன் அந்த வேலைக்காக வந்து விளம்பரம் செய்திருந்தவரிடம் எனக்கு சைக்கிளிலே சர்க்கஸ் வேலைகள் செய்யத் தெரியும். மணிக்கு 25 மைல் போவேன் என்று சொன்னால், அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அந்த வேலைக்கு மணிக்கு 6 அல்லது 7 மைல் போனால் அது போதும். அதற்கு மேல் தேவைக்கு மிஞ்சின வேகம் எதற்கு உதவும்?

நமக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்தவன் போதுமே. தலைகீழாக நிற்பவன் எதற்கு? அதைப்போல்தான், நான் 20 வருஷங்களாய் படித்தேன், எனக்குச் சம்பளம் ஏன் குறைவு என்று கேட்பது?

அரசாங்கத்திற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேண்டு மென்றால் ஒருவரை நிறுத்தி உயரம், பருமன், ஊக்கம், நாணயம் முதலியன பார்த்துப் போட்டால் போதுமே. அதற்கு ஏன் பி.ஏ.? அதிலும் உயர்ந்த மார்க்கு ஏன் வேணும்? ஒரு குமாஸ்தா வேண்டுமானால் அதற்கு ஏன் பி.ஏ.? ஒரு டிப்டி-கலெக்டர்? ஒரு டிப்டி சூப்ரண்ட்? ஒரு பி.ஏ. படித்ததன் மூலம் என்ன சாதிக்க முடியும்? இவர்களுக்கு மேத்தமெட்டிக்ஸ் வேணும்; சயன்ஸ் வேணும், வெங்காயம் வேணும் என்றால் இதுவெல்லாம் எதற்கு?

இன்றைய தினம் நமக்கு இருக்கிற தொல்லைகள் எல்லாம் படிப்பிலே அதிகமான யோக்கியதையை வைத்ததுதான். வக்கீல்களுக்கு எதற்கு பி.எல். படிக்க வேண்டும்? அவன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த உடனேயே சட்டத்தைப் படி என்றால் போதுமே. நாட்டிலே பித்தலாட்டமும், கொலையும், ஊழல்களும் நிறைந்திருப்பதற்குக் காரணம் இந்த வக்கீல்களாலேயும், அவர்களால் உண்டாக்கப்பட்ட சட்டத்தாலேயும் தவிர, வேறு ஒரு காரணத்தாலுமில்லை.

உண்மையாகவே நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமானால் பெரிய படிப்புகள், பெரிய உத்தியோகங்கள் எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டி விடுவோம். இரண்டாவதாகப் பரீட்சை என்று வைத்திருப்பதை நீக்கி விடுவோம்.

ஏன்? அவர்கள் கையில் புத்தகம் இருக்கிறது. படிக்க வேண்டியதைச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கேட்கிறான். இதற்குப் பிறகு எதற்காகப் பரீட்சை? இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் படித்த பிறகு ரிசல்ட் வருகிற சமயம் நூற்றுக்கு 40, 50 தான் பாஸ் என்று வருகிறது. இந்த மாதிரி வருவதற்கு எதற்கு இந்த வாத்தியார்மார்களுக்குச் சம்பளம்? 5.30 மணி நேரம் தான் படிப்பு. அதுவும் ஓர் ஆண்டுக்கு பகுதிநாள் தான் படிப்பு. இவ்வளவு தூரம் வாத்தியார்மார்களுக்குச் சலுகை கொடுத்தால் பையன் எப்படி பாஸ் செய்வான்? ஆனால், போலீஸ்காரர்களிடம்தான் நாள் பூராவும் வேலை வாங்குகிறார்கள். ஏன் அப்படி? போலீஸ்காரன் அவன் பெண்டாட் டியிடம் கொஞ்சும் சமயத்தில்கூட அவன் போலீஸ்காரனாகத் தான் இருக்கிறான். மந்திரி வருகிறார் என்றால் வாத்தியார்மார்களுக்கு லீவு. ஆனால், போலீஸ்காரன் ரோட்டில் நட்ட மாக நிற்க வேண்டியதுதான். அவனும் மனிதன் தானே! இவர்களுக்குள் ஏன் வித்தியாசம்? அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருப்பதனால்தான் இந்த சலுகைகள் காட்டப்படுகிறது. ஆகையால் முக்கியமாக நாம் பரீட்சை முறையை எடுத்துவிட வேண்டும். அனேக நாடுகளில் பரீட்சை என்பதே கிடையாது. இவ்வளவு இன்ன விஷயங்களை இத்தனை நாளைக்கு படிக்க வேண்டும் என்கிற முறைதான் உண்டு.

இந்த விகிதாசாரம் வேண்டுமென்று நாம் இவ்வளவு பாடுபடுகிறோமே, அது எதற்கு? இங்குள்ள படிப்புக்கும், உத்தியோகத்திற்கும்தானே. மற்றபடி டில்லி உத்தியோகங்களுக்கும், டில்லி படிப்புக்கும் நமக்கு விகிதாசாரமோ, உரிமையோ கிடையாது.

அதெல்லாம் டில்லியில் உள்ளவர்கள் இஷ்டப் படிதான். ஜில்லா கலெக்டர், ஜில்லா போலீஸ் சூப்ரரெண்டு வேலைக்குப் படிக்க வேண்டுமானால் டில்லிக்குத்தான் போக வேண்டும். அதற்கு டில்லியில்தான் நியமனம் செய்வார்கள். சென்னை ராஜ்யத்தில் வேண்டிய வேலைக்கு சென்னையிலே படித்தால் போதாது. இப்படி எல்லாம் செய்து வைத்திருப்பதால் நம்மவர்களால் எப்படி வர முடியும்? இனி ஜில்லா சூப்பிரண்ட் வேலைக்குப் பார்ப்பானேதான் வரமுடியும். ஏனெனில், அங்கு படிக்கப் பார்ப்பானைத் தானே தெரிந்துஎடுத்தும் அனுப்பி இருக்கிறார்கள்.

விகிதாசார அளவுப்படி வேண்டும்

ஆதலால் நமது கிளர்ச்சி, இந்த நாட்டில் உள்ள உத்தியோகத்திற்கு மாத்திரமல்ல, படிப்புக்கு மாத்திரமல்ல, மத்திய அரசாங்கத்தில் எவ்வளவு உத்தியோகங்கள் இருக்கிறதோ அவற்றில் எல்லாம் நம் விகிதாசார அளவுப்படி நமக்கு வரவேண்டும்.

இன்று இருக்கும் மத்திய சர்க்காருக்கு உத்தியோகத்திற்காக எடுத்திருக்கும் ஆட்கள் அவ்வளவும் பார்ப்பனர்கள்தான். இதிலே எவ்வளவு சுயநலம் இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாகிறது. எவ்வளவு லஞ்சம் நடக்கிறது பாருங்கள்.

உதாரணமாக ரயில்வேயை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். கோபால்சாமி அய்யங்கார் ரயில்வே மந்திரி. உதவி மந்திரி சந்தானம். இதுவுமல்லாமல் கோபால்சாமி அய்யங்காருடைய மருமகன்தான் ரயில்வே ஏஜெண்ட்-மேனேஜர். கோபால்சாமி அய்யங்காருடைய பேரன்தான் ஸ்டோர் மேனேஜர். இப்படியாக ரயில்வே உத்தியோகம் எல்லாம் ஒரு குடும்பத்தின் கையில் போய்விட்டது.

 இந்த நாட்டிலே உள்ள மக்களில் 100-க்கு 90 பேர்கள் இன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால், இதைப் பற்றிக் கேட்கவோ, கிளர்ச்சி செய்யவோ நம் இயக்கத்தைத் தவிர, வேறு கட்சி, ஆள் கிடையாது. நம் கிளர்ச்சியால்தான் அரசியல் சட்டத்தை சிறிது திருத்தினார்கள். ஆனால், அதை நம் மந்திரிகள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. 100-க்கு 15 விகிதமுள்ள ஷெடியூல் வகுப்புக்கு 100-க்கு 15 என்று ஒதுக்கி வைத்து விட்டு, 100-க்கு 80 விகிதமுள்ள நமக்கு கல்வியில் பிற்பட்ட வகுப்பிற்கு 100-க்கு 25 தான் ஒதுக்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? இந்த மந்திரிகள் பார்ப்பனருக்குப் பயந்து நம் தலையில் கல்லைப் போட்டு இருக்கிறார்கள்.

மற்றும், இதைத் தவிர வெளியிலே வேறு ஜாதிகள் இருக்கின்றன. இவ்வளவுக்கும் 25 என்றால் என்ன அர்த்தம்? பார்ப்பான் மொத்தமே நூற்றுக்கு மூன்று என்றால் அவன் எப்படி எப்படியோ குறைந்தது 100-க்கு 40 வீதம் சம்பாதித்துக்கொள்கிறான். அப்படி மெம்பர்கள் நம்மவர்களாக இருந்தாலும் தாட்சண்யமும், பயமும் கொண்டு அவர்களுக்கு ஒன்றுக்கு 10 வீதம், 15 வீதம் கொடுத்து விடுகிறார்கள். இதை எப்படி சரி செய்ய முடியும்?

மற்றும் இந்த 25 விகிதமும் நமக்குக் கொடுத்த பிச்சையே தவிர, உரிமை அல்ல. இதுவும் உண்மையான பிற்பட்ட வகுப்புக்குக் கிடைக்கும் என்று நிச்சயமாக நினைப்பதற்கு இல்லை. இந்த 25லேயும் பார்ப்பானுக்கு சேர்ந்து இருக்கிறது என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள்.

கல்லூரிகளிலே பிள்ளைகளைச் சேர்க்கிறதென்றால் கல்லூரி செலவுக்கு யார் வரி கொடுக்கிறார்கள்? நம்முடைய பணம், நம்முடைய வரி, நம்முடைய பள்ளிக்கூடங்கள். இதிலே நமக்கு விகிதாசார இடம்கூட இல்லையென்றால் என்ன நியாயம்? ஆதி திராவிடர்களுக்கு 15 கொடுத்தார்கள் என்றால் அதுவும் அம்பேத்கரை ஏமாற்றுவதற்காக கொடுத்தார்கள் என்பதோடு, அவர்களில் 100-க்கு 15 பிள்ளைகள் கிடைக்க மாட்டார்கள் என்கிற தைரியம்தான். உதாரணமாக சென்ற வருடத்தில் ஜில்லா முன்சீப் வேலைக்கு ஷெடியூல்டு வகுப்பாருக்கு 12 இடங்கள் ஒதுக்கினார்கள். ஆனால், அந்த 12 இடங்களுக்கு விண்ணப்பம் போட்டவர் ஒரே ஒரு ஆதிதிராவிடர் தான். மீதி அத்தனையும் பார்ப்பனர் ஒதுக்கிக்கொண்டு போய்விட்டார்கள். 12 பேருக்கு ஒதுக்கினதாகக் கணக்கு மட்டும் சரி செய்துவிட்டார்கள். இதற்கு இவர்களைப் போய் கெஞ்சவேண்டுமா? எனவே இவர்களுடைய வேலைகள் எல்லாம் நம்மவர்கள் முட்டாள்தனத்திலே இருக்க வேண்டும் என்பதுதான்.

 பெருத்த கிளர்ச்சி செய்ய வேண்டும்

நம்மவர்களை ஒழிக்க வேண்டுமென்று சொல்வதை நாம் எதிர்த்து நிற்க வேண்டுமானால், நம்முடைய முயற்சி பலமாக இருக்க வேண்டும். இதுவரை செய்தது போல் இல்லாமல், இன்னும் பெருத்த கிளர்ச்சி செய்ய வேண்டும். நாம் ஒரு கட்சியார் செய்ததனாலேயே இவ்வளவு காரியம் ஆகி இருக்கும்போது நம்மவர்கள் ஒழுங்கும், கட்டுப்பாடாகக் கிளர்ச்சி செய்தால் எவ்வளவு தூரம் இருக்கும்? என்று கருதியே நமக்குப் பயந்து கொண்டு அவர்களும் சகல பெரிய உத்தியோகங்களையும் டில்லிக்கு கொண்டு போய் விட்டார்கள்.

இந்த வருடத்திலே பார்ப்பான் எத்தனை பேர், மற்றவர்கள் எத்தனைபேர் என்று ஜாதி பிரித்து தெரியக்கூடாது என்று சொல்லி விடுவார்கள். இன்றைய தினம் பார்ப்பனர்கள் அவர்கள் கூட்டத்திலே ரகசியமாக ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். இனிமேல் தங்களுடைய பட்டங்களை தங்களுடைய பெயர்களுடன் போடக் கூடாது என்று. இப்போது அவர்கள் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்த முயற்சிகள் நம் மக்களுக்குள்ளே இல்லாவிட்டாலும் பார்ப்பானுக்குள்ளே எவ்வளவு கிளர்ச்சியை செய்து இருக்கிறது என்று பாருங்கள். இதை எல்லாம் நாம் உணர்ந்து கிளர்ச்சி செய்து விட்டால் ஒரே அடியாய் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடலாம்.

 நம்மிடம் ஒற்றுமையில்லை. ஆனால், முஸ்லிம்களிடம் ஒற்றுமையிருக்கிறது. அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் உரிமையைக் காப்போம் என்று கூறினார்கள். ஆனால், அது நம்மிடம் இல்லை. மற்றும் எதற்காக அப்படி எல்லாம் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் இன்னும் மோசமாக நடந்து கொண்டிருப்பதால் அந்த நிலைமை கூடிய சீக்கிரம் வந்தாலும் வரும். ஜின்னா தைரிய மாகக் கேட்டார். நீ பிரித்து விடுகிறாயா? இல்லையா? இல்லாவிட்டால் நான் ரஷ்யாவிடம் போய் வாங்கட்டுமா என்று கேட்டார். கொஞ்சம் தகராறு கிளம்பியது. பதினாயிரக் கணக்கான தலைகள் உருண்டோடின. கோடை மழைபெய்தாற்போல் இரத்தம் தெருக்களில் ஓடின. இதைக் கண்டதும் பார்ப்பனர் பயந்து போய் கொடுத்துவிட்டார்கள்.  ஆனால், இதெல்லாம் யாருக்கு நஷ்டம்? இந்த ரகளையைக் கிளப்பியவர்களுக்குத்தானே. ஆகையால்தான் நாம் அது வேண்டாம் என்று பொறுத்துக் கொண்டிருக்கிறோம். பலாத்காரத்தால் நம்மவர்களுக்குள்ளேதான் போராட்டம், நஷ்டம் ஏற்படும். ஆகையால்தான் மவுனமாக இருக்கிறோம்.

தேர்தலிலே நாம் நினைப்பதுபோல் நடக்காவிட்டால், பிறகு ஒரு பெரும் கிளர்ச்சி செய்ய வேண்டியதுதான். நம்முடைய வாலிபர்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த தேர்தலில் அவர்கள் வந்தால் கட்டாயம் நமக்கு எல்லாம் கெட்ட காலம்தான். நம்முடைய வாழ்வு எல்லாம் எப்படி எப்படி நடக்குமோ என்று சொல்ல முடியாது. ஆகையால் நாம் யாவரும் சற்று தீவிரமாக, உணர்ச்சியோடு சிந்திக்க வேண்டும்.

பார்ப்பன மதம் வேண்டாம்

கடைசியாக நம் சமுதாயத் துறையிலே ஒரு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. பார்ப்பானுக்கு செல்வாக்கு இருக்கும் முறையிலே நாம் நடந்து கொள்கிறோம். இதுதான் நம்முடைய சந்ததியார்களுக்கு கெட்ட வாழ்க்கையைக் கொண்டு போய் விடுகிறது. ஆகையால் தோழர்களே, பார்ப்பன மதத்தைப் பின்பற்றக் கூடாது. அவர்களுடைய சாஸ்திரம், மதம், கடவுள் என்று இருப்பவை எல்லாம் நமக்கு சம்பந்தப் பட்டவை அல்லவென்ற உணர்ச்சி நம்மில் ஒவ்வொருவருடைய இதயத்திலும் உதயமாக வேண்டும்.

 ஆதலால்தான் நம் வாலிபர்கள் எல்லாம் ஏன் இப்படிப்பட்ட இழிவு எல்லாம் எதற்கு என்று முன்வருகிறார்கள். இவ்வளவு கிளர்ச்சி இருந்தும் பார்ப்பானுடைய நிலைமை ஏன் கொஞ்சமாவது சரியாகவில்லை என்றால், நாம் மதியீனர்களாய், மான ஈனர்களாய் இருப்பதால்தான். அவர்கள் எல்லாம் உயர்ந்து விட்டார்கள்.

கொள்கைகளைக் காப்பாற்ற

பாடுபட வேண்டும்

இன்றும் நமக்கு விரோதமான சட்டங்கள்தான் செய்து இருக்கிறார்கள். இன்றைய தினம் அரசியல் சட்டப்படி சென்னை ராஜ்யம் ஒரு தனி ராஜ்யம் தான். ஆகையால்தான் நாம் அதை கேட்கிறோம். மூன்றாவது கொள்கை எங்களின் விகிதாசாரப்படி எங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் மத்திய சர்க்காருக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ரயில்வே, தந்தி, தபால், சுங்கம், இன்கம்டாக்ஸ் போன்ற பெரிய வரிகள், இன்னும் வேறு பல சில்லறை இலாகாக்கள் எல்லாம் நம் கைக்கு வரும் வரையில் நமக்கு விகிதாசாரம் கிடைக்க வேண்டும். இந்த மூன்றையும் யார் செய்ய தயாராக முன்வருகிறார்களோ அவர்களுக்கு நமது ஓட்டுகளைக் கொடுக்க வேண்டும். மேலும், காங்கிரசிலிருந்து வெளியே வந்திருக்கும் தோழர்களும் நம்முடைய திட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள். ஏராளமான மக்கள் இதை அனுசரிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

ஆதலால் தோழர்களே, காங்கிரசுக்குத் தோல்வி வரும் முறையிலே இங்கு தேர்தல் முடிவு வருமானால் மந்திரி சபையைக் கவிழ்த்தோம் என்றுதான் அர்த்தம்.

ஆகவே தோழர்களே, நாம் எல்லோரும் நம்முடைய கொள்கைகளை காப்பாற்ற பாடுபட வேண்டும். நாம் எல்லோரும் பாடுபட்டால்தான் நமக்கு விகிதாசார முறைப்படி சகல வசதிகளிலும், சகல சங்கதிகளிலும் நாம் முன்னேற்றமடையவும் முடியும். நான் கண்டிப்பாக சொல்லுவேன், மனிதத் தன்மையோடு வாழவேண்டுமானால், நம் நாடு நம் கையில் வரவும், நாம் எல்லோரும் சமத்துவமாய் வாழ வழி தேடவும் ஒவ்வொருவரும் பாடுபட்டாக வேண்டும். இதற்குச் சரியான சந்தர்ப்பம் அடுத்து வரும் தேர்தலில் நம்முடைய முழு வல்லமையையும் காட்டியாக வேண்டும். எந்த விதத்திலும் அவர்கள் தேர்தலிலே வெற்றிப் பெற முடியாமல் போக வேண்டும். அப்படிச் செய்வோமானால் நம் நாட்டு மக்களின் இழிநிலை மாறி, நாம் அனைவரும் சுதந்திர வீரர்களாய் வாழலாம்.

- 8.7.1951 அன்று திருவாரூரில் நடைபெற்ற வகுப்புரிமை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை (விடுதலை 15, 16.7.1951).

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:50 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஒழிப்பு, தேர்வு
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுணர்ச்சி
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியக் கலாச்சாரம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணபதி
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஷ்ண ஜெயந்தி
  • கிருஷ்ணன்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கூலிக்காரர்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோச் வண்டி
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் சொத்து
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம்பளம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமதர்மவாதிகள்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான செய்தி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செலவு
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தலைவனாதல்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசம்
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நாஸ்திகர்
  • நிதி வசூல்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பண செலவு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கில் வைத்து சுமக்கிறானா
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் பேசுகிறார்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேச்சுத்திறன்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மக்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத கற்பனை
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விவேகம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (49)
    • ▼  ஆகஸ்ட் (13)
      • பிள்ளை யார்?
      • கடவுள் – மத கற்பனை
      • இந்தியத் தொழிலாளர்
      • தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு ...
      • கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏ...
      • திராவிடர் கழகத்தை எதிர்ப்பது யோக்கியமா?- தந்தை பெர...
      • ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம் ! சமஸ்...
      • ஆற்றல்மிக்க அறிவாளி அம்பேத்கர்! – தந்தை பெரியார்
      • தொழிலாளி – முதலாளி பேதம் ஒழிய…. தந்தை பெரியார் .
      • இளமை முதலே எளிமை! தந்தை பெரியார் வாழ்விலிருந்து ஒர...
      • எனது தொண்டு! தம்மைப் பற்றி தந்தை பெரியார்
      • திராவிடர்’ – வார்த்தை விளக்கம்
      • விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வ...
    • ►  ஜூலை (13)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ►  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.