ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

வைக்கம் போரட்டம் பகுதி-1




தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத் துக்காக தமிழ்நாடு காங்கிரசிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்குரிய கணக்கு வவுச்சர் உட்பட தந்தை பெரியாரால் கொடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கணக்குள் ஆபீசில் கிடைக்க வில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் தந்தை பெரியார் காங்கிரசை வெளுத்துக் கட்டிக் கொண்டி ருந்த சமயம். பெரியார் மீது ஏதாவது குற்றம் சுமத்த வேண்டும் என்று ஆதாரத்தைத் தேடிக் கொண்டு இருந்தவர்கள் இதைப் பிடித்துக் கொண்டார்கள். தோழர் முத்துரங்க முதலியார் காங்கிரஸ் ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். அவரை விட்டு பெரியாருக்கு ரிஜிஸ்டர் நோட்டீஸ் அனுப்பினார்கள். கணக்கை அனுப்பாவிட்டால் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அதில் மிரட்டி எழுதி இருந்தார்கள். மறுபடியும் ரிஜிஸ்டர் தபாலில் தந்தை பெரியார் அவர்கள் கணக்கை அனுப்பி வைத்தார்கள்.
யார் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கணக்கில் பெரியார் குறிப்பிட்டிருந்தாரோ அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீசிலிருந்து கடிதம் எழுதி அவ்வாறு பணம் பெறப்பட்டதா என்று கேட்டார்கள். சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் தொகை பெறப்பட்டதாகப் பதில் எழுதிவிட்டார்கள். ஆயிரம் ரூபாயில் எழுநூறு ரூபாய் வைக்கம் சத்தியாகக்கிரகக் காரியதரிசிக்குக் கொடுக்கப்பட்டது. மீதி ரூபாய் 300இல் பாலக்காடு சவுரி ஆசிரமத்துக்குக் கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியது. மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சரியாக தந்தை பெரியாரால் கணக்கு ஒப்படைக்கப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றனர். ஆதாரம்: குடிஅரசு 24.11.1935 பக்கம் 11,12
-விடுதலை,1.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக