பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

மதம் என்றால் என்ன, எது உண்மை மதம்



   November 15, 2020 • Viduthalai

மதம் என்றால் என்ன? எது உண்மை மதம்?


* தந்தை பெரியார்



தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!


இன்றைய இந்தக் கூட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு போற்றற்குரிய புனிதமான நாளில் கூட்டப்பட்டதாகும். உலகத்தில் உள்ள சுமார் 60 கோடி மக்களுக்கு மேலாகவே மத சம்பந்தமான வழிகாட்டியாயும், ஒப்பற்ற மத குருவாகவும் உள்ள ஒரு பேரறிஞர், பொதுநலத் தியாகி, நல்லதொரு தீர்க்க தரிசி என்று கொண்டாடப்பட்ட ஓர் உண்மைப் பெரியார்  பிறந்தநாள் கொண்டாட்ட நாளாகும்.


இப்படிப்பட்ட இந்த மத சம்பந்தமான நாளில் அந்த மதத்தை சேர்ந்தவனல்லாதவன் என்றும், பொதுவாகவே மதங்களுக் கெல்லாமுமே விரோதி என்றும், கடவுளையே மறுப்பவன் என்றும் பலரால் சொல்லப்படுகிற என்னை அழைப்பதும், இந்தக் கொண்டாட்ட விழாவில் பங்கு கொண்டு மக்களுக்குச் சொற்பொழிவாற்ற விரும்புவதுமான காரியத்தைக்குறித்து எவரும் அதிசயப்படாமல் இருக்க முடியாது; இந்த அதிசயப் படத்தக்க காரியத்திற்கு உண்டான பெருமை யாருக்குச் சேரும் என்று பார்த்தால் அது இஸ்லாத்துக்கே சேரும்.


மத சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக்கொண்டால் இஸ்லாம் மதம் என்பது தான் தாராளமான நோக்கத்தைக் கொண்டு  இருக்கிறது. ஒரு மதம் என்பது மக்களுக்குள் என்ன கருத்தை உண்டாக்க வேண்டுமோ அந்தக் கருத்தையும் மக்களுக்கு என்ன தொண்டு செய்யவேண்டுமோ அந்தத் தொண்டையும் ஒரு நல்ல அளவுக்கு உண்டாக்கி இருக்கிறது.


தெளிவுபடச் சொல்லவேண்டுமானால் மதம் என்பது மனித ஜீவன்களுக்குத்தான் இருந்து வருகின்றது. உலகில் எத் தனையோவித ஜீவராசிகள் இருக்கும்போது மனிதனுக்கு மாத்திரம் ஏன் மதம்? என்றால் மனிதனுக்கு மதம் வேண்டி இருக்கிறது என்று சொல்லலாம். மனிதன் கூடிவாழும் பிராணி, மனிதன் அதிகச் சிந்தனையாளி என்பதோடு அதற்கேற்ற பகுத்தறிவு அதிகம் உடையவன் ஆதலால்,  மனித சமுதாய கூட்டுவாழ்வுக்கு ஒரு நியதி - திட்டம் - விதி கொள்கை என்பதான ஏதாவது ஒன்று தேவை இருக்கிறது. அதைத்தான் மக்கள் எப்படியோ மதம் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் மதம் என்பதை மார்க்கம் என்றுதான் (இஸ்லாம் மார்க்கம்) அழைக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கிறார்கள். சைவ - வைணவ மார்க்க வினா விடை என்றுதான் நூல்களுக்குப் பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழர் பெரிதும் மதத்தைச் சமயம் என்றே சொல்லுகிறார்கள். ஆரியமும் வேதமார்க்கம் என்றுதான் சொல்லப்படுகின்றது. எனவே மதம் என்கின்ற சொல் எந்தமொழி? எப்படி வந்தது? அதற்கு மூல இடம் எது? என்பனவாகிய ஒன்றும் பெரும் பாலோருக்குப் புரிவதற்கில்லாத சொல்லாகவே இருக்கிறது.


ஆனால் சிலர் மதம் என்பது கடவுளையும் மனிதனையும் சம்பந்தப்படுத்துவது;  கடவுளை மனிதன் அடையச் செய்வது என்றெல்லாம் என்ன என்னவோ கட்டுக் கட்டுகிறார்கள். இது மகா பயித்தியக்காரத்தனம் அல்லது பித்தலாட்டம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் மாத்திரம் சம்பந்தம் ஏற்படுவானேன்? ஆடு, மாடு, நாய், கழுதை, குதிரை, ஈ, எறும்பு, தேள்,பாம்பு, மீன், பூச்சி, புழு இவைகளுக்குக் கடவுள் சம்பந்தம் வேண்டாமா? கடவுளை அடையவேண்டாமா? அவை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை அல்லவா? அல்லது மதமில்லாமலே கடவுளை அடையத்தக்க அவ்வளவு அறிவுள் ளவைகளா? மனிதனுக்கு மாத்திரம் ஏன் இந்தத்தொல்லை? என்று நன்றாய்ச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனுக்கு மதம் மற்ற மனிதனிடம் நடந்துகொள்ள வேண்டிய தன்மைக்கு வழிகாட்டுவது, கொள்கை விதிப்பது ஆகியவற்றிற்கே மதம் என்பதும் நன்றாய் விளங்கும்.அதை விட்டுவிட்டு, மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை அலட்சியப் படுத்திவிட்டு, தனக்கும் கடவுளுக்கும் மாத்திரம் என்றும், தன்னுடைய நலனுக்கு மாத்திரமே அதாவது, தான் மோட்சம் போகவும், தான் நல்லகதி அடையவும், தனக்கு நல்ல பிறவி, நல்ல செல்வம் ஏற்படவும் என்றும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இது மாயா உலகம், இதுபொய்யான உலகம், இது அநித்தியமான உலகம் இதைப்பற்றிக் கவலை இல்லை; மெய்யான  நித்தியமான பயனளிக்கக்கூடிய உலகம் வேறு இருக்கிறது; அதில் மேனிலை அடையவே மனிதன் பிறக்கிறான், இருக்கிறான், இறக்கிறான் என்ற கற்பனைகளைப் புகுத்தி இதற்குஆக இயக்கத்தில் என்ன காரியத்தையானாலும் செய்து பரத்தில் இடம் பிடித்து வை என்கின்ற மதம், மடமையும் கொடுமையும், பித்தலாட்டமும் நிறைந்த மதம் என்று சொல்லுவேன். அப்படி நான் சொல்லுவதால்தான் என்னை மத விரோதி என்று சில மதவாதிகள் சொல்லுகிறார்கள். மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று நான் சொல்லுவதும் இப்படிப் பட்ட மதங்களைத்தானே ஒழிய மனிதனிடம் மனிதன் அன்பாய், உபகாரியாய், சமுதாயத்திற்கு ஏற்ற ஒழுக்கமாய், நாணயமாய், பிறர் நலத்தில் பற்றுள்ள அன்பனாய், மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாதவனாய் நடந்துகொள்ளும் தன்மையை மதம் என்றால் அதைப் போற்றுகிறவனேயாவேன். நானும் கூடுமானவரை அப்படிப்பட்ட மதவாதியேயாவேன்.


ஆனால், இன்று மதங்கள் அப்படிப் பெரிதும் காணப் படுகின்றனவா? நீங்கள் தனித்தனியே மதவாதிகள் நடத்தையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.


முதலாவதாக,


என்பேரில் சுமத்தப்பட்ட (இந்து மதம் என்னும்) ஆரிய மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நான் மேலே சொன்ன குணங்களில் எது காணப்படுகிறது? அல்லது காரியத்தில் நடைபெறுகிறது? ஆரிய மதத்தில் பிராமணன், சூத்திரன், சண்டாளன், தேவடியாள் உண்டு. ஆரிய மதத்தில் மோட்சத்திற்காகத் திருடலாம்; விபசாரித்தனம் செய்யலாம், கொலை செய்யலாம், பாட்டாளி மக்களை வஞ்சித்து அவர்கள் உழைப்பைக் கொள்ளை கொள்ளலாம், கொடுமைப்படுத்தலாம். பிறவி இழிவு கற்பித்து, மக்களைப் பிரித்துவைத்துச் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தலாம். இன்னும் எத்தனையோ இழிவு கொடுமை அக்கிரமம் செய்யலாம். இவை மததர்ம சாஸ்திரங்களின்படி என்றும் சொல்லலாம். இது எப்படி மக்களுக்குப் பயன்படும்படியாக, வாழ்க்கைக்கு நலந் தரும்படியாக ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்பட்ட மதமாகும் என்றும் இப்படிப்பட்ட மதங்கள் ஒழிக்கப்படவேண்டாமா? என்றும் மதவாதிகளைக் கேட்கின்றேன். ஆகவே இப்போ தாவது நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் ஏன் மதம் ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பதை.


மதம் மக்களிடம் அன்பு செலுத்த என்று இருக்குமானால் இன்று இந்தநாடு இமயமலைமுதல் குமரிவரை குழப்பத்தில், கொள்ளையில், கொலையில், படுநாசவேலையில் அல்லல் படுவதின் காரணம் என்ன? அரசியல் குழப்பம் என்று சொல்லி மக்களை வஞ்சித்து மதவெறியைக் கிளப்பிவிட்டு, மதத்திற்காக வென்று, மதவெறி கொண்டு, போராடிக்கொள்வதல்லாமல் வேறு எதற்காக என்று யாராவது சொல்லமுடியுமா?


சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இன்றைய கலவரம் ஆரியத்துக்கும் ஆரியமல்லா ததற்கும் என்பதல்லாமல் வேறு என்ன? தெளிவாய்ச்சொல்கிறேன், இந்து - முஸ்லிம் என்றால் என்ன? ஆரியர்-அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? பிராமணர்-பிராமணரல்லாதார் அல்லது ஆரியர் - திராவிடர் என்றால் ஆரியர் அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? ஜாதி இந்துக்கள், ஷெடியூல் வகுப்பார் சண்டை என்றால் என்ன? ஆரியமதக் கொள்கைப்படி மேல் ஜாதியார் ஆரியமதக் கொள்கை ஏற்றுக்கொள்ளாத கீழ் ஜாதியார் எனப்படும் ஆரியரல்லாதார் என்பதல்லாமல் வேறு என்ன? இதுபோலவே  சீக்கியர் கூப்பாட்டுக்கும், பார்சி கூப்பாட்டுக்கும், கிறிஸ்தவர் கூப்பாட்டுக்கும்,  ஆரிய-அனாரிய மதச்சண்டை என்பதல் லாமல் வேறு என்ன? இந்த இலட்சணத்தில் இவர்கள் ஒவ் வொருவரும் சண்டையிடக் காரணம் அவரவர்கள் மதப் (கலாச்சாரத்தின்)படி நாடு ஆளப்படவேண்டும் என்பதுதானே முன்னணியில் இருக்கிறது?


காங்கிரஸ் ராமராஜ்யப்படி, முஸ்லிம் லீக் இஸ்லாம் போதனைப்படி, சீக்சிரந்தாசாஹிப்படி, திராவிடர் கழகம், ஷெடியூல்டு வகுப்பு மனித தர்ம (சமதர்ம)ப்படி திராவிட கலாச்சாரக்கொள்கைப்படி, கிறிஸ்தவர் பைபிள்படி அந்தந்த மதத்தினரே அந்தந்த மதத் தத்துவத்தின்படி ஆளவேண்டும் என்று சொல்லித்தானே கலகம் கிளப்பப்படுகின்றது?


ஆகவே, அரசியல் போராட்டத்துக்கும் சமுதாயப் போராட்டத்திற்கும் மதம் காரணமல்லாமல் திட்டம் காரணம் என்று எதைச் சொல்லமுடியும்? திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை மதம் காரணமாக முஸ்லிம்களிடத்தில் யாதொரு தகராறும் இல்லை என்று சொல்லுவேன். இஸ்லாத் துக்கும் திராவிடத்துவத்திற்கும் வேஷம்தான் பேதமே தவிர  மதத்துவத்தில் பேதமில்லை. திராவிடர் கழகம் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை. இஸ்லாமும் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை.இரு மார்க்கங்களும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு பேதம் இல்லை என்கின்றன. நம் திராவிடநாட்டை பொறுத்தவரை பேசப்போனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், திராவிடர் ஆகிய முப்பிரிவாரும் ஒரே இனத்தவர், ஒரே வழிவந்தவர்கள் என்று சொல்லலாம், இப்படிப்பட்ட நாட்டில் இன்று குழப்பமும், கொள்ளையும், கொலையும், கொடுமையும் நடைபெறவும் நடக்குமோ என்று பயப்படவுமான நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் ஆரிய மதத் தூண்டுதல் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கமுடியும்? ஒரு இஸ்லாம் திராவிடனும், கிறிஸ்துவ திராவிடனும், முஸ்லிம் கிறிஸ்துவ அல்லாத திராவிடனும்; இந்தநாட்டு இனத்தவன், இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நாட்டில் வாழ்கிறவன், இந்த நாட்டில் சாகிறவன், இந்த நாட்டில் தேடிய பொருளையும், வேறு நாட்டில் தேடிய பொருளையும் இந்த நாட்டிலேயே வைத்துவிட்டுச் சாகிறவன். இப்படிப்பட்டவர் களுக்கு இந்த நாட்டின் பூரண சுதந்திரத்திற்கோ விடுதலைக்கோ விரோதமாக இருக்கவும் இந்தநாட்டு மக்களை வெறுக்கவும் என்ன காரணம் இருக்கமுடியும்? ஆரிய மதத்தில், உழைக்க ஒரு ஜாதி, ஊரார் உழைப்பிலேயே உண்டு பாடுபடாமல் வாழ ஒரு ஜாதி என்று ஏற்பட்டுவிட்டதால் இந்தத் தத்துவத்துக்கு மாறான மதங்களோடு சதா போர் தொடுத்துக் கலகமூட்டித் தங்கள் நலனைப் பாதுகாக்கவேண்டி இருப்பதால் இப்படிப்பட்ட சமுதாய சமதர்ம மக்களும் மதமும் 100-க்கு 95 பேர் இருக்கும் நாட்டில் இந்த மதப்போராட்டக் கொடுமை இருந்து வருகிறது.


மதம் மக்களுக்குத் தொண்டு செய்ய, அன்பு செலுத்த ஏற் பட்டது என்றும், மதம் மக்களை ஒன்று சேர்த்து சமத்துவமாய் நடத்தவே ஒழிய, வேறுபடுத்தி மேல்கீழ் பிறப்பாய், வகுப்பாய் நடத்த அல்ல என்றும் ஆரிய மதம் உணருமானால் இன்று இந்த  நாட்டில் கலவரத்துக்கு, மதப்போராட்டத்திற்கு இடமே இருக்காது. நானும்  பார்க்கிறேன் மதத்துக்காக உயிர்விடுங்கள்! மதத்தைக் காப்பாற்றுங்கள்! மதத்தைப் பழிக்காதீர்கள்! என்றெல்லாம்  காட்டுமிராண்டிப் பிரசாரம் தான் மதத்தின் பேரால் மகான்கள் என்பவர்கள் எல்லாம் பிரசாரம் செய்கிறார்களே தவிர இந்தக் கொள்கைகளால்தான் மதம், காப்பாற்றப்படமுடியும் என்று கருதப்படுகின்றதே தவிர மதத்தில் அன்பு, உபச்சாரம், மற்றவன் மனம் நோகாமல் நடத்தல் ஆகிய காரியங்கள் எங்கே கற்பிக்கப்படுகின்றன என்று கேட்கிறேன்.


'மதத்துக்காக உயிரைவிடுங்கள்' என்று உபதேசித்த உபதேசம்தான் காலித்தனத்துக்கும் கயவாளித்தனத்துக்கும் பெரிதும் காரணம் என்று சொல்லுவேன். 'மதத்தைக் காப்பாற்ற உயிர் விடுங்கள்' என்றால் என்ன அருத்தம்?


உன் மனைவியைக் காக்க உயிர்விடு என்றால் என்ன அருத்தம்?


உன் மனைவியை ஒருவன் தொட்டால்  அவனைக் கொல்லு, அவனை உதை, அந்தக்காரியத்தில் உன் உயிர் போவதாய் இருந்தாலும் அதற்குத் துணிந்து அவன்மீது பாய்வாயாக என்பதல்லாமல் அதில் தத்துவார்த்தம் என்ன சொல்லமுடியும்? இந்த உபதேச மதத்தால் மக்களுக்கு மூர்க்கத்தனம் உண்டா குமா? அன்புணர்ச்சித் தன்மை உண்டாகுமா? என்று கேட்கிறேன்.


"என் மதம் அன்பு மதம், அன்பே கடவுள், கடவுளே அன்பு. ஆனால் என் மதத்தையோ, கடவுளையோ எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் ஒரே பாய்ச்சல், ஒரே குத்து ஒன்று அவன் சாவது அல்லது அந்த வேலையில் நான் சாவது" என்பது எப்பேர்ப்பட்ட அன்பு மதம் என்று யோசித்துப்பாருங்கள்.


மதத்துக்கு உள்ள இந்த கருத்து, இந்த தத்துவம் மாறினா லொழிய நம்நாட்டில் மக்களுக்குள் சாந்தி, சமாதானம் ஒரு நாளும் நிலவாது என்று தைரியமாய்ச் சொல்லலாம். மதத் தத்துவம் என்றால் என்ன? மதம் எதற்காக என்பதை மக்களுக் குச் சரியானபடி போதிக்க வேண்டும். அந்த மாதிரி உண்மை யாகவும் உறுதியாகவும் போதிக்கப்படுமானால் திராவிடநாட்டில் இஸ்லாம் திராவிடர்கள் என்றும், இஸ்லாம் அல்லாத திராவிடர்கள் என்றும் பிரிவு உணர்ச்சி இருக்க இடமே இருக்காது. மதத்துக்கும் நடத்தைக்கும் எண்ணத்துக்கும்தான் சம்பந்தமே ஒழிய, வேஷத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதப்படுமானால் திராவிடர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களே ஆவார்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் திராவிடர்களே ஆவார்கள். உண்மையில் இருவருக்கும் பேதம் இல்லை. ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணவும், ஒருவர் வீட்டில் மற்றவர் சம்பந்தம் செய்துகொள்ளவும் தடையில்லை என்று ஆகிவிட்டால் மற்றபடி மதப்பேதத்துக்கு வேலை என்ன இருக்கமுடியும்? ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக்கூடாது, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, ஒருவருக்குள் ஒருவர் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது  என்ற நிபந்தனை வைத்துக்கொண்டு யாரும் ஒரே மதமாய் இருந்தாலும் இது பித்தலாட்டம் அல்லது சிலர் சுயநல வஞ்சகம் என்பதல்லாமல் ஒரு மதம் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.


உண்மையிலேயே நம்மைப் பொறுத்தவரையில், அதாவது திராவிட நாட்டில் உள்ள திராவிடர்களைப் பொறுத்தவரையில் மதச்சம்பந்தமாகப் பேசவேண்டுமானால் இங்குள்ள திராவிடர் களுக்குள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்பவர்களைத் தவிர மற்ற மக்களுக்கு மதம் என்பதாக ஒரு குறிப்பிட்ட கொள்கையோ கருத்தோ ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.


பொதுவாகச் சொல்லவேண்டுமானால் கிறிஸ்தவர், இஸ்லாமியர் நீங்கின திராவிடர்களுக்கு மதம் என்கின்ற பெயரால் தங்களுக்குள் பல பிரிவாகப் பிரிந்து ஜாதி வகுப்புப் பேர்கள் சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் இழிவாக நடத்துவதும், இழிவாகக் கருதுவதும், அதற்காக என்று ஏதோ ஒரு உயர்வு தாழ்வான பெயர்களைச் சொல்லிக் கொள்ளுவதும், அதற்கென்று நடத்தையில் அர்த்தமற்ற வேஷத்தையும் குறிப்பையும் அணிந்து கொள்வதல்லாமல், வேறு பொதுவான கொள்கையோ காரியமோ கருத்தோ இருப்பதாகச் சொல்லு வதற்கு சரியான ஆதாரமோ அத்தாட்சியோ இல்லை என்றே சொல்லுவேன்.


இஸ்லாம், கிறிஸ்தவர் அற்ற மக்களைப் பொதுவாக இந்துக்கள் என்று பெயரளவில் சொல்லுவதைத் தவிர அந்த இந்து என்பது சமுதாயப் பெயரா? இனப்பெயரா? மதப்பெயரா? என்பதற்கு   யாதொரு விளக்கமும் இல்லை. இந்து என்றால் இந்தியன் என்ற வார்த்தையின் சுருக்கச்சொல் என்பதல்லாமல் அதற்கு வேறு கருத்து எதுவும் இருக்க இடமில்லை. அரபு தேசத்தவனை அரப் அல்லது அரபு  என்பது போலவும், ரஷ்யனை ரஷ்ஷி என்பது போலவும், ஒரு சிந்தியனை அதாவது சிந்து மாகாணத்தவனைச் சிந்தி அல்லது சிந்து என்பது போலவும், இந்திய நாட்டவனை அதாவது இந்தியனை இந்து என்று அழைக்கப்படுகிறது என்பதல்லாமல், இந்து என்கிற சொல்லில் மத சம்பந்தம் இருப்பதற்கு இடமே இல்லை அன்றியும் இந்து என்கின்ற ஒரு சொல்லுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல கருத்து சொல்லுகிறார்களே தவிர மதம் என்பதில்லை. இந்து என்பது ஒரு மதத்திற்கு என்று சொல்லப்படுமானால் அதற்கு ஏதாவது ஆதாரமோ அல்லது மத சம்பந்தமான இலட்சணமோ இருந்திருக்கவேண்டும், அல்லது இருந்தாகவேண்டும். அந்த முறையில் இந்து மதம் என்பதற்கு எவ்விதமான மத இலட் சணமும் இல்லை, பவுத்த, கிறிஸ்து, மகமது முதலிய மதங்களுக்கு மதக் கர்த்தாக்களின் பெயர்கள் இருக்கின்றன. சைவம், வைணவம் என்னும் மதங்களுக்குச் சிவன், விஷ்ணு என்ற மதக்கடவுள்கள் பெயர்கள் இருக்கின்றன. வைதிக மதம், ஸ்மார்த்த மதம் என்பவற்றிற்கு வேதம், ஸ்மிருதி என்ற நூல்கள் இருக்கின்றன.  மதக்கர்த்தாக்கள் பெயர் இல்லாமல் கடவுள்கள் பெயர் இல்லாமல், சம்பந்தப்பட்ட நூல்கள் இல்லாமல் குறிப் பிடத்தகுந்த ஆதாரங்களுமில்லாமல் ஒரு மதம் இருக்கிறது என்றால் அதுதான் இந்துமதம் என்றால் இந்த இந்து என்கின்ற சொல் மதத்தைக் குறிப்பது என்று யார்தான் ஒப்புக் கொள்ளமுடியும்?


தவிரவும், இந்து மதம் என்ற சொல்  எந்த மத ஆதாரங்களிலும் காணப்படுவதே இல்லை. இந்து மதத்தின் கொள்கை இன்ன தென்று சொல்வதற்கும் ஆதாரங்கள் கிடையா. சரியாகவோ, தப்பாகவோ, சூழ்ச்சியாகவோ, முட்டாள்தனமாகவோ ஏற் பட்டுப் பழக்கவழக்கத்தில் தந்திர சாலிகளுக்கு அனுகூல மாகவும், அறியாத பாமரமக்களுக்குக் கேடாயும் இழிவாயும் தலையெடுக்க வசதி இல்லாததாயும் இருக்கிற ஒரு நடவடிக் கைக்கு இந்துமதம் என்ற பெயர் இருக்கிறது என்று சொல் லுவதற்கு அல்லாமல் வேறு என்ன பொருளில் என்ன பயனுக்கு இந்துமதம் இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? இந்து மதத்தால் மேன்மையும் பயனும் அடைகின்ற பிரா மணர்கள் என்னும் பார்ப்பனர்கள் இந்துமதம் என்பதாக ஒரு மதம் கிடையாது, ஆரியர் கொள்கைகளும் பழக்க வழக்கங் களும்தான் இந்து மதம் என்பது; ஆகையால் ஆரியமதமே இந்துமதம் என்று தைரியமாய் சொல்லுகிறார்கள்.


மற்றொரு பார்ப்பனசாரார் வேதமும் ஸ்மிருதிகளும் புராணங்களும்தான் இந்துமதம் என்பதோடு மனுதர்ம சாஸ்திரம்தான் இந்து மதத்திற்குச் சாஸ்திரம் (சட்டம்) என்றும் சொல்லி அதை நடப்பாக்கி வருகிறார்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வருணாசிரமதர்மம் என்பதாக ஒருமுறை இல்லாவிட்டால் மற்றபடி இந்துமதம்  என்று சொல்ல இடம் இல்லை என்றே சொல்லலாம். அம்மதத்தில் கடவுளைப்பற்றிய கவலையோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்பதோடு ஆச்சார அனுஷ்டான பழக்கவழக்க நடைஉடை பாவனை என்பவை களுக்கும் எவ்வித நிர்ணயமோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்றும் சொல்லலாம்.


உதாரணமாக, எதை வணங்குபவனும், எதை வணங்காத வனும் ஒரு கடவுள்காரனும், பலகடவுள்காரனும், தானே கடவுள் என்கின்ற ஸ்மார்த்தனும் கடவுளே கிடையாது என்கின்ற நிரீச்சுவரவாதியும் சுவர்க்க நரகம் பாவபுண்ணியம் இல்லை என்கின்ற லோகாயுதவாதியும், எல்லாம் பொய் என்கின்ற மாயாவாதியும் ஆண் பெண் குறிகளே கடவுள் என்கின்ற சக்திவாதியும் மற்றும் மதச்சம்பந்தமாய் எந்தவிதமான கொள்கை கொண்டவனும் (அதாவது தான் கிறிஸ்தவனல்ல; மகமதியனுமல்ல என்று சொல்ல விடுவானேயானால்) எவனும் இந்துவே ஆவான். அதனால்தான் நான்மேலே இல்லாமல் கிறிஸ்தவன் அல்லாத மக்களைக் குறிப்பிடும் சொல் இந்து என்ற சொல்லாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்டேன்.


இப்படிப்பட்ட இந்து என்கிற பதம் இருக்கும் காரணத் தாலேயே நாட்டில் மதச்சண்டை நடக்கின்றது என்பதல்லாமல் மற்றபடி இந்த நாட்டில் இந்தியாவில்  மதச்சண்டை ஏற்படச் சிறிதும் இடமே இல்லை.


ஆகையாலேயே இந்துக்கள் என்றழைக்கப்படும் திராவிடமக்கள் இந்நாட்டின் நலங்கருதி நாட்டின் விடுதலையும், மக்கள் சுயமரியாதையும் கருதியும் பெரும்பாலான மக்களுக்குப் பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பது கருதியும் முதலாவதாகச் செய்யப்பட வேண்டிய வேலை இந்துமதம் என்கின்ற புரட்டை விளக்கி மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி அந்தச் சிறையிலிருந்து வெளியேறும்படி செய்வதேயாகும்.


இன்று இந்திய மனிதச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் திராவிடநாட்டிற்கும், திராவிட சமுதாயத்திற்கும் இருந்துவரும் பெருநோய் இந்துமதம் என்பதேயாகும். இந்த இந்து மதம் என்ற பெருநோய் திராவிடர் களுக்கு சயரோகம் என்றும் குஷ்டநோய் என்றும் உறுதியாய் சொல்லலாம். இந்துமதம் இல்லாவிட்டால் 4ஆம் 5ஆம் ஜாதி (பிறவி) மக்களும், அவற்றால் ஏற்பட்டுவந்த - வருகிற வரும் படியான கேடுகளும் - நடக்க ஏற்பட இடம் உண்டா? என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன்.


இப்படி நான் சொல்லுவதால்தான் இதைச் சுமார் 25 வருடகாலமாக முரட்டுத்தனமாக அச்சமின்றி பிரசாரம் செய்து வருவதால்தான் மத விரோதி, மதங்களை ஒழிப்பவன், கடவுள் விரோதி, கடவுள் இல்லை என்பவன் என்றெல்லாம் என்மீது பழி சுமத்துகிறார்கள், மதமும் கடவுளும் இல்லை என்று ஒருவன் உண்மையாகவே சொல்லுவதனாலும் அதனால் உலகத்துக்கு எப்படிப்பட்ட கேடும் வந்துவிடாது.


மதம் தோன்றிய காலம் முதல் மதப்போராட்டமும், கடவுள் கண்ட கால முதல்  கடவுள் மறுப்பும் நடந்துதான் வந்திருக்கின்றன.  அதனால் உலகம் அழிந்து மறைந்து எங்கும் நாத்திகமும் பொதுவுடைமையும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் சில பித்தலாட்டங்கள் சில வஞ்சகங்கள் ஒரு அளவுக்காவது பலமற்று வருகின்றன என்பது மாத்திரம் உண்மை. ஆதலால் ஏமாற்றுதலில் வஞ்சகத்தில் பிழைக்கும் மக்களுக்கு நம்மீது ஆத்திரம் வந்து அவர்கள் பாமர மக்களையும் மூடர்களையும் கிளப்பி விட்டு நம் பிரசாரத்தை அடக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.


(04.02.1947 அன்று ராமநாதபுரம் ஜில்லா கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)


'குடிஅரசு' - சொற்பொழிவு - 15.02.1947  - 22.02.1947

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:53 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (23)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ▼  ஆகஸ்ட் (5)
      • பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண...
      • பிள்ளை-யார்?
      • மதம் என்றால் என்ன, எது உண்மை மதம்
      • இது என்ன நியாயம்?
      • எனது விண்ணப்பம்
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.