வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்தி நுழைகிறது

தமிழர் கதி

உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?

கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)


 பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....          

சனி, 11 ஜூன், 2022

நவரத்தினம்


  02.08.1925- குடிஅரசிலிருந்து... 

சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.

2. பிராமணர்களும், அவர்களைப் போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்கிற எண்ணங்கொண்டே கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக் கொண்டும், காஞ்சிபுரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும்  வரும் பட்டுப்புடவைகளை உடுத்திக் கொண்டும் நன்றாய்ச் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

3. ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லா திருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக்கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

4. ஆங்கிலம் படித்துப் பரீட்சையில் தேறுவதே புத்திசாலித்தனமென்றும், கெட்டிக்காரத்தன மென்றும் சொல்வது அறியாமையாகும். உருப்போடப் பழகினவனும், ஞாபகசக்தியுள்ளவனும் எதையும் படித்து பாஸ் பண்ணி விடலாம். உருப்போடப் பழகாதவனும், ஞாபகசக்தியில்லாதவனும் பரீட்சையில் தவறிவிடலாம். ஆனால், படித்துப் பாஸ் பண்ணினவன் அயோக்கியனாகவும், முட்டாளாகவும் இருக்கலாம். படித்தும் பாஸ் செய்யாதவன் கெட்டிக்காரனாகவும், யோக்கியனாகவுமிருக்கலாம்.


தெய்வ வரி

பிராயச்சித்தம் (பிராமணர்)


23.08.1925 - குடிஅரசிலிருந்து

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரிகள் வந்தார்.

பெரியமனிதர் :- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.

சாஸ்திரிகள் :- அப்படியா, என்ன விசேஷம்? 

பெரிய மனிதர் :- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான் இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள் :- ஆஹா உண்டு; அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டால் அந்தப்பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப்பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர் :- தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது. தங்களுடைய மகன் தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள் :- ஓ! ஹோ! பிராம ணனா! அப்படியானால், இனிமேல் அப்படிச்செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.