பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

வெள்ளி, 1 ஜூலை, 2022

உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?



   June 26, 2022 • Viduthalai

 தந்தை பெரியார்

இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை?  எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 1லு (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 1லு வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 1லு வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?

 இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.

இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.

 தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.

வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!

வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக் கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?

ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்களை  தலை யெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?

இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?

வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!

இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.

 பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?

இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!

நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.

 தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.

நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?

பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்

நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்திய மூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்திய மூர்த்தி.

இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் சிறீபாதம் சடகோபம் என் கிறார்களே!

இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.

இன உணர்ச்சியும், மானமும் இருந்தால் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்?  என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்?  எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.

15-11-1953 இல் சென்னை வண்ணை நகரில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: ('விடுதலை' 17-11-1953)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:15 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உடல் உழைப்பு, வேலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (23)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ▼  ஜூலை (8)
      • ராஜாவை கையிலெடுத்த தந்தை பெரியார்
      • "பறையனை" உள்ளே விடாத கோயில்கள் இடிபடுமா?
      • சுயமரியாதைத் திருமணமும் - புராண மரியாதைத் திருமணமும்
      • சீர்திருத்தப் பிரசங்கம்
      • இந்தி நுழைகிறது
      • தமிழர் கதி
      • உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?
      • கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.