பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

ஞாயிறு, 19 மார்ச், 2023

குறள் - மாபெரும் பகுத்தறிவு நூல் - தந்தை பெரியார்



   March 19, 2023 • Viduthalai

திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். ஒரு தடவை மாத்திரம் படித்தால் போதாது, இருமுறை, மும்முறை வாசிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

குறள் ஒரு நீதிநூல் என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. என்றாலும் பெரியார் அவர்களின் கருத்துப்படி அது ஒரு கண்டன நூல் என்றே கருத வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் குறளை எழுதிய காலம், ஆரிய மதக் கடவுள்கள் - சாஸ்திரங்கள் - புராண இதிகாசங்கள் - ஆரியப் பழக்க வழக்கங்கள் இந்த நாட்டில் புகுந்துவிட்ட காலமாகும். அவைகளை மக்கள் நம்பத் தலைப்பட்ட காலமாகும். இல்லாவிட்டால், எடுத்துக்காட்டடாக, “அந்தணர்” என்பவர் யார் என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு எப்படி வந்திருக்க முடியும்?

“அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” என்கிற குறள், ‘அந்தணர்’ என்கிற ஒரு ஜீவகாருண்யம் நிறைந்த தமிழ்ச்சொல்லை, ஜீவகாருண்யத்தின் ஜென்ம விரோதிகளான பார்ப்பனர்கள், தங்களையே குறிப்பிடக் கூடிய ஒரு தனி ஜாதிச் சொல்லாக ஆக்கிவிட எத்தனிக்க, அந்த எத்தனமும் மக்களால் உண்மை என்று நம்பக்கூடிய அளவில் வந்து விட்டதினால் தானே, ‘அந்தணர்’ என்பவர்கள் ஒரு ஜாதிக்காரரல்ல, அந்தணர் என்பது ஜாதிப் பெயரல்ல; யார் யார் மற்ற ஜீவன்களிடத்திலெல்லாம் பரிபூரண இரக்கத்தோடு மற்ற ஜீவன்களின் துன்பத்தை, தொல்லையை, கஷ்ட, நஷ்டத்தைத் தங்களுடையது என்று கருதி, அவைகளைப் போக்குவதற்கான பரிகாரத்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் - வாழ்க்கையில் ஒரு லட்சியமாகக் கொண்டு நடக்கிறார்களோ, அவர்கள்தான் “அந்தணர்கள்” என்று விளக்க வேண்டியதாகிவிட்டது?

பார்ப்பனர்கள் தம்மை அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்வது தப்பு; அவர்களை, மற்றவர்கள் அந்தணர்கள் என்று உடன்பட்டுப் பேசுவது, எழுதுவது அதைக் காட்டிலும் பெரிய தப்பு என்று இந்தக் குறள் கண்டிக்கவில்லையா? “மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான்  பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்” என்பது ஒரு குறள். 

இது, பார்ப்பான் என்றால், அவன் எவ்வளவுதான் கொலை பாதகனாய் இருந்தாலும், தாய் என்றும் தங்கை என்றும் வித்தியாசம் பார்க்காத பெரிய காமாந்தகாரனாய் இருந்தாலும், அவன் பிறந்த பிறப்பினாலேயே உயர்ந்தவனாவான், பூதேவன் அவனே, அவனையே மக்கள் பூஜிக்க வேண்டும் என்கிற கருத்தைப், பார்ப்பனர்கள் - பார்ப்பன ரிஷி சிரேஷ்டர்கள் பரப்பியதினால் அல்லவா, அதை மறுத்து, கடவுள் முகத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுகிற பார்ப்பானாயிருந்தாலும், ஒழுக்கங்கெட்டு விட்டால் அவன் இழிமகன்தான். மனிதனுக்கு ஒழுக்கம்தான் முக்கியமே தவிர, பிறப்பு - ஜாதி முக்கியமல்ல என்றுதானே இந்தக் குறள் வற்புறுத்துகிறது?

அவர்களுடைய கொள்கை, வேள்வி - யாகம் செய்யவேண்டும் என்பதாகும். அதுமட்டுமல்ல, யாக வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - சண்டாளர்கள் - அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்லுகிறார்? “அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்று சொல்லுகிறார். 

இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதைத் தெளிவாக்கவில்லையா? மற்றும் அதைக் கண்டன நூல் என்று மாத்திரமல்லாமல் ஒரு மாபெரும் பகுத்தறிவு நூல் என்றும் கருதவேண்டியிருக்கிறது. கண்டனநூல் என்றால், எதைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று பார்ப்போமானால், ஆரியத்தை - ஆரியப் பண்பை, அதிலுள்ள உண்மை ஒழுக்கத்துக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்காத ஆபாச மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டிக் கும் கண்டன நூல் என்றே எண்ணலாம். மற்றும் பல மதவாதிகளின் கற்பனைகளை அதாவது பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காததும், வெறும் நம்பிக்கை - நம்பி ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தினால் மாத்திரமே நிற்பனவாகிய பல மூடநம்பிக்கைகளை ஒழித்து, மக்களுக்கு இயற்கைத் தன்மை விளங்கும்படி செய்வதாகிய பகுத்தறிவு நூல் என்றே சொல்லலாம்.

இந்தப்படி சொல்லுவதிலும் பெரியார் அவர்கள் தமது கட்டுரையில் ஒரு பாதுகாப்புப் பிரிவைச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் மிகமிகக் குறிப்பிடத்தக்கதாகும். “நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதின் மூலம், குறள் முழுவதையும் ஒப்புக் கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதிவிடாதீர்கள். எனக்கு - எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம். அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு - எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன. அதுபோலவே ஒழுக்கவாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும் வேண்டியவைகள் எல்லாம் அதில் இருக்கின்றன, எடுத்துக் கொள்ளுங்கள்” என்பது ஆக தெளிவுபட விளக்கி உள்ளார்.

ஏன் அப்படிக் கூறியிருக்கிறார் என்றால், இன்று நம் திராவிட மக்களுக்கு முக்கியமாய், முதன்மையாய், இன்றியமையாததாய் வேண்டப் படுவது ஆரிய ஆபாசமும், அறியாமையும், மூடநம்பிக்கையும் கொண்ட ஜாதி, மத, கடவுள்கள் தன்மையிலிருந்து வெளியேறிப் பகுத்தறிவும் தன்மானமும் பெற வேண்டியதே ஆதலால், அவற்றைப் பொறுத்தவரை பெரியாரவர்களும் திராவிடர் கழகம் கருதும் - கூறும் விஷயங்களுக்கு நல்ல உறுதியான ஆதாரங்கள் அதில் - குறளில் இருக்கின்றன என்ற உறுதியால் அப்படிக்கூறி இருக்கிறார்கள். 

அதாவது ஒருபாதுகாப்புக் குறிப்புக் கூறி இருக்கிறார்கள். ஏன்? அப்பாதுகாப்பு என்றால், குறளின் காலம் இன்றைக்குச் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தியதாகலாம். அப்படி இருக்குமானால் 2,000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பல அறஉரைகள் பற்றிய நீதிகள், சமுதாய முறையான ஒழுக்கங்கள், அக்காலத்தில் நாட்டில் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த கருத்துக்கள் யாவும், இன்றும் பொருத்தமானதாகவும் மதிக்கத் தகுந்ததாகவும் இருக்கும் என்று சொல்லுவது இயற்கைக்குப் பொருந்தாததாகும். 

ஆதலால், அவற்றுள் சில இன்றைய நிலைக்கு - கருத்துக்கு - மக்களின் ஆசாபாசத்துக்கு - சுற்றுச் சார்புக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டியது அறிவுடைமையாகும். உதாரணமாகத் தனி உடைமை உரிமை உள்ள காலத்தில், ஒருவனின் உடைமையை அவன் சம்மதமின்றி எடுப்பது திருட்டு ஆகும் என்பது ஒழுக்கவிதியாகும். அதே ஒழுக்கவிதி, தனி உடைமை உரிமை இல்லாத காலத்தில், ஒருவன் தனக்கென்று அதிக உடைமை எடுத்து வைத்துக் கொள்ளுவானானால். அதைப் பலாத்காரமாகப் பறிக்காதது ஒழுக்கத்துக்குக் கேடாகும் அல்லவா? இப்படியாக மற்றும் பல படியாக காலத்துக்கு - நிலைமைக்கு ஏற்ப பல மாறுதல் இயற்கையாக அமைக்கப்பட வேண்டியதும் அனுசரிக்கப்பட வேண்டியதும் இயல்பாகும்.

குறள், ஆரியத்தை ஆரியப்பண்பு முதலிய வற்றைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று எதனால் சொல்லப்பட்டது? என்பதைச் சிந்திப்போம். ஆரியத் துக்கும் ஆரியப் பண்புக்கும் அடிப்படை முதலாவது மூட நம்பிக்கை. பிறகு, அதன் மீது ஆரியர்களின் சுயநலத்துக்காகக் கற்பனை செய்துகொண்ட மதம், கடவுள்கள், ஜாதிகள், மேல் உலகம், கீழ் உலகம், நரகம், மோட்சம், தலைவிதி, முன் ஜன்மம், பின் ஜன்மம், இவைகளைப் பிரசாரம் செய்ய அவர்களால் உண்டாக்கப்பட்ட கடவுள்கள் - வேத - சாஸ்திர - புராண - இதிகாசங்கள் முதலியவைகளும், இவைகளை ஆதாரமாய்க் கொண்ட நாள்கள், பண்டிகைகள், உற்சவங்கள், பழக்க வழக்கங்கள் முதலிய கொண்டாட்டங்களும் ஆகும்.

குறள் இவைகளை எல்லாம் பெரிதும் கண்டித்தும், மறுத்தும், கிண்டல் செய்தும், அலட்சியப் படுத்தியும் வருகிறது. இந்தப்படி கண்டித்து மறுத்து அலட்சியப்படுத்தி, கிண்டல் செய்துவருவதற்கு ஆதாரமாகக் குறளில் பல குறள்கள் இருக்கின்றன. 

முதலாவதாக தலைவிதியையும், கடவுளின் சர்வ சக்தியையும் குறள் மறுக்கின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே மிகமிகப் போதுமான தென்போம். அது என்னவெனில் “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்” என்று கூறுகிறது.

இதில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. 1. ஒரு மனிதன் இரந்து - பிச்சை எடுத்துக் கீழ்மைப்பட்டு உயிர் வாழ்வதற்குக் காரணம் அவன் தலைவிதி அல்ல என்பது. 2. உலகத்தைச் சிருட்டித்தது அதாவது உலகில் உள்ள நலத்துக்கும் கேட்டிற்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், கடவுள் காரணமல்ல; கடவுள் சக்தி - ஆக்கல் அவற்றிற்கு பொறுப்பல்ல என்பது.

இரண்டாவதாக, தேவர்கள் என்பதாக யாரும் இல்லை என்பதும், ஆரியர்களால் கற்பிக்கப்பட்டிருக்கும் தேவர்கள் என்பவர்களுக்கு அயோக்கியத்தனங்கள் தான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன என்பது விளங்க, ஒரு தங்கமான எடுத்துக்காட்டு குறளில் விளங்குகிறது. அது என்னவெனில், ‘தேவரனையர் கயவர்; அவர்தாம் மேவன செய்தொழுகலான்’ என்று கூறுகிறது.

இது எவ்வளவு பொருத்தமானதும் சரியானதும் என்பதை ஆரியக்கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், தேவர்கோன் முதலியவர்களைப் பற்றிய சாஸ்திர - புராண இதிகாசங்களைப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கும். தேவர்கள் என்பதில், குறள் எல்லாத் தேவர்களையும், தேவர்கோன் உள்பட சேர்த்தே, பல இடங்களில் அவர்களை இழிவுபடுத்திக் கூறுகிறது. மற்றும் உலக நடப்புக்கு - வாழ்வுக்குக் கடவுள் காரணமல்ல, இயற்கை நடப்புத்தான் காரணம் என்பதைக்காட்டக் குறளில் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எவை எனில், “வானின்றுலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.”

மழையால்தான் உலகம் வாழ்கின்றது - காப்பாற்றப்படுகின்றது. ஜீவராசிகளுக்கு உணவு அளிக்கப்படுகின்றது என்பதற்கும், மற்றும் மழையால்தான் கடவுள் காரியங்களும் மனிதர் தர்மங்களும் (கடமைகளும் அறமும்) நடைபெறுகின்றன என்பதற்கும் குறளில் பல ஆதாரமாய் விளங்குகின்றன. அதாவது “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” என்றும், “தானம் தவம் இரண்டும் (கூட) தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின்” மழை இல்லாவிட்டால் கடவுளுக்கு பூசனையும், தேவர்களுக்குப் படைப்பும் கிடையாது. மக்களிடமும், ஒழுக்கம் கடமை ஒன்றுமே இருக்க முடியாது என்றும் தெளிவுறுத்துகிறது.

மக்களில், பிறப்பில் ஜாதி இல்லை, உயர்வு தாழ்வு இல்லை என்பதையும், தொழிலாலும் உயர்வு தாழ்வு இல்லை என்பதையும் குறள் நன்றாய் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக, “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு (ம்) ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (லும்) “மக்கள் பிறவியில் யாவரும் சமம், தொழிலிலும் அதாவது மக்களுக்கு ஆக யார் எத்தொழிலைச் செய்தாலும் அதிலும் யாவரும் சமமே யாவர்” என்கின்றது. தெய்வ எத்தனம் என்பது பயனற்றது, மனித எத்தனம்தான் உண்மை என்பதற்கும் எடுத்துக்காட்டு குறளில் இருக்கிறது. “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்.” எல்லாக் காரியங்களும் தெய்வத்தால்தான் ஆகிறது என்று சொல்லப்பட்டாலும், உண்மை நடப்பு என்னவென்றால், மனிதனது முயற்சியும் செய்கையும் இருந்தால்தான் பயன் உண்டாகும் என்கிறது. மனிதனின் நடப்புக்கு - குணங்களுக்கு அவனவன் சரீர அமைப்புத்தான் முக்கிய காரணமே ஒழிய விதியோ, முன்ஜென்ம கர்மபலனோ என்பது அல்ல என்பதைக்குறளில் “ஊழ்” என்பது விளக்குகிறது.

ஊழ் என்பதை, குறள், சரீர அமைப்பு இயற்கைக்குணம், பிறவிக்குணம், ஜென்மக்குணம் என்பதாகக் கொள்ளாமல், முன் ஜென்மத்தில் அச்சீவன் செய்த கர்மத்திற்கு ஏற்ற விதி என்றும், அது தவறாமல் நடந்தே தீரும் என்றும் குறள் ஆசிரியர் கருதி இருப்பாரானால், அவர் இக்குறளில் இந்த ‘ஊழ்’ என்ற ஒரு அதிகாரத்தை (அதாவது இந்த ஒரு 10.பாட்டை) மட்டும் பாடி விட்டுப்பேசாமல் தனது கடமையை முடித்துக் கொண்டு இருப்பார். அன்றியும் இந்தப் பத்துக் குறளைக்கூட இவர் பாடி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் எனில், இவருக்கு முன்பதாகவே தலைவிதியையும், முன் ஜென்மத்தையும், கர்ம பலனையும் பற்றி ஏராளமாக, வண்டி வண்டியாக ஆரியரால் எழுதப்பட்ட நூல்கள் இருக்கும்போது இவர் - மற்ற துறைகளில் ஆரியத்தை மறுத்து ஆரியர் பண்புகளைக் கண்டித்துக் கூறிய இவர், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருந்தாத இதைப்பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்தித்தால் விளங்காமல் போகாது. அன்றியும் தலைவிதி, முன் ஜென்மக் கர்மபலன்களின்படியேதான் மனித வாழ்வின் சம்பவங்கள் என்பதும் அவை வேறு எந்தக் காரணங்கொண்டும் மாற்றமில்லாதது என்பதும் முடிவானால், மற்ற நீதிகள், வழிபடுதல், வழிமுறைகள், கற்பித்தல்கள், மனித அறிவுப் பெருமை, சுதந்திரம் முதலியவைகள் பற்றிக் கூறுவது பயனில்லவேயாகும். ஆதலால் ஊழுக்கு, விதி, முன் ஜென்மக் கர்மபலன் என்று கருத்துக் கொள்ளுகிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருந்து பொருள்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.

இவை போலவே, குறளில் ஆரியத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராக அறிவூட்டித் தெளிவு படுத்தும் கருத்துகள் ஏராளமாக இருப்பதால், பெரியார் அவர்கள் குறளை திராவிட மக்களுக்கு எடுத்துக்காட்டி வழிபடவைக்கிறார். குறளில் பல முரண்பாடுகள் இருப்பதாக மதப் பண்டிதர்கள், மதவாதிகள், ஆரிய தாசர்கள் கூறக்கூடும். அதுபற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. நமக்கு ஒப்பானவைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. நடப்புக்குத் தேவையானவைகளையெல்லாம் நாம் எடுத்துக்கொள்ளு வோம். நம்பிக்கைக்குத் தேவையானவைகளுக்கு, நம் பகுத்தறிவால்  நிறுத்து ஆராய்ச்சி அனுபவ, உரைகல்லில் உரைத்துப்பார்த்துக் கொள்முதல் செய்வோம். குறள் வாழ்க!

குடிஅரசு - தலையங்கம் - 30.04.1949

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:21 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திருக்குறள்

ஆரியர் கற்பும் - திராவிடர் கற்பும்!

 

    October 22, 2022 • Viduthalai

ஆரியச்  “சதி”களின் கற்புநெறி!  ஆரியக் கற்பைக் காப்பியடித்த தமிழர்களின் கதி!

தந்தை பெரியார்

கற்பு பெண்களுக்கே உரியது. ஆண் கள் கற்பாய்  இருப்பதற்குத் தமிழில் வார்த்தைகளே கிடையாது. ஏன் ஆரியத் திலும் வார்த் தைகளே கிடையாது. அதுமாத்திரமா? உலகில் வேறு எந்த மொழியிலும் வார்த்தை கள் இருப்பதாகக் காணப்படுவதில்லை. என்றாலும் இருக் குமோ என்னமோ தெரியாது. நம் நாட்டு ஆண்கள் கற்பாய் இருக்க வேண்டும் என்பதற்கு மதக் கட்டளை இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள் களாவது கற்பாக இருந்தார்களா என்றால் அதையும் காணமுடியவில்லை.

ஆரியர் கற்பும் - தமிழர் கற்பும்

அது எப்படியோ போகட்டும். பெண் கற்பு தமிழர்களுக்குத்தான் தொல்லையாக முடிந்ததே தவிர, ஆரியர்க்கு அதில் எவ்விதத் தொல்லையுமில்லை. ஆரியர் கற்புக்கும் தமிழர் கற்புக்கும் தத்துவத் திலேயே (டெபனி ஷனிலேயே) அதிக வித்தியாச மிருக்கிறது.

ஆரியர் கற்புக்கு வியாக்கியானம் அதாவது யோக்கியதாம்சம் வெகு சுலப மானது. எப்படி என்றால் கற்புக்கும் பிற புருஷரைக் கூடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகவே தெரிகிறது. எடுத் துக்காட்டாகச் சொல்லப்போனால் அருந் ததி, திரவுபதை, சீதை, அகலியை, தாரை, பிருந்தை முதலிய வர்கள் தலைசிறந்த கற்புக்கரசிகள். இவர் களை நினைத்தாலே சகல பாபமும் நாசமாகி விடும் என்பதோடு இவர்கள் கடவுள்களாக வும் விளங்கு கிறார்கள்.

அருந்ததியின் கற்பு

இவர்களுள், அருந்ததியானவள் பெண் களுக்கு விபசாரித்தனம் செய்ய லைசென்சு கொடுத்தவள். உலகத்தில் "ஒழிந்த இடமும், ஆண்பிள்ளைகளும் இருக்கிறவரை பெண்கள் கற்பாக இருக்க முடியாது" என்று சொன்னவள். அதாவது இயற்¬ யாக யாரும் கற்பாக இருக்க முடியாது என்பது ஆகச் சொன்னவள். அப்படி இருக்க விபசாரித்தனத்துக்குத் தண்டனை இருக் கவும் நியாயமிருக்காது.

திரவுபதையின் கற்புநெறி 

திரவுபதை அதை நடத்தையில் காட்டி னவள். "அய்ந்து பேருடன் நான் கலவி செய்து வந்தும், ஆறாவது புருஷன் மீது எனக்குக் காதல் இருந்து வந்தது. என் இரு தயம் இவைகளை விபசாரித்தனம் என்று கருதவே இல்லை. ஏனெனில் ஆண் பிள்ளைகள் உலகத்தில் இருக்கும்போது பெண்கள் எப்படிக் கற்பாயிருக்க முடியும்" என்பதாகக் கூறிவிட்டாள்.

உடற்சம்பந்தத்தால் கற்பு கெடாது

சீதை, "என் மனம் ஒருவரிடமும் விருப் பம் கொள்ளவில்லை. என் உடலைப் பற்றி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஓங்கி அடித்து விட்டாள். ஆதலால் உடல் சம்பந்தத்தால் கற்பு கெடுவதில்லை என்று சீதை ஒரு விலக்கு விதி ஏற்படுத்தி விட்டாள்.

விபசாரித்தனத்துக்கு இலக்கியம்

தாரையின் கற்பு சங்கதி விபசாரித்தனத் துக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கலையாகும். "விபசாரித்தனம்தான் பெண் ஜென்மத்துக்கு இன்பமளிக்கக் கூடிய சாதனம்" என்பதாக விளக்கியவள் தாரையே.

அகலிகை கற்பு சங்கதி

நல்ல பெண்களைக் கண்டால் எப்படிப் பட்டவனானாலும் ஆசைப்படுவது இயற்கை யென்றும், கவுரவமும் பெருமையும் உள்ள மனிதன் ஆசைப்பட்டால் பெண்கள் மனம் இளகுவது இயற்கைதான் என்றும், இதனால் தப்பிதம் ஒன்றும் இல்லை யென்றும், புருஷனுக்குக் கோபம் வருவதும் அந்தச் சமயத்தில் இயற்கையென்றும், பிறகு அது மாறிப்போகும் என்றும், அனுபவித்த இன்பம் எந்நாளும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றும் எடுத்துக்காட்டினவள்.

ஆரியர்களில் இந்தத் தெய்வீகப் பெண்களின் கற்பு இப்படி இருக்குமானால், மற்றச் சாதாரணப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது நேரத்தைக் கொலை செய்வதாகும். ஆரியர்களின் கற்பு இந்த விதமான யோக்கியதாம்சங்கள் கொண்டிருப் பதால், அவர்கள் மேலோர்களாகவும் உண்மையான மேன்மையான வாழ்வு வாழ் கின்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கற்பு

தமிழன் கதியைப்பார்த்தால் பரிதாபகர மாய் இருக்கிறது. கண்ணகி கற்பு அவர்கள் வாழ்வையே கெடுத்துவிட்டது. அவ்வளவு தானா? அவர்கள் அரசர்களையும் கெடுத் தது; அவர்கள் நாட்டையும் கெடுத்தது; ஒரு முலையும் திருகி எடுக்கப்பட்டது. இவ்வள வோடு போகாமல் நிரபராதிகள் எல்லாம் வெந்து சாம்பலானார்கள். அது மாத்திரமா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறமாதிரி "பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் வெந்து சாம்பலானார்கள்".

இது தமிழ்க் கற்புக்கரசியின் கண்ணகியின் கட்டளையாம். இப்படிக் கட்டளை இட்டவளுக்குக் கோவிலாம், கொண்டாட்ட மாம். இவள் பாண்டிய நாடு பூராவையும் எரித்துச் சாம்பலாக்கி இருந்தால் இன்னும் பெரிய கடவுளாக ஆயிருப்பாள் போலும். ஆகவே ஆரியர்கள் கற்பு முறை அவர் களுக்கு எவ்வளவு இலாபத்தைக் கொடுக் கிறது என்பதும் அவர்களைப் பார்த்துக் காப்பி அடிக்கும் தமிழர்கள் கற்பு முறை நமக்கு எவ்வளவு தொல்லையையும் கேட்டையும் கொடுமையையும் கொடுக் கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கற்பு மக்களுக்கு வேண்டும், கட்டாயம் வேண்டும். ஆனால், ஆண்களை அயோக் கியர்களாக ஆக்கும் கற்பு - அயோக்கியர் களாக ஆவதற்கு வசதி அளிக்கும் கற்பு, தூண்டும் கற்பு, குடும்பத்தை, வாழ்க்கையை, பெண் உரிமையைக் கெடுக்கும் கற்பு, மனித சமுதாயத்து ஆணுக்காகிலும் பெண்ணுக் காகிலும், குழந்தை, குட்டி, பெற்றோர், உற்றார் ஆகியவர்களுக்காகிலும் எவ்விதப் பயனும் அளிக்காது - அளிக்காது என்பதோடு அதற்கு ஒரு மோக்ஷமுண்டு என்பது மகா அயோக் கியத்தனம் என்றே சொல்லுவேன்.

('விடுதலை' -  9-7-1943, பக்கம் 3)


இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:45 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கற்புநெறி

திராவிடர் இயக்கமும் ‘தினசரியும்'!

 

    July 30, 2022 • Viduthalai

திராவிடர் இயக்கம் இன்று தமிழ்நாட்டில் மற்ற எந்த இயக்கத்திற்கும் தாழ்ந்ததாக இல்லாமல், மிக்க உணர்ச்சியுடன் பொது மக்கள் கவனத்தைக் கவர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

இதற்குக் காரணம் இயக்கப் பிரச்சாரம். எவ்வித சுயநலக் கலப்பும் இல்லாமல் மக்கள் முன்னேற்றத்தைக் கருதியும், எவ ரும் ஆட்சேபிக்கவோ சந்தேகிக்கவோ முடியாத கொள்கைகளைக் கொண்டும், எவரின் ஒப்புதலும் இருந்து தீரும்படியான திட்டங்களைக் கொண்டும் நடப்பதாலும், இயக்கத் தலைவர் பெரியார் தனது வாழ் நாளை உண்மையில் இயக்கத்திற்கு ஒப்பு வித்து, தானே இயக்கமாக கருதிக் கொண்டு மற்றவர்கள் இஷ்டப்படி நடக்காமல் தன் திருப்திப்படி இயக்கத்தை நடத்தி வருவதி னாலேயாகும். அதோடு கூடச் சுயநலத்துக் காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இயக்கத்திற்குக் கெட்டபெயரும், இயக்கத் தின் பரிசுத்தத் தன்மையில் மக்களுக்கு சந் தேகமோ, பேச்சுக்கிடமோ கொடுக்கும்படி யானவர்களை அவர்கள் எப்படிப்பட்டவர் களாய் இருந்தாலும் லட்சியம் செய்யாமலும், அவர்களுக்கு இயக்கத்தில் நல்ல இடமில் லாமலும் செய்து துணிவோடு உதறித் தள்ளி விட்டு, உள்ளதைக் கொண்டு கவலையோடு தொண்டாற்றுவதேயாகும்.

அதோடு மாத்திரமல்லாமல் இன்று இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக் கும் தொண்டாற்றுவது தான் நம் கடமையே தவிர மற்றபடி நமக்கு வேறு கடமை இயக் கத்தில் இல்லை என்று கருதும் படியான அளவுக்குத் தொண்டர்கள் ஏராளமாக இருப்பதும் அவர்களது நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெரியார் பெற்றிருப் பதுமாகும்.

இப்படிப்பட்ட இயக்கம் இன்று பெரியா ரின் பேச்சின் பயனை மாத்திரமே அல்லா மல் அவரது எழுத்தின் பயனைச் சரியான படி மக்கள் அடைவதற்கில்லாமல் குறைபட வேண்டி இருக்கிறது.

குடிஅரசில் பெரியார் எழுத்து முன் போல் உணர்ச்சியும், எழுச்சியும் ஊட்டும் படியாகவும் புதிய விஷயங்களைக் காட் டும்படியாகவும் காணமுடிவதில்லை. பழைய செல்வாக்கைக் கொண்டு குடிஅரசு நடக்கிறதென்பதல்லாமல் அது புதிய சங்கதிகளுக்கும் புதிய கவர்ச்சிக்கும் பயன் படும் மாதிரியாக இருக்கவில்லை. இயக்க சேதிப்பத்திரிகையென்று சொல்லும் படியா கவே அது பெரிதும் இருக்கிறது. அது கருத் துப் பத்திரிகையாக முன்போல் நடந்து வரு மானால் இன்றைய தமிழ்நாட்டின் நிலை வேறு மாதிரியாக இருந்திருக்குமென்ப தோடு இனியும் அதிகமாக இளைஞர்களைக் கவர்ந்திருக்குமெனலாம்.

பெரியாருக்கு இப்போது சுற்றுப் பிரயா ணம் அதிகமாகிவிட்டது. ஏனெனில் பேச் சுக்கு ஆளில்லாமல் போனதே இதற்குக் காரணம், மக்கள் எந்தக் கூட்டத்திற்கும் ஒரு பிரதம பேச்சாளரையும், ஒன்று இரண்டு உபபேச்சாளரையும்தான் விரும்பு கிறார்கள். பெரிதும் பிரதம பேச்சாளரைக் கருதியே கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். இல்லாவிட்டால் அது விமரிசையான கூட் டமாய் இல்லாமல் சடங்குக் கூட்டமாகப் பாவிக்கப்பட்டு விடுகிறது. ஆகவே திரா விடர் இயக்கத்திற்கு இன்று பெரியாரைத் தவிர பிரதம பேச்சாளர் என்பவர்கள் கிட் டத்தட்ட அடியோடு கிடைப்பது இல்லை என்றே சொல்லலாம். இருப்பதாகச் சிலர் தங்களையே எண்ணிக் கொண்டிருப்பார் கள். பலர் வேறு சிலரையும் குறிப்பார்கள். அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எண்ணிக் கொண்டி ருக்கவும், குறிப்பிடப்படவுந்தான் கூடிய தாக இருக்கிறதே தவிர காரியத்தில் தேவைக்கேற்றபடி பயன்படத்தக்கவர் மிக அரிதாக இருக்கிறது.

ஏனெனில் அழைப்புக்கு பதில் எழுது வதில்லை, சிலர் அழைப்பை ஏற்றுக் கொள் வதில்லை, சிலர் ஏற்றுக் கொண்டு காரியம் நடத்த அனுமதி அளித்துவிட்டுப் போகாமல் ஏமாற்றம் அளித்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். சிலர் அழைப்பை ஏற்றுக் காரியம் நடத்த, விளம்பரப்படுத்த அனுமதி கொடுத்து விட்டுப் போகாமல் இருந்து விடுகிறார்கள். சிலர் ஒப்புக்கொண்டு போகவரச் செலவுக் குப் பணமும் தாராளமாய்ப் பெற்றுக் கொண்டு கூட்டத்திற்குப் போகாமலே இருந்து விடுவதோடு, மக்கள் ஏமாற்றம் அடையும் படியும் அழைத்தவர்களை அவமதித்தும் விடுகிறார்கள். சிலர் இதை அதிகமாய், மனதறிந்தே கையாளுகிறார் கள்.  இக்காரணங்களால் இயக்கத்திற்கு ஏற்படும் கெடுதியை மக்கள் அதிருப்தியை சமாளிக்க எதிர்பாராத நிலையில் திடீ ரென்று நேரில் வந்து அழைத்தவுடன் ஓடவும், சில இடங்களுக்கு வேறு யாரும் வரவில்லை, மக்கள் ஏமாற்றம் அடை வார்கள் என்று தெரிந்த உடன் கூப்பிடா மலும் விழுந்தடித்து ஓடவும் வேண்டிய அவசியத்திற்கும் அவசரத்திற்கும் பெரியார் ஆளாக வேண்டி இருக்கிறது. பிரதம பேச்சாளர் என்பவர்களின் சங்கதி இப்படி என்றால், உபபேச்சாளர்கள் சங்கதி இன்று இம்மாதிரி குற்றம் சொல்லுவதற்கு இல்லை என்றாலும், சிலர் தகுதிக்கு மேலால் தங்கள் சவுகரியத்தை எதிர்பார்ப்பதால், சிற்சில சமயங்களில் சலிப்படைய வேண்டி யவர்களாகிவிடுகிறார்கள். சிலர் பிரதமப் பேச்சாளர்கள் என்பவர்களைப் போலவே தங்களையும் பாவிக்கவில்லையே என்று சங்கடப்பட்டு சலிப்படைந்து விடுகிறார்கள். சிலர் தாங்கள் அழைக்கப்பட்ட இடம் குதிரை வண்டியிலோ, கட்டை வண்டி யிலோ செல்ல வேண்டியிருந்தால், ஓடியும் மறைந்தும் கொள்கிறார்கள் எனினும் இவை இயற்கை எனலாம். ஏனெனில் இப் படிப்பட்டவர்கள் சிறுவர்கள்; உலக அனு பவம் இல்லாதவர்கள்; ஆதலால் இது முன் னையதைப் போல அவ்வளவு மோசமான தல்ல என்றாலும், இவையெல்லாம் சேர்ந்து இயக்கம், தான் அடைய வேண்டிய உண் மையான நியாயமான வளர்ச்சியும் மேன் மையும் அடையத் தடையாகிவிடுகிறது. இதனாலும் பெரியார் தனது சுற்றுப் பிராயணத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதனால் அடிக்கடி உடல்நிலைத் தொல்லை கொடுக்க நேரிடுகிறது. ஆகவே இந்தக் காரணங்களால் பெரியாருக்கு அவசரமும், நடப்பு விஷயங்களைப் பற்றியதுமான எழுத்து வேலை, கொள்கைகள், திட்டங்கள் பற்றிய கட்டுரைகள், கருத்துக்கள், சம்பாஷ ணைகள் எழுத நேரமும் வசதியுமில்லாமல் போய்விடுகிறது. வேறு பத்திரிகை நம் இயக்கத்திற்கென்றே இருக்கின்றது என்றா லும், அது புதிய கருத்துகளையும் அரிய கருத்துகளையும் கொள்ளத்தயங்குவ தில்லை. என்றாலும் பாமர மக்களை மன திற்கொள்ளாமல் அறிஞர்களைக் கவர்ச்சி செய்யும் தன்மையில் விளங்குகிறது. அது வும் வேண்டியதே என்றாலும், பாமர மக்க ளிடம்தான் நம் இயக்கத்திற்கு பெரிதும் வேலை இருப்பதால், அதை முக்கியமா கவும் அறிஞர்களை அடுத்தபடியும் நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் விடுதலை தினசரியும் ஏற்பட்டுவிட்டால் அதைக் கவனிக்க ஆட்கள் எங்கே என்ற பிரச்சினை எழுகிறது.

இயக்கத்திற்கு இன்று முழு நேரத் தோழர்கள் எத்தனை பெயர்கள் இருக் கிறார்கள் என்றால் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கிடக்கூட மிக்க கஷ்டப்பட வேண்டி இருக்கும். இந்த எண்ணிக்கைக்கும் இவர்களுக்கு இயக்கம் சிறிதாவது ஆதரவு செய்ய வேண்டும்; வழி காட்டுதல் செய்ய வேண்டும் என்கின்ற தேவை அடியோடு இல்லை என்று சொல்ல முடியாது.

ஆகவே, கட்டுப்பாடாக உணர்ச்சியும் ஆர்வமும் உள்ள நல்ல இளைஞர்கள் இயக்கத்திற்கென்றே முழு நேரம் வேலை செய்ய வேண்டியவர்கள் வேண்டியிருக் கிறது. அவர்களுக்கு இயக்கத்தில் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும், அவர்களும், இயக்கத்தில் உள்ள முழு நேரப் பிரமுகர் களும் மாதத்தில் 20 நாட்களுக்குக் குறையா மல் சுற்றுப் பிராயணம் செய்தாக வேண்டும். ஒழுங்கு முறைப்படி திட்டங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுக்கு இணங்கி தொண்டாற்றுகிறவர்களும், நீதி யாய் நடந்து கொள்ளுகிறவர்களும் இயக் கத்தால் ஆதரவு எதிர்பார்க்கலாம். இயக்க மும் அவர்களுக்கு தோழர் வேதாசலம் அவர்கள் தலைமையில் ஆதரவளிக்கும்.

இதை ஏன் எழுதுகிறோம் என்றால் 1946ஆம் வருடம் மிக்க குறிப்பிடத்தக்க ஆண்டாகும். இதில் பெரியதொரு தொண்டை திராவிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

1947இல் நம் இயக்கம் இருக்குமா அழிக்கப்பட்டுவிடுமா என்று இரண்டி லொன்றைக் காணக் காத்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த ஒரு ஆண்டையாவது கட்டுப்பாடு, ஒழுங்கு, உண்மையான கவலை, உண்மைத் தொண்டு ஆகியவைகளோடு செயலாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையா லேயே இதை எழுத வேண்டியது அவசிய மாயிற்று.

இதுவரையிலும் கூட இயக்கம் பெரிதும் அப்படியேதான் நடந்து வந்திருக்கிறது என்றாலும், இவ்வாண்டு இவைகள் சிறிது அதிகமான தன்மையுடன் நடக்க வேண்டி யிருக்கிறது. இந்தக் காரியத்திற்கு ஒரு தினசரி அவசியம். விடுதலை தினசரி நடத் தப் பல தோழர்கள் உண்மையில் ஆத்திர மாக இருக்கிறார்கள். அதற்கும் பல கவ னிப்பு வேண்டி இருக்கிறது; பொருள் தேவை இருக்கிறது; ஆள்கள் தேவை இருக்கிறது ஆகிய இவைகள் எல்லாம் சரியாக, கண்டிப்பாக இருந்தாலொழிய இனி இயக்கத்தை நடத்துவது தக்க பலனளிப்பதாக இருக்க முடியாது ஆதலால் பொறுப்பாளிகள் முன்வர வேண்டுகிறோம்.

குறிப்பு : இத்துணைத் தலையங்கம் பெரியார் பற்றி மூன்றாம் நிலையில் குறிப் பிடப்பட்டிருந்தாலும் அவர்களே எழுதிய அறிக்கையே இது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. 

- 'குடிஅரசு' - துணைத்தலையங்கம் 

- 05.01.1946


இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:16 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இயக்கம், தினசரி

நேர்மையின் குறியீடு:பெரியார்

 செல்லரித்துப்போன செல்போன் புளுகுகள்!

      October 01, 2022 • Viduthalai

நேர்மையின் குறியீடு:பெரியார்

கி.தளபதிராஜ்

காங்கிரசின் கதர் நிதியை களவாடி விட்டாராம் பெரியார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவாள் பாட்டனும் பூட்டனும் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டையை மீண்டும் இப்போது சந்தைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் ஒரு பேர்வழி.

1935 ஆம் ஆண்டு பூனாவிலிருந்து வெளிவந்த ‘மராட்டா’ என்ற பத்திரிகை திலகர் சுயராஜ்ய நிதியை திருடியதாக ஒரு சில காங்கிரஸ்காரர்களின் பட்டியலை வெளி யிட்டு இருந்தது.

ராஜகோபாலாச்சாரியார் அட்வான்ஸ் தொகையாக வாங்கிய 19,000 ரூபாய் ஸ்வாஹா! பிரகாசம் பந்துலுக்கு கொடுக்கப் பட்ட 10,000 கடன் தொகை அபேஷ்! என ஏழு குற்றச்சாட்டுகளை அது அடுக்கியிருந்தது.

பெரும்பாலான குற்றச்சாட்டுகளில்  பார்ப் பனர்களுக்கு தொடர்பு இருந்ததால் அவா ளுக்கு ஆதரவாக வேட்டியை வரிந்து கட்டி பதில் அளிக்க முனைந்தது தினமணி. 

“ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செல விட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்ப கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகிவிட்டதால் மூழ்கிப் போவது ஒன்றுமில்லை” என்று எழுதியது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அநேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜனோ, ‘சுயநலக் கடலில் மூழ்கி மறைந்தது ஒரு கோடி ரூபாய்!’ என்று விளக்கமளித்திருந்தார். அதையும் குடிஅரசு எடுத்து வெளியிட்டது.

‘ஆச்சாரியார் தம்மிடம் கொடுக்கப்பட்டு உள்ள பணத்திற்கு கணக்கு விவரங்களையும், மீதப் பணத்தையும் திரும்ப கொடுத்து விட் டதை ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்‘ இதில் ஊழல் ஒன்றுமில்லை என்பதாக தினமணி எழுதியது.

அப்படி ‘ரிப்போர்ட்’ எதுவும் எழுதப்பட வில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு! ரிப்போர்ட்டுகள் எழுதப்பட்டது உண்மையானால், அந்த ரிப்போர்ட்டுகளை தினமணி பிரசவிக்கட்டும்! என சவால் விட்டது குடிஅரசு.

“முட்டாள்களின் பணத்தை மோசக்காரர் கள், வஞ்சகர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும், அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரியவர்களுக்கும் இடையூறாக இருக்குமா னால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக் காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மை யான ஊழியர்களின் கடமை அல்லவா?” என்றும் குடிஅரசு எழுதியது.

1922, 23, 24, 25ல் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களான டாக்டர் ராஜன் சாஸ்திரி யார், எம்.கே.ஆச்சாரியார், சந்தானம் அய்யங் கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும் தாங்கள் வாங்கிய பணத்திற்கு சரியான கணக்கு கொடுத் தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வரவு வைத்து செலவு எழுதப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த கூட்டத் தில் சேராமல் இன்று எந்த காங்கிரஸ் பார்ப் பனராவது யோக்கியமாய் இருக்கிறார்களா? என்றும் கேட்டது.

மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்க்கடையில் இருந்து பணம் பச்சையாக திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக் கிறது என்பது பொய்யா? என்று குடிஅரசு கேள்வி எழுப்பியது.

குடிஅரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு காங்கிரஸ் பத்திரிகை பெரியார் கதர்நிதியை சரிவர ஒப்படைக்கவில்லை என்றும், ஆதிநாராய ணன் எழுதிய கணக்கு அறிக்கையை பார்த் தால் ஈ.வெ.ரா யோக்கியதை வெளியாகும் என்றும் எழுதியது.

இதைத்தான்  இப்போது இணையதளத்தில் மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு பேர் வழி. கதர்நிதியில் ஊழல் செய்ததால் தான் காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றப் பட்டதாக உளறியிருக்கிறார்.

ஆதிநாராயணன் பெரியார் மீது குற்றம் சுமத்தி அறிக்கை விட்ட பிறகுதான் பெரியார் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசியா கவும், காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், மாகாண கான்ஃபரன்ஸ், ஜில்லா கான்ஃபரன் ஸுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கான்ஃப ரன்ஸுகளுக்கு தலைவராகவும், கதர் போர் டுக்கு 5 வருட தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்பதெல்லாம் இந்த பேர் வழிக்குத் தெரியுமா?

பெரியார்மீது குற்றம் சுமத்திய அந்த ஆதி நாராயணன் யார்?

“ஈரோட்டைப் பொறுத்தவரை கதர் நிதி தொடர்பாக 500 ரூபாய் விஷயமாக  எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரை காரியதரிசியாக இருந்த சந்தானம் அய்யங் காரே பல தடவை நேரில் சந்தித்து பகுதி வசூல் செய்து, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டுவிட்டார்” என்று நடந்த விஷயத்தை உண்மை நிலவரத்தை எடுத்து ரைத்தது. இந்த 500 ரூபாயைத்தான் இணை யக் காணொளியில் ஏழாயிரத்து அய்நூறு என்று இப்போது கயிறு திரித்திருக்கிறார் இந்த ஆசாமி.

வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து பெரியார் கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சத்தியாகிரக பணத்திற்கு அவர் முறையான கணக்கு காட்டவில்லை என்ற இதே புரளியை சில பார்ப்பனர்களின் தூண்டுதலால்  அப்போதும் கிளப்பினர்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு அட்வான் சாக பெறப்பட்ட ஆயிரம் ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாகிரக காரியதரிசியி டம் கொடுத்ததையும், மீதம் 300 ரூபாயில் பாலக்காடு சவுதி ஆசிரமத்திற்கு கதருக்கு பஞ்சு வாங்கி அனுப்பியதையும், அது போக மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோர்ட்டார் சத்தியாகிரகத்திற்கு கொடுக்கப்பட்டதையும் ரசீதுகளோடு, தான் காங்கிரஸ் காரியால யத்திற்கு அனுப்பியதையும், அதை அவர்கள் தவற விட்டு விட்டு மீண்டும் கணக்கு கேட் டதால் தான் மறுபடியும் ஒருமுறை கணக்கு களை ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பியதையும் விளக்கி பொய்யர்களின் வாயை அப்போதே அடைத்தார் பெரியார்.

கதர் நிதி 500அய் இந்த ஆசாமி ஏழா யிரத்து அய்நூறு என்று திரித்ததுபோல் அன்றைக்கிருந்தவர்கள் சத்தியாகிரக அட் வான்ஸ் பணம் ஆயிரத்தை பத்தொன்பதா யிரம் என்று சொன்னார்கள்.    

“தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுவரும் கதர் இயக்கம் ஈ.வெ.ரா வினாலேயே பலம டைந்தது. அவர்தாம் கதரை காங்கிரசோடு பிணைத்தார். காங்கிரஸ் கதர் வஸ்திரால யங்கள் அவரால்தான் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை தனிப்பட்ட வியாபாரிகள் கொள் ளையடித்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார்!” என்று நவசக்தியில் எழுதினார் திரு.வி.க.

பார்ப்பனர்களின் கொள்ளையைத் தட் டிக்கேட்ட பெரியார் மீது ஊழல் குற்றச் சாட்டை ஏவிவிட்டது பார்ப்பனீயம். அவர்க ளது பாச்சா அன்று பலிக்கவில்லை. பெரியார் மீது குற்றச்சாட்டை வைத்த ஆதிநாராயணன் தான் பின்னாளில் அந்தப் பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார்.

அன்றைக்கே செல்லுபடியாகாத அந்த அண்டப் புளுகை மீண்டும் செல்போன்களில் உலவவிட்டு நோட்டம் பார்க்கிறார்கள்.    

பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்த போது எந்தக் கட்சியில் இருந்தார்? வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் அளிக்கப்பட்டதுதான் சேர்மன் பதவி என்றெல்லாம் வாய்க்கு வந்ததை  உளறிக்கொண்டிருக்கிறார்.

நீதிக்கட்சிக்கு போட்டியாக காங்கிரஸில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை மாகாண சங் கத்தின் துணைத்தலைவராக1917ஆம் ஆண் டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார்!

அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதி ராக இராஜகோபாலாச்சாரியாரும்  விஜயராக வாச்சாரியும் சென்னையில் உருவாக்கிய நேஷனல் அசோசியேஷன் அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக இருந்தவர் பெரியார்!

ஈரோடு நகரசபைக்கு தலைவராக மக் களால்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார். பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்தபோது ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தார். பெரியாருக்கு வெள் ளைக்காரர்களால் பதவி வழங்கப்பட்டது என்றால் ராஜாஜிக்கு பதவி யாரால் கிடைத் தது? பெரியார் ஒருபோதும் பதவியை நாடி சென்றவரில்லை. தன்னைத் தேடிவந்த பதவி களை எல்லாம் துச்சமாக நினைத்தவர் பெரியார்.

“ஒத்துழையாமை சட்டவிரோதமானது. அதை அடியோடு ஒழித்துவிட வேண்டும்!” என்று வெள்ளைக்காரனுக்கு யோசனை சொன்ன சீனிவாச அய்யங்கார் போன்ற கங்காணி பரம்பரையில் பிறந்தவரல்ல எம் பெரியார். 

ஒத்துழையாமை இயக்கத்தில் பணிபுரிய வேண்டி ஈரோடு சேர்மன் பதவியிலிருந்து பெரியார் விலகிய போது ‘ராவ்பகதூர் பட்டம்‘ சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் சேர்மன் பதவியை விட்டு விலகவேண்டாம் எனவும் ராஜாஜி கேட்டுக்கொண்டும் அதற்கு இணங் காமல் பதவியை விட்டு விலகியவர் பெரியார். 

கொண்ட கொள்கையில் நேர்மையாக பணியாற்றியவர். கள்ளுக்கடை மறியலின் போது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர். 

சீனிவாச அய்யங்காரைப் போல காங்கிரஸில் இருந்துகொண்டே கோர்ட்டை புறக்கணிக்காமல் வழக்காடி பணம் சேகரித்த வரில்லை.

தன் குடும்பத்திற்கு வரவேண்டிய 50,000 ரூபாய் சொந்த பணத்தை இழந்தவர். இருபத் தெட்டாயிரம் ரூபாய்க்கு இருந்த ஒரு அட மான பத்திரத்தை ஒத்துழையாமை காரண மாய் கோர்ட்டுக்கு போய் வசூலிக்க பெரியார் விரும்பவில்லை. காங்கிரசுக்கு தலைவராய் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் இதைக் கேள்விப்பட்டு, “இந்த பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உங்களுக்கு இஷ்டம் இல்லையானால் நீங்கள் அதை எனக்கு மேடோவர் செய்து கொடுத்து விடுங்கள். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தை அடைய உங்களுக்கு இஷ்டம் இல்லை யானால் வசூல் செய்ததும் அதை திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடலாம்.” என்று பெரியாரிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார்.  

“நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான் இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல! கொள்கையே பெரிது! பணம் பெரிதல்ல!” என்று விஜயராகவாச்சாரியிடம் மறுத்தவர் பெரியார்!

பெரியாருக்கு முதலமைச்சர் பதவி கூட ஒரு கட்டத்தில் தேடி வந்தது. அனைத்தையும் ஒதுக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். தன் சொத்துகள் முழுமையும் இந்த இயக்கத்திற்கு பயன்படவேண்டி அதற்கான ஏற்பாட்டை செய்தவர் பெரியார். 

பார்ப்பனர்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை  மீண்டும் சந்தையில் உருட்ட இப்பேர்வழிகள் பெற்ற  கூலி நிர்ணயம்தான் என்னவோ? பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்க இந்த கேடுகெட்ட பிழைப்பு ஏனோ?

நாகாக்க வேண்டும்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கதர் நிதி, நேர்மை

காமராசர் பற்றி தந்தை பெரியார்!

 

    October 01, 2022 • Viduthalai

எங்களது சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான் ‘தாழ்ந்த ஜாதி என்று பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் வந்த காமராசர் இந்த நாட்டின் முதலமைச்சராகவும், இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் வர முடிந்தது.

(‘விடுதலை’ 15.1.1965 உடுமலை உரை)

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.

மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)

திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்க ளுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்தியோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி, ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள், அவரை எப்படியாவது ஒழித்துக் கூட்டத் திட்ட மிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு. காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வரமுடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத் திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகு மென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டு மானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.

(2.10.1956 அயன்புரத்தில் திரு.வி.க. நினைவு நாள்-_ தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 9.10.1956)

ஆச்சாரியாரின் இனநலன் புத்தி 

நமக்கும் வரவேண்டும்

ஆச்சாரியார் செய்தது என்ன? முதலில் காங்கிரஸ்தான் உயிர் மூச்சு என்று கூறினார். அதற்காக சேர்மன் பதவி, வக்கீல் வேலை இவைகளையெல்லாம் விட்டுவிட்டு காங் கிரசிற்குள் வந்தார். உழைத்தார். இதெல் லாம் எதற்காக? காங்கிரஸ் அவர்களுடைய இனத்திற்காக இருந்தது. பார்ப்பனர்கள் (அதாவது தன் இனம்) வாழ வேண்டுமானால் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டு உயிர் வாழ வேண்டும் என்று கருதி காங்கிரஸைக் காப்பாற்றப் பாடுபட்டார்.

அன்று அப்படிக் கூறிய ஆச்சாரியார் இன்று காங்கிரசை ஒழித்தே ஆக வேண் டும், அது தன்னால்தான் முடியும் என்று கூறிப் புதிய கட்சி துவக்கினார் என்றால் அது அவருக்கு புத்திக் கோளாறு ஏற் பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. அதாவது காங்கிரஸ் இன்று பார்ப்பனர் களுடைய நலத்திற்காக இல்லை. அது தமிழர்களுடைய நலன் கருதும் கட்சியாக ஆகிவிட்டது. இனி அதனால் தன் இனத் திற்கு நன்மையில்லை என்ற நிலை ஏற் பட்டுவிட்டது என்று கருதித்தான் ஆச்சாரி யார் தன் இனத்திற்கு உதவாமல் ஆபத்தைத் தரும் காங்கிரசை ஒழிக்க, நம் இனத் துரோகிகளை கூட்டுச் சேர்க்க வலை போட்டுப் பண பேரம் பேசுகிறார். அந்த இன நலன் புத்தி நமக்கு வரவேண்டும். காமராசர் ஒழிந்தால் அந்த இடத்திற்குப் பார்ப்பான்தான் வருவான். காமராசர் ஒழியாது காப்பாற்றுவது மட்டும் அல்ல; காங்கிரசும் ஒழியாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி காமராசர் ஒழிந்து பார்ப்பான் வந்தால் காங்கிரஸ் ஒழிக என்று கூறணும்; அப்போதுதான் நம் கைக்கு காங்கிரஸ் வரும்.

இன்று காமராசரது நேர்மையான ஆட்சியே!

தமிழன் படிக்க வசதியும் வாய்ப்பும் வேண்டும். தமிழனுக்கு உத்தியோகம் வேண்டும் என்று கூறி ஜஸ்டீஸ் கட்சி பாடுபட்டது. இந்தக் கொள்கைக்காக நானும் 35 ஆண்டுகளாய்ப் பாடுபட்டு வந்தேன். இன்று காமராசர் ஆட்சியில் இந்த நன்மைகள் ஏராளமாய்க் கிடைக்கிறது. அன்று ஜஸ்டீஸ் கட்சி மந்திரி சபை ஒழுக்கம் நாணயத்துடன் இருந்தது. இன்றும் காம ராசர் மந்திரிசபையில் ஏதாவது கோளாறு, தகராறு என்றோ ஒழுக்கம் நாணயம் குறைவு என்றோ யாராவது கூற முடியுமா? அவ்வளவு நல்ல நிருவாகத்துடன் பாடு படும் மாநிலம் இந்தியாவிலேயே சென்னை ராஜ்யம் ஒன்றுதான். எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும்.

சுயமரியாதையை- ஜஸ்டீஸ் கொள்கையைக் காப்பாற்றுகிறோம்

தோழர்களே! நண்பர் ஆச்சாரியார் கூறுகிறார் - இன்று நடப்பது காந்தி காங் கிரஸ் அல்ல;தமிழன் சுயமரியாதை காங் கிரஸ் தான் நடக்கிறது என்று. காமராசரைக் காப்பாற்றுவது சுயமரியாதைக் கொள்கை யைக் காப்பதாகும். தமிழர்கள் நன்மையை, ஜஸ்டீஸ் கட்சியைக் காப்பாற்றுவது போன் றதாகும். இந்த எண்ணம் நம் ஒவ்வொரு வருக்கும் ஏற்பட வேண்டும். நமக்குள்ள சூத்திரத் தன்மையை ஒழிக்கப் பாடுபடுவது நாங்கள்தான். வேறு யாரும் இல்லை.

(20.6.1961 அரகண்டநல்லூரில் தந்தை பெரியார் உரை (‘விடுதலை’ 5.7.1961)

பார்ப்பான் கையில் மண் வெட்டி!

பாப்பாத்தி கையில்’ களைக் கொத்தி!

இன்றைய ஆட்சியானது ஏதோ தமி ழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக இருப்பதனால் நாங்கள் காங்கிரஸ்காரன் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வலியச்சென்று ஆதரிக்கின்றோம். பெரும் பான்மையான காங்கிரஸ்காரர்களுக்கு எங்களைப் பிடிக்காது. எங்கள் நிகழ்ச்சி களில் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றே முடிவு பண்ணிக் கொண்டு உள்ளார்கள். எங்கள் பத்திரிகை அரசாங்க சம்பந்தமான வாசகசாலைக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டது.

நன்றியோ பிரதிபலனோ இல்லா உழைப்பு!

காங்கிரஸ்காரர்கள் நன்றி செலுத்து வார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் ஆதரிக்க முற்படவில்லை. சமுதாயத்தில் இன்றைய ஆட்சியின் காரணமாக ஏற்பட்டு உள்ள நன்மையினை உத்தேசித்தே ஆதரிக்கிறோம்.

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குக் காமராஜரையே பதவியில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பனர் கைக்கு மண் வெட்டியும் பாப்பாத்தி கைக்குக் களைக் கொத்தும் வந்துவிடும். இது உறுதியாகும்.

இதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகின்றார்கள். மற்றவர்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் காமராசர் ஆட்சியினை ஒழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். காமராசர் ஒழிந்தால் பழையபடியும் வீதிக்கு ஒதுக்குப் புறத்தில் அனுப்பிவிடுவார்கள். தோழர் களே, நாங்கள் தோன்றுகின்ற வரையிலும் ஜாதியினை ஒழிக்க எவனும் தோன்ற வில்லை.

புத்தருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புப்பற்றிப் பேசவும் அதற்காகப் பாடுபடவும் நாங்கள் தான் உள்ளோம்.

(25.4.1963) கொறுக்கையில் உரை)

காங்கிரஸ் 1885-இல் தோன்றி 1964 வரை 78 வருஷம் ஆகிறது. இதற்கிடையில் 68 மகாசபைக்  கூட்டம் நடந்திருக்கிறது. இதில் நம்முடையவர்கள் மாமிசப் பிண்டங்களா கவே இருந்தனரே தவிர, மனிதத் தன்மை யோடு ஒருவரும் இல்லை. இன்றுதான் ஊசியில் ஒட்டகம் நுழைந்ததுபோல ஒரு தமிழர் நுழைந்திருக்கிறார். பத்திரிகைக் காரன் எல்லாம் மூன்று தமிழன் என்று சொல்லுவான். அது சுத்தப் பொய். 1920 இல் விஜயராகவ ஆச்சாரி என்ற பார்ப்பானும் 1927 இல் சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப் பானும்தான் தலைவர்களாக இருந்தார்கள். இப்பொழுதுதான் தமிழன் ஒருவர் வந் திருக்கிறார். அவரை இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டுகிற மாதிரியான ஒரு மரியாதை வந்திருக்கிறது. அதுவும் நேரு வுக்கு அடுத்தபடியாக காமராசர் இருக் கிறார். இவருடைய முயற்சியால் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘சோஷ் யலிச பாலிசி” என்று சொன்னார்கள்.

இப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் ‘சோஷ்யலிச கொள்கை’ என்று சொல்லி விட்டார்கள். இதைச் செயலில் கொண்டு வந்துவிட்டால் பார்ப்பான் தொலைந்தான். நம் மக்கள் வாழ்வு நாளுக்கு நாள் முன் னேறும். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்யவேண்டும்.

(10.1.1964 ஈரோட்டு உரை, ‘விடுதலை’ 17.1.1964)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:15 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: காமராசர்

டாக்டர் நாயர் - தியாகராயர் - நான் / ஆரியர்கள் அயோக்கியத்தனம்

 

  October 01, 2022 • Viduthalai

டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளை ஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலு வலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இர யிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக் கின்றன?’ என்று கேட்கவும் தனக்குக் காவ லாக ஓர் இரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்த தாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் - பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம் பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத் தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்த வன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரிய தரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற் றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங் களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர் களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடி மைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர் களா’க்கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டு விட்டு வேறு விபீஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங் கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடு களில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பிய தற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தி யோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம் பித்த பிறகுதான் - வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான்- காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய,  அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.

(திருச்சியில், 3.12.1950இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

 ‘விடுதலை’ 14.12.1950)

ஆரியர்கள் அயோக்கியத்தனம்

ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நம் நாட்டில் பிழைக்கவந்த -  குடியேறிய ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதையும் நம்மை மனிதத் தன்மை யோடு வாழவிடாமல் செய்து, அவ்வளவு கொடுமையும், அட்டூழியமும் செய்திருக் கிறார்கள் என்பதையும் உணரவேண்டு மானால் அவர்களால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

வேதத்திலும் சாஸ்திர உபநிஷதங்களி லும் ஏராளமான அயோக்கியத்தனங்களும், கொலைபாதகங்களும் இருந்தாலும் அவைகளைச் சரியானபடி ஆதாரத்தோடு வெளிப்படுத்துவது என்பது என் போன்ற வர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்றாலும், புராண இதிகாசங்கள் என்பவைகளைக் கொண்டு தக்க ஆதா ரங்களோடு வெளிப்படுத்துவது எளிதான காரியமேயாகும்.

புராணம் என்றால் பழைய கதை என்பது அகராதியில் பொருள். என்றாலும் புராணங்கள் என்றால் பழைய கதை என்று திரு.முன்ஷியே பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார்.

சாதாரணமாக ‘புராண’ என்கின்ற சொல்லுக்கே பழையது என்பது பொருள். இந்தியில் ஆனாலும், உருதுவில் ஆனாலும், நவா என்றால் புதியது; புராணம் என்றால் பழையது. இது சாதாரணச் சொல்! ஆகவே, அப்படிப்பட்ட பழங்கதை என் னும் பேரால் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் கருத் துகள் சிலவற்றை, எடுத்துச் சொல்லுவோம். அதில் இருந்து ஆரியர்களின் மத ஆதா ரங்களின் அக்கிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணத்தில் ஓர் இடத்தில் அதாவது ஓர் அத்தியாயத்தில் காணப்படு வதாவது:

தேவர்கள் எல்லாம் விஷ்ணுவிடம் சென்று, “மகாவிஷ்ணுவே! பூலோகத்தில் அசுரர்கள், ராட்சதர்கள் எல்லோரும் ஜப, தபங்கள், தானதர்மங்கள் செய்து ஒழுக்கத் தோடு நடந்து வருகின்றார்கள். இதனால்  தேவர்களாகிய - பிராமணர்களாகிய எங் களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடு கிறது. எங்களை மக்கள் மதிப்பதில்லை. தேவர்கள், பிராமணர்கள் என்பதற்காகவே நாங்கள் அடைந்துவந்த பெருமைகளையும் உரிமைகளையும் அடைய முடிவதில்லை. அவற்றில் அவர்களும் உரிமையும் பங்கும் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்குக் குறைந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் எங்கள் பெருமையை இழக்கவேண்டி இருக்கின்றது. ஆதலால் எங்களைக் காப் பாற்றி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு விஷ்ணு பகவான் சொல்லு கிறார்: ‘நான் என் உடலில் இருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்குகின்றேன்; அவன் மக்களிடம் சென்று “தான தர்ம, ஜபதபம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் ஒழுங்காக அறிவின்படி நடந்தால் போதும்’’ என்று சொல்லிவிடுவான். அப் பொழுது நான் அவர்களை “நீங்கள் எல் லோரும் வேத சாஸ்திரப்படி நடவாமல் அறிவின்படி நடந்தவர்கள், விஞ்ஞானத்தை பிரதானமாய்க் கொண்டவர் கள். ஆதலால் நரகத்தில் இருக்கத் தகுந்த வர்கள்’’ என்று சொல்லி நரகத்தில் போட்டு அழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டார்.

அதன்மீது அந்த மாயாமோகன் மக்க ளுக்குப் பகுத்தறிவைப் போதித்து, எல்லோ ரையும் வேத மார்க்கத்தைவிட்டு பகுத்தறி வுப்படியே நடந்து, எல்லா மக்களும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அதன் பயனாய் உலக போக போக்கியங்கள் யாவும் ஆரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமே கிடைத்து அவர்கள் சுகவாசியாக வாழ்ந்தார்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பு: அந்த மாயாமோகன் போதித்த கொள்கைகள் புத்தியைப் பொறுத்த கொள்கை. ஆனதனால் அந்த மாயா மோகனுக்குப் புத்தன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் அதிலே இருக்கின்றது. இது விஷ்ணு புராணத்தில் உள்ளபடி தொகுக்கப்பட்டது.

- தந்தை பெரியார்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:08 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: டாக்டர் நாயர், தியாகராயர், விஷ்ணு புராணம்

ஞாயிறு, 5 மார்ச், 2023

நான் விரும்பும் தன்மை - தந்தை பெரியார்

 

         February 05, 2023 • Viduthalai

நம் கழகமும் நமது முயற்சியும் பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி இருக்கிறது? மிகமிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமை யானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிகமிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது, நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும் படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக் கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால், நாம் மாத்திரம் காட்டு மிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படி இருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணர வேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-க்கு 10-பேருக்குக்கூடக் கல்வி இல்லை. நாம் 100-க்கு 

90-பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம். காரணம் என்ன? 

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும், கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்படவேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்த விதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித் தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. 

நம்வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக் கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வதுதான் நம்மை தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டது. நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடான வையாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம், நம்மை என்றைக்குமே முன்னேற்றாத தாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடைஜாதியாக இருக்கிறோம். நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவைகளாக, நம்மைச் சுரண்டுபவைகளாக, நம்மை மடையர்களாக ஆகும் படியாக ஆக்கிவருகிறது. நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன. ஆகையால் நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களை அடையவேண்டும். 

கடவுள் தன்மையிலுள்ள கேடு

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்னவென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்காக வீடு வாசல், (கோவில்) பெண்டுபிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேற்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள்  நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக்கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றத் தனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத் துக்கள்? அவைகளுக்கு எவ்வளவு பூசை, உற்சவ போகபோக்கியங்கள்? இவைகள் யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால் அவைகள் மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும் நட்டமும் அடைகின்றவர்கள் யார்? நீங்கள் உண்மையாய்க் கருதிப்பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக் காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்து வரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா? நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈனஜாதி, இழி ஜாதி, நாலாம் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடைஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளைக் கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித் தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாமும், நம் கடவுள், மதம் முதலியனவும் 

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப் பட்டதற்குக் காரணம் இந்தக்கடவுள்கள்தான் என் பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆன தற்குக் காரணம் இந்த கடவுள்களுக்குக் கட்டடம், சொத்து, போகபோக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா? இல்லையா? அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்துமதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானை, பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா? இல்லையா?

அதுபோலவேதான், நம் தர்மங்கள் என்று சொல் லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா? ஆகவே, நமது இழிவுக்கும், ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவைகள் அல்லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல் வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாக வேண்டும். 

நமக்கு வேண்டிய கடவுளும், மதமும்

நமது கடவுள்கள் காட்டுமிராண்டி காலத்தில் கற்பிக்கப்பட்டவைகள், அல்லது கண்டு பிடிக்கப் பட்டவைகள், அல்லது நமக்குத் தெரியவந்தவைகள். நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்ட தாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவைகளாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கைகூட மாறி விட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறி விட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டது. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000, 5000ஆம் ஆண்டு களுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே, இன்றைக்கு ஏற்றபடியாக இவைகள் மாற்றப்பட்டாக வேண்டும்.

இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க் கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட  அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத் தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? 

நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித் தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின் மீது கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், இன்று அப்படிப்பட்ட காலத்தில் அப் படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக் கப்பட்டவைகளாகும், காட்டிக் கொடுக்கப் பட்டவைகளாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத் தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய் வப்பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்கிறதான அந்த மகான்களே இன்று இருப்பார் களேயானால், உடனே மாற்றிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வரவெட்கப் படுவார்கள். 

இவை சரிதானா? 

உதாரணமாக, இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு, ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள், மாடு, பருந்து முதலிய வாகனங்கள். பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள். மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி; இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பை சுரண் டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர் களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும். 

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருமாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனுநீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் விதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அக்காலத்திய கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

காலம் கருதிக் காரியம் கொள்ளுமின்! 

பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெக்ட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா? கட்டை வண்டிப் பிரயாணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிரயாணத்தை நீங்கள் விரும்பவில்லையா? ஆகையால் ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளுங்கள். காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

குடிஅரசு - கட்டுரை - 15.01.1949 


இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தன்மை, விருப்பம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுணர்ச்சி
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியக் கலாச்சாரம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணபதி
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஷ்ண ஜெயந்தி
  • கிருஷ்ணன்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கூலிக்காரர்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோச் வண்டி
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் சொத்து
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம்பளம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமதர்மவாதிகள்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான செய்தி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செலவு
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தலைவனாதல்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசம்
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நாஸ்திகர்
  • நிதி வசூல்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பண செலவு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கில் வைத்து சுமக்கிறானா
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் பேசுகிறார்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேச்சுத்திறன்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மக்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத கற்பனை
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விவேகம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (49)
    • ▼  ஆகஸ்ட் (13)
      • பிள்ளை யார்?
      • கடவுள் – மத கற்பனை
      • இந்தியத் தொழிலாளர்
      • தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு ...
      • கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏ...
      • திராவிடர் கழகத்தை எதிர்ப்பது யோக்கியமா?- தந்தை பெர...
      • ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம் ! சமஸ்...
      • ஆற்றல்மிக்க அறிவாளி அம்பேத்கர்! – தந்தை பெரியார்
      • தொழிலாளி – முதலாளி பேதம் ஒழிய…. தந்தை பெரியார் .
      • இளமை முதலே எளிமை! தந்தை பெரியார் வாழ்விலிருந்து ஒர...
      • எனது தொண்டு! தம்மைப் பற்றி தந்தை பெரியார்
      • திராவிடர்’ – வார்த்தை விளக்கம்
      • விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வ...
    • ►  ஜூலை (13)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ►  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.