வியாழன், 12 ஆகஸ்ட், 2021

இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா? (பார்ப்பனருக்கு அழும் வரி)

 

28.02.1948 - குடிஅரசிலிருந்து...

வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாதுமக்கள் வேறுஅரசு வேறுஎன்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும்பணக்காரன்முதலாளிபிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - பாட்டாளி மகனுக்குத் துணை செய்ய முன்வராதுஅதன் இயல்பும் அதுவல்ல.

நம் நாடும் எதிர்காலத்தில் அமைத்துக் கொள்ளப்போகும் அரசியல் முறை இது.

இன்று வரியால் பிழைக்கும் அரசியல் முறையில்பாட்டாளி மக்களையும்அவ்வரிக் கொடுமைக்கு ஆளாக்கும் போது கொடுமைகொடுமை என்ற கூக்குரல் உண்மையொலியோடு அடிவயிற்றிலிருந்து எழுந்து முழங்கப்படுவதைக் கேட்கிறோம்இக்கொடுமை தொலையவேண்டும் என்றே ஒவ்வொரு மனிதாபிமானம் உள்ளவனும் நினைப்பான்.

இந்த நிலையோடுஇந்நாட்டில் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவரும் வரிகளையும் சேர்த்து எண்ணும்போதுஅரசாங்க வரிகொடுமைக்கு முன்னால் உஞ்சிவிருத்திக் கூட்டம் மக்கள் உழைப்பை உறிஞ்சிவரும் கொடுமை முதலில் ஒழிய வேண்டுமென்றே வஞ்சகம் - தன்னலம் இல்லாத எந்த அரசியல்வாதியும் எண்ண முடியும் - எண்ண வேண்டும்.

அரசாங்கத்திற்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்எத்தனை பேர்தகுதியும் எண்ணிக்கை வரையறையும் இதற்குண்டு.

ஆனால்பார்ப்பானுக்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்எத்தனை பேர்தகுதியும் இல்லைவரையறையும் இல்லைஇந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்றவனாய் சூத்திர பட்டியலில் இருக்கும் எல்லோருமே எத்தகுதியுடையவர் களாய் இருந்தாலும் கொடுத்து வருகின்றார்கள் எப்படி?

1. குழந்தை பிறந்தால்அது பிறந்தவுடனே பார்ப்பனனுக்கு வரி (தட்சணைகொடுக்க வேண்டும்இல்லையேல் குழந்தை நலமுடன் வளராது.

2. குழந்தை பிறந்த 16 ஆவது நாள் தீட்டுக்கழியும் சடங்குஇந்தத் தீட்டைக் கழிக்க மந்திரத்தையும்தர்ப்பைப் புல்லையும் கொண்டுவருவான் பார்ப்பான்இதற்கு அவனுக்கு வரி.

3. குழந்தை பிறந்த சில நாள் கழித்துக் குழந்தைக்குப் பெயரிடல்பெயரைத் தேர்ந்தெடுத் தவர்கள் பெற்றோர்கள்இதை அவன் வாயால் அழைத்துப் போவதற்கு அவனுக்கு வரி.

4. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு முடிந்தால் அப்பொழுது ஆண்டுவிழாஇந்த விழாவிற்கும் அவனுக்கு வரி.

5. பிறகு அந்தக் குழந்தைக்கு உணவூட்டல்இந்த உணவூட்டுவதற்கும் பார்ப்பானுக்கு வரி.

6. குழந்தை ஆணாயிருந்தால்அக்குழந்தைக்குச் சிரைத்துக் குடுமி வைக்க வேண்டும்இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

7. அய்ந்தாவது அல்லது ஏழாவது வயதில் குழந்தைக்கு அட்சராப்பியாசம்இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

8. பெண் குழந்தையாயிருந்தால் அது பருவமடைந்தவுடன் ருது சாந்திஇதற்கும் பார்ப்பானுக்கு வரி.

9. எந்தக் குழந்தையாயிருந்தாலும் கலியாணமென்றால்பொருத்தம் பார்ப்பதுநாள் குறிப்பதுகலியாணம் செய்து வைப்பதுஇருவரையும் படுக்கவைப்பது என்கிற பெயர்களால் இத்தனைக்கும் பார்ப்பானுக்கு வரி.

10. இறந்தால்இறந்த பிணத்தை அடக்கம் செய்யஇருப்பவர்கள் பிணத்திற்காகப் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

11. இறந்தவர்களின் மகன் உயிரோடிருக்கும் வரைஒவ்வொரு ஆண்டும் திவசம் என்ற பெயரால் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

12. கிரகண நாளாயிருந்தால்கிரகணத்திற்கும்மாதாமாதம் அமாவாசைக்கும் பார்ப்பானுக்கு வரி.

13. இன்னும் கலப்பை கட்டுவதுவிதைப்பதுஅறுப்பது ஆகிய உழுதொழிலுக்கும்அவைகளுக்கு நாள் பார்த்துக் கொடுப்பதற்கும் பார்ப்பானுக்கு வரி.

இவை போன்ற - எந்த அரசாங்கமும் வாங்காத வரிகள் எல்லாம் பார்ப்பனியம் வாங்கிக் கொள்ள கொடுத்து வருகிறோம்எப்படி?

பார்ப்பான் காலில் விழுந்துநான் கொடுக்கும் இது எவ்வளவு குறைவாயிருந்தாலும்அதைக் குறைவாகக் கருதாமல்பூரணமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்இதற்குப் பார்ப்பான் காட்டும் நன்றிமுழங்கால் முட்டி அடிபடவிழுந்து விழுந்து எழுந்திருக்கச் செய்வதும்மாட்டு மூத்திரம்சாணிகளை மாகாத்மியமாக எண்ணிக் குடிக்கச் செய்வதும்தேவடியாள் பிள்ளை என்ற பட்டமும்.

இந்த வரிகள் கொடுக்க வேண்டுமாபார்ப்பான் பழங்கதையும் சாதிரத்தையும் காட்டிப் பணம் பிடுங்கத்தான் வேண்டுமாநாங்கள் இழிவையேதான் அடைந்து வர வேண்டுமாஇதையெல்லாம் கேட்பதா வகுப்புத்துவேஷம்உன் சொந்தப் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பின் நீ முடிவு கட்டு!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

சிந்தியுங்கள்! தோழர்களே! 10.04.1948 - குடிஅரசிலிருந்து...

 

இனி இந்துவாக இருக்க மாட்டேன்நான் இனி சூத்திரனாக இருக்க மாட்டேன்இந்துமத அடையாளம் அணிய மாட்டேன் என்று முழக்கம் செய்தல் வேண்டும்இப்படி ஒவ்வொருவரும் கூறுவார்களானால்பார்ப்பனர்களே முன்வந்து மனுதர்மமே  மக்களுக்கு எழுதப்பட்டதல்லஅது தேவாளுக்கு எழுதப்பட்டதாக்கும் என்றுகூறி தம்மையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

***

கருஞ்சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று யார் கூறினாலும்பூணூல் அணிந்த கூட்டம் நாட்டில் இருக்கும்வரை கருஞ்சட்டை அணிந்த கூட்டமும் இருந்தே தீரும்உச்சிக் குடுமி உள்ளவரை கருப்புக் கொடியும் பறந்து தீரும் என்று சொல்லிவிடுங்கள்.

***

உங்களை எந்தப் பார்ப்பனன் இது ஏன் என்று கேட்டாலும் நீ உயர்ஜாதி என்று காட்டிக் கொள்ள நீ பூணூல் அணிந்து கொள்ளும்போது நான் சூத்திரனல்லஇந்துவல்ல என்று காட்டிக் கொள்ள நான் ஏன் கருஞ்சட்டை அணிந்து கொள்ளக்கூடாது என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்.

***

சட்டசபையைப் பற்றிக் கவலை வேண்டாம்மந்திரி பதவிக் கவலை வேண்டாம்அதைப் பார்ப்பனருக்கும் அவர்கள் அடிமைக்கும் விட்டு விடுங்கள்நாம் கட்டுப்பாடான பிரசாரம் செய்து மக்களை மானமுள்ளவர்களாக ஆக்கினால் எந்தக் காரியமும் கைகூடும்மந்திரிகள் நமக்குச் சலாம் போடுவார்கள்.

***

பார்ப்பானைத் தவிர்த்து வேறு எந்த ஜாதியாவது காந்தியாரைச் சுட்டிருந்தால் அந்த ஜாதி மனிதன் ஒருவனையாவது கண்காட்சிக்காவது காணமுடியுமா?

பெரியாரின் வேண்டுகோளும்- எச்சரிக்கையும்!

 

 27.03.1948 - குடிஅரசிலிருந்து...

ஆத்திரம் வேண்டாம்!

அரசியலார் ஒருக்கால் வம்புக்கு வருவதனால் உங்களில் எத்தனை பேர் அதற்குத் தயாராயிருக்கிறீர்கள்அதற்காகப் பலாத்காரத்தில் இறங்கக்கூடாதுஎல்லா மக்களும் ஆணும்பெண்ணுமாகக் கட்டாயம் கருப்புச்சட்டை அணியவேண்டும்இல்லங்கள் தோறும் கழகக் கொடி ஏற்றவேண்டும்உங்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாதுஅப்படியும் தொல்லை கொடுத்தால் அதற்காவன செய்வதில் இயக்கமும் தலைவர்களும் கட்டாயம் பொறுப்பேற்றே தீருவார்கள்நீங்கள்அப்போதுங்கூட ஆத்திரப்படக் கூடாது.

என்னழிவு இயக்க

அழிவல்ல!

பிராமணிய அழிவே!

நான் இருக்கும் வரை நமது இயக்க வண்டி நிதானமாக ஓடி எதிரிகளுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறதுஎன்னையும் காந்தியார் போன்று சுட்டுவிட்டால் நமது இயக்க வண்டி வேகமாகச் சென்று சூத்திரப் பட்டமும் பிராமணியமும் விரைவில் ஒழியுமே தவிர என்னோடு திராவிட இயக்க கொள்கை அழிந்துவிடும் என்று எவராகிலும் கருதினால் அதைவிடப் பயித்தியக்காரத்தனம் வேறிருக்க முடியாது.

பெரியார் .வெ.ரா.

நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (1)

 

03.04.1948 -குடிஅரசிலிருந்து...

(இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்)

பணவசதியும் சிபாரிசு வசதியும் உடையவர்களே, இன்றையப் படிப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் இப்போதையக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படைதான் திராவிடர்கள் 100க்கு 90 பேருக்குமேல் படியாதவர்களாய் இருப்பதற்குக் காரணமாகுமென்றால், இதை அவினாசிலிங்கம் அவர்களோ, மற்றவர்களோ மறுத்துச் சொல்ல முடியாது.

திராவிட சமுதாயத்தில் நூற்றுக்குப் பத்துப் பேராவது படித்திருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகிற கணக்கு, தன்பெயரிலே கூட இரண்டொரு எழுத்துக்களை விட்டு விட்டு, கையெழுத்துப் போடும் நபர்களையும் சேர்த்துக் கூறுவதாகும் என்கிற உண்மையைத் தெரிந்தால், பார்ப்பனர்கள் அளவில் படித்தவர்கள் என்கிற எடைபோடும்போது 100க்கு 5 பேர்கூட படித்தவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும், இந்த அய்ந்து பேர்கூட திராவிடர் கழக (நீதிக்கட்சி)க் கிளர்ச்சியின் பயனால் படித்தவர்கள் ஆனார்கள் என்பதும், திராவிட சமுதாயம் என்கிற உரிமையினால் இந்த அய்ந்து பேரும் படிக்கவும், படித்து உத்தியோகமோ மற்ற தொழில்களோ கைக்கொண்டு வாழவும் ஆனநிலை ஏற்பட்டிருந்தாலும், இந்த அய்ந்து பேர்களில் அரைக்கால் பேர்வழிகூட திராவிட சமுதாயத்தின் நன்மைக்கான காரியங்களில் கருத்தைச் செலுத்துவோர் இல்லை என்பதும், அதற்கு மாறாகத் தன் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து, அடமானம் வைத்து, கிரையம் செய்து கொடுத்துவிட்டுத் தங்கள் சொந்த வாழ்வுக்கு, வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண்டவர்களே ஏராளம் என்பதும், இந்த மாதிரியான போக்கிலே படித்தவர்கள் என்பவர்கள் போய்க்கொண்டிருப்பதினால்தான்  திராவிட சமுதாயம் சூத்திரச் சமுதாயமாக, சண்டாளச் சமுதாயமாக, வேசி மக்கள் சமுதாயமாக இருந்து வரும் நிலைமை இருக்கிறது என்பதும் எவரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாத சங்கதிகளாகும்.

திராவிட மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டிய இந்த படித்தவர்கள் கூட்டம், அவ்வாறு செய்யவில்லை என்பதை அக்கூட்டம் உணருவதற்கு மறுத்தபோதிலும், நாளைக்குப் படித்தவர்கள் கூட்டத்தில் சேரவிருக்கின்ற மாணவர்கள், இந்த நிலைமையைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

திராவிட மாணவர்கள், அதாவது திராவிட மாணவர்கள் என்கிற பெயரினால் தங்களை அழைத்துக்கொள்ள முன்வந்து, திராவிட மாணவருலகின் முற்போக்குக்கும், திராவிட மக்களின் நல்வாழ்வுக்கும் பாடுபடச் சபதம் புரியும் மாணவத் தோழர்கள், படித்தவர்களின் வஞ்சகப் போக்கை மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விறுவிறுப்பான பேச்சு! சுறுசுறுப்பான நடவடிக்கை! உண்மைக்குப் பரியும் உள்ளம்! உலுத்தரை ஒழிக்கும் தீவிரம்! எடுப்பான தோற்றம்! எதற்கும் அஞ்சாத நோக்கு! இத்தனையும் உண்டு வாலிபத்துக்கு. இன்னும் பல நல்ல இயல்புகளுமுண்டு.

இந்த நல்லியல்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, பாராட்டுக்குமேல் பாராட்டு என்று சுமத்தி, இளைஞர்களே எதிர்கால மன்னவர்கள் என்று சரணம்பாடி முடிப்பதுதான் மாணவர்களுக்கிடையே பேசும் அறிஞர்கள், தலைவர்கள் என்பவர்களின் வழக்கம்.

இத்தகைய பாராட்டுரை பயனைத் தரும்! எந்த அளவுக்கு? தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ளவிரும்பும் ஒருவர், ஒரு சிறுவனைத் தட்டிக் கொடுத்துத் தன் வேலையைச் சாதித்துக் கொள்ளும் அளவில் புகழ்ந்து கெடுத்தல் என்று இதனைச் சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்கூட, புகழ்ந்து பேசி மற்றவர்களின் சக்தியைத் திரட்டித் தன் சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் இதன்  பயன் என்றால், இதனால்  புகழப்பட்டவருக்குப் பயன் சிறிதும் இல்லை என்றால் யாரேனும் மறுத்துவிட முடியுமா?

வேலைக்கு முன் கூலி! செயலுக்கு முன் பாராட்டு! வேண்டப்படலாம்! ஆனால் நிரந்தரமானதாய் இருக்கலாமா? இதுவே நிரந்தரமானால் ஏமாற்றமும் தோல்வியுமே பெருகும் அல்லவா? இதனை மாணவத் தோழர்கள் நன்கு சிந்தித்துத் தெளிவடைய வேண்டும்.

திராவிட மாணவர்கள் என்பவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பும், நிறைவேற்ற வேண்டிய செயலும் மிக மிகக் கடினமானவை. பல தலைமுறை தலைமுறையாகப் பகுத்தறிவுக்கு வேலையின்றி வாழ்ந்த சமுதாயத்தை அழித்து, பகுத்தறிவு ஒளி வீசும் புது சமுதாயத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு! தலை கீழ் மாற்றமான இப்பொறுப்பைத் தத்தம் வாழ்வையே ஈடுகட்டி விட்டு, உயிரைப்பணயம் வைத்து, உண்மையும் அன்புமே ஆயுதமாகக் கொண்டு போராடி வெற்றிகாண வேண்டிய செயல்! இச்செயல் பலரால் பல முறை முயற்சிக்கப்பட்டதுதான்; ஆனால் எவரும் இதுவரை வெற்றி காணாதது! என்கிற இலட்சியத்தின் பொறுப்பை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்!

மிகமிகக் கடினமான இந்த லட்சியத்தையும், செயலுக்கு முன் பாராட்டு என்கிற போக்கையும் சேர்த்து எண்ணினால், இந்தப் போக்கு லட்சியப் பாதையைக் காண்பியாது என்பது உறுதி.

சென்ற மாதம் திருச்சியில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில், நம்மியக்கத்தைப் பின்பற்றும் திராவிட மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்கிற கருத்தை விளக்கிப் பெரியாரவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதனை ஒவ்வொரு மாணவத் தோழரும், கழகத் தொண்டரும் கட்டாயம் படித்துப் பார்த்துத் தங்கள் தங்கள் நிலைமையோடு ஒப்பிட்டு, தங்களைத் தாங்களே சோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்ல ஆசைப்படுகிறோம்.

சமரசம் அடைய வேண்டுமெனில்...

 

தந்தை பெரியார்

சகோதரிகளேசகோதரர்களேசமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிரகாரியத்தில் நடக்க முடியாததாகும்ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோஎது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறதுஇது நமது  நாட்டில் மட்டும் அல்லஉலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டதுமுதலாவது கடவுள்மதம்விதிராஜாஜாதிபணம்தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக் கின்றதுஇந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன் மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோஅறிவாளிகளாலோ பேசமுடியாதுஏனெனில்  அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக் கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள்எஜமானர்கள்அக்கம்பக்க ஜாதியார்கள்சாமிகள்மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்த மாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன்நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார்அடைந்த சமுகத்தார்அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள்இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள்தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட் டார்கள்அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத்தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத் திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள்சிலரை விவசாயத்தில்  போட்டார்கள்சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள்வேறு  காரியங்களுக்கு உதவாதவர்களை காவல்  காக்கப் போட்டார்கள்அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலைபள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள்.  இவைகளுக்கு உதவாமல்போக்கு வரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள்பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில்படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகி யவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள்கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள்கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்துஅளவு படுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சவுகரியங்கள் செய்தார்கள்இன்னும்பல காரியங்கள் செய்தார்கள்ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள்யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன்பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன்அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.  இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள்மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள்அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?  முதலாவது உங்களைக் கேட்கிறேன்நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள் கின்றீர்களாஇருக்கவேண்டும் என்று சொல் கின்றீர்களாஎன்ன சொல்லுகின்றீர்கள்ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள்ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண் டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெ னில்இன்னும்  அநேக நாடுகள் இருக் கின்றனஅவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றதுஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டுஆனால்இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றதுஅதை அழித்தே ஆக வேண்டும்இதற்கு நாம் தர்மசாஸ்திரம்கடவுள் செயல்கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லைசகோ தரர்களேநீங்கள் தர்மத்திற்கும்சாஸ்திரத்திற்கும்மதத்திற்கும்கடவுளுக்கும்எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள்என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருது கின்றீர்களாஇன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன்முடிவுலட்சியம் என்று கருதுவீர்களானால்நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்என்பது எனக்குப் புலப்படவில்லைமனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோலட்சியமோ  இருக்க வேண்டும்சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும்சுவாதீன வுணர்ச்சியும்ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதேஇதுபோதாதா?  இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன்என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும்பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும்நேரத்தையும்ஊக்கத்தையும்செலவு  செய்கின்ற  மனிதனும்நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்கு வதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன்இதைப் போன்ற அறிவீனமும்அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன்இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றதுஆகவேஉங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள்அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.  அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின்றார்கள்முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள்

சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவாஇந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோஅனுபவிக்கவோ முடியப்போகின்றதுஅன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள்உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக் குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும்மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாதுநீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல் கிறேன்இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள்அது சொல்லுகின்றபடி நட வுங்கள்உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள்உங்கள் தவறுதல் களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்அதை மதியுங்கள்அதனிடம் நம்பிக்கை வையுங்கள்அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும்கடவுளைப் போல் அவ்வளவு மோசமும்புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவுஅதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும்ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களே யானால் வந்து விட்டதுஅன்றே சமரசம்சன்மார்க்கம்விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  தவிரபெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியி ருக்கிறதுஅதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விடஎஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள்ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள்அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள்அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும்நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன்.

நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும்நான் எத்தனை பெண்களை வேண்டுமா னாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன்ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும்அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.  ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக் கின்றதுஇதற்கு கடவுள்மதம்முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றதுஇது மிகவும் அநீதியும்அயோக்கி யத்தனமுமான விஷய மாகும்.

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும்பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப் பட்டிருக்கின்றது.  ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும்ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாய கர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.  உண்மையான சமரசம் தோன்றி விடும்பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காதுசிலர் இப்படி சொல்வது தப்பு என்றும்ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும்ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல் லுங்கள் என்றும் சொல்ல வரு வார்கள்ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டதுகலியாணம் செய்து கொள்ளுவதே அடிமைப் பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக் கியனாகவில்லை.  ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள்அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம்பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம்இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லைஇதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம்இஷ்டப்பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும்இஷ்ட மில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும்பயப்படக்கூடாது.

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய்கண்ட படி  கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடாதுஇதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டுமுட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள்இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லைஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட் டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள்ஆகவேஇந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத்தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும்விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள்எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல் வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான்இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம்உலகம் விருத்தியாவதற்காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமாநாய்பன்றிகழுதைகுதிரைகோழிகுருவி முதலிய மிருகம்,  பட்சிஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும்பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக் காதீர்கள்ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள்முடிவுப்படி நடவுங்கள்.

(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)

குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931