சனி, 15 நவம்பர், 2014

பிறந்த நாள் பாமாலை

தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த




நாள் பாமாலை

தரணி போற்றும் தந்தை பெரியார்
தமிழினக் காவலர் பெரியார்
வெண்தாடி வேந்தர் பெரியார்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
ஈரோட்டுச் சிங்கம் பெரியார்
சுய சிந்தனையாளர் பெரியார்
சுயமரியாதையே சுக வாழ்வு என்ற பெரியார்
வகுப்புரிமையை வகுத்த பெரியார்
பொதுவுடைமையை புகுத்திய பெரியார்
பெண்ணுரிமைப் போராளி பெரியார்
சாதி, மதம் சாய்த்த பெரியார்
கடவுளை எதிர்த்த பெரியார்
பார்ப்பனீயத்தைத் தோலுரித்த பெரியார்
சங்கராச்சாரிகளின் ஆணவத்தை அடக்கிய பெரியார்
மனிதனை மனிதனாக்கிய பெரியார்
தொழிலாளர் தோழர் பெரியார்
வைக்கம் வீரர் பெரியார்
தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காவலர் பெரியார்
குழந்தை திருமணத்தை குழி தோண்டிப் புதைத்த பெரியார்
வருணாசிரம சூழ்ச்சியை வாட்டிய பெரியார்
தேவதாசி முறையை ஒழித்த பெரியார்
சதியை சட்டத்தின் மூலம் முறியடித்த பெரியார்
ஆண், பெண் சமத்துவம் சமைத்த பெரியார்
ஆணாதிக்க ஆணவத்தை அழித்த பெரியார்
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார்
இந்திய சட்டத்தை முதன் முதலில் திருத்திய பெரியார்
தமிழ்மொழிக் காவலர் பெரியார்
எழுத்துச் சீர்த்திருத்தச் செம்மல் பெரியார்
திருக்குறள் வாழ்வியல் என்ற பெரியார்
வடலூர் வள்ளலாரை ஆதரித்த பெரியார்
புத்தரின் போதனையைப் போதித்த பெரியார்
பார்ப்பனரின் சூழ்ச்சியை அம்பலப் படுத்திய பெரியார்
கல்வியின் அவசியம் கருதி கல்விச் சோலையமைத்த பெரியார்
குலக்கல்வித் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்த பெரியார்
குருகுலப் போர் புரிந்த படைத்தளபதி பெரியார்
முதலில் குடும்பக் கட்டுப்பாட்டை முன்மொழிந்த பெரியார்
அம்பேத்காரின் அருமை நண்பர் பெரியார்
மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்ற பெரியார்
கருப்புச் சட்டைக் காவலர் பெரியார்
புராண ஆபாசங்களைப் புரட்டிப் போட்ட பெரியார்
சமுதாய இயக்கம் கண்ட பெரியார்
வேதத்தை வேரோடு சாய்த்த பெரியார்
இந்துமத இழிவை எடுத்துரைத்த பெரியார்
உண்மை வரலாற்றை உணர்த்திய பெரியார்
திராவிடர் நாகரிகம் விளக்கிய பெரியார்
ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார்
மத வெறியை மாய்த்த பெரியார்
தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்
தூய தாடி மார்பில் விழுந்த பெரியார்
உலகு போற்றும் உத்தமர் பெரியார்
சாதிமறுப்புத் திருமணம் சாதித்த பெரியார்
விதவை மறுமணத்திற்கு வித்திட்ட பெரியார்
மணவிலக்குப் பெற்றோரின் மறு வாழ்வுக்காக போராடிய பெரியார்
வரதட்சணை வன்கொடுமை எதிர்த்த பெரியார்
சமூக சிந்தனைக் காவலர் பெரியார்
கடவுளை மற மனிதனை நினை என்ற பெரியார்
சமத்துவ சமுதாயம் காண விரும்பிய பெரியார்
சித்திர புத்திரன் புனைப் பெயரில் சிந்திக்க வைத்த பெரியார்
சுயமரியாதைத் திருமணத்தைத் தூண்டிய பெரியார்
புரோகித திருமணத்தைப் பூண்டோடு ஒழிக்க நினைத்த பெரியார்.
பண்பாட்டு படையெடுப்புகளை பாடையில் ஏற்றிய பெரியார்
இனத்தின் மீட்புக்கான இரட்சகர் பெரியார்
தலைவிதித் தத்துவத்தைத் தகர்த் தெறிந்த பெரியார்
சொர்க்க, நரக பித்தலாட்டங்களை மாய்த்த பெரியார்
பாவ, புண்ணியப் பசப்புகளை வெளிப்படுத்திய பெரியார்.
பழைய பஞ்சாங்கம் பார்ப்பன பித்தலாட்டம் என்ற பெரியார்
சகுனத்தை சாட்டையால் அடித்த பெரியார்
நல்ல நேரம், கெட்ட நேரம் நெருப்பி லிட்ட பெரியார்
திதி, திவசமெல்லாம் திருடன்கள் திட்டம் என்ற பெரியார்
கிரகப்பிரவேசம் எல்லாம் பார்ப்பன மோசம் என்ற பெரியார்
சாணிப் பிள்ளையாரைச் சாடிய பெரியார்
பகுத்தறிவு பாதையினை வகுத்த பெரியார்
பகுத்தறிவு சுடர் ஏந்தி நின்ற பெரியார்
பகுத்தறிவு தீ பரவட்டும் என்ற பெரியார்
தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியார்
ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பிய பெரியார்
பேய், பில்லி, சூன்யம் பித்தலாட் டத்தை புரட்டியெடுத்த பெரியார்
பெண் ஏன் அடிமையானாள் என வினவிய பெரியார்
பெண்களுக்கு சொத்துரிமையைப் பெற்றுத்தந்த பெரியார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்ட பெரியார்
இனி வரும் உலகம் பற்றி இயம்பிய பெரியார்.
தமிழா! இனவுணர்வு கொள் என்ற பெரியார்
கோயில் நுழைவு உரிமை அறப்போர் அறிவித்த பெரியார்
இந்தி என்ற மந்தியை விரட்டிய பெரியார்
பச்சை தமிழர் காமராசரை ஆதரித்த பெரியார்
உற்ற நண்பர் இராசாசியை உருக் குலைத்த பெரியார்
எளிமையின் எடுத்துக்காட்டு பெரியார்
அஞ்சா நெஞ்சன் தந்தை பெரியார்
பெண்களால்  பெரியார் பட்டம் பெற்ற பெரியார்
சொல், எண்ணம் செயல்படுத்திய பெரியார்
கடவுள் இல்லவே இல்லை என்ற பெரியார்
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற பெரியார்
கடவுளைப் பரப்பியவன் அயோக் கியன் என்ற பெரியார்
கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்ற பெரியார்
ஆரிய மாயையை அம்பலப்படுத்திய பெரியார்
தீண்டாமையைத் தீயிட்டுப் பொசுக் கிய பெரியார்
தாலி தான் பெண்களுக்கு வேலியா? என்ற பெரியார்
மனுதர்ம சாஸ்திரத்தை அணு அணு வாகப் பிளந்த பெரியார்
கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்ற பெரியார்
சாமியார்களின் சல்லாப உல்லாசத்தைச் சாடிய பெரியார்
பேதம் கற்பிக்கும் பிராமணாள் கபே ஒழித்த பெரியார்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக் கலம் தந்த பெரியார்
கைவிடப்பட்ட மூத்தோர்களுக்கு முகவரியான பெரியார்
சாதனைகள் பல பல படைத்திட்ட பெரியார்
சரித்திரம் பல கண்ட நாயகன் பெரியார்
தள்ளாத வயதிலும் தொண்டு செய்த பெரியார்
தடம் புரண்ட கொள்கைகளை தடி கொண்டு விரட்டிய பெரியார்
தான் கொண்ட கொள்கை சரியே என பறைசாற்றிய பெரியார்
அழுக்குருண்டை பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார்
பார்ப்பன ராமனைச் செருப்பாலடித்த பெரியார்
மூடநம்பிக்கையின் முடைநாற்றம் போக்கிய பெரியார்
அறிவிலிகள் கூறிய ஆபாச புராணத்தை கிளறிய பெரியார்
நெஞ்சுரம் கொண்ட நேர்மையாளர் பெரியார்
தன் பட்டறிவால் மக்களைப் பண் படுத்திய பெரியார்
புரையோடிய அநாகரிகத்தை  புதைத்த பெரியார்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு ஊக்கம் தந்த பெரியார்
கேள்விக் கணைகளுக்கு அய்யம் நீங்க பதில் தந்த பெரியார்
மாற்றுக் கருத்தாரும் மதிக்கத் தகுந்த பெரியார்
எதிரிகளும் ஏற்கும் வண்ணம் தெளிவுபடுத்திய பெரியார்
அயராது உழைத்து அரும்பாடுபட்ட பெரியார்
பூணூலார் புரட்டை பூண்டோடு ஒழிக்க பாடுபட்ட பெரியார்
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார்
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற பெரியார்
சமூக நீதி சமத்துவம் காண களம் கண்ட பெரியார்
சாதி ஒழிப்புச் சட்டஎரிப்புப் போர்ப் படைத்தளபதி பெரியார்
தை முதல் நாள்தான் தமிழர் புத் தாண்டு என்ற பெரியார்
பார்ப்பனியத்தை சமஸ்கிருதத்தை சம்காரம் செய்த பெரியார்
அன்னை மணியம்மையாரின் மணி மகுடம் பெரியார்
நாகம்மை, கண்ணம்மாள் நானிலம் அறியச் செய்த பெரியார்
வெங்கட்டப்பரும், சின்னத்தாயம் மையும் விதைத்த வித்து பெரியார்
வள்ளுவன் வகுத்த 133 அதிகாரம் போல் வாழ்ந்த பெரியார்
சமத்துவபுரம் சாதனைக்கலைஞர் கருணாநிதி கண்ட பெரியார்
பாவேந்தர், அறிஞர் அண்ணாவின் ஆசான் பெரியார்
ஆல மர விழுதுகளில் வீரமணியைக் கண்ட பெரியார்
ப. முனுசாமி, நகரத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், ஓசூர்

- விடுதலை நாளேடு,15.11.14

Read more: http://www.viduthalai.in/page5/91153.html#ixzz3J9vjymF6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக