- தந்தை பெரியார்
தி.மு.கழகம்
சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு
செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும்
எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவ தில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது.
எனவே, மக்களின் தயவு எங்களுக்குத் தேவை இல்லை யானதால், மக்களிடையே இருக்கிற குறை பாடுகளை- மூடத்தனமான
முட்டாள்தன நம்பிக்கைகளை எங்களால் எடுத்துச் சொல்ல முடிகிறது.
தங்களது
தோல்விக்கு அரசியல் வாதிகள் காரணங்களைத் தேடி எதை யாவது சொல்லித் தங்களுடைய தோல்வி
களை மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். நான் அப்படியல்லவே!
தேர்தல் நடக்கிற
அன்று இரவுவரை திமுகவை எதிர்த்தேன். அது வெற்றி பெற்றது என்று செய்தி வெளிவந்ததும்
ஓர் அறிக்கை விட்டேன். அதில் நான் தோற்று விட்டேன்; பார்ப்பான்
ஜெயித்து விட்டான். இதற்கு முன் இரு முறை அவனை நான் ஒழித்து இருக்கின் றேன்; எப்படி ஒழிப்பது என்பது எனக்குத் தெரியும்.
என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டு விடுங்கள் என்று குறிப்பிட்டி ருந்தேன்.
மாணவர்களுக்குச்
சில சொல்ல வேண்டும்; நம் நாட்டு அரசியல், காந்தி வந்ததும் கழுதை புரண்டகளமாகி விட்டது.
வெள்ளைக்காரன் இருந்த வரை ஒரு அத்து இருந்தது. அவன் போனதும்- பார்ப்பான் கைக்கு
ஆட்சி வந்ததும், அவன் கட்டுப் பாட்டிற்கு மக்கள் வர மறுத்ததால்
அரசாங் கத்திற்கு எதிராகக் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், வேலை நிறுத்தம், பட்டினி கிடப்பது
போன்ற கீழ்த் தரமான காரியங்களையும் தூண்டிவிட்டு விட்டான்.
இக்காரியங்களைக்
காந்தி தான் ஆரம் பித்தார். தலைவன் என்கின்ற முறையில் அவர் ஆரம்பித்ததும், பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பான்
கையிலிருந்ததால் அதற்கு விளம்பரம் கொடுத்துப் பெரிதாக்கி விட்டார்கள். இப்போது
மற்ற மக்களும் அதைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.
தற்போது சில
மாணவர்கள் கைக்கு அந்தக் காலித்தனம் வந்துவிட்டது. நாங்கள் தோன்றும் போதும்
மாணவர்கள் நிலை எப்படி இருந்தது? நம் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று கருதினார்கள். 1916-இல் பார்ப்பனரிரல்லாத இயக்கம் வெளியிட்ட
அறிக்கையில் நம் மக்கள் 100க்கு 5 பேர் தான்
படித்தவர்கள் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்த வர்கள் என்று குறிப்பிட்டு
இருந்தார்கள்.
இந்த நிலை 1925 வரை இருந்தது. அதன் பின் ஜஸ்டிஸ் கட்சியினைச்
சேர்ந்தவர்கள் போய் ஆட்சி செய்து 100க்கு 7 பேரைப் படித்தவர்கள் ஆக்கினார்கள். அந்த ஆட்சி
யின் மேல் பொய்யையும், புளுகையும் கூறி மக்களை நம்பச் செய்து அதை
ஒழித்து, 1938-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன் எத்தனை பேர் படித்திருக்கிறான் என்று கணக்குப்
பார்த்தார்கள். 100க்கு 7 பேர் படித்திருக்
கிறார்கள் என்று தெரிந்ததும் 2500 பள்ளிக் கூடங்களை
மூடியது.
நாளைக்குக்
காங்கிரஸ் வந்தாலும் இந்தக் கதி தான் ஏற்படும். காமராஜர் இல்லையா என்று
கேட்பீர்கள்? அவரால் ஒன்றும் முடியாது. காமராஜருக்குக் கையாக
இருப்பது சுதந்திராக் கட்சி; காலாக இருப்பது
ஜனசங்கம். இந்த இரண்டின்படி தான் அவர் நடக்க முடியுமே தவிர, தானாக எதையும் செய்ய முடியாது.
ஜனசங்கம்
முழுக்க முழுக்கப் பார்ப்பானுடையது. சுதந்திரா விலாவது பார்ப்பானும், ஒரு சில
நம்மைக் காட்டிக் கொடுக்கிற துரோகிகளும் இருக்கிறார்கள். இது (ஜனசங்கம்) பச்சைப்
பார்ப்பான் கட்சி. இவர்கள் இரண்டு பேரும் சொல்லுகிறபடி தான் காமராஜர் கேட்டு நடக்க
வேண்டிய வராகி விட்டார். எனவே அவரால் இனிப் பார்ப்பனருக்கு பயன் ஏற்படுமே தவிர
நமக்குப் பயன் ஏற்படும் என்று நம்புவதற்கு வழியில்லாமல் போய்விட்டது
1952-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சூத்திரன்
எத்தனைபேர் படித் திருக்கிறான் என்று கணக்குப் பார்த்தார்கள். 100க்கு 9 பேர் படித்தவர்கள்
இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் இனி இதை வளர விட்டால் பார்ப்பனர்கள் கையில்
தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு போக வேண் டிய நிலை ஏற்பட்டு விடும் என்று
பயந்து, 6000 கிராமப் பள்ளிக்கூடங்களை மூடி னார்கள்.
மூடினதோடு விடவில்லையே! மாணவர்கள் ஒரு நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய
வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதை எதிர்த்து நாம் தான் போராடி அவரை ஒழித்துக்
காமராசரைக் கொண்டு வந்தோம். அவர் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று நம்மிடம்
கேட்டார். இராஜாஜி மூடிய பள்ளிகளை எல்லாம் திறக்க வேண்டும் என்று சொன்னதும்
அதன்படி செய்ததோடு, மேலும் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத்
திறந்தார். அப்போது திரு. சுந்தர வடிவேலு டைரக்டராக இருந்தார். எங்கெங்கு அவர்
பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று சொன்னாரோ அதன்படிக் காமராசர் செய்தார்.
மக்களிடையே ஆதரவு பெருகியது.
அவர் போய் இவர்கள்
ஆட்சி வந்ததும், நம்மக்களின் கல்வியில் நிறைய கவனம்
செலுத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியில் நம் மக்கள் 100க்கு 50க்கு மேல் படித்த வர்கள் ஆனதோடு, நம் மக்கள் நினைக் கவே முடியாத பதவி
உத்தியோகங்களை எல்லாம் அனுபவிக்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத்
துறையிலும் இதுவரை வேறு எவரும் நினைக்காத அளவிற்குக் காரியங்கள் நடை பெற்று
வருகின்றன.
நம் இளைஞர்கள்
எல்லாம் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க
வேண்டும். மாண வர்கள் தாங்கள் செய்யும் ரகளையைப் பற்றி அதன்பின் விளைவைப் பற்றி
சிந்திப்பது கிடையாது. அதைத் தான் எதிரிகள் பயன் படுத்திக் கொள்வார்கள். தற்போது
காம ராஜர் இந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்கின்ற எண் ணத்தில்
மாணவர்களைப் பிடித்து ரகளை செய்யச் சொல்லி, அதன் மூலம் இந்த
ஆட் சியைக் கவிழ்த்து விடலாம் என்று பார்க் கிறார். அதற்கு நீங்கள் பலியாகக்
கூடாது.
என்னைப் பொறுத்த
வரை எவன் ஆட்சிக்கு வந்தாலும் அவனை நான் சரி செய்து கொள்வேன்; என் தயவு எவனுக்கும் வேண்டும். நான் எவனையும், எவன் ஓட்டையும் எதிர் பார்க்க வில்லையே!
இன்றைக்கு
முன்னேற்றக் கழகத் திற்குள்ள கேடு எதிர்க் கட்சிகளால் அல்ல; அவர்களுக்குள் இருக்கிற உட்பூசல் களாலேயே ஆகும். உட்பூசல் வந்தால் எந்தக் கட்சியும் வாழ முடியாது; உட்பூசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை நான்
பணிவோடு கேட்டுக் கொள்வது, இந்த ஆட்சிக்கு எந்த கேடும் வராமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். இது ரொம்ப அபாயகரமான காலம். நாம் சிந்திக்க வேண்டியது நிறைய
இருக்கிறது. இந்த ஆட்சி மாறினால் நம் வாழ்வு - பொதுமக்கள் வாழ்வு ஒழிந்தது. இந்த
நிலைமையை அடியோடு தலைகீழாக மாற்றி விடுவார்கள். மனுதர்மப்படி தான் ஆட்சி நடக்கும்.
இன்று நம்
இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும் பதவிகளில்- உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.
உத்தியோகங்களால்
நாம் வாழ்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு இல்லா விட்டாலும் இதனால் நம் இழிவு
ஒழிகிறதே!
இது நம் நாடு- நம்
முன்னோர்கள் வாழ்ந்த நாடு. இந்த பார்ப்பான் எல்லாம் பொறுக்கித் தின்ன, பிச்சை எடுக்க வந்த வன். ஆடு, மாடுகளை மேய்க்க வந்தவன். அவன் இன்று நம்
தலையில் பெரிய கல்லை வைத்து இருக்கின்றான். அதைத் தள்ளி விட்டு நாம் முன்னேற
வேண்டும். நாம் எதற்காகப் படிக்கிறோம்? நாட்டிற்குத்
தொண்டு செய்ய வேண்டும்- உத்தியோகங் களுக்குச் செல்ல வேண்டும் என்பதற் காகவே ஆகும்.
அதை ஒவ்வொரு மாண வரும் எண்ணிப் பார்த்து இன்றைய ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
22-11-1970 அன்று
காரைக்குடியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 6.1.1971).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக