நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில்
திருதராஷ் டிரனும், பாண்டுவும்
அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக்
கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில்
ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே
கோபித்துக் கொள்ளு கின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
மார்ச்சு
மாதம் 31ஆம்
தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி
செய்து விட்டது. ஆனால், நாம்
திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென் கின்றோம்.
பத்து
மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச்
செய்வதைவிட, இருபது
வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
மேல்நாட்டானுக்கு
பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும்
சுயமரியாதை வேண்டும்.
அரசியல்
இயக்கம், முதலில்
நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான்
பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும்
என்பதாகச் சொல்லுகின்றது.
- தந்தை
பெரியார்
விடுதலை,3.10.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக