- தந்தை பெரியார்
திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவ னாக இருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரிய மாயிருக்கிறது. ஏனென்றால் இது கல்வி என்பது சம்பந்தமான ஆசிரியர் மகா நாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்ச மாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது, பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத்திலேயும் வாசித் தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உட்பட்ட காலத்திலும் என்னைப் பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்குத் தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் இடத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத் தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன்.
அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும், பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம் அடிபடுவதுமான காலந் தான். நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லியி ருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டே தான் ஒரு சிலர் அதாவது என்னுடைய கொள்கை களுக்கு முரண்பட்டவர்களோ, அத னால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உப யோகித்துக் கொள்கிறார்கள். என்ன வென்றால், நான் கல்வி அறிவு அற்றவ னென்றும், அதனால் எனது கொள் கைகள் அறிவு அற்றதென்றும் சொல் லியும், எழுதியும் வருவதைப் பார்க் கின்றேன். ஆனாலும், உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம். கே. ரெட் டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன் பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட்டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழி யில்லாமல் நான் ஒப்புக்கொள்ள வேண் டியதாயிற்று. நீங்கள் எந்தவிதமான சிறந்த உபந்நியாசத்தையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப் பிரசங்கமானது மிகவும் அற்புதமாக வும், ஆணித்தரமானதாகவும், பெரிய அநுபோகமும், ஆராய்ச்சியும் பொருந் தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக் காட்டி இருக்கின்றது. அவ்வு பந்நியாசம் உங்களுக்கு மாத்திரமல் லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் கிராமவாசிகளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக்கூடியது.
அதுபோல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர, அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும், ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம் எதை யாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என் கின்றவர்கள் ஒருவித தொழிலாளி களே. அதாவது ஜீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக் காரர்களே அல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க் கின்றானோ, வண்டி ஓட்டுகிறானோ, வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ் தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது. ஒவ் வொரு உபாத்தியாயரும் தங்கள் தங் களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர் களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத் தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்குத் தோன்றுவ தில்லை. ஆதலால் இம்மாதிரி மகாநாட் டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும். அது போலவே உங்களிடம் தங்கள் பிள்ளை களை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் தமது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களேயொழிய, அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர, வேறு காரியத்திற்குக் கருதுவதில்லை. உங்கள் ஜில்லா தாலுகா போர்டுகளும், முனிசிபாலிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தைப் படிப்புக்காக செலவு செய் தும், படிப்பு இலாகா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய் கின்றார்கள். அதனால்தான் பலவழி களிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனி தனுக்குக் கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும், அவ்வறிவால் தான் இன்புறவும், மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலை யாகவும், தொழிலாகவும் போய்விட் டதே அல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை. ஒரு நிமிஷத்திற்கு 100 கவிபாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிடத்திற்கு நூறு அச்செழுத்தைக் கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்குச் சமானமான தொழிலாளிதானே ஒழிய, அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லி விட முடியாது. அதுபோலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக் கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக் காரனோ என்பவன், ஒரே தோலில் நூறு விதமான செருப்புத் தைக்கக் கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலான வனென்று சொல்லிவிட முடியாது.
ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போலவே சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனால், இருவரும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக் காரர்களாய் இருக்கின்றார்கள். சிலருக் குப் படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிற தல்லாமல் தங் களுக்கு ஒரு காரியத்திற்கும் உப யோகப்படுவதில்லை.
உதாரணமாக, ஒரு பெரிய விஞ் ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத் தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத் தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத் துடன் நடக்கின்றான். தன் பெண் ஜாதியைப் பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ, மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான்; அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்துவிடுகின்றான், அல்லது நிழல் மேலே பட்டால் தீட்டு என்று சொல்லிவிடுகின்றான். இரவில் வெளி யில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே படுத்துத் தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.
பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்புல்லைப் போட்டு விட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும், நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்திர பண்டிதன் என்பவனும் குறிப் பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்றும், குறிப் பிட்ட குளத்துத் தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழு கினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரி யப்படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான். பெரிய தாவர சாஸ்திரமும், ஜீவ ஜந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கரு டனைக் கொன்றால், குரங்கைக் கொன் றால் பாவம் என்கிறான். பால் சாப் பிட்டால் மாமிச பட்சணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாமிச பட்சணம் என்கின்றான்.
இம்மாதிரி எத்தனையோ காரியங் களில் படித்தவர்கள் என்பவர்களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக்கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங் களின் தன்மை தெரியாதோ அது போலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும், புஸ்தகத்தின் தன்மையும் அறியாத வர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்று பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்தப் பழஞ்சரித் திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்த தாகவே காணப்படுகின்றது. ஆனால், இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது. இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாகப் பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களேதான் பெரும் பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும், தெய்வ நம்பிக்கை உடைய வர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம்மாதிரி தொட்டதற்கெல் லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும், கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம்பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயல்பாகவும், பெரியோரின் ஞானமாகவும், ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக்கும் மற்ற நாட்டார் எல்லோ ரும் தங்கள் புத்திக்கும், முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தி யாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வரவேண்டும். இம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னேற்றம் அடைந்தே தீரும்.
இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம், சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கிய மானவை. அவைகளைப் பற்றி எனது அபிப் பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். கிராம சீர்திருத்தம்
உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அவை உண்மையா கவே இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக்கும், கிராமவாசிகள் முன்னேற் றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ, அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத் தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதி நிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால், ஒவ் வொருவரும் தத்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப்படுத் தியோ, தாங்கள் ஓட்டுப் பெற்றோ, மக் களின் நம்பிக்கை பெற்றோ சுயநல மடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது.
கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக் கூடம் கட்டு வதும், பஜனை மடம் உண்டாக்குவதும், உற்சவங்கள் செய்விப்பதும், அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட்டால் போதும் என்று பலர் நினைக் கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்துவிடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறி வையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலை மையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்.
கிராமவாசிகள் கள்ளுக்கடையை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்குத் திருட அனுமதி கொடுத்து, அவர்களைப் போலீசார் கண்டுபிடித்துத் தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக் களித்து அபயம் கொடுத்து அவர் களிடம் திருட்டில் பங்குவாங்கி உற்சவம் செய்கிறார்கள். வெறும் புராணப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும், கருமாதிக்கும், கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும், யாத்திரைக்கும், உற்சவத்திற்கும், சமராதனைக்கும் செலவு செய்து அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும், மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்யப் பழகிவிடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும், மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும், சாம்பலைப் பூசிக் கொண் டும் குடும்பத்தைக் கவனிக்காமல் பாஷாண்டிகளாய் திரிவதும், புது நாகரிகம் என்னும் பேரால் தங்கள் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப் படுத்திக் கொண்டு மோட்டார் வண்டி என்றும், அனுபவிக்க உயர்ந்த சாமான் கள் என்றும், உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள் தேவை களுக்கு மேலும் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களைச் செலவு செய்து விடுகின்றார்கள்.
போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப் பிரதிநிதித்துவம் என்று சொல் லப்படும் ஸ்தானங்களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலுகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய் வரை தேர்தல்கள் செலவும், அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன. மற்றபடி ஒழுக்கங் களிலும் மிராசுதாரர்களாயிருக்கிற வர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களைக் கவனியாமலும், அவர் களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லா மல் கொடுமைப்படுத்துவதும் அத னால் இம்மாதிரி மிராசுதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்றவர்களாகி தங்கள் வேலை யாட்கள், வெளியாட்கள் முதலானவர் களுடன் இன்பம் அனுபவிக்கத் துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவர வர்கள் கையில் சிக்கின பணத்தைப் பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரி யங்களில் வக்கீல்களுக்கும், அதிகாரி களுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சினேகத்திற்காகவும், பட்டம், பெருமை, முதலியவைகளுக் காகவும் பொருள்களைக் கவலையின்றி வாரி இறைத்துக் கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும், கிராம மிராசுதாரர் களும் 100க்கு 80 பேருக்கு மேலாகக் கடன்காரர்களாகவும், ஒழுக்கமில்லாத வர்களாகவும், குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வரு வதை நாம் தினமும் பார்த்து வருகின் றோம். இக்குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்தக் காரணத்தாலாவது நமது கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன். எனவே, இக்குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்திருத்த இயலோ இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.
உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் சீர்திருத்தமடைய வேண்டு மானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னு டைய 35 வருஷ கிராமவாசிகளுடைய வும், மிராசுதாரர்களுடையவும் சினேக அனுபவத்தினாலேயே சொல்லுகிறேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இருபதாயிரம், அய்ம்பதாயிரம் ரூபாய் வரும்படி உள்ள பெரிய பெரிய குடும்பங்கள் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும், சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.
இயற்கைப் பாடம் இனி, இயற்கைப் பாடம் என்பதைப்பற்றி சில வார்த் தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச் சிக்கு மிக்க அவசியமானதாகும். ஆனால், அநேக உபாத்தியாயர் களுக்கு இயற்கைத் தத்துவம் இன்ன தென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும். நமது மக்கள் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதேயாகும். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம் மால் தெய்வத் தன்மையென்றும், அதிசயம் என்றும், அற்புதம் என்றும், சொல்லத்தக்கதான அநேக ஆச்சரியப் படத்தக்க காரியங்களை செய்து கொண்டும், இனியும் அநேக ஆச்சரி யங்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கையின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே காரண மாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும், மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம் மதமில்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப் பையும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல் நாட்டாரோ அப்படி இல்லாமல், மனிதனால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலன டைவாய்; உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே; சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது நம்பிக்கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும், சிக்கிக் கிடக்கின்றது என்று சொல்லிக் கொடுக்கின்றார்.
மழை பெய்யாவிட்டால் பார்ப் பானுக்குப் பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.
மேல் நாட்டார் மழை பெய்யாத தற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத் தைக் கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக் கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத் தக்க அறிவுப் பெட்டகத்திற்கு நாம் குழந்தைகளைப் பழக்குவதில்லை.
குழந்தைகள் இயற்கை விசார ணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும், அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.
இவ்விதம் அடக்கும் தன்மையைப் பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடி மைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்திகம் ஆகும் என்றும் சொல்லிப் பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடு மையேதான் முக்கியக் காரணமாகும்.
இவ்விதம் அடக்கும் தன்மையைப் பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடி மைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்திகம் ஆகும் என்றும் சொல்லிப் பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடு மையேதான் முக்கியக் காரணமாகும்.
மதத்தையும், கடவுளையும் நினைத் ததற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம், சம்பந்தப்படுத்தி எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல் என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும். 19.05.1928 இல் செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு தலைமைச் சொற்பொழிவு
(குடிஅரசு (27.05.1928, 03.06.1928)
-விடுதலை,6.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக