கருநாடக அரசின் ‘குவெம்பு பாஷா பாரதி’ வெளியீடு
பெங்களூரு, மே 10 ‘பெரியார் விசாரகளு’ என்னும் பெயரில் கன்னடத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய நூல், 400 பக்கங்களில், 52 தலைப்புகளில் வெளிவந்துள்ளது. கருநாடக மாநில அரசே இதனை வெளியிட்டுள்ளது.
ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட் டம் ஓடிக் கொண்டிருந்தாலும்.... மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என
ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு.
ஆம். கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி” வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான் நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.அந்தப்புத்தகத்தின்பெயர் என்ன தெரியுமா? “பெரியார் விசாரகளு” அதுவாகப்பட்டது:“பெரியார் சிந்த னைகள்.”நானூறுபக்கங்களில்பெண் விடுதலை, சமூகநீதி, பவுத்தம் என 52 தலைப்புகளில் பெரி யாரின் சிந்தனைகளை கன்னடத்தில்மொழிபெயர்த்து வெளி யிட்டிருக்கிறார்கள்.
கீழ்வெண்மணியில் நடந்த தலித் படுகொலைகளைக் கண்டித்து 28.12.1968 ‘விடுதலை' நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தையும் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது வரலாற்றைப் படிக் காமலே வரலாற்றைப் படைக்க நினைக் கும் சிலருக்கு பாடமாக இருக்கும்.
இந்நூல் வெளிவருவதற்குப் பின்ன ணியில் இருந்தவர்தான் கன்னட பேரா சிரியரான கே.வி.நாராயணா. ஹம்பி பல்கலைக் கழகத்தில் ஒன்பதுமுறை பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக் குரியவர். அத்தோடு சமஸ்கிருதக் கலப் பில்லாத கன்னட மொழி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர்தான் இந்தக் கே.வி. நாராயணா.
பெரியாரின் சிந்தனைகளை கன்னட மக்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு பதிப்பாளராகத் துணை நின்றவர் திராவிடப் பல்கலைக் கழகத்திலும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கார்லோஸ் என்றழைக்கப்படும் பேரா சிரியர் தமிழவன்.
பலருக்கும் முன்பாகவே எண்பது களில் அமைப்பியல் வாதத்தினை (ஷிtக்ஷீuநீtuக்ஷீணீறீவீsனீ) தமிழகத்தில் அறிமுகப் படுத்திய முன்னோடிகளில் ஒருவர்தான் நவீன இலக்கியவாதியானள தமிழவன்.
மொழி பெயர்த்த
பேரா.சிவலிங்கம்
கார்லோஸ் என்றழைக்கப்படும் பேராசிரியர் தமிழவன் பேராசிரியர் சிவலிங்கம்
பெரியாரை கன்னட அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரை களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சிவலிங்கம். சிவலிங்கம் தமிழ் பேராசிரியர் மட்டுமில்லை. கர் நாடக தலித் மக்களின் விடுதலைக்காக “ஸ்வாபிமானி தலித் சக்தி” என்கிற இயக்கத்தினை முழுவீச்சோடு நடத்தி வருபவர்.
நரபலி கொடுக்கப்பட்ட தலித் இளைஞனின் கொடூரக் கொலையை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்ததுணிச்சல்....காதலுக்குத்துணை நின்ற தலித் பெண்ணை நிர்வாணமாக ஓடவிட்ட கொடூர முகங்களைத் தோலுரித்த துணிவு மிக்கவர்.
ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக் காக உழைத்துவரும் இவரோடு மொழி பெயர்ப்பில் கைகோத்த மற்றொருவர் நல்லதம்பி.. இன்று இவர்கள் விதைத்த விதை மரமாகி கிளை பரப்பி கனி தரும்போது.... கன்னட மக்கள் தங்களது உண்மையான நண்பர்கள் யார்? தங்களைத் தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்? என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள்.
(பாமரன் வலைப்பக்கத்திலிருந்து)
-விடுதலை,10.5.17
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக