ஒரு பக்கம் காவிரி நீருக்கான போராட்டம் நடைபெறும்போது மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என ஆச்சரியத்தில் ஆடிப்போகும் அளவுக்கு கருநாடக அரசு ஒரு செயலை செய்திருக்கிறது.
கருநாடக அரசின் 'குவெம்பு பாஷா பாரதி' வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான் நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது!
அந்த புத்தகத்தின் பெயர் 'பெரியார் விசாரகளு' (பெரியாரின் சிந்தனைகள்)
நானூறு பக்கங்களில் பெண் விடுதலை, சமுகநீதி, பவுத்தம் என 52 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளை கன்னடத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்நூல் வெளிவருவதற்கு பின்னணியில் இருந்தவர் கன்னடப் பேராசிரியர் கே. வி. நாராயணா. ஹம்பி பல்கலைக்கழகத்தில் 9 முறை பதிவாளராக இருந்த இவர், சமஸ்கிருத கலப்பில்லாத கன்னட மொழி வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார்.
(3 - 5 - 2017 குமுதம்)
இந்துத்துவா இடுப்பை முறிக்கும்
#பெரியாரின்_பெரும்பாய்ச்சல்
தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
வெள்ளி, 5 மே, 2017
கர்நாடக அரசு கன்னடத்தில் பெரியார் விசாரகளு' (பெரியாரின் சிந்தனைகள்) நூல் வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக