புதன், 3 ஜனவரி, 2018

“கேள்விகளுக்கு விடை தந்தவர் பெரியார்”

ரமணி மோகனகிருஷ்ணன்

டிசம்பர் 24, 2017 தந்தை பெரியாரின் 44 ஆவது நினைவு நாள். தமிழ்நாட்டின் சிந்தனை முறையை மாற்றியதில் பெரியாருக்கு மிகப் பெரிய பங்குண்டு. சாதிய, பெண்ணிய, மதவாத கருத்துகளின் அடிப் படைகளை எதிர்த்து துணிவோடு கேள்விகளை எழுப்பியவர்.  அந்தப் போக்கு அவரைப் பின் தொடர்ந்தவர்களிடமும், பொதுச் சமூகத்திடமும் பரவியது. அதன் நீட்சியாகவே வட இந்தியாவை விட, தமிழகம் மாற்றுக் கருத்துகளை உரையாடும் தன்மையோடு விளங்குகிறது. சமூகத்தின்பால் அக் கறையோடு இயங்கி வருபவர்களில் சிலரிடம் தங்கள் வாழ்க்கையில் பெரியார் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிக் கேட்டோம். 

கவிஞர், பாடலாசிரியர் உமாதேவி



“என்னுடைய அண் ணன் பெரியாரைத் தொடர்ந்து வாசிப்பார். எனக்கு, பெரியார் பற்றிய அறிமுகத்தை அப்பாதான் தந்தார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதுதான் பெரி யார் சிந்தனைகள் நூலைப் படித்தேன். எங்கள் அப்பா அம்மாவின் திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம். ஆனால், அன்றாடப் பிழைப்புக்கு அல்லல்படுகையில் அரசியல் பெரிதாய் ஒட்டாமல் இருந்தது. பெரியார் சிந்தனைகளைப் படித்த பிறகு, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ போன்ற சுயமரியாதை வெளியீடுகளை வாங்கிப் படிப்பேன். இவற்றின் தாக் கத்தால் பெரியாரை ஒரு புகைப்படமாக மட்டுமே கடந்து போக முடியவில்லை. அவரின் எழுத்துகள், சுயமரியாதைச் சிந்தனைகளைப் புகட்டுவதாகவே எப்போதும் இருக்கும். அன்னை மீனாம்பாள் போற்றிய பெண்களுக்கான தலைவர் பெரியார். அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் தலைவர்.  நவீன இந்தியாவின் உயிர்ப்புள்ள மாற்றுச் சிந்தனையாளர். ஜாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட நினைக்கிறவர்களுக்கு, பெரியாரே மிகச் சிறந்த வழிகாட்டி. பவுத்தத்தை அம்பேத்கர் சமய மாக அறிவித்தார். பெரியார் தன் பகுத்தறிவு பார்வை யில் வாழும் வழிமுறையாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு லெஜெண்ட்; அம்பேத்கர் ஒரு லெஜெண்ட்; பெரியாரும்- அம்பேத்கரும்- மார்க்சும் பேசியது மானுட விடுதலையை நோக்கியது. அதை எடுத்துக் கொண்டே நாம் ஒட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக நம்மை அடையாளம் காட்டிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தலைவர்களின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்காமல், புரொஃபைல் படங் களிலும், சட்டைகளிலும், பேனர்களிலும் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொள்வதைப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது அவர்களுடைய கொள்கை களைப் பரப்புவதே!’’

சமூகச் செயற்பாட்டாளர் 
உடுமலை கவுசல்யா



“பெரியார், என்னைச் சாதி ஒழிப்புக்காரியாக வார்த்தெடுத்த தந்தை அவர். இந்த உணர்வும் சேர்ந்து தான் நான் தந்தைபெரியார்என அழைக்கிறேன். தந்தை யாக மட்டுமில்லை, எப்போதும் உடன் பயணிக்கும் தோழராகவும் அவரே உள்ளார்.  சாதி ஒழிப்புக்கு நேர்மையாகப் பங்களிக்க வேண்டுமானால் சமூகம் பெண்ணுக்கென வைத்துள்ள வரையறை களை மீறித்தான் ஆகவேண்டும். பெரியாரைச் செவிவழியாகவும், நூல்கள் வழியாகவும் உள் வாங்கியபோது விடுதலைஉணர்வு என்னை ஆட்கொண்டது. இச்சமுகம் பெண்களுக்கென்று பண்பாட்டுச்சிறைகள் வைத்திருக்கிறது. அவற்றை யெல்லாம் தயக்கம் இல்லாமல் உடைத்து வெளிவர வைத்தது என் தோழர் பெரியார்தான். பெரியாரிடம் ஒருமுறை கூட ஆணாதிக்கத்தனம் வெளிப்பட்டது இல்லை. இப்போதுள்ள ஆண்கள் கூடத் தயங்கும் விஷயங்களை, எந்தத் தயக்கமுமின்றி அன்றே பேசியிருக்கிறார். பெண்களை கிராப் வெட்டிக் கொள்ளுங்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் தேர்ச்சி பெறுங்கள், குழந்தை பெற்றுத்தரும் கருவிகள் அல்ல, காதலின் பேராலும் சிறைப்படக் கூடாது, காதல் முறிந்த பிறகு, தொடரும் இல்லறம் ஆணாதிக்கம் என்று எந்தக் கட்டுகளுமற்ற சிந்தனைச் சிறகைப் பெண்களுக்குப் பொருத்தியவர். நான் ஒரு அடுப்பங்கரைப் பெண்ணாக, குழந்தைப் பெற்று தரும் கருவியாக, அலங்காரத்திற்குரிய போகப் பொருளாக இருந்து கொண்டே சாதி ஒழிப்பிற்குப் பங்களிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி என்னைச் சிந்திக்கச் செய்தவர். விடுதலைப் பெண்ணாக மாறி சாதியத்திற்கு எதிராக என்னை ஆயுதமாக்கியவர். யாரையும் வெறுக்கக் கூடாது, அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற மனிதநேயம் சொல்லி கொடுத்தவர்.பெண்கள் பொதுவாழ்வுக்கு வெளிவர முடிகிறது என்றால் முதன்மை காரணம் இவர்தான் என்பேன்.

சாதி ஒழிப்புக்கு மட்டுமல்ல, பெண் விடுதலையின் அடையாளமும் இந்தக் கிழவன்தான். அவரைச் சுமந்து பழகிய பிறகே கம்பீரமானவளாகவும், வலிமையானவளாகவும் உணர்கிறேன். அவரின் நேர்மையையும் தன்னிழப்பையும் உள்வாங்கிக் கொண்டேன். அந்தத் தன்னிழப்போடு சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக்கு அவர் காட்டும் அரசியலைத் திறந்த மனதோடும் நேர்மையோடும் கற்கிறேன். அந்தப் பயணம் விடுதலை அரசியலுக்குக் கொண்டு போய் சேர்க்கும் என்றால் அதைத் தயக்கமின்றி முன்னெடுப்பேன். பெரியாரின் அந்த அப்பழுக்கற்ற நேர்மையை இழந்தால் அது பெரியாருக்குப் பெருமை சேர்க்காது. நான் சமரசமில்லாமல் நேர்மையோடு லட்சியப் பயணம் மேற்கொள்வதன் மூலம் பெரியா ருக்குப் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.”

கவிஞர் மாலதி மைத்ரி



“நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது தான் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைப் படித் தேன். அந்தச் சிறிய தொகுப்புதான் என் வாழ்க்கையையே மாற்றியது. அதற்கு முன்பே 12 வயதிலேயே பெண்கள் எப்படி அடிமையாக நடத்தப்படுகிறார்கள், மதம், கடவுள் ஆகியவை எப்படிச் சமூகத்திலும், ஆண் - பெண்ணிலும் ஏற்றத் தாழ்வுகளை ஏற் படுத்தியிருக்கின்றனஎன்பது குறித்த கேள்வி கள் எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே வரும்.ஆனால்,அவற்றிற்கானவிடைகுடும்பம், சமூகத்தால்தரப்படுவதில்லை.ஏன்அப்படி நடத்துகிறீர்கள்என்பதற்கு,‘பெண்என்றால்அப்படிதான்இருக்கவேண்டும்'என்ற பதில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான பதில் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தில் இருந்தது. அதைப் படிக்கும் போது என்னைப் போலவே ஒருவர் சிந்திக்கிறாரே என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. அந்தப் புத்தகம் ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தது. நான் சிந்திப்பது, நினைப்பது இந்த உலகத்தைப் பார்ப்பது சரியானதுதான் என்கிற தன்னம்பிக்கையைக் கொடுத்தது பெரியார். வெளியில் பேசுவது, இந்தச் சமூகம் பெண்ணுக்காக உருவாக்கி வைத்திருப்பது எல்லாம் பொய், இதை நம்பக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதன் பின்புதான் நான் என்ன நினைக்கிறேனோ, அதுபடிதான் நடக்க வேண்டும் என்கிற உறுதிகொண்டேன். பெரியார் பேசியவற்றில் விதவை மறுமணமும், திருமண விடுதலையும் கூட இந்தச் சமூகத்தில் இன்னும் இயல்பாகவில்லை. பெரியார் இந்த மொத்த சிஸ்டமும் மாறும் வரை அவசியம் தேவை.

நன்றி: விகடன்.காம்
- விடுதலை நாளேடு, 30.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக