வெள்ளி, 26 ஜூன், 2020

உரிமையைத் தர ஒப்புமா?

பெரியார் கேட்கும் கேள்வி-26!
மனுதர்மங்களால் மக்கள் நான்கு வகையாகவும், பல்வேறு ஜாதிகளாகவும் பிரித்து ஒருவனை மற்றொருவன் வேறென மதிக்க வைத்து, ஒருவனைக் கண்டால் மற்றொருவன் துவேஷிக்கும்படியாகவும் ஒரு ஜாதிக்கொரு நீதி வகுத்து ஒருவன் நடக்கும் பாதையில் மற்றவன் நடவாதபடிக்கும் ஒருவன் குளிக்கும் ஓடையில் மற்றவன் குளிக்காதபடிக்கும் நாம் சிதறுண்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இதை நமக்குத் தந்த அந்த வர்ணாசிரமத்திடம் நம்பிக்கை வைத்து அதில் மாற்றம் ஏற்பட்டால் தமது உயர்வும் உயர்வால் ஏற்படும் உல்லாச வாழ்வும் உருக்குலையும் என்ற அச்சத்தோடு வாழும் கூட்டம் ஒரு போதும் தீண்டாமையைப் போக்க முன்வராது எனத் தைரியமாய் கூறுவோம்.

மாட்டை செக்கில் கட்டி ஓட்டுவோனுக்கு திடீரென ஜீவகாருண்ய உணர்ச்சி தோன்றி மாட்டை அவிழ்த்து விட்டுவிட ஒப்புவானா? அவன் மாடு பூட்டி ஓட்டுவதை விட்டாலன்றி மாட்டின் விடுதலையை அவன் எங்ஙனம் தர முடியும்? வேண்டுமானால் அந்த மாட்டைக் குளிப்பாட்டி, புதிய மூக்கணாங்கயிறு மாட்டி அலங்காரம் செய்வான். அஃதேயன்றி உள்ளபடி அவன் மூலமாக மாடு எங்ஙனம் தனது 'கர்மபலனை' நீக்கிக் கொள்ள முடியும்.

அதனைப்போலவே எந்த நாளும், ஆண்டு வர வேண்டு மெனவும், பிறப்பை மார்க்கமாக வைத்துக்கொண்டே உயர வேண்டுமெனவும் கருதிக் கொண்டிருக்கும் வைதிகக் கும்பல் தமது 'சீட கோடிகளுக்கு' உரிமையைத் தர ஒப்புமா? உரிமை யைத் தந்து விட்டால் இவர்களுடைய குருத்தன்மை ஏது?

- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.6.1939

- ‘மணியோசை’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக