பெரியார் உலகம்

தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.

பக்கங்கள்

  • முகப்பு
  • தமிழ் மலர்
  • பகுத்தறிவு உலகு
  • சுயமரியாதை உலகு
  • சமூக நீதி
  • சிந்தனை செய்வோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தென் சென்னை திராவிடர் கழகம்
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
  • வெற்றிவலவன் பக்கம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

எத்தனை தலைமுறைக்கு நாம் "சூத்திரர்களாக" இருப்பது?



August 21, 2021 • Viduthalai

* தந்தை பெரியார்

தோழர்களே, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காகக் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள்.- உண்மை தான். எங்களுக்கு அது பற்றிச் சம்பந்தமில்லை. நாங்களோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; கடவுள் இல்லை என்பவர்களாக இருந்தாலும் இருக்கிற கடவுள்கள் அனைத்தும் அயோக்கியர்கள் என்று சொல்பவர்கள்; அப்படிப்பட்ட நாங்கள் எதற்காகக் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்கின்றோம் என்றால், அங்குள்ள சிலையை வணங்குவதற்காகவோ, தொழுவதற்காகவோ அல்ல; கர்ப்பக்கிருகம் என்கிற அந்த இடமானது ஜாதியைக் காப்பாற்ற - ஒரு சமுதாயத்தின் இழிவை நிலை நிறுத்துவதாகத்தான் இருக்கிறது. இன்று நாட்டில் செயலளவில் சாதியை, இழிவைக் காப்பாற்றுவதாக இருப்பது இது ஒன்றுதான் ஆகும். இது ஒன்றையும் ஒழித்து விட்டால் செயலளவில் பேதம் அழிந்து விடும். இந்த நாட்டில் பலவற்றில் இருந்த பேதத்தை ஒழித்தது நாம் தானாவோம். கோயில் பிரவேசத்தில் இருந்து மற்ற யாவற்றையும் செய்தது நாம் தான். காந்தியோ மற்ற எவரோ கோயிலில் நுழைவதற்காக ஏற்பாடு செய்யவில்லை.

காந்தியார், ஆதிதிராவிடர்களுக்குத் தனியாகக் கோயில் கட்டிக் கொடு, குளம் வெட்டிக் கொடு என்று சொன்னாரே ஒழிய, இருக்கிறதை அவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை.

முதன் முதலில் ஈரோட்டில் ஆதிதிராவிடர் தோழரை அழைத்துக் கொண்டு போனோம். அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை இரட்டணை என்கிற ஊர்களிலும் நடந்தது என்றாலும், ஆதிதிராவிடர்களைக் கோயில்களுக்குள் அனுமதிக்கவில்லை; அதன்பின் வைக்கத்திலே தெருவிலே நாடார்கள் நடக்கக் கூடாது என்றிருந்தது; அதை எதிர்த்து அங்குப் போராட்டம் ஆரம்பித்தார்கள். போராட்டம் வலுவற்றுப் போனதும் என்னைக் கூப்பிட்டார்கள். நான் இங்கிருந்து புறப்பட்டுப் போய் தொடர்ந்து போராட்டம் நடத்தினேன். என் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை என்றதும் என்னைக் கொல்வதற்காக திருவனந்தபுரம் ராஜா ``சத்ரு சங்கார யாகம் என்பதாக ஒன்று நடத்தினார். அந்த யாகத்தின் முடிவில் ராஜாவே செத்துப் போய்விட்டார். அதன் பின் இராணி பட்டத்திற்கு வந்ததும், சமரசத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது அங்கு திவானாக இருந்தவர் பார்ப்பனரானதால் நம்மைக் கூப்பிட்டுச் சமரசம் செய்தால், நமக்கு அந்தப் புகழ் வந்து விடுமே என்றுக் கருதி, காந்தியை வருவித்து சமரசத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். இராணி ரோடுகளில் யாவரும் நடப்பதற்கு அனுமதி வழங்குவது பற்றி ஆட்சேபனை இல்லை. ஆனால் நாளைக்குக் கோயிலுக்குள் போக வேண்டுமென்று கேட்கக் கூடாது  என்று காந்தியாரிடம் சொன்னதும், அவர் நான் ராமசாமியிடம் போய்க் கேட்டு  வந்து சொல்கிறேன் என்று, சொல்லி என்னை வந்து கேட்டார். அதற்கு நான் இப்போது கோயிலுக்குள் போக வேண்டுமென்று கேட்கவில்லை. ரோடுகளைத் திறந்து விட்டால் போதும். பிறகு அதைப் பற்றி மக்களுக்கு விளக்கி, மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொண்டு பிறகு அது பற்றித் தனியாகப் போராடிக் கொள்கிறேன் என்று சொன்னதும் அவர் இராணியிடம் சென்று சொல்லி அதன்பின் ரோடுகளையெல்லாம் திறந்து விட்டுவிட்டார்கள், தெருவிலே எல்லோரும் நடக்கலாம் என்று சட்டம் செய்து விட்டார்கள்.

அதன்பின் கோயிலுக்குள் யாவரும் போக வேண்டும் என்பதற்காகப் பிரசாரம் செய்தேன். பல மாநாடுகள் போட்டேன். அதன்பின் இஸ்லாம் மதத்தில் சேர்வது என்று சொல்லி அதற்காக ஒரு மாநாடு ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டிற்கு என்னைத் தலைமை ஏற்க வேண்டுமென்று சொல்லி எர்ணாகுளத்தில் அந்த மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டிற்கு வட நாட்டிலிருந்து ஒரு முஸ்லிம்  தலைவர் வந்திருந்தார்; கிறிஸ்து மதத்தில் சேர்ப்பதற்காக கிறிஸ்தவப் பாதிரிகள் வந்திருந்தனர்; அந்த மாநாட்டில் முஸ்லிம் தலைவர், இஸ்லாமாவதற்குச் சுன்னத் செய்து கொள்ள வேண்டியதில்லை, மொட்டையடித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை, தாடி வைத்துக் கொள்ள வேண்டுமென்கின்ற அவசியமில்லை, கடவுள் உண்டு என்கின்ற நம்பிக்கை இருந்தால் போதும் என்று சொன்னார். அந்த மாநாட்டிலேயே 50-க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்தார்கள். 10, 15 தினங்களுக்குப் பின் ஆதிதிராவிடராக இருந்து இஸ்லாம் மதத்தில் சேர்ந்த ஒருவர் ஆதிதிராவிடர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடத்தில் நடந்து சென்றபோது, இந்துக்கள் புலையனாகிய நீ எப்படி இங்கு நடக்கலாம் என்று சொல்லி அவனை அடித்ததும், நான் புலையனல்ல முஸ்லிம் என்று  அவன் சொன்னதும், முஸ்லிம்கள் யாவரும் சேர்ந்து இந்துக்களை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். பெரிய கலகம் ஏற்பட்டு விட்டது. இப்படியே விட்டு விட்டால் இந்துக்கள் யாவருமே முஸ்லிம்கள் - கிருஸ்தவர்களாகிவிடுவார்கள் பயந்து கோயில்கள், சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிகள், தெருக்கள், அலுவலகங்கள் யாவற்றிலும் எல்லோரும் செல்லலாம் என்று சட்டம் செய்து விட்டார்கள். இது பற்றிக் கேட்டதற்கு,

இராமசாமி அய்யர் இராமானுஜருக்குப் பிறகு தோன்றிய மகான் இராணி தான் ஆகும் என்று சொன்னார். ஏன் இப்படிச் சொன்னார் என்றால் இராமானுஜர் தான் முதன் முதலில் யாவரும் ஜாதி பேதமில்லாமல் கோயிலுக்குள் போகலாம் என்று சொன்னவராவார்.அதன் பின் சொன்னது இந்த இராணி தானாகும். இதைப் பார்த்தததும் காந்திக்கு மிக வெட்கமாகப் போய்விட்டது. அதன் பின்தான் இராஜாஜியும், காந்தியும் சேர்ந்து இனி இங்கு திறந்துவிடாவிட்டால் கலவரம் ஏற்படும் என்று நினைத்துக் கோயில்களைத் திறந்து விட முன் வந்தார்கள். ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள்ளும் சூத்திரர்கள் செல்லும் இடம் வரை செல்லலாம் என்று சொன்னார்கள். அப்போது நான் காந்தியிடம், இதனால் எங்களையும் பறையனாக்கி விட்டீர்களே தவிர, பார்ப்பான் செல்கிற இடம் வரை செல்ல எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று சொன்னதும், பார்ப்பானும் சூத்திரர் செல்கிற இடம்வரை தான் செல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்களே ஒழிய, செயல்முறையில் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. இப்போது பார்ப்பான் சொல்வதெல்லாம் புனிதம் கெட்டு விடுவதாகச் சொல்ல வில்லை; இலட்சக்கணக்கான ரூபாய் பெறும் நகைகள் இருக்கிறது; அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் சொத்தைக் காப்பதற்காக நாம் இழி மக்களாக இருப்பதா- சூத்திரர்களாக? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருப்பதா? என்று கேட்கிறேன்!

நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் செல்ல வேண்டும் என்பது நமக்கு இருக்கிற சூத்திரத் தன்மையை,- இழி ஜாதித் தன்மையைப் போக்கிக் கொள்வதற்காகவே யாகும் இதற்காகப் பல ஊர்களில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் இருக்கிற கர்ப்பக்கிருகத்திற்குள் நுழைவது என்று திட்டம் செய்திருக்கின்றோம். நாம் போவதைத் தடுப்பதற்காக எவனோ பட்டினிக் கிடக்கப் போகிறானாம்; குறுக்கே படுக்கப்போகிறானாம். அது மாதிரி செய்தால் நாம் ஜனவரி 26 வரை கூட பொறுக்க வேண்டியதில்லை. அவன் ஆரம்பிக்கிற அன்றே நாம் ஆரம்பித்து விடலாம். இப்போதே 2000 பேருக்கு மேல் தயாராக இருக்கிறார்கள். நான் குறிப்பிட்டால் உடனே வருவதற்கு தயாரான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

திருச்செந்தூர் முதல் மதுரை, பழனி, சிதம்பரம், சீரங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் இப்படிப் பல இடங்களில் நடத்தத் திட்டம் செய்திருக்கிறேன். பல தரும கர்த்தாக்களே தாங்களும் கலந்து கொள்வதாக முன் வந்திருக்கின்றார்கள். முன்னேற்றக் கழகத்தில் ஏற்பாடு செய்த தரும கர்த்தாவானதால் அவர்களும் பலர் தயாராக இருக்கிறார்கள். திருச்செந்தூரில் ஆரம்பித்தால் கொலை கூட விழலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் துணிந்துதான் இதை ஆரம்பித்து இருக்கிறேன். அதற்குள் அரசாங்கம் தானாக முன் வந்து எதையாவது செய்யாவிட்டால் நிச்சயம் நடந்து தான் தீரும். எத்தனை தலைமுறைக்கு நாம் சூத்திரர்களாகப்- பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருப்பது? நம் பிள்ளைக்குட்டி காலத்திலாவது அது மாற வேண்டாமா? நீங்களெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம் மக்கள் வணங்குகின்ற- கடவுள் என்று போற்றுகின்ற எந்தக் கடவுள் ஒழுக்கமானது? நாணயமானது? நேர்மையானது? அன்போடு கூடியது? சிவன்-, விஷ்ணு, -கந்தன், -பிள்ளையார், -இராமன் அவன் பெண்டாட்டி பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவையெல்லாம் ஒழுக்க முடையவையா? இதோ இருக்கிறது அவர்கள் சாஸ்திரப் புராணங்கள்! நீங்களே படித்துப் பாருங்கள் எனச் சொல்லி இராமன், கந்தன், -பிள்ளையார், கிருஷ்ணன் ஆகியவற்றின் பிறப்பு, செயல் ஆபாசங்களைப் புராணங் களிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கியதோடு, இனி நம் மக்கள் கோயில் என்றால் காரித்துப்பனும், மூட நம்பிக்கையான பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாடக் கூடாது.

05.12.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை, 15.12.1969

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:45 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சூத்திரன்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஆலயப்பிரவேசம் உண்மை என்றால் அவனையும் மணி அடிக்கச் செய்!

 08.05.1948 - குடிஅரசிலிருந்து...
August 14, 2021 • Viduthalai

பஞ்சமனைக் கோயிலில்கூட அனுமதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வாயா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே!  அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?

இந்த அக்கிரமமெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகிவிட்டது. ஆகவே, பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:25 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கோயில் நுழைவு

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஏழைகள் கண்ணீர் (தொழிலாளர்)


          July 31, 2021 • Viduthalai

07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான் தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள். ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர் கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:56 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

பெண்கள் சுதந்திரம்

 

         August 06, 2021 • Viduthalai

24.01.1948 - குடிஅரசிலிருந்து...

கேள்வி : பெண்களுக்குப் புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

விடை : கற்பு என்கிற வார்த்தையும், விபசார தோஷம் என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே சட்டப்படி முழு விடுதலை பெற்றிருக்கின்றார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்க வேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல், புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன் என்றோ; ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூட வேண்டியதில்லை, துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண் பாத்திரம், அதை யாராவது தொட்டால், கழுவினால் கூடத் தீட்டுப் போகாது, அதை உடைத்து குப்பைத் தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல், தாங்கள் தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

- தந்தை பெரியார்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:08 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள் பெரியார் சொன்னதோடு- எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை; அவற்றை செயல்படுத்தினார் - சமத்துவத்தைக் காட்டினார்!

 

       August 08, 2021 • Viduthalai

மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, ஆக.8  மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்னதோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

கடந்த 31.7.2021 அன்று, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1, வகுப்பு - 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது  நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தாய்மையினுடைய சிறப்பு, கற்பினுடைய பெருமை என்று நம் நாட்டில் பேசாதவர்களே கிடையாது.

ஆனால், நடைமுறையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

அய்யா மிக எளிமையாக இரண்டு விஷயங்களைக் கேட்கிறார்.

பெண் விடுதலையைப்பற்றி நாம் இவ்வளவு பெரிய புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். இதைப்பற்றி பலப் பல இடங்களில் சொல்லியிருக்கிறோம்.

அய்யா அவர்கள், பெண்ணிய சிந்தனை, சமத் துவத்தைப்பற்றி சொல்லும்பொழுது,

செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம்!

செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில், ஆண் - பெண் பேதமில்லாத ஒரு வாழ்க்கை - பெண் ணுக்கு சம உரிமை வேண்டும்.

சொத்துரிமை - கல்வி உரிமை - உத்தியோக உரிமை - அது காவல்துறையாக இருந்தாலும், இராணுவத் துறையாக இருந்தாலும் என்று தீர்மானம் நிறைவேற்றி னார் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பாக.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, தன்னுடைய வாழ்க் கையில் அதனை செயல்படுத்தியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

நீங்கள் எல்லாம் ‘பெரியார்' திரைப்படம் பார்த்திருப் பீர்கள். அதில் ஒரு காட்சி வரும்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?''

தன்னுடைய தங்கை மகள் அம்மாயிக்கு பால்ய விவாகம் செய்து வைக்கிறார்கள்; அந்த மணமகன் கால்ரா நோயினால் இறந்து போக, அந்த சிறு பெண் ணுக்கு விதவைக் கோலம் பூண முயற்சிக்கிறார்கள். அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய தாய்மாமனான பெரியாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுகிறார். அந்தக் குழந்தையைத் தூக்கி நிறுத்தும்பொழுதே -  ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற நூலில் சொல்லியிருப்பார் - ‘‘நான் தூக்கி நிறுத்தும்பொழுதே,  அதற்குப் புது வாழ்வு கொடுக்கவேண்டும் என்று தூக்கி நிறுத்தி னேன்'' என்று அழுத்தம் திருத்தமாக எழுதியிருப்பார்.

அதை வாழ்க்கையில் செய்து காட்டினார். எப்பொழுது?

110 ஆண்டுகளுக்கு முன்பு.

இன்றைக்குக்கூட சீர்திருத்தம் பேசுகிறவர்கள்கூட - ஆணாதிக்க சிந்தனை ஒரு பக்கம் உண்டு. விதவைத் திருமணம் என்றால் யோசிக்கிறார்கள்; மணவிலக்குப் பெற்றவர்கள் என்றால், அதைவிட யோசிக்கிறார்கள். ஏன்? இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை.

ஆணினுடைய சுயநலம் இதில் அதிகமாக இருக் கிறது. இதையும் தாண்டி ஒருவர் சிந்தித்தார் என்றால், அதுதான் தந்தை பெரியார்.

அவர் சென்ற எல்லைக்கு யாரும் போகவில்லை.

பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்!

1938 இல் அய்யா சொல்கிறார்,

‘‘பெண்கள் சுதந்திர விஷயமோ மோசமாக இருக்கின்றது; பெண்கள் விலை பொருள்களாகவே மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமை ஆகிய எல்லா பருவங்களிலும், பெண்கள் அடிமைப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

இவற்றைப் பற்றியெல்லாம் நான் சொல்வது, பழைமை விரும்பிகளுக்குக் கஷ்டமாகத் தோன்ற லாம்; அப்படிப்பட்டவர்கள் பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்'' என்றார்.

இந்த ஒரு வரியை நீங்கள் கொஞ்சம் விளக்கிப் பாருங்கள்.

சமுதாயத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அடிமையாக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்?

எனவே, பெண்கள் விடுதலை, பெண்கள் உரிமை, பெண்களின் சமத்துவம் என்பது, பெண்களுக்காக மட்டுமல்ல, மனித குலத்தினுடைய விடுதலைக்கே அது முக்கியமானது.

விரிந்த பார்வை - விசாலமான பார்வை - விஞ்ஞான பார்வை!

பெரியாருடைய பார்வை - விரிந்த பார்வை - விசாலமான பார்வை - விஞ்ஞான பார்வை.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு - Empathy என்று. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். கல்லூரி தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். இதுவரையில், பெரும்பாலான பயன் நடைமுறையில் Sympathy  என்றுதான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், Empathy என்ற வார்த்தை புழக்கத்திலேயே வரவில்லை. ஏன் படித்தவர்களுக்குக்கூட Empathy என்ற வார்த்தை தெரியாது. Sympathy என்ற வார்த்தை நிறைய பேருக்குத் தெரியும்.

எம்பதி என்றால் என்ன?

I Express my Sympathy ஆனால், Empathy என்றால் என்ன?

இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

இதைப் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தக் காணொலி கூட்டத்திலும் சொல்கிறேன்.

ஒருவருக்கு ஒரு இழப்பு ஏற்படும்பொழுது நாம் அனுதாபப்படுவோம்.

அய்யோ அவருடைய கணவர், கரோனா தொற்றி னால் இறந்துவிட்டாரா? அனுதாபத்தைத் தெரிவிக் கிறோம் என்று சொல்வது இரங்கல் - சிம்பதி.

ஆனால், மிக நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள், பழகக் கூடியவர்கள் என்று சொல்லும்பொழுது, அவர் களுடைய துன்பத்தை அப்படியே உணர்ந்து, உணர்ந்து இருக்கக்கூடியது என்பது சாதாரணம், முதற்கட்டம்.

ஆனால், உண்மையில், எம்பதி என்றால் என்ன வென்றால், முழுக்க முழுக்க அவர்களாகவே மாறிவிடுவது. அவர்கள் அணிந்த காலணியை, ஒரு காலை விட்டு நடந்து செல்வது - அவர்களுடைய உணர்வு களாகவே மாறிவிடுவது.

நோயாளிகள் துன்பப்படுவதைப் பார்த்து இரங்குவது என்பது வேறு; நோயாளி இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பது என்பது வேறு.

பெரியார் அவர்கள், மனித குலத்தைப் பார்த்து, அதிலும் அடிமைகளாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட வர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களை எப்படிப் பார்த்தார்களோ, அதைவிட கொடுமைகளை அனுபவிக்கக் கூடிய பெண்ணினத்திற்கு விடுதலை வேண்டும் என்று பாடுபட்டார்கள்.

எம்பதி என்பதற்குத் தமிழ்ச் சொல் என்னவென்றால், ஒத்தறிவு என்று நாம்தான் உருவாக்கினோம்.

திருக்குறளில்கூட அந்த வார்த்தை இருக்கிறது.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்.

பட்டறிவு, பகுத்தறிவு போன்று, நாமே உருவாக்கிய சொல் ஒத்தறிவு.

துன்பப்படுபவரைப்போலவே மாறிவிடுவது.

வள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது

ஒத்தது அறிவான் என்பதிலிருந்துதான் அந்தச் சொல்லை எடுத்தோம்.

ஒத்தறிவு - ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் -

அப்படி இல்லாதவன் யார் என்றால், வள்ளுவருடைய மனிதாபிமானம் உயர்ந்தது.

மற்றோர் செத்தாருள் வைக்கப்படுவர்

உயிரோடு இருந்தால்கூட, அவர்கள் செத்துப்போன வர்களின் கணக்கில்தான் வருவார்கள். அவர்களை மனிதன் என்று சொல்வது இல்லை.

மனிதன் என்று சொன்னால், மற்றவர்களுடைய துன்பத்திற்கு இரங்கினால் மட்டும் போதாது; துன்பத்தைக் களைவதில், மற்றவர்களாக ஆகிவிடுவதுதான். அந்த இடத்திலே தன்னை நிறுத்திக் கொண்டார் பெரியார் அவர்கள்.

பெண்களைப் பாருங்கள், அவர்களை அடக்கி வைத்திருக்கிறீர்களே என்றார்.

தன்னுடைய சகோதரி மகள் என்று மட்டும் அவர் அன்றைக்குச் சொல்லவில்லை.

அந்த சிந்தனை, துணிச்சல் இன்றைக்கு எவ்வளவு வந்திருக்கிறது; எத்தனை தலைமுறை வந்திருக்கிறது?

பெரியார் சொன்னதோடு முடிந்தது என்று கருதவில்லை -

அவற்றை செயல்படுத்தினார்!

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடு தலையைப்பற்றி பாடினார்கள், பேசினார்கள், எழுதினார்கள்; காலத்தைக் காட்டி, அவர்களை முன்னோடிகள் என்றார்கள்; பெரியார் சொன்ன தோடு நிற்கவில்லை; எழுதியதோடு தன் பணி முடிந்தது என்று கருதவில்லை. செயல்படுத்தினார். சமத்துவத்தைக் காட்டினார்; அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. குடும்பத்திலே அவர் எதிர்நீச்சல் அடித்துத்தான், பொதுவாழ்க்கைக்கு வந்து, சமூகத்திலும் எதிர் நீச்சல் அடித்து வந்தார்.

இப்படிப்பட்ட ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

இப்படிப்பட்ட கொள்கை எவ்வளவு பெரிய மானுடத்தினுடைய உச்சம்.

மானிடத்தினுடைய மிகப்பெரிய ஒரு மலர்ச்சி. அதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

மனிதனை மனிதனாக்குவது என்பதுதான்!

ஆகவேதான், பெண்ணுரிமை என்பது, அது ஏதோ உரிமை, அதைப்பற்றி பேசுகிறார்கள்; அது என்னங்க, என்று அலட்சியமாகப் பேசுவது என்பது இருக்கிறதே - மனிதாபிமானம் - மானுடப்பற்று.

ஏனென்றால், ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்; ஆனால், அவனை மனிதனாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். திருமண மானவர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம். நம்முடைய வாழ்விணையரிடம் இதை நூற்றுக்கு நூறு கடைபிடிக்கின்றோமோ? இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் உண்டா? சிக்கல்தான்.

ஏனென்றால், நான் சுயநலக்காரன் - என்னுடைய வாழ்விணையர் நல்ல வேலைக்காரியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். என்னை அறியாமல், அந்த ஆதிக்கத்தனம் - நான் இதுவரை சமையல் அறைக்குள் செல்லவில்லையே! இதுதான் வாழ்க்கை முறை.

இதை தந்தை பெரியார் விருப்பு, வெறுப்பில்லாமல் பார்த்தார்.

ஆகவேதான், ஒரே வார்த்தையில் சொன்னார், பெண்களாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்; அவர்களுடைய கஷ்டத்தை அனுபவியுங்கள் என்றார்.

அதுமட்டுமல்ல, பிறப்பதற்குக்கூட சுதந்திரம் இல்லை என்பது மட்டுமல்ல, குழந்தை பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் எல்லா பருவத்திலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள்.

அதை மாற்றிக் காட்டினார் பெரியார் அவர்கள்.

பெண்களுக்குப் படிப்பைக் கொடு; சுதந்திரத்தைக் கொடு.

சரி, பெண்களுக்கு படிப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்தால் மட்டும் போதுமா?

அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்.

சமத்துவம் - சொத்துரிமை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு.

இவ்வளவு இருந்தாலும், இன்னமும் ஆண் எஜமானன்தான்; அடிப்படையில் இது ஆணாதிக்க சமுதாயம்தான்.

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான், இன்ப வாழ்வு வாழலாம்!

முழுக்க பெரியாரியம் உள்ளே நுழைந்தால்தான், அது வேலை செய்தால்தான், அதனுடைய கருத்து வீச்சு உலகளாவிய அளவில் பரவினால்தான், ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பெரியார் நுழைந்தால்தான், இன்ப வாழ்வு வாழலாம்.

இன்ப வாழ்வு - இப்பொழுது இருப்பது துன்ப வாழ்வுதான். பல நேரங்களில் துன்ப வாழ்விற்கு என்ன அடிப்படை?

அந்த எஜமானத்தனம்தானே!

பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புதானே!

படித்த பிறகு, பக்குவம் பெற்ற பிறகு, பகுத்தறிவு சிந்தனைக்கு ஆளான பிறகு, பெண்கள் அவ்வளவு சுலபமாக அடிமைகளாக இருப்பார்களா?

அப்பொழுது அவர்கள் எதிர்த்து நிற்கிறபொழுது, கொஞ்சம் மாறுபடுகிறபொழுது,

ஆ, என்னையா எதிர்க்கிறாய்? என்று நினைக்கக் கூடிய அளவிற்கு இருப்பார்கள் ஆண்கள்.

பெரியார்தான் கேட்டார்,

பெண்கள் அடிமையானது மட்டுமல்ல, உடல்மீது அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?

பெண்ணடிமையைப் போக்குவதைப்பற்றி மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை. இதோ சுயமரியாதைத் திருமணம் - இரண்டு பேரும் நண்பர்கள். ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமையல்ல.

இரண்டு பேரும் நண்பர்கள்.

வைதீகத் திருமணத்தில் இப்படியா?

கன்னிகாதானம் என்று சொல்லி தானம் கொடுப்பது; பொருள்களைத்தான் தானம் கொடுப்பார்கள்; மனிதனை தானம் கொடுப்பார்களா?

மனிதம் இல்லை அந்த இடத்தில்.

தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை!

ஆகவேதான், பெரியாருடைய தத்துவம், பெண் ணுரிமை என்பது மட்டுமல்ல - மனிதர்களை மனிதர் களாக்குவது; மனிதர்கள் மனிதர்களாக்கப்பட வேண்டும். உருவில் மனிதன்; தத்துவத்தில், சமத்துவத்தில், சம வாய்ப்பில் அவர்கள் மனிதர்களாக இல்லை.

அதைக் கண்டு பெரியார் நொந்து போனார்; அதைக் கண்டு ஆத்திரப்பட்டார். மேலும், அதைக் கண்டு கொதித்துப் போனார். அநியாயமாக இருக்கிறதே, இது என்ன கொடுமை? அதை ஏற்கலாமா? என்று கேட்டார்.

அதுமட்டுமல்ல, ஏற்க முடியாதவர்களுக்கு, எளிமையாக ஏற்றுக்கொள்வது எப்படி என்பதற்கு, அழகாக ஒரு கருத்தை சொல்கிறார் பாருங்கள்.

பெரியாருடைய புரட்சிகரமான சிந்தனை - எவ்வளவு மென்மையான வழிமுறையின்மூலம் அதைப் புகுத்துவதற்குத் தயாராக இருந்தார்.

கடுமையான கருத்துகளும் இருக்கின்றன; ஆனால், மென்மையாக சொல்லக்கூடிய கருத்தை சொன்னார்.

பெண்களுக்கு உரிமை கொடுக்கும்பொழுது ஆண்களே உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்!

ஆண்களே, பெண்களுக்கு உரிமை கொடுக்கும் பொழுது, உங்களுடைய மனைவியை நினைக்காதீர்கள்; ஏனென்றால், நீங்கள் எஜமானன்; அனுபவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களுடைய மகளை நினைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பாருங்கள்.

எல்லோரும் தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும்; சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றுதானே நினைப்பார்கள்.

உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள்; என்னுடைய தாய் இப்படி குடிகார அப்பனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறாரே என்று நினைத்துப் பாருங்கள்; இதுபோன்ற ஊதாரித்தனமான  பேர்வழியை, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நினைக்கிறார்களே!

பெரியார் சொல்கிறார்,

உங்கள் தாயை நினைத்துக்கொண்டு பாருங்கள், உங்களுடைய தங்கையை நினைத்துக் கொண்டு பாருங்கள் என்றார்.

அய்யோ, என் தங்கையை நான் ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன். அவன் திருட்டுப் பயலாக இருக்கிறானே - மிகவும் மோசமானவனாக இருக்கிறானே - என்ன சொன்னாலும் திருந்தாதவனாக இருக்கிறானோ என்று நினைக்கிறார்கள்.

அதே சமயம், மனைவி என்று வரும்பொழுது, இவன் நூற்றுக்கு நூறு அனுபவிக்கிறானே - நான் அடிக்கடி மணவிழாக்களில் சொல்கிற உதாரணத்தை இங்கேயும் சொல்கிறேன்.

மகன், மகளுக்குத் திருமணம் செய்து விட்டீர்கள். உங்களுக்கு இனி நிம்மதிதான் என்று கேட்டுவிட்டு, சரி, மகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டால்,

நல்ல மருமகன் அவர். என்னுடைய மகள்  என்ன சொல்கிறாளே, அவள் கிழித்த கோட்டை தாண்டாமல், அமைதியாக இருக்கிறார் என்று சொல்கிறார்.

சரி, உங்களுடைய மருமகள் எப்படி இருக்கிறாள்? என்று கேட்டவுடன்,

ஆமாம், அதை ஏன் கேட்கிறீங்க; எனக்கு என்று வந்து வாய்த்தாளே என்று சலிப்புடன் சொல்கிறார்.

ஒரே சிந்தனை - ஒரே நோக்கு -

அதுமட்டுமல்ல, பெண் குழந்தை பிறப்பதற்கே மிகப்பெரிய கொடுமை!

ஆகவேதான், பெண்ணுக்குப் பிறக்க உரிமையில்லை - வாழ உரிமையில்லை - படிக்க உரிமையில்லை - சொத்துரிமை இல்லை.

இன்றைக்கு சட்டங்கள் வந்திருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்.

சட்டங்கள் வந்திருக்கின்றன - சட்டங்கள் எங்கே இருக்கின்றன? புத்தகத்தில் இருக்கின்றன. அது நடைமுறைக்கு வந்ததா? என்றால், இல்லை.

நாம் போகவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன!

எனவேதான், நாம் போகவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன.

திருமணம் முடிந்தவுடன், எத்தனை குழந்தை என்ற கேள்வியைத்தான் எல்லோரும் கேட்பார்கள். அந்த உரிமை யாருக்கு?

அடுத்தாக பெரியார் ஒரு கேள்வி கேட்டார்,

திருமண அழைப்பிதழில் என்ன அச்சடிக்கிறார்கள் என்றால், ‘‘பெரியோர்களால் நிச்சயித்தபடி'' என்று.

ஏண்டா, பெரியோர்களால் நிச்சயித்தபடி என்றால்,  இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அவர்களுக்குத்தான் உரிமையே தவிர, பெரியோர்களுக்கு என்ன வேலை?

‘‘எங்களால் நிச்சயித்தபடி, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபடி என்று போடுங்கள்'' என்றார்.

அதுதான் வாழ்க்கை - அதுதான் சமத்துவம் - அதுதான் வாய்ப்பு என்று மிகத் தெளிவாக சொன்னார்.

ஆகவே நண்பர்களே, இது ஒரு பகுதி -

இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்!

எனவே, சம உரிமைகளைப்பற்றி பேசக்கூடிய உணர்வுகளை உருவாக்கி, அதிகாரத்திற்குரிய சட்டங் களுக்காகப் போராடி வெற்றி பெற்று செயல்படுகின்ற கட்டத்தில், எப்படி வந்திருக்கிறார் என்று சொல்லும் பொழுது, இனிமேல்தான் பெரியார் இன்னமும் தேவைப் படுகிறார். இன்றும் தேவைப்படுவார் - நாளைக்கும் தேவைப்படுவார் -என்றைக்கும் தேவைப்படுவார்.

எனவேதான், அருமை மாணவச் செல்வங்களே, நீங்கள் வயது இடைவெளி இல்லாமல் வந்திருக்கிறீர்கள். பெரியார்தான் மிகப்பெரிய ஓர் ஆயுதம் - ஒரு பாதுகாப்பு அரண்.

சமத்துவத்தை நிறுவியவர் அவர்தான்.

பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி - சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்!

புல்டோசர் எப்படி எல்லாவற்றையும் இடித்து, சமமாக நிரவுகிறதோ, அதுபோன்று பெரியார் அவர்கள் புல்டோசர் மாதிரி. சமுதாயத்தை சமமாக்குவதற்குக் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

யாருக்காக?

மனிதநேயத்திற்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:06 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், பெண்கள் விடுதலை
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

தந்தை பெரியார்

தந்தை பெரியார்
135 அடிஉயர பெரியார் சிலையின் முன் வடிவம்

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா 12.12.2024

தந்தை பெரியார் அறிவுரை

மனித வாழ்வில் பல்வேறு துறைகளிலும் இருக்கிற குறைபாடுகளை எடுத்து சிந்தித்துப் பார்த்து, சொல்லி அவைகளை நீக்கிச் சிர்திருத்தம் செய்யச் சொல்வது தவிர வேறு நோக்கம் எனக்கு ஏது? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

சிறப்புடைய இடுகை

இந்து மதம் என்றால்...? -தந்தை பெரியார்

இந்து மதம் என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கே அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 144ஆவது
  • 21 மொழிகள்
  • அக்ரகாரம்
  • அடிமை
  • அண்ணா
  • அணிமணி
  • அம்பேத்கர்
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோக்கியத்தனம்
  • அயோக்கியன்
  • அரசியல்
  • அரசியல் சட்டம்
  • அரசியல் நிர்ணயசபை
  • அரசு
  • அரிச்சுவடி
  • அருணாசல புராணம்
  • அல்லா
  • அலங்காரம்
  • அவதாரம்
  • அழிந்த விதம்
  • அழியும்
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அன்பு
  • அனுபவம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசை
  • ஆட்சி
  • ஆண்
  • ஆண்டாள்
  • ஆத்திகம்
  • ஆத்மா
  • ஆதி
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆபத்து
  • ஆயுதபூசை
  • ஆயுதம்
  • ஆரம்பம்
  • ஆராய்ச்சி
  • ஆரிய ஆதிக்கம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திகம்
  • ஆஸ்திகாம்
  • இ எம் எஸ்
  • இசுலாம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்
  • இந்தியா
  • இந்து
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இயக்க வளர்ச்சி
  • இயக்கம்
  • இயந்திரம்
  • இயேசு
  • இரங்கல்
  • இரங்கற் பா
  • இராகுல்
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கியம்
  • இலங்கை
  • இழிவு ஒழிப்பு
  • இழிவு ஒழிப்பு மாநாடு
  • இளைஞர்
  • இறுதி ஊர்வலம்
  • இறுதிப் பேருரை
  • இறுதிப்பேருரை
  • இறுதிபேருரை
  • உடல் உழைப்பு
  • உண்மை
  • உணர்ச்சியுரை
  • உணவு
  • உயர்ந்தவன்
  • உயர்வு
  • உயர்வு தாழ்வு
  • உயிரினம்
  • உரிமை
  • உரையாடல்
  • உலக உற்பத்தி
  • உலகம்
  • உலோகாயதம்
  • உழைப்பு
  • உறுதிமொழி!
  • எச்சரிக்கை
  • எம்.ஜி.ஆர்
  • எம்.ஜி.ஆர்.
  • எரிப்பு
  • எல்லோருக்கும் எல்லாம்
  • எழுச்சி
  • எளிமை
  • எனது கவலை
  • எஸ்.எஸ்.ஆர்
  • ஒடிசா
  • ஒழிப்பு
  • ஒழுக்கம்
  • ஒழுக்கம் உண்டாக
  • ஒற்றுமை
  • கட்ட ஆட்டம்
  • கடலூர்
  • கடவுள்
  • கடவுள் உணர்ச்சி
  • கடவுள் கதை
  • கடவுள் கொள்கை
  • கடவுள் சக்தி
  • கடவுள் சித்தம்
  • கடவுள் நம்பிக்கை
  • கடவுள் மறுப்பு
  • கடவுளை வணங்குகிறவன்
  • கடைசி மாநாடு
  • கண் திறக்குமா
  • கண்ணதாசன்
  • கணவர்
  • கத்தார்
  • கதர் நிதி
  • கந்தன்
  • கர்ப்பகிரகம்
  • கருணாநிதி
  • கருணை
  • கருத்து
  • கருப்பு சட்டை
  • கருப்புச்சட்டை
  • கல்வி
  • கல்வி அறிவு
  • கலைஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கழகம்
  • களங்கள்
  • களம்
  • கற்பழிப்பு
  • கற்புநெறி
  • கன்னடத் திரைப்படம்
  • கனவு
  • கா.சுப்பிரமணியனார்
  • காட்
  • காட்டுமிராண்டி
  • காணொளி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • காமராஜர்
  • கார்த்திகை
  • கார்த்திகை தீபம்
  • காவிரி நீர் உரிமை
  • கி.வீரமணி
  • கிருத்தவம்
  • கிருஸ்தவம்
  • கிளர்ச்சி
  • கீதை
  • கீழ் ஜாதி
  • குசேலர்
  • குர் ஆன்
  • குரான்
  • குருகுலம்
  • குலக்கல்வி
  • குலக்கல்வி திட்டம்
  • குழந்தை திருமணம்
  • குழந்தைப் பேறு
  • குற்றம்
  • குறள்
  • குறள் வாழ்த்து
  • கூட்டங்கள்
  • கூட்டம்
  • கெடுவான்
  • கேரளா
  • கேள்வி
  • கைபலம்
  • கொடுமை
  • கொளத்தூர்
  • கோடம்பாக்கம்
  • கோபி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோயில் பணம்
  • கோயில்கள்
  • கோரா
  • கோவி.லெனின்
  • கோவில்
  • சக்தி
  • சங்கராச்சாரி
  • சட்ட எரிப்பு
  • சடங்கு
  • சடங்குகள்
  • சத்தியாக்கிரகம்
  • சந்திப்பு
  • சந்திரன்
  • சந்தேகம்
  • சம உரிமை
  • சமத்துவத் தொண்டன்
  • சமத்துவம்
  • சமதர்மம்
  • சமரசம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாய தொண்டு
  • சமுதாயப் புரட்சி
  • சமூக இயல்
  • சமூக சீர்திருத்தம்
  • சமூக திருத்தம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சரசுவதிபூசை
  • சரஸ்வதி பூஜை
  • சன்மார்க்கம்
  • சனாதனம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி தொழில்
  • சாமி
  • சாவி இதழ்
  • சாஸ்திர புராணம்
  • சாஸ்திரம்
  • சித்திர புத்திரன்
  • சித்திரபுத்திரன்
  • சித்ரபுத்திரன்
  • சிதம்பரம்
  • சிந்தனைத் துளி
  • சிந்தி
  • சிந்தியுங்கள்
  • சிவராத்திரி
  • சிறீராமன்
  • சிறுவர்கள்
  • சீர்திருத்தம்
  • சுட்டெரிப்போம்
  • சுதந்திரம்
  • சுதேசமித்திரன்
  • சுப்பிரமணியன்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம்
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைக்காரர்
  • சுயராஜ்யம்
  • சுயராஜ்யா கட்சி
  • சுவையான நிகழ்ச்சிகள்
  • சூத்திர இழிவு
  • சூத்திரன்
  • செங்கல்பட்டு
  • செங்கல்பட்டு மநாடு
  • செல்வம்
  • செஸ்
  • சேரன்மாதேவி
  • சேவை
  • சொத்து
  • சொர்க்கம்
  • சொர்க்கவாசல்
  • டாக்டர் நாயர்
  • தகுதி
  • தடை
  • தத்துவம்
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் அரசு கல்லூரி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் எழுத்து
  • தமிழ் மொழி
  • தமிழ் வருஷப் பிறப்பு
  • தமிழ்க் காசு
  • தமிழ்த் தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தமிழ்நாடே
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் கழகம்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் விழா
  • தமிழன் படிப்பு
  • தமிழிசை
  • தயார்
  • தர்மம்
  • தலை விதி
  • தலைமைத்துவம்
  • தலைவர்கள்
  • தலைவன்
  • தவறு
  • தற்காப்பு
  • தற்கொலை
  • தன் வரலாறு
  • தன்மை
  • தன்னைப்பற்றி
  • தாடி
  • தாமதம்
  • தாய்மார்கள்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • திணிப்பு
  • திதி
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட மாணவர்
  • திராவிடம்
  • திராவிடமே
  • திராவிடர்
  • திராவிடர் - ஆரியர்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர்- ஆரியர்
  • திராவிடர். இந்து
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருச்சி சிவா
  • திருநீறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திரைப்படம்
  • திறப்பு
  • திறமை
  • தினசரி
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துயரம்
  • தெய்வ வரி
  • தெலங்கானா
  • தெலுங்கு
  • தேசியம்
  • தேர்தல்
  • தேர்வு
  • தேவாரம்
  • தொகுப்பு
  • தொட்டால் தீட்டு
  • தொண்டு
  • தொழிலாளர்
  • தொழிலாளி
  • தோற்றம்
  • நக்கீரன்
  • நகை
  • நமக்கு மேல் ஜாதியினன்
  • நமது இயக்கம்
  • நவராத்திரி
  • நற்செயல்
  • நன்னன்
  • நாகரிகம்
  • நாகரீகம்
  • நாடகம்
  • நாடாளுமன்றம்
  • நாடு
  • நாத்திகம்
  • நாளேடு
  • நான்
  • நான் யார்?
  • நான்யார்
  • நாஸ்திகம்
  • நிறைவேற்றம்
  • நீதி
  • நீதிமன்றம்
  • நீலிக் கண்ணீர்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூற்றாண்டு மலர்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நேர்மை
  • நோக்கம்
  • ப.க
  • பக்தி - ஒழுக்கம்
  • பகவான்
  • பகுத்தறிவு
  • பங்கு
  • பட்டம்
  • பட்டியல்
  • பட்டினி
  • படிநிலை வளர்ச்சி
  • படிப்பு
  • படிமலர்ச்சி
  • பண்டிகை
  • பண்பாடு
  • பண்பு
  • பணக்காரன்
  • பயணம்
  • பல்லக்கு
  • பல கணவன்கள்
  • பலம்
  • பலன்
  • பலாத்காரம்
  • பஜனை
  • பாட்டாளிகள்
  • பாடம்
  • பாடல்
  • பாண்டியன்
  • பாப்பாத்தி
  • பார்ப்பனத்தி
  • பார்ப்பனமயம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் சூழ்ச்சி
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பனியம்
  • பார்ப்பனீயம்
  • பார்ப்பான்
  • பார்ப்பான் பிழைப்பு
  • பார்வை
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுகள்
  • பாவலரேறு
  • பாவாணர்
  • பிடிஎப்
  • பிபிசி
  • பிரச்சாரம்
  • பிராயச்சித்தம்
  • பிழைப்பு
  • பிள்ளையார்
  • பிள்ளையார் உடைப்பு
  • பிற இதழ்கள்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறப்புரிமை
  • புண்ணிய ஸ்தலம்
  • புத்தம்
  • புத்தமதம்
  • புத்தர்
  • புத்திசாலிகள்
  • புத்திபலம்
  • புரட்சி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர்
  • புராண பாடம்
  • புராணங்கள்
  • புராணப் பிழைப்பு
  • புராணம்
  • புராணம் ஒழிப்பு
  • புளுகு
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் நிலை
  • பெண்கள் விடுதலை
  • பெண்ணடிமை
  • பெரியார்
  • பெரியார் அரசு மருத்துவமனை
  • பெரியார் ஈ.வெ..ரா கல்லூரி
  • பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
  • பெரியார் சிலை
  • பெரியார் நகர்
  • பெரியார் மேளா
  • பெரியார் விருது
  • பெரியாரின் பதிலடிகள்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருமிதம்
  • பேதம்
  • பைபிள்
  • பொங்கல்
  • பொங்கல் வாழ்த்து
  • பொது உடைமை
  • பொதுவுடமை
  • பொருள்
  • பொருள் நட்டம்
  • பொருளாதாரம்
  • பொறுப்பு
  • பொன்நீலன்
  • பொன்மொழிகள்
  • போராட்டம்
  • போராளிகள்
  • போலித் தத்துவங்கள்
  • மகான்கள்
  • மஞ்சை வசந்தன்
  • மடமை
  • மணியம்மையார்
  • மத சீர்திருத்தம்
  • மத நம்பிக்கை
  • மதம்
  • மபொசி
  • மலேசியா
  • மற்ற ஜாதி படிப்பு
  • மறு உலகம்
  • மறுமணம்
  • மறைவு
  • மனிதத் தன்மை
  • மனிதன்
  • மனிதன் முன்னேற்றம்
  • மனிதாபிமானம்
  • மனு தர்மம்
  • மனுதர்மம்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாதம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநிலங்களவை
  • மார்கழி
  • மாரியம்மன்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மின்நூல்
  • முசுலீம்
  • முட்டாள்கள்
  • முட்டாள்தனம்
  • முட்டுக்கட்டை
  • முத்தமிழரங்கம்
  • முதலாளி
  • முருகன்
  • முன்னேற்றம்
  • முன்னேற வழி
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மெட்டீரியலிசம்
  • மே தினம்
  • மே நாள்
  • மேல் ஜாதி
  • மேல்லோகம்
  • மொட்டை
  • மொழி
  • மோசடி
  • யாகம்
  • யார்
  • யோகம்
  • ரஷ்யா
  • ராமராஜ்ஜியம்
  • ராமன்
  • ராஜாஜி
  • லக்னோ
  • லெவி பிராகல்
  • வ.உ.சி.
  • வகுப்பு துவேஷம்
  • வகுப்பு வாதம்
  • வகுப்புரிமை
  • வகுப்புவாதி
  • வடவர்
  • வந்தியத்தேவன்
  • வர்ணம்
  • வர்ணாசிரம ஆட்சி
  • வர்ணாசிரம முறை
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வரி
  • வருடப்பிறப்பு
  • வருணம்
  • வருமானம்
  • வளர்ச்சி
  • வாரிசு
  • வாலிபர்
  • வாழ்க்கை
  • வாழ்த்து
  • விஞ்ஞானம்
  • விடுதலை
  • விதவை திருமணம்
  • விநாயகன்
  • விருப்பம்
  • விழா
  • விளக்கம்
  • விளம்பரம்
  • வினா - விடை
  • வினோபா
  • விஷ்ணு புராணம்
  • வீரம்
  • வெள்ளிக்கிழமை
  • வெளித்தோற்றம்
  • வெளிநாடு
  • வேதம்
  • வேலை
  • வேறுபாடு
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைதிகர்
  • வைதீகப் பொய்கள்
  • வைரமுத்து
  • ஜனநாயகம்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி வித்தியாசம்
  • ஜீவப்பிராணி
  • ஜெகநாதன்
  • ஜோசியம்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • Biography of Periyar

பக்கங்கள்

  • முகப்பு

பிரபலமான இடுகைகள்

  • பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    அபாய சங்கு 💕ஒவ்வொரு தமிழர்களின் கவனத்திற்கு... (பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்.) தந்தைப் பெரியார் ஒரு முழுப் ...
  • தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி
    - தந்தை பெரியார் நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாத...
  • எனது புகழைப்பார்!
    1922ஆம் வருஷத்திய சகல கட்சி மாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப் பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்ச், காந்தியாருக்கு என்...
  • பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?
      August 13, 2021  • Viduthalai 05.06.1948 - குடிஅரசிலிருந்து .. கடவுள்   என்றால்   கல் ,  களிமண் ,  புல் ,  பூண்டு ,  செடி ,  கொடி ,  கழுதை...
  • தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
    தந்தை பெரியார் அருமைத் தோழர்களே,  இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம...
  • வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
            September 19, 2021  • Viduthalai தந்தை   பெரியார் இந்தியர்களின்   அடிமைத்   தன்மைக்கும் ,  இழி   நிலைக்கும்   மதமும் ,  ஜாதியும் ,  ...
  • தந்தை பெரியார் நூற்றாண்டு விழா 1
    அய்யாவின் அடிச்சுவட்டில்.... 128 ஆம் தொடர் ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை...
  • சரஸ்வதி பூஜை தந்தை பெரியார்
    சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜ...
  • விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!
    June 1, 2020 • Viduthalai •  "ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடு...
  • கோவில் நுழைவும் தீண்டாமையும்
      September 12, 2021  • Viduthalai தந்தை   பெரியார் தீண்டாமை   என்னும்   வழக்கம்   மனிதத்   தன்மைக்கு   விரோதமானதென்பதையும் ,  அதுவே   நமது ...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (22)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2024 (131)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (30)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (24)
    • ►  ஜூன் (31)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (61)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (4)
  • ►  2022 (58)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (9)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2021 (108)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (11)
    • ▼  ஆகஸ்ட் (11)
      • எத்தனை தலைமுறைக்கு நாம் "சூத்திரர்களாக" இருப்பது?
      • ஆலயப்பிரவேசம் உண்மை என்றால் அவனையும் மணி அடிக்கச் ...
      • ஏழைகள் கண்ணீர் (தொழிலாளர்)
      • பெண்கள் சுதந்திரம்
      • மற்றவர்கள் எல்லாம் பெண்கள் விடுதலையைப்பற்றி பாடினா...
      • இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா? (பார்ப்பனருக்கு அழு...
      • சிந்தியுங்கள்! தோழர்களே! 10.04.1948 - குடிஅரசிலிரு...
      • பெரியாரின் வேண்டுகோளும்- எச்சரிக்கையும்!
      • நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (1)
      • சமரசம் அடைய வேண்டுமெனில்...
      • மதம் என்றால் என்ன? எது உண்மை மதம்?
    • ►  ஜூலை (12)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (24)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (15)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (5)
  • ►  2019 (194)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (16)
    • ►  அக்டோபர் (21)
    • ►  செப்டம்பர் (22)
    • ►  ஆகஸ்ட் (23)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (21)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (27)
  • ►  2018 (150)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (27)
    • ►  செப்டம்பர் (14)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (8)
  • ►  2017 (152)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (20)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (26)
  • ►  2016 (124)
    • ►  டிசம்பர் (21)
    • ►  நவம்பர் (20)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (21)
    • ►  மே (16)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (181)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (48)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (22)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (11)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (15)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ElementalImaging. Blogger இயக்குவது.