ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தேசீய கீத’ப் புரளி


தந்தை பெரியார்

(‘தேசீயகீதம்’ என்ற மதவாதப் பாடல் பற்றி இன்று சர்ச்சைப் புயல் வீசுகிறது. ஒன்றிய பிஜேபி அரசு சட்டம் செய்துள்ளது. இதுகுறித்து 1937ஆம் ஆண்டிலேயே கடுமையாக விமர்சித்த கட்டுரை இது)

ஆகஸ்டு 31ஆம் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கவுன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கிரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கிரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது.

முஸ்லீம்  சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு முன் இருந்து வந்த இந்திய நிலைமையைப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன் மஹேந்திரன் என்பான் ஒருவனைச் சந்தித்துத் தனது புரட்சிப் படையில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறான். பவாநந்தன் ‘வந்தே மாதர’ கீதம் பாடியபோது மஹேந்திரன் மதிமயங்கி அந்த கீதத்தை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறான். மஹேந்திரன் வேண்டிக் கொண்டபடியே பவாநந்தன் மீண்டும் பாடி தாய் நாட்டை முஸ்லீம் ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறுகிறான்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

 

“ஸ்டேட்ஸ்மன்” பத்திரிகையில் ஒரு முஸ்லீம்  நிருபர் எழுதிய கட்டுரை ஒன்றில் “ஆனந்த மடத்தி”லிருந்து பல மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஆட்சியை ஒழிக்க முயல்வது புத்திசாலித்தனமாகுமா என்று மஹேந்திரன் கேட்டபோது “நமது மதம் போச்சு, நமது வர்ணாச்சிரம தர்மம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்கும் கூட ஆபத்து நேரிட்டிருக்கிறது. இந்த முஸ்லீம்களை ஓட்டா விட்டால் ஹிந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது” என்றெல்லாம் பவாநந்தன் கூறி மஹேந்திரனை தன் வழி இழுக்க முயல்கிறான். “நீ ஒண்டியாக முஸ்லீம்களை ஓட்டி விடுவாயா?” என்று மஹேந்திரன் கேட்டபோது ‘வந்தேமாதர’ கீதத்திலுள்ள சில வரிகளை பவாநந்தன் பாடுகிறான். “ஏழுகோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடிக் கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரதமாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதே அந்த வரிகளின் பொருள். அதற்கு பதிலாக மஹேந்திரன் முஸ்லீம்கள் வீரப் பிரதாபங்களையும் படை பலத்தையும் எடுத்துக் காட்டுகிறான்.

பவாநந்தன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “முஸ்லீம்கள் எல்லாம் பயங்காளிகள், கோழைகள். பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது கூட ஆங்கிலேயன் போர்க்களத்திலிருந்து ஓட மாட்டான். வியர்வை வடியத் தொடங்கும்போது முஸ்லீம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒரு வெடிகுண்டு விழுந்தால் போதும். முஸ்லீம்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்” என பவாநந்தன் கூறி மஹேந்திரனை உற்சாகப்படுத்துகிறான். தனது புரட்சிப்படையில் சேர்ந்து முஸ்லீம்களை எதிர்த்து தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தைப்பற்றி பவாநந்தன் எவ்வளவோ கூறியும் மஹேந்திரனை ஆனந்தமட ஆலயத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறான்.

அந்த ஆலயத்தில் ஒரு விஷ்ணுவின் விக்கிரகத்தையும் அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் விக்கிரகத்தையும் மஹேந்திரன் பார்த்து அந்தத் தேவியார் யார் என்று கேட்கிறான். “ஹோ! அவள்தான் நம் மாதா. நாமெல்லாம் அவளது குழந்தைகள்” எனப் பூசாரி விடையளிக்கிறான். அப்பால் ஆலயத்தின் வேறொரு பகுதிக்கு மஹேந்திரனை பூசாரி அழைத்துக்கொண்டு போய் “ஜெகத்தாத்ரி” தேவி தேஜோமயமாய் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறான். “ஆதியிலே நமது பாரதமாதா இம்மாதிரியே இருந்தாள்” என பூசாரி மஹேந்திரனுக்குக் கூறி மீண்டும் வேறொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். அங்கே நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு கருங்காளி விக்கிரகத்தை பூசாரி மஹேந்திரனுக்குக் காட்டி “இப்போது பாரத மாதா இருக்கும் கோலம் இது” எனக் கூறுகிறான்.

அப்பால் வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் பத்துக் கரங்களுடைய துர்க்கா தேவியின் விக்கிரகத்தைக் காட்டி “நமது சத்துருக்களான முஸ்லீம்கள் ஒழிக்கப்பட்ட பின் நமது பாரத மாதா இவ்வாறே இருப்பாள்” என   மஹேந்திரனிடம் கூறுகிறான். மீண்டும் பூசாரி, லட்சுமி, ஸரஸ்வதி தேவிகள் விக்கிரகங்களை மஹேந்திரனுக்குக் காட்டி “பத்துக் கரங்களுடைய துர்க்கையே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே! கல்வித் தெய்வமான ஸரஸ்வதியே! போற்றி! போற்றி!” எனப் பாடி பூசாரி ஆனந்தத் தாண்டவமாடுகிறான். கடைசியில் மஹேந்திரன் தேசபக்தனாகி புரட்சிப் பிரதிக்ஞை செய்து கொள்கிறான்.

புரட்சிப் படையில் ஆட்சேர்க்கும் முறையைப்பற்றி “ஆனந்தமட” நாவலிலிருந்து சில மேற்கோள்களை அந்த முஸ்லீம் நிருபர் எடுத்துக் காட்டியிருக்கிறார். “தாய் நாட்டை மீட்கும் வரை உற்றார் பெற்றார் உறவினரைத் துறந்து ஸநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக புரட்சிப் படையில் சேரும் ஒவ்வொருவனும் சபதம் செய்து கொள்வானாம். புரட்சிப் படையில் சேர்ந்த பிறகு ஒவ்வொருவனும் ஒவ்வொரு கிராமத்துக்கு அனுப்பப்படுவானாம். கிராமங்களில் புரட்சிக்காரர் செய்யும் அட்டூழியங்களை விளக்கி “ஆனந்த மடத்”தில் கூறப்பட்டிருப்பதாவது, “புரட்சிக்காரன் ஒவ்வொருவனும் கிராமங்களுக்குச் சென்று ஹிந்துக் களைச் சந்தித்து “சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா! எனக் கூறி 20 அல்லது 25 பேரைச் சேர்த்துக்கொண்டு முஸ்லீம் கிராமங்களுக்குச் சென்று முஸ்லீம் குடிசைகளை தீக்கிரையாக்குவார்களாம். உடனே முஸ்லீம்கள் நானா பக்கங்களிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்களாம். உடனே முஸ்லீம்கள் சொத்துக்களையெல்லாம் புரட்சிக்காரர் சூறையாடு வார்களாம். அவ்வாறு கொள்ளையடித்த பொருள்களை விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக வழங்குவார்களாம். கொள்ளைப் பொருள்களில் பங்கு கொண்ட கிராம வாசிகள் மகிழ்ச்சியடைந்து புரட்சிப் படையில் தாமும் சேர்ந்து கொண்டதாக விஷ்ணு பேரில் ஆணையிட்டுக் கொடுப்பார்களாம். ஆனந்தமடம் மூன்றாம் பகுதி எட்டாவது அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றிப் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. “திடீரென ஒரு முழக்கம் கேட்டது. சிலர் முஸ்லீம்களைக் கொல்! கொல்! என ஆர்ப்பரித்தார்கள். சிலர் ‘வந்தே மாதர’ கீதம் பாடினார்கள். சிலர் “சகோதரர்களோ! மசூதிகளையெல்லாம் தரைமட்டமாக்கி அந்த இடத்திலே ராதாமாதவ ராலயத்தைக் கட்டும் நாள் என்று வரும்” என்று கர்ஜித்தார்கள். இடையிலே பலர் வந்தேமாதர கீத கோஷம் செய்தார்கள்.

“வந்தேமாதர” கீதத்தின் தோற்றத்தையும் நோக்கத்தையும், விளக்கிக் கூறி விட்டு அந்த முஸ்லீம் நிருபர் மேலும் எழுதியிருப்பதாவது:- “விக்ரக வணக்கத்தை ஆதரிப்பதும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பக் கூடியதுமான ‘வந்தேமாதர’ கீதத்தை இந்திய முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வார்களா என ஹிந்துக்களையும் பாரபட்சமற்ற அய்ரோப்பியர் களையும் நான் கேட்கிறேன். இந்நிலையில் எல்லாருக்கும் பொதுவெனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் எல்லாரும் வந்தே மாதர கீதம் பாடுமாறு கட்டாயப் படுத்துவது நீதியாகுமா?

உண்மையான தேசீய கீதம் தேசமக்கள் உள்ளத்தில் தேசபக்தியை உண்டு பண்ணக் கூடியதாக இருக்க வேண்டும். “வந்தேமாதர கீதம்” முஸ்லீம்கள் உள்ளத்தில் தேச பக்தியை எழுப்புமா?

தாய்நாட்டின் பெருமையை விளக்கக் கூடிய தேசீய கீதத்தை முஸ்லீம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அந்த கீதம் மத துவேஷத்தையோ, வகுப்பு துவேஷத்தையோ மூட்டக் கூடியதாயிருக்கக் கூடாது.”

இந்த அபிப்பிராயத்தை நாமும் ஆதரிக்கிறோம். ஒரிஸா அசம்பிளியிலும் தேசீயக் கீதத் தகராறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஒரிஸா அசம்பிளியில் தேசீய கீதம் பாடிய போது சில உத்தியோகஸ்தர்கள் எழுந்து நிற்கவில்லையாம். காங்கரஸ்கட்சி மெம்பர்கள் அதை ஆட்சேபித்து அசம்பிளித் தலைவரிடம் முறையிட்டார்களாம். தலைவரும் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்தவரே. தலைவர் பிரஸ்தாப விஷயத்தைப்பற்றித் தீர்ப்புக் கூறுகையில் “உத்தியோகஸ்தர்கள் சட்டசபை மெம்பர்கள் அல்லவென்றும் சட்டசபை மண்டபத்தில் பிரசன்னமா யிருப்பவர்கள் இன்னின்ன மாதிரி நடந்து கொள்ளவேண்டு மென்று கட்டளையிடத் தமக்கு அதிகாரமிருந்தாலும் பிரஸ்தாப விஷயத்தில் தாம் எதுவும் செய்யப்போவதில்லையென்றும் தேசீய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்து நிற்பதும் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததென்றும் எனினும் உத்தியோகஸ்தர்கள் உட்கார்ந்திருந்தது வருந்தத்தக்கதென்றும் அந்தத் தகராறை அத்துடன் விட்டு விடுவதே நல்லதென்றும் பிரஸ்தாபித்தாராம்.

சட்ட சபைகளில் ‘வந்தே மாதர’ கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்கவில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கிரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யாமல் காங்கரஸ்காரர் ‘வந்தேமாதர’ கீதத்தையும் மூவர்ணக் கொடியையும் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று பிடிவாதம் செய்தால் தேசீய கீதத்தின் மானமும் தேசீயக் கொடியின் கெளரவமும் அழிவது நிச்சயமென்று எச்சரிக்கை செய்கிறோம்.

‘குடிஅரசு’ – 12.09.1937

-விடுதலை நாளேடு,23.8.26 

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

 

எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் – தந்தை பெரியார்

968இல் வெளிவந்த ‘விடுதலை’ – தந்தை பெரியார் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்
மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
மிக முக்கிய நிலைமைகளை விளக்கும் – என்றும் வழிகாட்டும் அறிக்கை

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

விளையும் பயிர் முளையிலேயே . . .

நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.

மாடு, எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.

1900இல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது ‘என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது’ என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.

எக்குழுவிலும் நான்தான் தலைவன்

நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே – மற்றவர்கள் என் சொல் கேட்பவர்களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, ஒரு சாதாரண அங்கத்தினனாக எதிலும் இருந்ததில்லை.

அதுபோலவே எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிறத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேனேயொழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு – உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனேயொழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.

என்னைப் பற்றி

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.

எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட்டேன்.

ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.

எனது கொள்கைகள்

எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

நான் காங்கிரசை விட்டதற்கும்
இதுதான் காரணம்:

ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்

வெள்ளையன் போன பின்பு 1952இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் – அதாவது காமராஜர் பதவிக்கு வந்தவுடன், பார்ப்பனர்களும், அவர்களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங்கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.

தி.மு.க.வை எதிர்த்ததேன்?

இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தர்ப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதரவாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம்மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப்பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதரவாளனாக இருக்க வேண்டியதாகியதும் இதற்கு ஆகத்தான்.

நாளை எனது நிலை

ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித்தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப்பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!

பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.

குறிப்பு: இந்த மூன்றிலும், அதாவது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

- விடுதலை நாளேடு, 3.7.26