சனி, 7 நவம்பர், 2015

சிங்கப்பூரில் பெரியார் விழா பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்!


இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை

சிங்கப்பூர் நவ.5 சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூரின் பொன்விழா-வையும்,  மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும் கொண்டாடிடும் வகை யில் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவை நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. விழாவில்  செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற் றினார்.  பெரியாரை பற்றி கவிஞர் கவிமதி எழுதிய சிறப்பானதொரு கவிதையை வாசித்து விழாவை தொடங் கினார் நெறியாளர் திருமதி. இலக்கியா செல்வராஜி.
தலைமையுரை
வரவேற்று தலைமை யுரை ஆற்றிய மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல் வம் அவரது தலைமையு ரையில் தமிழர்களின் மானம் காத்த தந்தை, அவரின்றி தமிழரினம் தலை நிமிர்ந்திருக்க முடி யாது. அதனால் அவர் பெயரில் ஒரு மன்றம் பதிவு செய்து மனிதநேய சிந் தனைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பதிவு செய்து பத்தாண்டு களாக நடத்தி வருகி றோம். மன்றத்தின் முக்கிய செயல்பாடுகளாக மாண வர்களுக்கு தமிழ்மொழி போட்டிகள் நடத்தி வருவதையும், தமிழுக்காக உழைத்தவர்களை பாராட்டி பெரியார் விருது வழங்கியும், பெரியா ரின் கொள்கையுடன் அந்த காலத்திலிருந்து வாழ்ந்து தொண்டு செய் தவர்களை பாராட்டி பெரியார் பெருந்தொண் டர் விருது வழங்கி கவு ரவப்படுத்தி வருகிறோம் என்று கூறினார். மேலும் நிறைவாக திரு.விக்ரம் நாயர் அவர்களிடம் இந் திய மரபுடைமை நிலை யத்தில் இந்த நாட்டுக்காக பாடுபட்ட தமிழவேள் கோ.சா மற்றும் அவருக்கு அடித்தளமாக இருந்து  தமிழர்களுக்கு ஊக்கம் தந்த பெரியாரின் சிலையை அங்கு வைக்க வேண்டும் என்ற  கோரிக்கையுடன் உரையை நிறைவுசெய்தார்.
சிறப்பு விருந்தினர் உரை
சிறப்பு விருந்தினர்  திரு. விக்ரம் நாயர் தன் னுடைய உரையில் திரு.லீ மற்றும் பெரியார் அவர் களுடைய சிந்தனைகளில் நிறைய ஒற்றுமைகள் (similarity) உண்டு. இந்த பெரியார் கண்ட வாழ்வி யலுக்கு சிங்கப்பூரையே எடுத்துகாட்டாக கூற லாம்..
சிங்கப்பூர் ஆங்கி லேயரிடமிருந்து விடு தலை பெரும் போது Mr. லீ-யுடைய எண்ணம் நம் முடைய சொந்த மக்கள் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். கல்வியும் படிப்பும் கிடைக் கும் போது அதன் தாய் மொழிகளும் முக்கியமாக இருக்க வேண்டும். இத னால்தான் சீனம், மலாய், தமிழ் எல்லாம் தாய் மொழிகளாக சிங்கப்பூரில் இருந்து வருகின்றன.  தொடர்ந்து இருந்து வரும். என்று கூறி யாரா வது கஷ்டமான சூழ் நிலையில் இருக்கும் போது அரசாங்கம்  உதவி கொடுக்கக் கூடிய சூழ் நிலையில் இருக்க வேண் டும். நிதி பிரச்சினைகளால் இதனை எல்லா அரசாங் கங்களும் செய்யமுடியாது. ஆனால் சிங்கப்பூர் அர சாங்கம் பிரச்சினை உள் ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத் தில் செயல்பட்டு வரு கிறது.  இனிவரும் அடுத்த 50 ஆண்டுகளும் முதல் 50 ஆண்டுகள் போல் இருக்க போதிறதோ என்று யாரும் சொல்ல முடியாது.  இங்கே உள்ள பலர் கடந்த 50 ஆண்டுகளில் இருந்தீர்கள் என்று நம் புகிறேன்.  உங்களுடைய உழைப்பினால் தான் சிங் கப்பூர் நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் சிங் கப்பூர் இப்படி சிறப்பாக  செயல்பட வேண்டுமென் றால் அது இன்று இருக்கிற இளையர்களின் கையில் இருக்க போகிறது. அப்போது நீங்கள் பெரியாரும் திரு.லீயும் கற்றுக்கொடுத்த பாடங் களை படித்தும் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி பயன்படுத்தலாம்  என்று நீங்கள் தான் வழி காட்டவேண்டும். அதற்கு இந்த விழாவும் ஒரு பயன் உள்ள session  ஆக இருக் கும் என்று அனைவருக் கும் நன்றி கூறி முடித்தார்.
"பெரியார் விருது"
"பெரியார் விருது" பெற்ற சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் திரு.ஜே. எம்.சாலி அவர்கள் தன் னுடைய ஏற்புரையில் என்னுடைய அறுபது ஆண்டு மொழி இலக்கிய பணிக்கு கிடைத்த அங்கீ காரம் என்று பெருமை பாராட்டுகிறேன் என்றார். மேலும் நான் சிங்கப் பூருக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது. தாய்நாடு என் பிறந்த நாடு என்றால் சிங்கப்பூர் என் தந்தை நாடு என்றும் தமிழ்முரசு வில் என்னை பணிக்கு அமர்த்தி வளர்த்து ஆளாக்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணியும், நவீன சிங்கப்பூரின் தந்தை திரு.லீ குவான் இயூவை யும் என்னுடைய  தந்தை களாக போற்றுகிறேன் என்றார்.
1957-ல் நான் மாணவ ராக கும்பகோணம் கல் லூரியில் B.A படிக்கும் போது பெரியார் அவர்கள்  கல்லூரிக்கு வந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஆனந்த விகடன், தமிழ் முரசுவில் பணிபுரியும் போது பெரியாரை பற்றி நிறைய எழுதி இருக்கிறோம். குறிப்பாக சென்னை கடிதம் என்ற தலைப்பில் தமிழ்முரசு-வில் தொடர்ச்சியாக எழுதும் போது கோ.சா அவர்கள் பெரியாரை பற்றி எதாவது ஒரு செய்தி அதில் இடம் பெறச் செய்வார்.  பெரியார் ஸிமீஸ்ஷீறீ , குடியரசு, விடுதலை, உண்மை போன்ற பல பத்திரிக்கைகள் நடத்தியுள்ளார் அதனால் அவரை பத்திரிக்கை உலக ஆசானாகவும் பார்க்கிறேன். தமிழவேள் கோ.சா-வை பற்றியும், திரு.லீ குவான் இயூவை பற்றியும் நூல்கள் எழுதிவிட்டேன். தற்போது பெரியாரை பற்றி நூல் எழுதி வெளி யிட வேண்டும் என்பது என்னுடைய பேராவா. அது என்னுடைய தார்மீக கடமையாக கருதுகிறேன். அதற்கான பல செய்திகளை திரட்டி வீட்டில் வைத்துள்ளேன். இன்னும் சில மாதங்களில் பெரியாரை பற்றி நூலை வெளியிடுவேன் என்று கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்திற்கு நன்றி கூறி இந்த விருது சிங்கப்பூரின் பொன்விழாவுக்கு சிறப்பு சேர்க்கும் விருது என்று கூறி ஏற்புரையை நிறைவு செய்தார்.
பெரியார் பெருந்தொண்டர் விருது
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற திரு. க.ஆ.நாகராசன் பேசும் போது முதன் முதலில் நான் கலைஞர் அவர்களின் பேச்சை கேட்டேன் அந்த பேச்சு பெரியாரின் சுயமரியாதைக் கருத்தை ஆணிவேராக என் மனதில் பதியவைத்து விட்டது.  அன்று முதல் இன்று வரை அதே கொள்கை அள வில் தான் நான் பின்பற்றி வருகிறேன். பெரியார் பெருந்தொண்டன் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தினு டைய பெருந்தலைவர் காலஞ்சென்ற தமிழ் தாத்தா ச.சா.சின்னப்பனாருக்கு இந்த விருதை நான் சமர்ப் பித்து நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த சாதாரண தொழிலாளியை இந்த இயக்கம் பாராட்டு கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் ஒராண்டுகளுக்கு மேலாக சுயமரியாதைக் கொள்கைகளையும், தத்துவங்களையும் எங்களுக்கு பயிற்சி யாக அளித்த என்னுடைய சொல் ஆசான் ச.சா.சின்னப்பனார் அவர்கள் தான் என்றார்.
தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம் நாயர்.
1950களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக, செயலாளராக இருந்ததையும், அதன்பின்பு மக்கள் செயல் கட்சியில் சேர்ந்து சமூக பணியாற்றியதையும் குறிப்பிட்டார். தமிழ் சமுதாயம் இன்று வீறுபெற்று நிற்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தைபெரியார்தான் என்றார். அவரின் வருகையினாலும், அவர் கொள்கைகளை தமிழவேள் கோ.சா-லிடன் சேர்ந்து நாங்களும் முன்னெடுத்து சென்றதனால்-தான் இங்கு சிங்கப்பூரில் சாதிக் கொடுமை இல்லாமல் மாற்றம் பெற்றுள்ளது என்ற செய்தியை கூறி விருது கொடுத்த பெரியார் சமூக சேவை மன்றத்துக்கு நன்றி கூறினார். பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற கலைச்செம்மல் திரு.ச.வரதன் அவர்கள் தன்னுடைய ஏற்புரையில் பேசும் போது பதின்ம வயதில் அய்யாவின் (பெரியார்) தத்துவங்கள் என் இதயத்தில் பதிந்தது. அது பசு மரத்தில் அடித்த ஆணி போன்று இன்று வரையும் அப்படியே இருக் கின்றது. அதிலே நடைபோட்டு கொண்டு இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நடிகவேள் எம்.ஆர்.ராதா இவர்கள் அய்யாவின் தத்துவங்களை நாடக மேடையின் வழியாக பரப்பிக்கொண்டு இருந்தார்கள். அதே அடிப்படையில் நான் 1955ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பகுத்தறிவு நாடக மன்றம் என்று தோற்றுவித்து. அதில் பகுத்தறிவு கொள்கை உள்ள நாடகங்களை நடத்தி வந்தேன். அந்த காலகட்டத்தில் பகுத்தறிவு என்று சொன்னாலே பலர் விழித்து பார்க் கின்ற காலம்.
பகுத்தறிவு நாடக மன்றமா? என்று கேட்பார்கள். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து    Rational Dramatic Society என்று கூறும் போது. மற்ற இனத்தவர்கள்Is this rational or National?
என்று கேட் பார்கள். நாங்கள் Rational என்று சொல்லி நாடகங்களை நடத்தி வந்திருக்கின் றோம். பல்லாண்டு நாடகம் நடத்திய ஒரு சேவைக்காக நமது அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு எனக்கு கலாச்சார விருது அளித்து சிறப்பித்தது. அது என்னுடைய நாடகத் தொண்டுக்கு கிடைத்த பரிசு. அன்று மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்று எழுபது ஆண்டு காலமாக என் இதயத்தில் ஒட்டி கொண்டிருக்கின்ற அய்யாவின் தத்து வத்திற்கு அதன் பாதையில் நடந்து செல்வதற்கு இன்று எனக்கு "பெரியார் பெருந்தொண்டர் விருது" அளித்துள்ளார் கள் என்று கூறி நன்றி சொன்னார்.
சிறப்புரை
சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 10 ஆம் ஆண்டு விழாவையும், சிங்கப்பூ ரின் பொன்விழாவும் சிறப்பாக நடைபெறுவதை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து  நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட திரு லீ குவான் இயூ அவர்களை போற்றி பாராட்டி தன் உரையை தொடங்கினார். மன்றத்தின் 10 ஆண்டு விழாவை குறிப்பிடும் போது, அதற்கு முன்பு இருந்த சிங்கப்பூர் முன்னோடிகள் பெரியார் தொண்டர்கள் உ.இராமசாமி (நாடார்), அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, நடராசன், சு.தெ. மூர்த்தி, முருகு.சீனிவாசன், தி.நாகரெத்தினம் ஆகியோர் களின் உழைப்பினால் தொண்டினால் பெரியார் பெயரில் இங்கு மன்றம் உருவாக காரணமாக இருந்துள்ளது. அவர்கள்தான் தந்தை பெரியாரை சிங்கப்பூரில் வரவேற்று பிரச்சாரம் செய்ய காரணமாக இருந்தவர்கள். அதன் பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் தான் தமிழர்களை சிங்கப்பூரில் நல்ல நிலைக்கு முன்னேற வழிவகுத்தது என்று கூறினார். அதனை சுருக்கமாக விளக்கிடும் வகையில் பெரியாரின் 1929 வருகையும் அப்போது தொழிலாளி களாக, சாதிக் கொடுமைகளுடன், மூடப்பழக்கங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் நிலையை மாற்றிட தொடங்கப்பட்ட தமிழர் சீர்த்திருத்த சங்கம் வரலாற்றையும் குறிப்பிட்டார். பெரியாரின் வருகைக்கு பின் தொடங் கப்பட்ட தமிழ் பள்ளிகளையும் பெரியார் பெயரிலே இயங்கிய பள்ளிகளையும் எடுத்துக்காட்டினார். மீண்டும் 1954-இல் பெரியார் சிங்கப்பூர் வரும்போது அவர் தமிழர்களிடம் கண்ட மாற்றத்தையும் முன்னேற்றத் தையும் கூறினார். குடியரசு இதழின் மூலம் ஏற்பட்ட சீர்திருத்தமும் அதன் விளைவாக பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் முதன் முதலில் சிங்கப்பூரில் 1928-ல் நடைபெற்றதையும் ஆதாரத் துடன் படித்து காட்டினார்.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பழமொழியை கூற காரணமே தமிழர்கள் அடிமைகளாக முதுகெலும்பு இல்லாதவராக முன்பு வாழக்கூடிய நிலையிருந்த காரணத் தால் தான் அப்படி ஒரு பழமொழியே உருவாகிற்று என்ற விளக்கம் வந்தி ருந்தவர்களை புதிய கோணத்தில் சிந் திக்க வைத்தது. அந்த காலகட்டத்தில் தான் பெரியார் தமிழர்களுக்கு முது கெலும்புடன் தலை நிமிர துணிச்சலை ஊட்டியவர், தன்மானத்தை போற் றியவர் என்று கூறினார். இறந்தபின்பு கொடுக்கும் உறுப்பு கொடையை விட  உயிருடன் இருக்கும் போதே தந்தை பெரியார் கொடுத்த முதுகெலும்பு என்ற உறுப்பு கொடை தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க காரணமாக அமைந்தது என்ற கருத்தை இக்காலத் திற்கு ஏற்ற நடையில் கூறியது சிறப்பு.  பெரியார் என்பவர் தனிமனிதர் அல்ல அவர் ஒரு நிறுவனம், அவர் ஒரு மாமருந்து அவை உலகத்துக்கே பொருந்தும் எங்கெல்லாம் மனிதர் களுக்கு சுயமரியாதை இழுக்கு வரு கிறதோ அப்போது எல்லாம் பெரியார் என்ற மாமருந்து தேவைப்படும் என்று கூறி பெரியார் உலகுக்கே உரியார் என்று அனைவருக்கும் புரியும் வண் ணம் ரசிக்கும்படி சுமார் 50 நிமி டங்கள் பல செய்திகளுடன் உரை யாற்றினார்.  இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினர் ச.மனோகர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. அவசர அலுவல் காரணமாக இரா.தினகரன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலவில்லை.
மன்றத்தின் துணைத் தலைவர் சு.தெ.மதியரசன், பொருளாளர் ந.மாறன், மலையரசி, இளையமதி, சவுந்தர் ராஜ், இராஜராஜன், கவிதாமாறன், குந்தவி, வானதி, வளவன், கவுதமன்,  மற்ற உறுப்பினர்களின் உதவியுடன் செயலாளர் க.பூபாலன் விழாவை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக மன்றத்தின் உறுப்பினர்கள் தமிழ் செல்வியும், பழனியும் பெரியார் விருது பெற்ற ஜே.எம் சாலி பற்றிய குறிப்புகளையும், பெரியார் பெருந் தொண்டர் விருதுபெற்ற.ச.வரதன், க.ஆ.நாகராசன் பற்றிய குறிப்புகளையும் சிறப்பாக வரிசைப்படுத்தி வாசித்தார்கள்.
------------------

எங்கள் பெரியார்
மூடிமறைத்து பேச அறியார்
மூட பழக்கம் எதுவும் தெரியார்
நூலார் திமிர் அறுத்த வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார்
நரியார் தோலுரித்த புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த கரியார்
எளிதாய் கடந்து செல்லும் வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார்
தெளியார் அறிவு நெய்த தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான குறியார்
உலக தமிழருக்கு உரியார்
உணர்ந்தால் விளங்கும் மொழியார்
மனு வேதம் கொளுத்திய திரியார்
மாதருக்கு தெளிவான ஒலியார்
தேடி படிக்க சிறந்த நெறியார் - தூய
தாடி முளைத்த தந்தை பெரியார்.
- விழாவின் தொடக்கத்தில் கவிமதி எழுதிய கவிதையை நிகழ்ச்சி நெறியாளர் இலக்கியா செல்வராஜ் வாசித்தார்.
------------------
சிறப்பு அம்சங்கள்
  • நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம்நாயர் அவர்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு  பரிசளித்து பாராட்டினார்.
  • வரலாற்று செய்தி கள் கொண்ட விழா மலர் "பெரியார் பணி 2015"-யை திரு. விக்ரம்நாயர் வெளியிட்டார். வந்திருந்த அனை வரும் நன்கொடை அளித்து விழா மலரை பெற்று சென்றார்கள்.
  • பெரியார் களஞ்சியம் திருக்குறள் வள்ளுவர் நூலை சிங்கப்பூர் சிம் பல்கலைகழக பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் வெளியிட்டார்கள்.
  • பெரியார் விருது, மற்றும் பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்றவர்களுக்கு குஞ்சம்மாள்  முருகு. சீனிவாசன் குடும்பத்தின் சார்பாக அன்பளிப்பினை அவர்களின் மகன் திரு.மலையமாறன், மகள்கள் திருமதி குறிஞ்சிச்செல்வி, திருமதி, மலையரசி வழங்கினார்கள்.
  • பெரியாரின் வரலாற்று புகைப்படங்களை கண் காட்சியாக வைத்திருந்ததை நிகழ்ச்சி தொடங்கும் முன்பு வந்திருந்தவர்கள் பார்த்தார்கள். விழா தொடங்கியவுடன் மாணவிகள் இனியநிலா-பவதாரணி இணைந்து  தமிழ் வாழ்த்து பாடலை சிறப்பாக பாடினார்கள்.
  • பெரியாரை பற்றியும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பணிகளை பற்றியும் விழா தொடங்கும் முன்பு 10 நிமிட Presentation Slide video    காண் பிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திரு.ஜெ.எம்.சாலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.  சிறப்பு விருந்தினர்  திரு.விக்ரம் நாயர் பெரியார் விருது வழங்குகிறார்.
திரு.விக்ரம் நாயர் அவர்கள் க.ஆ.நாகராசனுக்கும், ச.வரதனுக்கும் பொன்னாடை அணிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி பெரியார் பெருந்தொண்டர் விருதை இருவருக்கும் வழங்குகிறார்.
பெரியார் பணி 2015  விழா மலரை நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர், தொழிலதிபர் ஜோதி மாணிக்கவாசகம் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் என்.ஆர்.கோவிந்தன்  ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பெரியார் களஞ்சியம் திருக்குறள் - வள்ளுவர் நூலை பேராசிரியர் முனைவர்.சுப.திண்ணப்பன் வெளியிட விரிவுரையாளர் ரெத்தினக்குமார், தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா, தமிழ்மொழி பண்பாட்டு கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார்கள்.
- செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்
.விடுதலை,5.11.15

வெள்ளி, 6 நவம்பர், 2015

எது நிஜம்? - சித்திரபுத்திரன்


சிந்தனை துணுக்குகள் சித்திரபுத்திரன்
எது நிஜம்?
இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டுமென்றால், இறந்து போனவர்களின் ஆத் மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
1. இறந்து போகும் ஜீவனின் ஆத்மா, மற் றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுவிடுவதாக
2. இறந்து போன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)
3. இறந்து போன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத் திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக.
ஆகவே, இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?
இது தவிர, ஆத்மா கண்ணுக்குத் தெரி யாதது என்றும், சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப் பட்டிருக்கிறதே; சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப் பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
வெட்கம், புத்தி இல்லையோ?
குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப் பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.
குசேலர் பெண் ஜாதி குறைந்தது ஆண்டிற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு ஆண் டாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27ஆவது ஆண்டாவது இருக்கும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப் பார்கள்?
20 ஆண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருக்காதா?
அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளை களைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக  இல்லையா என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?
இதிலென்ன தப்பு?
கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?
பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன் னாயே. அவரை நான் உண்டு என்று சொன் னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயே!  அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லிவிட்டேன்; இதில் என்ன தப்பு?
-விடுதலை,30.10.15

திராவிடர் திருநாளா தீபாவளி? - சித்திரபுத்திரன்


வருகுதப்பா தீபாவளி - வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்?
தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும்.
ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.
ஆதலால், சாஸ்திரம் சொல்லுகிறது அந்தப்படி செய்கிறேன் என்று நீ சொல் லுவாயானால் நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதனென்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்கு சிறிதுகூட யோக்கியதை கிடையாது.
சாஸ்திரம் பெரியவாள் எழுதினது என்று சொல்லுவாயானால், நீ யாரு? சிறியவாளா? எந்தப் பெரியவாள்? அந்தப் பெரியவாள் காலத்தைவிட முட்டாள் தனமான காட்டுமிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்? போக்குவரத்து சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத நல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்? ஆகவே, அந்தக் காலத்தைவிட  அந்தக் காலத்து பெரியாரைவிட நீ எந்த விதத் திலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது. ஆதலால் சாஸ்திரம், பெரியவாள், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்டது என்கின்ற முட்டாள் தனத்துக்குத் தாயகமாக இருக் கும் பித்தலாட்டத்தில் இருந்து முதலாவ தாக நீ வெளியில் வா!
சாஸ்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை,  பெரியவாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள்களால் சொல்லப்பட்டது; உண் டாக்கப்பட்டது என்று சொல்லுகிறாயோ? அப்படியானால் இப்படிச் சொல்லுகிற வனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக்கிறானே அவனைப் போல் அடிமடையனும் வேறு இருக்க முடியாது என்று சொல்லுவதற்கு தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள். கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள். யாருக்குச் சொன்னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால், கிறிஸ்துவருக்குச் சொன்னாரா? முஸ்லி முக்குச் சொன்னாரா? பார்சிகளுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாஸ்தி கனுக்கு சொன்னாரா? யாருக்குச் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந்தாயா? நீ பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்னவர்கள் யார்? சொன்ன வர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை சாஸ்திரமே சொன்னால் போதுமா? அதற்கு அடையாளமே வேண்டாமா? அச்சுப் புத்தகமும் அய்யர் பேச்சும், கிருபானந்தவாரி, பண்டித மணிகள் பிரசங்கங்களுமே போதுமா? இவைகளையெல்லாம் யோசித்த பிற கல்லவா சாஸ்திரம் சொல்லுகிறது என் பதையும், சாஸ்திரத்தை கடவுள் சொன் னார் என்பதையும் நீ மனிதனாய் இருந் தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டில் உனக்கு இதுகூடவா  தம்பி தெரியவில்லை? சாஸ்திர காலத்தைவிட இன்று கடவுள்கள் அருமை என்று நினைக் கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு, தோன்றிய வண்ணம்தானே இருக்கின்றன கடவுள் களுடைய அற்புதங்கள் இக்காலத்தில் நடக்காத நாள் ஏது? மனிதர்களிடத்தில் கடவுள்கள் பேசாத நாள் ஏது? பெசண் டம்மை இடம் பேசினார்; காந்தியாரிடம் பேசுகிறார்.
அசரீரியும், சோதனைகளும் நடக்காத நாள் ஏது? இப்படி எல்லாம் இருக்கும்போது இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன் னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில் அடே, மக்களா! நான்தாண்டா சாஸ் திரம் சொன்னேன்; சந்தேகப்படாதீர்கள்! என்று சொல்லித் தொலைத்தால் பிறகு உல கில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?
அல்லது ரமணரிஷிகள் என்ன, சாயி பாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத் தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?
இவ்வளவு தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலிஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?
ஆகையால், கடவுள் சொன்னது - சாஸ்திரம் என்பதை கட்டி வைத்துவிட்டு உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தீபாவளியைப் பற்றி யோசித்துப்பார் அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பீ!
கோபம் செய்தாலெமன் கொண்டோடிப் போவான் என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக் கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகிய வைகளின்மீது பற்று வைத்து தீபாவளிபற்றி சிறிது சிந்தித்துப் பார்!
தீபாவளி கதை
தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங் களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.
இது தீபாவளி கதை. மிகவும் அதிசய மானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.
மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிரா மணர்கள் சாபத்தால் இரணியன், இரணி யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத் திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதார மெடுத்து வந்து கொன்று விட்டார். இளைய வனான இரண்யாட்சனைக் கொல்ல மகா விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண் யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து பழையபடி விரித்துவிட்டு போய் விட்டார்.
இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில்ஆபாசமில்லை. இனிமேல் நடப்பது தான் ஆபாசம்.
என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.
விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக் கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர் களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.
மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலை யிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ் ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மா சூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும் புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார். இப்படி யுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத் ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன் றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?
இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத் தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித் தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தி னானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடு வதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?
இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண் டல்லவா போயிருக்க வேண்டும்?
அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந் திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?
அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அது வும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக் கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.
இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற் குக் கூலியா? அப்படியேதான் இருக்கட் டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர் களை இழிவு செய்ய எழுதினதல்லாமல்  வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரி யர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங் களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?
ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லாவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனை கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிட ரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண் டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
குடிஅரசு -கட்டுரை -  07.10.1944
-விடுதலை,1.11.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஏழு மொழிகள்



1. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்
2. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்
- தந்தை பெரியார்
3. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்
4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்
5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்
6. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.
7. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்.
-viduthalai,1.11.13

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்? - பெரியார்

தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும்.  திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன்.  காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்.  அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள்.  வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.  அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.  அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு.  இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற  நியதி இருக்கிறது.  அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது.  தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார்.  ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது.  மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார்.  அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை.  அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும்.  எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன்.  அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.  மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும்.  புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும்.  மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும்.  தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது.  90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது.  தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை  இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை.  மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு.  ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம்.  ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான்.  மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.  இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன்.  இது என் அபிப்பிராய மாத்திரமல்ல.  இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள்.  அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள்.  ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன்.   தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம்.  ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன்.  ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும்.  யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம்.  ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன.  இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம்.  இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள்.  இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை.  அக்கால  மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது.  இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம்.  பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம்.  ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம்.  இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம்.  இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள்.  நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது.  நாம் பயன் படுத்துவதுமில்லை.  உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள் வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்.  இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்?  அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன.  இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா?  அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.  அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும்.  இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர்களே!  இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன்.  இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு -  06.08.1939
-விடுதலை,6.1.13

அய்ரோப்பாவில் பெரியார்



அங்கு ரஷ்யாவில் 2000-_3000 ஜனங்கள் சந்தோஷமாக சௌக் கியமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிரம்பி வாழ்வதைப் பார்த்தேன்.
இங்கு நம்முடைய ஒரு வீட்டை என்ன அனவாசியமாக 3,4 அடுக்கு மெத்தைகளுடன் கட் டுகிறோம்.
அதில் பகுதி பாகம் நாம் உப யோகப்படுத்துவது கூட இல்லை.
அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம் சுகாதாரம் இருப்பதில்லை.
நம்முடைய வீட்டை நிரப்பு வது ஒடிந்து போன மத்து கெட் டுப் போன நாற்காலி முறம், கூடை, கிழிந்துபோன பாயும், அவிந்து போன குப்பைகளும்தான்.
இந்த முட்டாள்தனத்திற் காகவா நாம் பெரும் வீடு வைத்துக் கொண்டு வாழுகிறோம்? என்று யோசித்துப் பாருங்கள்.
அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்க லாம்.
சர்வாதிகாரியான ஸ்டாலி னுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் சுமார் 10, 16 அடிக்கும் உள்ள ஓர் அளவு இடந்தான்.
அங்கு ஒரே மாதிரி சாதிக்காய் கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும்.
அங்கு ஒரு சிறு 4- ஜ் 4 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது.
தோட்டியே கிடையாது.
அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய் விடுவோம்.
அவ்வளவு சுத்தம்.
அதில் எவ்வித வாடையும் இருக்காது. அழகு ஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது.
இங்கு ஒரு வீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கக்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்?
அப்படியிருந்தும் என்ன சகிக்க முடியாத சுகாதாரக் குறைவு?
இங்கு 300 பேர்களுக்கு ஒரு தோட்டி வீதம் இருப்பானென்று நம்புகிறேன்.
இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்?
எத்தனை வீடு, தெருக் கூட்டு கிறவர்கள்?
எத்தனை வேலைக்காரர்கள்?
இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுத்தந்தானே என்றும் அதி அக் கிரமமாக இருக் கிறது!
அங்கு கக்கூசுக் குப் பக்கத்திலேயே படுக்கை அறை இருக்கும்.
அங்குள்ள முறை கஷ்டத்திற்கே இடமில்லை வழியுமில்லை.
ஒவ்வொரு கூட்டுப் பண்ணை யிருக்கும் இடத்திலும், ஒவ்வொரு தொழிற்சாலை ஒரு நல்ல (Park) பார்க், சினிமா, விளையாட்டு இடம் டிராமா சுகாதார வசதி சாலை எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும் 1000 கூட் டுறவு பேருக்கும் முறைப்படி ஒழுங்கு படுத்தப்பட்டு சம்பளம் ஒரே அளவுதான் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேல்கொண்ட மீதியை அக் கூட்டப் பொது ஜனங்களுடைய நன்மைக்கு உபயோகப்படுத்து கிறார்கள்.
- க. பழநிசாமி,
தெ. புதுப்பட்டி (கி.அ.) 624-705
கன்னிவாடி (து.அ) திண்டுக்கல் கோட்டகை
பெரியார் நூலில் 172ஆம் பக்கத்தில் இருப்பது...
-விடுதலை ஞா.ம.,16.8.13

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?

- தந்தை பெரியார்
மனிதன் மின்சார விளக்கைப் பயன் படுத்துகின்றானே தவிர, முன்னோர் கள் காலத்திலிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோதம் என்று சொல்லி மனிதனின் சிந்தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழை யும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின் தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத் தறிவிருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன் னோர் - பெரியோர் என்கிற காரியங் களில் பயன்படுத்தாததே என்பது புலப்படுகிறது.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவ தாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவு வாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என் கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக்கின்றனர். எதற்காக ஒருவன்மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென் மத்தில் அவன் செய்த புண்ணியம் என் கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலையெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனி தனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட்டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென்கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய்தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்ப தால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக் கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானுமில்லை, பறையனுமில் லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளி வான விளக்கம் இல்லை. இவற்றிலி ருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உபயோகப்படுத்திக் கொண்டு வாழ் கின்றானோ,  அவன்தான் நம்மை யெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக் கின்றான். மற்றவற்றில் பகுத் தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத்திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்ப வில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்ற வனையெல்லாம் கொலை செய்திருக் கிறார்களே! சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தான்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண்டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்று தானே? துலுக்கன் முஸ்லிம் அல்லாத வன்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?
1920இல் மலையாளத்தில் மாப் பிள்ளா கலகம் ஏற் பட்டதே மதத்தைப் பரப்புவதற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன் னார். அதற்காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கையற்றவர் களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கின் றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக்கிடையே இருக்கிற மடைமை, முட்டாள்தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர்களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதே யாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971)
விடுதலை,23.6.13