சனி, 5 நவம்பர், 2016

வாழ்க்கையின் ரகசியம்


என்னைப் பொறுத்தவரையில் நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு லட்சியம் அற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இரட்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்கள் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒருசிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப் போகிறான்.
மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும் வரை இடையில் நடைபெறுகிறவை எல்லாம் அவனதுச் சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்கள் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு லட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து.
சமுதாயத்திற்கு பலன் தரும் வாழ்க்கையே சிறந்த லட்சியம். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவர் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கை யால் பிறர் நன்மை அடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமாகும். இதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி
மனித வாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இதுதான்.
- தந்தை பெரியார், (‘விடுதலை’ 21.03.1956)
-விடுதலை ஞாம.,10.9.16

வெள்ளி, 4 நவம்பர், 2016

தருமம்

8.6.1930- குடிஅரசிலிருந்து...

ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள் தனமாகத் தோன்றப் படுவதை நேரில் பார்க்கிறோம்.

உதாரணமாக, மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பணம் சேகரித்து, அவற்றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக் கொடுத்து, ஆசிர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தருமம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும், ஏமாற்றுத்தனம் என்றும் தோன்றிவிட்டது.

அதுபோலவே, ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்குக் கெடுதியை விளை விக்கத்தக்கதான தேசத்துரோகம் என்றும் தோன்றி அனேகர்களுக்கு பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்திய சாலை முதலியவைகட்கு உபயோகப் படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றிவிட்டது.

ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டுவிட்டு, சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு உத்திராட்சத்தையும், துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது.

ஆனால், இப்போது அது திருடர்களுடையவும், சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடு கின்றவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும், ஏற்பட்டுவிட்டது.

ஒரு காலத்தில், கள்ளையும், சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும், எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியனதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதைக் கும்பிட்டுக் கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு, தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவைகள் காட்டு மிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப் பட்டு வருகிறது.

மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும், பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது.  மாடு தின்பது அதர்மமாய் இருக் கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக இருக்கிறது. வேறொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையும் சாப்பி டுவது தருமமாக இருக்கிறது. பிறிதொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜந்துவையானாலும் சாப்பிடுவது அதர்மமா யிருக்கிறது.

ஒரு மதக்காரருக்கு, மதக் கொள்கைபடி கள்ளு, சாராயம் குடிப்பது தரும மாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு, அவைகளைத் தொடுவது அதர்மமாயி ருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே, விவாக சம்பந்த முறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தைப் பெண்ணை மணக்கிறார்கள்.  மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள்.

பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக்கிறார்கள்.

ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை வெறுக்கிறார்கள். இன் னொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாக கொள்ளுகிறார்கள்.

வேறொரு கூட்டத்தார், பார்ப்பனர்களை யோக்கிய மற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார், பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனமென்று கருதுகிறார்கள்.

இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது. மேலும் இதுபோலவே, சாஸ்திர விடயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமுகத்திற்குக் கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்கிற மனுதரும சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது.

இப்போது அவை சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர் களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்து கொளுத்தப்படுகிறது. இதுபோலவே காலத்திற்கும், தேசத்திற்கும், அறிவிற்கும் தகுந்தபடி தருமங்கள் மாறுவது சகஜமாக  இருக்கிறது.

என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக்கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டு மென்கிறேன். யாராவது ஒருத்தன்தான் நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டிய வர்கள்தான்.

புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் கார ணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாச மாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந் தாலும் முதலிலும் கடைசியிலும் இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுப்பாய் என்றும் எழுதி வைத்ததே காரணமாகும்.

- -தந்தை பெரியார்
-விடுதலை,4.11.16

வியாழன், 3 நவம்பர், 2016

சங்கராச்சாரி யார்?



- தந்தை பெரியார்

சங்கராச்சாரியின் அட்டகாசமும், ஆணவமும், கொள் ளையும், இன்று சென்னையில் தாண்டவமாடுகின்றது. ஏன் என்று கேட்பாரில்லை? பார்ப்பனரல்லாத மக்கள் அவர்காலில் 1000, 2000, 3000, 5000, 10000 ரூ. கணக்காய் கொண்டு. போய்க் கொட்டி பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து கும்பிட்டு பாத தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். சங்கராச்சாரி கால் கழுவின தண்ணீர் இன்று தங்கத்தை விட ஏன் - வைரத்தை விட அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. சுயராஜ்யம் கேட்கும் ஆட்களும் காந்தி சுயராஜ்யத்திற்கு  அதாவது ராமராஜ்யத்திற்கு 1,000, 10,000 என்று காந்தி சிஷ்யர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அள்ளியள்ளிக் கொடுத்த ஆட்களும் இதில் அதிகம் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதாவது கடுகளவு  அறிவாவது சுயமரியாதையாவது இருக் கின்றதா? என்பது தான் நமது சந்தேகம்.

சங்கராச்சாரி என்றால் என்ன? யாருக்கு சங்கராச்சாரி? அவரது கொள்கை என்ன? நடப்பு என்ன? வேஷம் என்ன? எண்ணம் என்ன? அனுபவம் என்ன? என்பது போன்ற ஒவ்வொன்றையும் யாராவது கவனித்தார்களா? அல்லது கவனித்தும் வேண்டுமென்றே தெரியாதவர்கள் போல் நடந்து  கொள்ளுகிறார்களா? என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர்களே! சற்று கவனித்துப் பாருங்கள். சங்கராச்சாரியார் என்பவர் ஒரு விதமான ஆணவம் பிடித்த நாதிகக் கொள்ளைக்காரர் அதாவது கடவுள் என்று ஒரு தனிப் பொருள் கிடையாது என்பதோடு தானே தான் கடவுள் என்ற கொள்கையுடையவர்.

ஆனால் அவர் தினமும் பூஜிக்கும் உருவமோ ஒரு தனிக் கடவுள் உருவம். அதிலும் பெண் கடவுள் அதாவது சக்தி பூஜை வேஷமோ, சைவவேஷம், விபூதி பட்டை பட்டையாய் பூசிக் கொள்வது.

நிலையோ சந்யாசி நிலை அதாவது தலை மொட்டை காவிவதிரம்
அனுபவமோ, ராஜபோகம், யானை  - குதிரை - பல்லக்கு படை, எடுபிடி ஆள்கள்.

இந்த நிலையில் உள்ள இவரால் பொது மக்களுக்கு ஏற்படும் பயனோ தண்டவரி அதாவது சர்க்கார் தண்ட வரியை விட மோசமான வரி. பார்ப்பன உத்தியோகதர் களையும் செல்வாக்கான பார்ப்பன வக்கீல்களையும், பார்ப் பன பத்திராதிபர்களையும் விட்டு மிரட்டியும் தாட்சண்யத் திற்குக் கட்டுப்படுத்தப் படக் கூடிய தந்திரத்தைச் செய்தும் மக்களின் விதரை நசுக்குவது போல் நிர்ப்பந்தப் படுத்தி பணம் வசூல் செய்வது.

இப்படி வசூல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு செய்யப்படும் காரியமோ பார்ப்பன சோம்பேறிகளுக்கும், கொட்டாப்புளிகளுக்கும் பானை பானையாய் பாயாசம் வடையுடன் பொங்கிப் போடுவது.

பணங்கொடுத்தவர்களுக்கு பயனோ, கொடுப்பதையும் கொடுத்து சங்கராச்சாரிகாலில் பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து போதாக்குறைக்கு அவர் கால் கழுவின தண் ணீரையும் குடித்து விட்டு வந்து வீடு சேருவது.

இவ்வளவோடு இந்த சீன் முடிவு பெருவதில்லை. பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார் வீடு வந்து சேருவதற்கு முன்பதாகவே பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார்களை பார்த்ததற்காகவும் அவர்களுடன் பேசினதற்காகவும் அந்தத் தோஷ பரிகாரத்துக்காக இவர்கள் பணத்திலேயே பார்ப் பனருக்கு தானம் வழங்குவதும், அவரும் குளித்து முழுகி தீட்டைக் கழித்து விட்டு ஜபம் செய்து தோஷத்தைப் பரிகாரம் செய்து கொள்ளுவதும் ஆகும்.

இவை ஒரு புறமிருக்க, இவருக்குத் தனியோக்கியதை என்ன என்பதைப் பார்ப்போம். இவர் ஒரு சாதாரண பார்ப்பனர் இவருக்கு முன் அந்தப் பட்டத்தில் இருந்தவர் இவரைப் பிடித்து வைத்து விட்டுப் போனார் என்பதைத் தவிர, வேறு ஒரு யோக்கியதையோ அருகதையோ கிடை யாது. இவருக்குப் பிறகு யார் அந்தப் பட்டத்துக்கு வருவார் என்பதும் இவர் பிடித்த வைக்கும் ஆளேயொழிய வேறில்லை. இவர் காலம் முடியும் வரை எந்த வழியிலாவது இவருக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுகின்றவர்கள். அந்த தானத்திற்கு அருகதையாகி விடுவார்கள். ஆகவே, வாக்கு சுதந்திரம், ஓட்டு சுதந்திரம், ஜன நாயகம்  கேட்கின்றோம் என்று சொல்லும் பார்ப்பனர்கள் அதை விட  மேலானதாகக் கருதும் தங்கள் மத விஷயத்தில் ஆத்மார்த்த பரமார்த்திக விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் இந்தப் படி நடந்துக் கொள்வது அறிவில்லாமலா? அல்லது மேதாவித்தனத்தாலா அல்லது இதுவும் சுயராஜ்யம் தேசியம் என்பதைப் போன்ற ஒரு சூழ்ச்சியாலா? என்று யோசித்துப் பாருங்கள்.

நிற்க, சகலத்தையும், துறந்து ஆன்ம கோடிகள் உய்வ தற்காக உலகில் தோன்றிய அவதார புருஷரான சங்கராச்சாரிய சுவாமிகள் யானை, குதிரை, பல்லக்கு இதைத் தூக்க 32 ஆள்கள் மற்றும் படைகொடி எதற்கு என்று கேட்பது ஒரு புறமிருக்க இவருக்கு அதாவது  இந்த சந்யாசிக்கு பிச்சைக்கு என்று தினம் 1க்கு 500 ரூ  அழுவது எதற்காக என்று கேட் கின்றோம். இவர் பக்தாள் வீடுகளுக்குச் செல்லத் தனித்தனி ரேட்டுகள் எதற்காக என்று, கேட்கின்றோம்.

இந்தப்படி வசூலித்த பணத்தைக் கொண்டு பொங்கிப் பொங்கிப் போடும் சமாராதனையில் பணம் கொடுத்த பார்ப் பனரல்லார் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்று கேட் கின்றோம்?
ஒரு சமுகத்தில் எவ்வளவுதான் அடி முட்டாள்கள் இருந்து விட்டாலும் அதை இன்ன அளவு தான் ஏமாற்றுவது என்கின்ற ஒரு பட்சாதாபமாவது இருக்க வேண்டமா? என்று கேட்கின்றோம்.  இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தோமேயானால் இது ஒரு பார்ப்பனப் பிரசாரம் என்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்காக செய்யப்படும் பார்ப்பன மத சூழ்ச்சிப் பிரசாரம் என்றும் சொல்லலாமல் வேறு என்ன சொல்ல இருக்கின்றது.

காந்தியை மகாத்மா ஆக்கினதில் எத்தனை சோம்பேறி களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகம், பதவி புகழ் வேட்டைக்கும். இடம் கிடைத்ததோ அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான பேருக்கு ஒரு பார்ப்பனரைச் சங்கராச்சாரி லோக குரு ஆக்கினதில் வயிற்றுப் பிழைப்பு மாத்திரமில்லாமல் உயர்ந்த ஜாதி நிலையும்  ஏற்பட்டு வருகின்றது.
சங்கராச்சாரி இன்னார் என்றும் அவருடைய யோக் கியதை இன்னதென்றும் நம்மைவிட பல மடங்கு அதிக மாகவே பார்ப்பனருக்கும் தெரியுமானாலும் அதை ஒரு சாதனமாய் வைத்து அதாவது கோவிலை ஒரு கல்லை நட்டு அதன் மூலமாக மக்களைக் கொள்ளை அடிப்பது போல் மத வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த மாயையில் பார்ப்பன ரல்லாத மக்கள் சிக்கிப் பணத்தை அள்ளிக் கொடுப்பதென் றால் அறிவுள்ள யாருக்குத் தான் வயிறு கொதிக்காது என்று கேட்கின்றோம்.

இந்த லட்சணத்தில் அவர் குருவாயூர் கோவில் பிர வேசத்தைப் பற்றி ஜாமொர்னுக்கு சண்டாளர்களைக் கோவிலுக்குள் விடாதே என்று தந்தி கொடுத்திருக் கிறாராம். இது எவ்வளவு அயோக்கியத்னமான காரியம் என்று கேட் கின்றோம். இவருக்கு (அதாவது சங்கராச்சாரிக்கும்) குருவாயூ ருக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் என்று கேட்கின்றோம்.
அப்துல் காதருக்கும், ஆடி அமாவாசைக்கும் உள்ள சம்மந்தம் போல் இவரோ தானே கடவுள் என்பவர், சைவவேஷக்காரர். சக்தி பூசைக்காரர், சன்னியாசி துறவி ஆகிய இத்தனைக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு கல்லுருவம் உள்ள இடம் .அதுவும் விஷ்ணுசாமி என்கின்ற பெயர் கொண்ட கல் உருவம் உள்ள கோவில். அதுவும் பாமர மக்களை உஜ்ஜீவிக்கச் செய்ய அச்சவதாரமாய் எழுந்தருளி இருக்கும் இடம், அதுவும் ஒரு  மனித உருவ திரியின் வயிற் றில் பிறந்து வளர்ந்து பிறகு கடவுளாகி வந்த அய்தீகத்தை ஆதாரமாய் வைத்து செய்யப்பட்ட உருவத்தினிடம் ஒரு கூட்டத்தாரை மாத்திரம் போக விடப்படக்கூடாது என்றும், அவர்கள் சண்டாளர்கள் என்றும், தந்தி கொடுப்பதென்றால் அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில் இரண்டு உயிர்கள் அதாவது ஒரு மகாத்மா என்னும் உயிரும் மற்றொன்று மகாத்மாவினது பிரீதிக்கு பாத்திரமான உயிரும் ஆக இரண்டு உயிரும் செத்தாலும் சரி அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, கல்லுருவத்தினிடம் மாத்திரம் மனிதனை விட்டு  விடாதே என்கின்ற கருத்தின் மீது தந்தி கொடுப்ப தென்றால் இதன் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் என்னவென்று சொல்வது? ஒரு சமயம் இவருக்கு ஜீவன் களிடத்தில் அன்பும், சமத்துவமும் நேரான ஞானமும் இருந் திருக்குமானால் யார் செத்தாலும் கவலையில்லை மக்களில் ஒரு சமுகத்திற்கும் ஒருவித இழிவும் இருக்கக் கூடாது எல்லோரையும் உள்ளே விட்டு அவர்களுக்கு உள்ள இழிவை நீக்குங்கள் என்று தந்தி கொடுத்திருந்தால் இவரை மனித சமுகத்தில் சேர்க்கலாம். அப்படிக் கில்லாமல் இந்தப் படிக்கு தந்தி கொடுப்பதை நினைத்தால் இந்த தாபனத்தின் அட்டூழியம் எவ்வளவு என்பது தான் முன் வந்து நிற்கின்றது.

தோழர்கள் காந்தியும், கேளப்பனும், செத்துப் போவார் களே என்று நாம் சிறிதும் கவலை கொண்டு இவ்விதம் எழுத வில்லை. அவர்கள் இருவரும் எப்படியாவது, என்றைக்காவது சாகின்றவர்கள் தாம் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் தங்களுடைய உயிரை வியாதிக்கும் மூப்புக்கும் பலியாய் கொடுப்பதை விட ஒரு புகழுக்கோ அல்லது தாங்கள் நல்லது என்று நினைக்கிற ஒரு காரியத்திற்கோ பலி கொடுப்போமே என்று எண்ணி இருக்கலாம். அல்லது பல காரணங்களால் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றி இருக்க லாம். அதலால் நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சங்க ராச்சாரியாரின் இப்படிப்பட்ட காரியமும் அவர் ஆதரவால் நடத்தப்படும் பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமும் சாதிக்கக் கூடியதாயில்லை என்பதற்காகவே, இதை எழுதுகின்றோம். சங்கராச்சாரி சென்னையில் இன்னும் ஒரு மாத காலம் தங்கப் போவதாகவும் அதற்குப் பல பேர் பார்ப்பனரல்லா தார்களே இன்றும் பல ஆயிர ரூபாய்கள் கொடுக்கப் போவதாகவும் யாரோ ஒரு மார்வாடி சேட் ஒரு மாதத்திய செலவையும் அதாவது சுமார் 10, 20 ஆயிரம் ரூபாயையும் பொருத்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப் பட்டோம். இது உண்மையாய் இருக்குமானால் இதை மனதார அனுமதிக்க லாமா? என்பதே தான் இப்போதைய நமது கேள்வி. நாட்டில் உள்ள பண நெருக்கடி எவ்வளவு? ஏழைகள் தொழிலாளர்கள் வேலை யில்லாமல் கூலி இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் பட்டினி கிடந்து தொல்லைப்படுவது எவ்வளவு? உதாரணமாக எம். எ. எம். ரயில்வே தொழிலாளர்கள் வேலையில்லாத காரணத்தால் சிலரால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு அவரவர்கள் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களது பிள்ளைகுட்டிகள் பட்டினி யால் மடிகின்றன.

ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால், சோம்பேறிப் பார்ப்பனர்களுக்குத் தின்று கொழுக்க என்று சமாராதனைக்குப் பதினாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை போகின்றதுடன் வேகின்ற வீட்டில் பிடிங்கினது லாபம் என்பது போல் வேலை நிறுத்தத்தை ஆதரவாய் வைத்துக் கொண்டு தாங்கள் பெரிய மனிதர்களாகவும் நோகாமல் சட்ட சபைக்குப் போகவும் சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர வேறு என்ன நடக்கின்றது என்று கேட்கின்றோம்.

தேசியப் பத்திரிகைகள் தொழிலாளர்களிடத்தில் சுயமரியாதைக் கொள்கைளைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து விட்டு தங்கள் பத்திரிகையில் சங்கராச்சாரி பிரசாரத் திற்கு தினம் 5 கலமும், சீர்திருத்த ஆச்சாரிக்கு தினம் 10 கலமும் இடம் ஒதுக்குவதைத் தவிர மற்றும் இதில் பிரவேசித் தால் தங்களுக்கு ஏதாவது தலைமை தானம் கிடைக்குமா என்றும் மீன்கொத்தி குருவிபோல் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்கின்றன என்று கேட்கின்றோம்.

ஆகவே நாம் முடிவாகச் சொல்லுவதென்ன வென்றால், கள், சாராயக் கடை மறியலை விட, அன்னியத்துணி மறியலை விட மற்றும் கோவில் பிரவேதத்திற்கு உயிர் விடுவதை விட, சங்கராச்சாரி கொள்ளையையும், அட்டூழியத்தையும், அவர் பார்பனரல்லாத மக்களை இழிவுபடுத்திப் பிரசாரம் செய்வதை யும் அடக்கு வதற்குப் பாடுபடுவதே முக்கிய கடமை என்று சொல்லுகின்றோம். ஏனெனில் இது நமது சமுகத்திற்கே அவமானம்! அவமானம்!! அளவு கடந்த அவமானம்!!!

குடிஅரசு - தலையங்கம் - 18.12.1932
-விடுதலை,12.6.16

நம் தாழ்மைக்குக் காரணம் என்ன? -தந்தை பெரியார்




“தமிழர் (திராவிடர்) நிலை தாழ்ந்திருக்கிறது.
சமுதாயத்தில் கீழான ஜாதி.
கல்வியில் 100 -க்கு 80 தற்குறி.


செல்வத்தில் 100 -க்கு 90 கூலி ஜீவனம். தொழிலில் 100 -க்கு 75 சரீரப் பாடுபட்டு உழைக்கும் தொழில்,  (“ஈனத்” தொழில்) என்பது.
சர்க்கார் உத்தியோகத்தில் ஏவலாளி (பியூன், ஜவான், கிளார்க் வேலை)

ஒற்றுமையில் 108 ஜாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுயநலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும், ஒழிக்க ஏய்ப்பதும், ஒழிக்க சமயம் பார்ப்பதும்.
சமயத்தில் (மதத்தில்) எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்துப்போடுவது,

அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்துக் கை தூக்குவது.

மானத்தில் ஈனமும், மதிப்பில் காரி உமிழத்தக்கதுமாகவும் இருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன?” என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
அதோடு, “தமிழ்நாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக்கூடிய - போற்றக்கூடிய ஒரு தமிழன்கூட கிடையாது. அதுபோலவே ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது.

ஏதாவது ஒரு உத்தியோகத்துக்கோ, பதவிக்கோ, உயர்நிலைக்கோ வந்த உடன் தனக்கு மேலிருப்பவனையும், தனக்கு உதவி செய்தவனையும், கீழே தள்ள முயற்சிக்காதவனும், சிபார்சு செய்தவனைத் தூற்றித் திரியாதவனும் பெரிதும் கிடையாது.

தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழிதோண்டாத தமிழன் அரிதினுமரிது.

நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றுகூட சொல்லப்படுவதற்கும் அவை அநேகமாய் உண்மையாய் இருப்பதற்கும் காரணம் என்ன?” என்பது இரண்டாவது கேள்வியாகும்.

“இந்த நிலையும் குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்கும், ஏன் சட்டைக்காரர்களுக்கும்கூட சாதாரண மாய்க் காண்பதற்கு முடிவதில்லை” என்று சொல்லப்படுகிறதே, இதற்குக் காரணம் என்ன? என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இந்த மூன்று கேள்விகளிலும் உள்ள விஷயங்கள் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருப்பதாகச் சிலர் கருதலாம். அது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரும்பாகம் உண்மை என்பதைப் பெரும்பான்மையோர் ஒப்புக் கொள்ளுவார்கள். ஆதலால் இவைகளுக்குக் காரணம் என்ன என்று கவனிக்க வேண்டாமா?
சென்னை மாகாண (திராவிட நாட்டு) ஜனசங்கையில் 100-க்கு  3 பேர்களே பார்ப்பனர்கள் 100 -க்கு எட்டு, அல்லது ஒன்பது பேர்களே முஸ்லிம்கள், 100-க்கு ஒருவராய் இருந்தாலும் இருக்கலாம். சட்டைக்காரர்கள் (அதாவது திராவிட ஆரியர்) இப்படி மிகச் சிறுதொகையினராக இருக்கும் இவர்கள் தமிழர் களுக்கு ஏற்பட்ட மேற்கண்ட இழிவுகள் இல்லாமல் மேன்மை யாய், கட்டுப்பாடாய், சுதந்திரமாய் மதிக்கத்தக்க வண்ணம், அந்நியன் கண்டு பயப்படும்படியும் வாழ்வதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்தால் தமிழர் இழிவுக்குக் காரணங்கள் சுலபமாய் கிடைத்துவிடும்.

காரணம்

1. தமிழனுக்கு அஸ்திவாரமில்லை. அதாவது அவன் யார்? அவனுக்குச் சொந்தம் எது? அவனுடைய பூர்வோத்திரமென்ன? லட்சியம் என்ன? என்பனவாகிய நாலும் தெரியாதவனாகவும் ஆதாரம் இல்லாதவனாகவும் இருக்கிறான்.

ஆகவே அஸ்திவாரமில்லாத கட்டடம் வெடிப்புக் காணுவதும், அதிருவதும், அதில் (மானமோ மேன்மையோ) குடி இருக்கப் பயப்படுவதும் இயற்கையேதானே? அதுபோலவே தனக்குச் சொந்தம், உரிமை இன்னது என்று தெரியாதவன் தொட்டதற்கெல்லாம் அந்நியனைப் பல்லைக்கிஞ்சி கெஞ்சுவதும் ஒண்டுவதும் ஒருவனுக்கொருவன் போட்டிபோட்டுப் பின்தள்ளி விட்டுப்போய் தன் காரியம் பார்த்துக் கொள்ளுவதும் இயற்கையேதானே.

2. தமிழனுக்கு ஒரு ஸ்தானம் கிடையாது. வேறு எதனு டனாவது சேர்ந்துதான் தன்னைத் தமிழன் என்று காட்டிக்கொள்ள வேண்டியவனாய் இருக்கிறான். அப்படி இல்லாவிட்டால் “பார்ப்பனரல்லாதான், முஸ்லிமல்லாதான், கிறிஸ்தவனல்லாதான், இந்து அல்லாதவன்” என்பன போன்ற “அல்லாதான் என்கின்ற பெயரால்தான் தன்னைக் காட்டிக் கொள்ளமுடிகிறது.
3. தமிழன் என்றால் இதில் பார்ப்பான், முஸ்லிம், கிறிஸ்தவன் முதலிய பலர் சேருகிறார்கள். யாரையாவது நாம் சேர்ப்பதில்லை என்றால் அவர்கள், “நானும் தமிழன், தமிழ்நாட்டில் பிறந்தவன், தமிழ் பேசுகிறவன் என்கிறார்கள். அது மாத்திரமா? தமிழனோ, தமிழ்ப் பண்டிதனோ தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசுகிறவன் எவனும் அவன் நம்மை எவ்வளவு இழிவாயும், மானமற்ற தன்மை உண்டாகும்படியும் நடத்தினாலும் சரி, அவனெல்லாம் தமிழனே” என்று வக்காலத்துப் பேசுகிறான், ஆதாரம் காட்டுகிறான்.

4. தமிழன் நடந்து கொள்ளுவதற்கு என்று தனிமுறை வழித்துறை கிடையாது. தமிழனுக்கு என்று தனி நடை, உடை, பாவனை கிடையாது.

5. தமிழனுக்கு என்று, தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியமும் கிடையாது.

6. தமிழனைத் தனித்த முறையில் நடத்த தலைவன் கிடையாது.

7. தமிழருள் முக்கியமானவர்கள் என்று கருதும்படியாக நடந்து கொள்ளுகிறவர்களுக்கும், பிறர் தங்களை அப்படிக் கருதவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கும், தமிழர் சமுதாயத்தையும், இனத்தையும் பொறுத்த பொறுப்பும் கவலை யும் கிடையவே கிடையாது என்பதோடு, அவர்களுக்குத் தங்களை அந்நியன் எவ்வளவு இழிவும் தாழ்மையும் படுத் தினாலும் அதைப் பற்றிய கவலையும் கிடையாது. அதைப் பற்றிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.

8. தமிழர்களுக்குத் தன்மானம், மான உணர்ச்சி, ஏற்படவழி இல்லை. ஏனெனில் தமிழன் எதைக் கொண்டு தனக்கு மான ஈனம் ஏற்பட்டதாக வருந்த முடியும்? இப்போது பெரும்பாலும் ஏதோ தனக்கு சில கிளர்ச்சியின் பயனாய் புது யோக்கியதை அதுவும் தனது தகுதிக்கும், தேவைக்கும் மேல் வந்ததாகக் கருதி  இறுமாந்து இருக்கிறான். “எப்பொழுது தமிழனுக்கு மானம் இருந்தது இப்போது போய் விட்டதே என்று வருத்தப்படுவதற்கு” என்று எந்தத் தமிழன் யோசித்தாலும் அவனுக்கு என்ன ஆதாரம் கிடைக்கக் கூடும்.
அநேக அரசர்கள் அன்றும் இன்றும்கூட தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறார்கள். அதுபோலவே அநேக விபசாரி மகனும், தான் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறான். திராவிடத்தில் சில நாடுகளில் பொது மக்களில் பல சமீபகாலம் வரை, இன்றும் சிலர் தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்ள் 30, 40 வருஷங்களுக்கு முன் சில பெருங் குடும்பங்களில் “நல்ல பிள்ளைகள் பிறக்க மேல் ஜாதியார்களை வேலைக்கு வைத்துக் கொள்வது என்கின்ற சம்பிரதாயம் இருந்ததாக” இன்றைய கிழவன்மார்கள் பேசிக் கொள்வதுண்டு.

அண்ணன் தம்பி இரண்டு மூன்று பேர் ஒரே பெண்ணைக் கட்டிக்கொண்டு “பாண்டவர்கள்” போல் வாழ்வதும், அக்காள் தங்கை 2, 3 பேர் ஒரு கணவனைக் கட்டிக்கொண்டு ஆரியக் கடவுள்கள் போல் வாழ்வதும் முறையே கேரளத்திலும், தமிழ் நாட்டிலும் இன்றும் சமுதாயப் பழக்க முறையில் பார்க்கலாம்.

விபசாரத்திற்குப் பயன்படுவதற்கு என்று ஒரு ஜாதியும்; அதற்கென்று சமுதாயத்திலும் சட்டத்திலும் விதிமுறைகளும்; தாய், தகப்பன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைமார்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அத்தொழிலில் நடத்த முதலாளிகளாகவும், குமாஸ்தாவாகவும், ஏவலாளிகளாகவும் இருப்பதும் இன்றும் திராவிடத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.
இவைதான் போகட்டுமென்றால் தமிழர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களைப் பார்ப்பானுக்குத் கீழான ஜாதி என்றே கருதிக் கொண்டும் நடத்தப்படச் சம்மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவைகளையெல்லாம் ஏன் காட்டுகிறோம் என்றால் தமிழர்களின் பிரமுகர்களுக்கு தமிழர் சமுதாய இனத்தைப்பற்றி, இழிவைப்பற்றிக் கவலை இருந்ததில்லை என்பதையும், இருக்கிறதில்லை என்பதையும், பண்டிதர்கள் என்பவர்களையும் பார்த்தால் இனியும் இருக்கப் போவதில்லை என்பதையும் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

தமிழர்களில் உள்ள செல்வவான்களோ என்றால் தாங்கள் எப்படியெல்லாமோ தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசுகூட செலவிடுவதில்லை. அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரணஸ்தர்களாகிய தங்களது எதிரிகளுக்குப் பயன்படும்படியே செலவழிக்கிறார்கள்.

தமிழர்களில் படித்தவர்கள் பண்டிதர்கள் என்பவர்கள் சங்கதியோ சொல்லவே வேண்டியதில்லை. ஒரு விபசாரி மகன் “நான் பார்ப்பானுக்குப் பிறந்தவன் தெரியுமா?” என்று தன்னைப் பற்றி பெருமைப்படுவதுபோல் தமிழ்ப் படித்தவர்களும், பண்டிதர்களும்’’ இன்றுள்ள பார்ப்பனர்கள் பிறவியினால் பார்ப்பனர்களாவார்கள், நாங்களோ கருமத்தினால் பார்ப்பனர்கள் (அந்தணர்கள்) ஆவோம்“ என்று இருவருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நடக்கிறார்கள். மேல் ஜாதியார் நம்மை இழிவு படுத்துவதைவிட இவர்கள் நம்மை அதிகமாய் நிரந்தர மாய் இழிவுபடுத்துகிறார்கள்.

இனி நம் உத்தியோகஸ்தர்களோ உத்தியோகம் கிடைக்கும் வரை “நான் தமிழன், தமிழன்” என்று பாத்தியம் கொண்டாடி உத்தியோகத்துக்கு அலைந்து திரிந்து அது கிடைத்தவுடன் பியூன்களின் எஜமான் சப்தமும், பங்காவின் குளிர்ந்த காற்றும், பொதுஜனங்களின் தலை குனிவும் கிடைக்கிற நிலை வந்தவுடன், “தீஸ் டர்ட்டி இடியட் நான்பிராமின்ஸ் ஹாவ் நோ பிரெயின், அண்ட் தே டோன் னோ எடிகேட், தே ஆர் கொயட்

அன்பிட்ப்பார் எனி சிம்பத்தி”

அதாவது, “இந்த அசிங்கம் பிடித்த மடப்பசங்களான பார்ப்பனரல்லாதார்களுக்குப் புத்தியும் கிடையாது. மரியாதையும் தெரிகிறதில்லை. இவர்கள் பரிதாபம் காட்டப்படக்கூட யோக் கியதை அற்றவர்கள்” என்பதாகச் சொல்லி தன்னை வேறு ஜாதி யானாகக் காட்டிக்கொண்டு, தான் இன்னும் மேலே போவதற்காக உண்மையில் வேறு ஜாதியினராகவே ஆகிவிடுகிறார்.
பெரும் பதவிக்குச் சென்று விட்ட தமிழர்களோ, இன்னும் மேல் பதவிக்குப் போவதற்காக, மற்றவர்கள் எல்லோரையும் கீழ் ஜாதியாக மதித்துத் தங்களைப் பார்ப்பனர் என்றே மதித்துக் கொண்டு, அதனாலேயே தங்களுக்கு அதிக புத்தி இருப்பதாக நினைத்துக்கொண்டு தங்களைத் தவிர வேறு யாரும் இப் பதவிக்கு வரக்கூடாதென்று மற்றவர்களைக் கீழே அழுத்தவே முயற்சிக்கிறார்கள்.

வக்கீல்களோ போட்டிபோட்டுக்கொண்டு எதிரிகளுக்கு நல்ல பிள்ளைகளாகிறார்கள்.

தமிழர் மிராசுதாரர்களோ, மேல் ஜாதியைக் காப்பியடித்து பார்ப்பனத் தமிழ் பேசிக்கொண்டு தங்கள் வேலைக்காரர்களையும், ஏழைகளையும் சூத்திரர்கள் போலவே கருதி நடத்தி மேல் ஜாதி தயவுக்கே காத்திருக்கிறார்கள்.

இனி யார் பாக்கி என்றால் யந்திர சாதனங்களின் முதலாளிகள், இவர்களுக்குக் கடவுள் பணம்தான். என்ன பண்ணியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதும், “ஜாதியாவது இனமாவது, நம் வேலையை நாம் பார்ப்போம். செல்வாக்கிருக்கிறவன் காலண்டைக் கிடப்போம். நமக்கென்னத்துக்கு ஊர்வம்பு, அவ்வப்போது பணம் செலவு செய்து எதையும் சாதித்துக் கொள்ளலாம்“ என்பதை “மோட்ச மந்திரமாக”க் கொண்டவர்கள்.

நம் தொண்டர்களில் சிலரின் சங்கதியோ, பிரபுக்கள், பணக்காரர்கள், பண்டிதர்கள் ஆகியவர்கள் நிலையே இப்படி இருக்கும்போது நாளைய கஞ்சிக்கு வகையில்லாமல் வீம்பு பேசிக்கொண்டு நடக்கிற சில தொண்டர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? பல யோக்கியத் தொண்டர்கள் இருக்க லாம். ஆனால் “பசி வந்திட (பெண்டு பிள்ளை கஞ்சிக்கு அழுதிட) பத்தும் பறந்து போகும்“ அல்லவா.......

இவர்கள் இத்தனை பேருக்கும் தங்கள் நலத்தில், பெருமை யில், முற்போக்கில், பணத்தில் தங்கள் வாழ்வில் இருக்கும் கவலையில் 100இல் ஒரு பாகம் கூட தங்கள் இழிவைப் பற்றியோ தங்கள் இன (தமிழர்) இழிவைப்பற்றியோ கவலை இல்லை.

ஆகவே தமிழர் இழி நிலைக்கு இவைகளைவிட வேறு காரணம் என்ன வேண்டும்?
ஆனால் பார்ப்பனரைப் பாருங்கள்.

காந்தியை “மகான்” - “மகாத்மா” - “கடவுள்” என்கிறார்கள். காந்தியாரோ காங்கிரஸ் மெம்பர்கூட அல்ல. அவர் காங்கிரசுக்கு இன்று தலைவர்கூட இல்லை. எதிரி ஆட்களில் ஒருவரைப் பிடித்துத்தான் தலைவர் செய்து தங்கள் இஷ்டப்படி ஆட்டு கிறார்கள்.

தங்கள் இனத்தைப்பற்றிக் காங்கிரசில் ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனால் காங்கிரசை தங்கள் இன நன்மைக்கே நடத்துகிறார்கள். அதில் சேர்க்கப்படும் நம்ம ஆட்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது. ஆனால் அவர்கள் சேர்த்த நம்ம ஆட்களை குரங்குகள்போல் ஆட்டுகிறார்கள். எவனாவது, தன் இனத்தைப்பற்றியோ இன நலத்தைப் பற்றியோ நினைப்பார்களேயானால் உடனே அவனை மகாத்மா, மகாராஜா வானாலும் தலைகீழாகக் கவிழ்த்து துராத்மா ஆக்கிவிடு கிறார்கள்.

தங்களுக்கென்று ஸ்தாபனமில்லாமலும் அமைப்பு இல்லா மலும் (காங்கிரசையே தங்கள் ஸ்தாபனமாக வைத்து) அவர்கள் காரியம் நடந்து கொண்டே போகிறது. அவர்களில் இனப்பற்று ஜாதிப்பற்று இல்லாதவர்கள் கிடையவே கிடையாது. இவற்றைக் காட்டிக் கொள்ளவோ வேலை செய்யவோ பயப்படுகிறவர்கள். அவர்களில் ஒருவர்கூடக் கிடையாது.

ஒரு காசு செலவு செய்யாமல் ஒரு ஸ்தாபனத்திலும் சம்மந்தம் வைத்துக் கொள்ளாமலும் வெறும் அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஒரு வேலையும் செய்யாமல் சாஸ்திரிகளும், அய்யர்களும், ஆச்சாரியர்களும் ஆக எத்தனை பேர்கள் இன்று அரசியலையும் இந்திய நாட்டு சமுதாய இயலையும் தங்கள் இனநலத்துக்குத் தங்கள் இஷ்டப்படி நடத்துகிறார்கள்!
இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு உள்ள இன அபிமானமும், ஜாதி அபிமானமும், இனத்தில் ஜாதியில் தங்களைத் தனியாய்ப் பிரித்துக் காட்டிக் கொள்ளுவதும், அதை அவர்களில் ஆணும் பெண்ணும் அத்தனை பேரும் கொண்டிருப்பதுமல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இப்படியேதான் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

ஆகவே நமது கீழ்மைக்கும், நம் எதிரிகளினுடையவும், மற்றவர்களுடையவும் மேன்மைக்கும் வேறுகாரணம் என்ன சொல்லுகிறீர்கள்?

(குடிஅரசு - கட்டுரை -  27.11.1943)
-விடுதலை,5.6.16

செவ்வாய், 1 நவம்பர், 2016

பெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா!

ஆங்கிலேயருக்குவக்காலத்தா?

வழக்கமாக ஒரு பல்லவியைப் பாடுவது
பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)

எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?

என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா?

இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா?

தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!

அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே  அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!

இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!

நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).

ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!

பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!

------------------- மின்சாரம் அவர்கள் 19-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

வடக்கேயும் பறக்கும் கொடி!

-தமிழ் இந்து நாளேடு

இந்தி புத்தக உலகில் சமீபத்திய ‘பெஸ்ட் செல்லர்’ யார் என்று சொன்னால், நம்பமாட்டீர்கள்! நம் பெரியார்தான். ஆம்! ‘பெரியார் கே ப்ரதிநிதி விசார்’ என்ற நூல் கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்த நாள் அன்று, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது.
புதுடில்லியின் ‘ஃபார்வர்டு பிரஸ்’, ‘காட்டாறு’ இதழ் இரண்டும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் ஒரே மாதத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. பெரியார் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவைப்படுகிறார். பகுத் அச்சா
-விடுதலை,31.10.16