திங்கள், 18 செப்டம்பர், 2017

பிராமண தர்மம் என்றால் என்ன?


ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர் களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திரமுமானதாகும் என்பதற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமும் வேண்டு மானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய பிராமணனுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக் கப்படவில்லை.

அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது. அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

அவன், ஏர் உழுதால் பாவம்!

அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

அவன், விபசாரம் செய்தால், விபசாரத் திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளியேற்றலாம்.

அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

அவன், திருடினாலும், அவன் சொத் துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

அவன் சொத்துடையவனிடமிருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம். அவன், மதுவருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத் திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரி மைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!

1.5.1957 ‘விடுதலை'யில்

தந்தை பெரியார் எழுதிய அறிக்கையிலிருந்து

-விடுதலை,17.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக