திங்கள், 30 நவம்பர், 2020

பெரியார் பேசுகிறார் : வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்!

தந்தை பெரியார்

நகை வியாபாரி:   அய்யா, தாங்கள் என்னிடம் காலையில் காசு மாலை வாங்கி வந்தீர்களே! அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்க்ண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கிறேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாகயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வைதீகன்: செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசு இருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது. எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயிவருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி: அப்படியானால் தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

வைதீகர்: ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆட்சேபணையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்து விடுகிறேன்.

நகை வியாபாரி: அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர் ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்: செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்! வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?

நகை வியாபாரி: என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டு வருகிறேன் என்று எடுத்துக்கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் ‘வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம்’ என்கிறீர்களே, இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன? நேரம் என்ன? என்பது எனக்கு விளங்கவில்லையே?

வைதீகர்: (தனக்குள்ளாகவே இந்த இழவு நகையை நாம் ஏன் ‘இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்தான் தீரும். எனக்கு புத்தி வந்தது. இனி இம்மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி: இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள், கோள் எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கு எவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள், நேரமாகுது.

வைதீகர்: நீங்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை கட்சியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும், கேலி செய்கின்றீர்களே! அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை; கெட்டது இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; கோவில் இல்லை; புராணம் இல்லை; பறையனும், பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாத்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே!

நகைக்காரர்: நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்துகொள்ளும், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்துவிடும். பவுன் விலை இறங்கப் போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஓர் ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர், இருட்டு ஆகப்போகிறது. சீக்கிரம் எடுத்துக்கொண்டு வாரும்.

வைதீகர் (வீட்டிற்குள் போய் சம்சாரத்திடன் யோசிக்கின்றார்) என்ன செட்டியார் நகை கேட்கின்றார்!

அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லட்சுமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்: எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அம்மா: (பலமாய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வருகிறபோது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்குப் புத்தியில்லை. அவர் என்ன செட்டியா, மட்டியா? வீடு வாசல் வைத்து பிழைத்த மனிதரா, நாடோடித் தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கின்றான். நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்குப் புத்தியில்லை. இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடுவீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் கோய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்கவேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய்க் கேட்கச் சொல்லாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?

(இந்தச் சமயத்தில் மகன் வந்துவிட்டான்.)

மகன்: என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?

தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்!

மகன் அதெல்லாம் இருக்கட்டும்! ஜாஸ்தி பேசாதே! நமக்கு காசி மாலையேது? நம் வீட்டில் இல்லையே - அப்பதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாவா வந்துவிட்டது?

தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார். இந்தச் செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது. அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகுகாலம். இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போது பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலையைச் சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படி செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைப் சுற்றி எறிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படரார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்: அய்யய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது. வெள்ளியாவது, சனியாவது, ராகுவாவது, கேதுவாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெள்ளியும் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது! பேசாமல் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்துவிடுவேன் தெரியுமா?

(அதற்குள் அப்பா வந்துவிட்டார்)

அப்பா: என்னடா பயலே! பலே அதிகப் பிரசங்கியாய் போய்விட்டே! நான் அப்போதே உன்னை குடிஅரசு பத்திரிகையைப் படிக்கவேண்டாம், கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச் சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம், கர்மம், இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து, ஊரிலுள்ள சிறுபிள்ளைகளையெல்லாம் நாஸ்திகராக்கிவிட்டது.

மகன்: வெகு நன்றாயிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியைப் பிடுங்கி கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்க்ண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டான்.

பிறகு புருஷனும், பெண்ஜாதியும் ராகு காலத்தில் அந்தச் செட்டியாரிடம் நகை வாங்கி வந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் வரும் எவ்வளவோ கெடுதியும் வரும் என்னை அடிக்கவேண்டும்..... லே.

(8.1.1928 குடிஅரசு இதழில் “சித்திரபுத்திரன்’’ என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.)

- உண்மை இதழ் ஜூன் 16 ஜூலை -15 .2020

செவ்வாய், 24 நவம்பர், 2020

ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை

 

November 24, 2020 • Viduthalai • மற்றவை

பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா?' என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டிலிருக்கும் வரையில் (இங்கிலீஷ்காரனைப் பின்பற்றி) இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கொண்டுதான் இருப்பான்.

('விடுதலை' 10.1.1947)

வெள்ளி, 20 நவம்பர், 2020

பெரியாரின் நூல்கள் மின்பட வடிவில்...

பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர் 
பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..!

சமஸ்கிருத சனியன் --> https://t.co/dyGfKuZqgu

அழியட்டும் "ஆண்மை" --> https://t.co/fj6jVn3xSr

அழிவு வேலைக்காரன் --> https://t.co/IZRUKhIqlz

ஆத்மா, மோட்சம் - நரகம் --> https://t.co/Br5wekWIDK

இந்து மதப் பண்டிகைகள் --> https://t.co/NEPjfFGAJ1

இயற்கையும், மாறுதலும் --> https://t.co/nQNvUe7Wxa

இராமாயணக் குறிப்புகள் --> https://t.co/E80M8Jdz5c

இனிவரும் உலகம் --> https://t.co/oU3sd2Z1ve

உயர் எண்ணங்கள் --> https://t.co/v6v3KM7Skf

கிராமங்கள் ஒழிய வேண்டும் --> https://t.co/CNLNb1Vs73

சித்திரபுத்திரன் விவாதங்கள் --> https://t.co/X3MQhCXoSl

சிந்தனையும் பகுத்தறிவும் --> https://t.co/tMW1dZMT66

சுதந்திரத் தமிழ்நாடே எனது லட்சியம் -- > https://t.co/9FKHtLKPm2

இலங்கைப் பேருரை --> https://t.co/35hpoCMNVH

தமிழர்கள் இந்துக்களா ? --> https://t.co/0T5qjmf5i9

தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம்: பெரியாரும் ம.பொ.சி.யும் --> https://t.co/6nWkECgOg6

திராவிடர் - ஆரியர் உண்மை --> https://t.co/nZbtORQ4pP

திராவிடர் திருமணம் --> https://t.co/YVPg4lN0mK

தேவதாசி ஒழிப்புச் சட்டம் --> https://t.co/QNVbYtkHVB

பறையன் பட்டம் போகாமல் --> https://t.co/fIlHco54bf

பிள்ளையாரை உடைப்போம் ! --> https://t.co/iA4AuSAI8E

புத்தர் விழா --> https://t.co/5KVyv0sNoD

புராணங்களை எரிக்க வேண்டும் --> https://t.co/Nq1CwTVfpq

பெண் விடுதலைச் சட்டங்களும் பார்ப்பனர்களும் --> https://t.co/kAoN6Tfu90

பெரியாரின் தன் வரலாறு --> https://t.co/IM41ziGt8x

பொதுத் தொண்டு --> https://t.co/2c2mwgusiB

பொதுவுடைமை சமதர்மம் --> https://t.co/QTHcAclXiV

மனு சாஸ்த்திரத்தை எரிக்க வேண்டும். ஏன் ? --> https://t.co/eS3tMRT8BN

மனு நீதி: ஜாதிக்கொரு நீதி --> https://t.co/4FGlG4NmBR

ரஷ்யாவின் வெற்றி --> https://t.co/g3wzO3lfdA

ஜனநாயகத்தின் முட்டாள்த்தனம் --> https://t.co/yiVFMNCycq

புதன், 30 செப்டம்பர், 2020

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.

ஒற்றைப் பத்தி - அய்யா எழுதிய முதல் சித்திரபுத்திரன் சித்திரம்!

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.
பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.

சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?

பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரி : ஆஹா, உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான். அதற்கு வேண்டியதைச் சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரி : ஆ! ஹோ! பிராமண பையனா?
அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லிவிட்டால் போதும்!
‘‘குடி அரசு'' 16.8.1925

‘‘நான் வெறும் பேச்சாளன் அல்ல; படிப்பாளியும் அல்ல. நான் ஒரு கருத்தாளி'' (‘விடுதலை', 26.10.1964) 
என்று தன்னைப்பற்றி வெகு அடக்கமாகச் சொன்னவர் பெரியார்.

மேலே எடுத்துக்காட்டப்பட்டு ள்ள, ‘சித்திரப் புத்திரன்' என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் எழுதியதைப் படிக்கும் எவருக்கும் என்ன தோன்றும்?
சிந்தியுங்கள்!

பெரியார் எழுத்தாளர் அல்லர். எனவே, அவர் படம் வைக்கவில்லை என்று கூறும் தமிழ் வியாபாரிகள் சிந்திப்பார்களாக!

- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 29.9.20

வெள்ளி, 26 ஜூன், 2020

உரிமையைத் தர ஒப்புமா?

பெரியார் கேட்கும் கேள்வி-26!
மனுதர்மங்களால் மக்கள் நான்கு வகையாகவும், பல்வேறு ஜாதிகளாகவும் பிரித்து ஒருவனை மற்றொருவன் வேறென மதிக்க வைத்து, ஒருவனைக் கண்டால் மற்றொருவன் துவேஷிக்கும்படியாகவும் ஒரு ஜாதிக்கொரு நீதி வகுத்து ஒருவன் நடக்கும் பாதையில் மற்றவன் நடவாதபடிக்கும் ஒருவன் குளிக்கும் ஓடையில் மற்றவன் குளிக்காதபடிக்கும் நாம் சிதறுண்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இதை நமக்குத் தந்த அந்த வர்ணாசிரமத்திடம் நம்பிக்கை வைத்து அதில் மாற்றம் ஏற்பட்டால் தமது உயர்வும் உயர்வால் ஏற்படும் உல்லாச வாழ்வும் உருக்குலையும் என்ற அச்சத்தோடு வாழும் கூட்டம் ஒரு போதும் தீண்டாமையைப் போக்க முன்வராது எனத் தைரியமாய் கூறுவோம்.

மாட்டை செக்கில் கட்டி ஓட்டுவோனுக்கு திடீரென ஜீவகாருண்ய உணர்ச்சி தோன்றி மாட்டை அவிழ்த்து விட்டுவிட ஒப்புவானா? அவன் மாடு பூட்டி ஓட்டுவதை விட்டாலன்றி மாட்டின் விடுதலையை அவன் எங்ஙனம் தர முடியும்? வேண்டுமானால் அந்த மாட்டைக் குளிப்பாட்டி, புதிய மூக்கணாங்கயிறு மாட்டி அலங்காரம் செய்வான். அஃதேயன்றி உள்ளபடி அவன் மூலமாக மாடு எங்ஙனம் தனது 'கர்மபலனை' நீக்கிக் கொள்ள முடியும்.

அதனைப்போலவே எந்த நாளும், ஆண்டு வர வேண்டு மெனவும், பிறப்பை மார்க்கமாக வைத்துக்கொண்டே உயர வேண்டுமெனவும் கருதிக் கொண்டிருக்கும் வைதிகக் கும்பல் தமது 'சீட கோடிகளுக்கு' உரிமையைத் தர ஒப்புமா? உரிமை யைத் தந்து விட்டால் இவர்களுடைய குருத்தன்மை ஏது?

- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.6.1939

- ‘மணியோசை’

வெள்ளி, 12 ஜூன், 2020

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு .
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி .
3. இதிகாசமென்பது - மதிமோச விளக்கம் .
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே !
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது .
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் .
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் .
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது .
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் .
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் .
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது .
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க .
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் .
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் .
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி .
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே .
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது .
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது .
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

செவ்வாய், 2 ஜூன், 2020

விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!

June 1, 2020 • Viduthalai • 

"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஏனெனின் 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!!  என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந் ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சி யமாய் இருந்ததும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறு படியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்குச் சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல.
பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி !
அப்படிப்பட்ட நிலையில் 'விடுதலை' என்னும் பேரால் பத்திரிகை வெளியாய்ப் இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு "பாக்கியம்" கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், வந்து விட்டது! தமிழ்ப் பத்திரிகை!! என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
"விடுதலை" பத்திரிகை இன்று வாரம் இருமுறையாக வெளிவந்தாலும்; கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்பத் தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை.
பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங்களுக்கு மார்பைக் காட்டும் முறையில் விஷயங் களைக் கொண்டு வெளியாகி வருவதால் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாகக் காணப் படவில்லை என்றே சொல்லுவோம்.
இப்பத்திரிகைக்கு உள்ள கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு இடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும்.
பார்ப்பனரை எதிர்த்து வாழ முடியுமா?
இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை.
எவ்வளவோ வீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்று பார்ப்பனர்களுக்கு அடிமை யாக வேண்டியது அல்லது மறைந்து போக வேண்டியது என்கின்ற நிலையில் இருந்து வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் "குடிஅரசு" ஏதோ பாஷாணத்தில் புழுத்த புழுப்போல் உயிர் வைத்துக் கொண்டு வருகின்றது என்றாலும் அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனிப் புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்ற வில்லை.
இப்படிப்பட்ட நிலையில் "விடுதலை" தோன்றி இருக் கின்றது என்பது ஒரு விதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிஷத்திலும் அதற்கு ஆபத்து வரப்போகின்றதோ என்று பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது.
“விடுதலை"யை ஆதரிப்பது தமிழ் மக்களின் கடமை
எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ் பத்திரிகை வந்து விட்டது. அதைஆதரித்துத் தினசரி யாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழ் மக்ள் கடமையே ஒழிய, இனித் தலைவர்களைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதன் நோக்கம், அதன் தொண்டு ஆகியவைகளைப் பற்றி யாரும் சந்தேகப்படவேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. அகையால் அதைப்பற்றி கவலைப்படாமலும், அதற்கு யாரும் புத்தி புகட்டும் வேலையில் இறங்காமலும் ஒவ்வொருவரும் சந்தாதாரர்களாகச் சேர்ந்துவிட வேண்டும். சந்தாத் தொகை வாரம் இரு முறைக்கு வருஷம் 3-10-0 ஆகும்.
உண்மை "விடுதலை"யைக் கொடுக்கட்டும்
இதைவிடக் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ ஒரு வாரம் இருமுறை 10 பக்கம் விஷயம் கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ரூ. 3-10-0 நாளையே மணி ஆர்டர் அனுப்பி விடவேண்டியது அவசியமான காரியம் ஆகும். 3 மாதத்திற்குள் 2000 சந்தாவாவது சேர்ந்தால் "விடுதலை" தினசரி ஆகிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை.
அதன் பத்திராதிபர் தோழர் டி.ஏ.வி.நாதன் அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகையை நடத்தி வந்தவர். ஆனதால் அப்பேர்ப் பட்ட அறிவாளியால் நடக்கும் பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும் பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
- 'குடிஅரசு', 7.6.1935