திங்கள், 18 ஜூன், 2018

'தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் 'பெரியார்' திரைப்படம் பற்றிய திறனாய்வு



‘தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில ஏட்டில் (25.5.2018) வரலாற்றில் தடம் பதித்த சாதனையாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள் பற்றி தமிழில் எடுக்கப்பட்ட தனி நபர் வரலாற்று திரைப்படங்கள் (Bio Pics) பற்றிய திறனாய்வு கட்டுரை வெளிவந்துள்ளது. ‘பெரியார்' திரைப்படம் பற்றிய ஆய்வும் அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.


2007இல் வெளிவந்த ‘பெரியார்' திரைப்படம் சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர் மத்தியில் தந்தை பெரியார் பற்றிய பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இளைஞர்கள் பலர் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட  இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிட வழிவகுத்தது.


மேலும் ‘பெரியார்' திரைப்படம் ஜாதி ஆதிக்க முறையினை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களை காலவாரியாக காட்டுகிறது. தந்தை பெரியாரது பொது வாழ்க்கை அனுபவங்கள், அவரது பகுத்தறிவுக் கொள்கையினை வார்த்து எடுத்தது எனவும் கட்டுரையில் பதிவு செய்துள்ளனர்.


‘பெரியார்' திரைப்படத்தில் அன்னை மணியம் மையார் பாத்திரத்தில் நடித்த குஷ்பு அவர்களிடமும் திரைப்படம் பற்றிய அனுபவத்தினை கேட்டு எழுதியுள்ளனர். தான் மணியம்மையார் பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் பெரும் எதிர்ப்பு வந்தது. இருப் பினும் படத்தயாரிப்பாளர்கள் (லிபர்ட்டி கிரியேஷன்ஸ்) அவர்தான் மணியம்மையார் பாத்திரத்தில் நடித்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தான் மணியம்மையார் பாத்திரத்தில் நடித்து ‘பெரியார்' திரைப்படம் வெளிவந்து பெரிதும் பாராட்டைப் பெற்றது. டாக்டர் கலைஞர் அவர்களும், தந்தை பெரியாரின் பெயரன் ஈ.வெ.கி.ச.இளங்கோவனும் மணியம்மையார் பாத்திரத்தில் தான் மிகவும் பொருத்தமாக நடித்ததை பார்த்து பாராட்டியது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.


‘பெரியார்' திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரைப் பற்றி கட்டுரையில் குறிப்பிடும்பொழுது மூன்று முறை திரைப்படத்திற்கான தேசிய விருது வாங்கியுள்ளதை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.


தேசிய விருது பெற்ற பிற படங்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், ‘பெரியார்' திரைப்படத் திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டதைக் குறிப்பிடத்தவறிவிட்டார். இருப் பினும் பல தனி நபர் வரலாற்று திரைப்படங்கள் பற்றிய ஆய்வில் ‘பெரியார்' திரைப்படம் குறித்து உரிய தகவல்கள், திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினை பதிவு செய்துள்ளமை பாராட்டுக்குரியது.


-  விடுதலை நாளேடு, 26.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக