வெள்ளி, 20 மே, 2022

உண்மையான சுதந்திரம் பெற்றால் முதலில் பரீட்சைகளை ஒழிப்போம்

 

தந்தை பெரியார்

வகுப்புரிமை தேவை என்று ஏன் கருதுகிறோம்என்பதை நாம் நன்றாக உணர வேண்டும்உண்மையில் நாம் நூற்றுக்கு எண்பத்தைந்து பேர்களுக்கு மேல் கல்வி இல்லாத மக்களாக இருக்கிறோம்நம் தாய்மார்களில் நூற்றுக்கு தொண்ணூறு தொண்ணூற்றைந்து பேர்களுக்கு மேல் கல்வி இல்லாதவர்கள் இருக்கிறார்கள்ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டிலே மேற்சொன்ன வீதம் கல்வி இல்லாத மக்களாக இருக்கிறார்கள் என்றால்இது உலகிலேயே நம் நாட்டைத் தவிர வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

இன்று அய்ரோப்பாஅமெரிக்கா முதலிய நாடுகளில் நூற்றுக்கு நூறு பேரும் படித்து இருக்கிறார்கள்படித்தவர்களை மிகவும் பெரிய அறிவாளிகளாகக் கருதுகிறார்கள்படிக்காதவர்களை மிக மிக கேவலமாகக் கருதுகிறார்கள் அந்நாட்டு மக்கள்நம் நாட்டிலே கூட பார்ப்பன ஆதிக்கமில்லாத கொச்சிதிருவிதாங்கூர் போன்ற இடங்களிலே நூற்றுக்கு 50, 60 பேர் படித்து இருக்கிறார்கள்.

ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும்அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டதுஅவர்கள் ஏன் அப்படிநாம் ஏன் இப்படிஇதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்இதற்குக் காரணம் என்ன?

மதத் தத்துவத்தின்படியும்சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாகஅதாவது சூத்திரனாக இருக்கிறோம்.  மேலான ஜாதி தான் படிக்க வேண்டும்கீழான ஜாதி படிக்கக் கூடாது அவர்களுக்கு யாரும் படிப்புச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

நாம் படிக்க வேண்டுமானால் படிப்பதற்கு இடமும்படிப்பதற்கேற்ற வசதிகளும் இல்லாமல் போய் விட்டதுஇந்தக் காரணத்தால்தான் நாம் படிப்பு இல்லாதவர்களாய் இருக்கிறோம்நான் சொல்லுவேன்இவர்கள் அதாவது பார்ப்பனர்கள் இங்கு வந்த பிறகு நாம் எல்லாம் ஏராளமாகப் படித்து இருப்போமென்றால் அது அதிசயம் ஆனது.. காரணம்நாம் முன்னேமேயே பரஸ்பரமாக சில தொழில்களையே நம் மேலே சுமத்தப்பட்டதனாலேயே அந்தத் தொழில் முறையிலே இருந்து விட்டபடியால் படிக்க நமக்கு வசதியும்உரிமையும் இல்லாமல் போய்விட்டது.

படிப்பதைத் தடுக்கும் பார்ப்பான்

உண்மையிலேயே வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் அதுவும் நீண்ட நாட்களுக்குப் பின்புதான்நமக்கும் படிக்கும்படியான சந்தர்ப்பம் சிறிது கிடைத்ததுஅதையும் பார்ப்பனர்கள் எப்படித் தடுத்திருக்கிறார்கள் என்பதை அரசியலில் அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். 

படிப்பிலே நம்மவர்களுக்கு நோக்கம் குறைவாக இருக்குமே தவிரஅறிவிலே குறைச்சலாக இருக்கும் என்று சொல்ல முடியாதுபார்ப்பானை விட கொஞ்சமாவது உயர்ந்து இருந்தார்களே தவிரகொஞ்சமாவது குறைந்தவர்கள் அல்ல. 

ஆனால்பார்ப்பனர் நாற்பது பேர்கள் பரீட்சைக்குப் போயிருப்பார்கள்நம்முடைய ஆள்களில் 10-க்கு ஆறு பேர்கள் தேறி இருப்பார்கள்பார்ப்பனர்கள் 40-க்குப் பதினெட்டு பேர்கள் தேறி இருப்பார்கள்அவர்களைவிட திறமையிலே நாம் கூடுதல் தான்பொதுவாக எந்த விஷயங்களிலும் நாம் குறைந்தவர்கள் அல்லஆனால்படிக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விட்டது.

ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வரும் காலத்திலே கல்வித் துறைகளில் எல்லாம் பார்ப்பனராகவே இருந்தார்கள்ஆனால்ஜஸ்டிஸ் கட்சியார் வந்த பிறகு தான் நம்மவர்களுக்குக் கொஞ்சம் வசதிகள் செய்தார்கள்அதிலேயும் பார்ப்பனரிடையே எதிர்த்து செய்வது மிகவும் கஷ்டமாக இருந்ததுஅதற்குப் பிறகுதான் பி.., எம்.., முதலிய வகுப்புகளை நம்மவர்களிடம் அதிகமாகக் காண முடிந்ததுஅதன் பின்னர் நாம் உத்தியோகங்களிலே போட்டிப் போட ஆரம்பித்தோம்பெரும்பாலான உத்தியோகங்களுக்கு சர்க்காருக்கு விண்ணப்பம் போட ஆரம்பித்தனர் நம்மவர்கள்.

இதைக் கண்ட பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து தகுதியை அதிகப்படுத்தினார்கள்.  ஆனால்நாற்பது வருடங்களுக்கு முன்னே உத்தியோகத்திற்கு தகுதி எப்படி இருந்தது?

பரீட்சையை முக்கியமாக்கி விட்டான்

ஒரு வக்கீலாக வரவேண்டுமானால் அவனொரு மாஜிஸ்திரேட்குமாஸ்தாவாகஏட்டாக இருந்தால் போதும்டாக்டருக்குச் சாதாரணமாக எல்.எம்.பிஎன்று இருப்பானானால் போதும்இன்றைய அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வேலைக்கு ஒரு ஓவர்சியர் போதும்இதற்கும் மேலே பெரிய பரீட்சைக்குப் படிக்க வேண்டுமானால் வெள்ளைக்காரர்கள் தான் இருப்பார்கள்இதைக்கண்டுதான் பார்ப்பனர்களும் நம்முடன் போட்டிப் போட ஆரம்பித்தனர்ஆகையினால் கிளார்க்குக்கு பி.என்றும்சப்-இன்ஸ்பெக்டருக்கு பி.என்றும் ஒரு எஸ்.எஸ்.எல்.சிவக்கீலாக வரவேண்டுமானால் அதற்கு மேல் 7 வருடங்கள் படிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டதுஇப்படியாக உத்தியோகத்திற்கு பரீட்சையை மிக முக்கியமாக்கி விட்டனர்இப்போது படிப்பு படிக்கும் நாளை குறைத்து வருஷத்தை அதிகமாக்கி செலவையும் அதிகமாக்கிசொற்ப செலவிலே நம் மக்கள் படிக்காமல் இருக்கும்படி செய்து விட்டார்கள்.

இப்படி நம்மால் எத்தனை பேர்களுக்குப் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்நம்மவர்கள் 100-க்கு 90 பேர் உடலுழைப்புக் கூலிகள்இவர்களுக்குப் பண வசதிதான் உண்டாஅதுவும் இல்லைஇப்படி எல்லாம் பணமும் படிப்பதற்கு இல்லைஏதாவது உத்தியோகத்துக்கு வரவேண்டுமென்று நினைத்தால் எந்த உத்தியோகத்தைக் கொடுப்பார்கள்இல்லாமலிருந்தால் ஏதாவது பியூன்பில்லைச் சேவகன்போலீஸ் சேவகன் ஆகிய வேலை வேண்டுமானால் கிடைக்கும்நம்முடைய ஆட்களுக்குக் கொடுத்தால் பார்ப்பானுடைய தலையில் கை வைத்து விடுவார்களோ என்ற பயம்ஆகையால்தான் நம்மவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதில்லை.

இப்படியாக நீண்ட நாட்களாக நம்மவர்களுக்குக் கீழ்நிலையில் இருக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டதுஇவ்வளவு கஷ்டங்களை எல்லாம் தாண்டி நாம் மேலே போக தயாராக இருந்தால்அதற்கும் தகுதி - திறமை என்று முட்டுக்கட்டை போட்டு வழி இல்லாமல் போய்விடுகிறதுஇந்த மாதிரியாக நம் காரியங்களில் பார்ப்பனர்கள் தொல்லை கொடுத்து நம்மவர்களுக்கு மேலே போக வகை இல்லாமல் தடுத்து விடுகிறார்கள்.

இவற்றிலிருந்து மீளவே நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கிறோமே தவிரஎங்களுக்கு இந்த வேலை கொடுஅந்த வேலை கொடு என்று பெருமை அடைய கேட்கவில்லை.

மோட்சம் என்கிற பித்தலாட்டம்

நம் நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் பார்ப்பான்அவனுக்கு என்றைக்குமே நாடு கிடையாதுஜிப்சிக்கள்லம்பாடி மக்கள் போல் இந்த ஊரிலே இருந்து அந்த ஊருக்குப் போவான்அன்றியும் அவனுக்குத் தந்திரம் தவிர அறிவே கிடையாதுஅவனுக்கு மூளையே இல்லைசெத்துப் போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அழுவான்காட்டுமிராண்டித்தனமான ஆபாசப் புராணங்களைக் கொண்டு நம்மை ஏய்ப்பான்இவர்கள் நம் தமிழை ஒழித்துக் கட்ட தீவிர வேலை செய்து நம் தமிழை நாசமாக்கி விட்டார்கள்இவர்கள் தமிழ் பேசுவது மிகக் கேடானதுவடமொழியைப் புகுத்தி மீதியையும் கெடுத்துவிட்டார்கள்இவர்களைத்தான் நம்மவர்களும் பின்பற்றி பார்ப்பனத் தமிழை நம்மவர்களும் பேசுகிறார்கள்மதம்கடவுள்புராண உணர்ச்சி காரணமாகபக்தி காரணமாக பார்ப்பான் சூழ்ச்சிஇழிவு பற்றி நம்மவர்களுக்கு சிறிதும் கவலையே இல்லாமல் இருந்ததுஏதாவது ஒரு தொழிலையே கடமையாகக் கொண்டு செய்து வயிறு பிழைத்து வருபவனுக்கு இதைப் பற்றிய கவலை எப்படி வரும்இந்த உலகத்தைப் பற்றியும்மான - அவமானத்தைப் பற்றியும் கவலை இல்லாமல் மோட்சம் என்கின்ற பித்தலாட்டத்தில் மயங்குகிறவனுக்குக் கவலை எப்படி வரும்இப்போது உலக அறிவு பெற்ற பின்பும்சுயமரியாதை இயக்கப் பிரசாரத்திற்குப் பின்பும் சிறிது உணர்ச்சி தோன்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்கிறோம்.

நம் மாகாண மக்களுக்குச் சலுகை வேண்டாம்உங்களின் கல்வித் திட்டத்தின்படி எங்களுக்கும் இடம் கொடு என்று தான் கேட்கிறோம்இண்டர் மீடியட் படித்து பாஸ் செய்து இருக்கும் எங்களுக்கும் மேல் வகுப்பில் இடம் கொடு என்று தான் கேட்கிறோம்மார்க் முறையில் சூழ்ச்சிபாஸ் செய்த பிறகு மார்க்கைப் பார்க்க வேண்டுமென்று கேட்பது ஏன்பாஸ் செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட பாடத்திலே நூற்றுக்கு 35, 40 வாங்க வேண்டுமென்று திட்டம் செய்து இருக்கிறார்கள்அதை வாங்கின பிறகுதான் பாஸ் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்கள்அதற்குப் பிறகு அவன் மேல் போக வேண்டுமானால்இது பத்தாதுஅது பத்தாது என்று சொன்னால் அது போக்கிரித்தனம் தானேஇதையும் இந்த மந்திரிகள் ஒப்புக் கொண்டால் அது மடத்தனம் தானேஏன் எதற்காக சொல்லுகிறேன் என்றால்இந்தத் துறைகளில் எல்லாம் நம்மவர்கள் தலை எடுக்கக்கூடாது என்றும்அவர்கள்தான் பதவிக்கு வரவேண்டுமென்றும் நினைப்பதுதான்.

தகுதி - திறமை சூழ்ச்சி

நான் கேட்கிறேன்பார்ப்பனர்கள் என்பது தவிர இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறதுபண்டித நேருமுதல் மந்திரி வேலை பார்ப்பதற்கு பார்ப்பனர் தவிர வேறு என்ன தகுதிஉணவு மந்திரி முன்ஷிக்கும் பார்ப்பனர் என்பது தவிர வேறு என்ன தகுதிமரம் நடும் வேலைக்கு வந்திருக்கிறார்களேஅதற்கு இவர்கள் தகுதியாஒரு விவசாய பாட்டாளியைப் போட்டிருந்தால் அவனுக்குத் தெரியும்எந்த மரங்களை எப்படி நட வேண்டும்.  பார்ப்பான் என்பதற்காகஅவனுக்கு உத்தியோகம் கொடுப்பதற்காக தகுதியும்திறமையும் இல்லாதவர்களை எடுப்பதாநம்மவர்களுக்கு என்றால் தகுதியும் வேறுதிறமையும் வேறு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

ஒரு தடவை எஸ்.குருசாமி விடுதலையில் எழுதி இருந்தார்சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரு பியூன் வேண்டுமென்றால்ஒருவன் அந்த வேலைக்காக வந்து விளம்பரம் செய்திருந்தவரிடம் எனக்கு சைக்கிளிலே சர்க்கஸ் வேலைகள் செய்யத் தெரியும்மணிக்கு 25 மைல் போவேன் என்று சொன்னால்அதில் என்ன அர்த்தம் இருக்கிறதுஅந்த வேலைக்கு மணிக்கு 6 அல்லது 7 மைல் போனால் அது போதும்அதற்கு மேல் தேவைக்கு மிஞ்சின வேகம் எதற்கு உதவும்?

நமக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்தவன் போதுமேதலைகீழாக நிற்பவன் எதற்குஅதைப்போல்தான்நான் 20 வருஷங்களாய் படித்தேன்எனக்குச் சம்பளம் ஏன் குறைவு என்று கேட்பது?

அரசாங்கத்திற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேண்டு மென்றால் ஒருவரை நிறுத்தி உயரம்பருமன்ஊக்கம்நாணயம் முதலியன பார்த்துப் போட்டால் போதுமேஅதற்கு ஏன் பி..? அதிலும் உயர்ந்த மார்க்கு ஏன் வேணும்ஒரு குமாஸ்தா வேண்டுமானால் அதற்கு ஏன் பி..? ஒரு டிப்டி-கலெக்டர்ஒரு டிப்டி சூப்ரண்ட்ஒரு பி.படித்ததன் மூலம் என்ன சாதிக்க முடியும்இவர்களுக்கு மேத்தமெட்டிக்ஸ் வேணும்சயன்ஸ் வேணும்வெங்காயம் வேணும் என்றால் இதுவெல்லாம் எதற்கு?

இன்றைய தினம் நமக்கு இருக்கிற தொல்லைகள் எல்லாம் படிப்பிலே அதிகமான யோக்கியதையை வைத்ததுதான்வக்கீல்களுக்கு எதற்கு பி.எல்படிக்க வேண்டும்அவன் எஸ்.எஸ்.எல்.சிபடித்த உடனேயே சட்டத்தைப் படி என்றால் போதுமேநாட்டிலே பித்தலாட்டமும்கொலையும்ஊழல்களும் நிறைந்திருப்பதற்குக் காரணம் இந்த வக்கீல்களாலேயும்அவர்களால் உண்டாக்கப்பட்ட சட்டத்தாலேயும் தவிரவேறு ஒரு காரணத்தாலுமில்லை.

உண்மையாகவே நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமானால் பெரிய படிப்புகள்பெரிய உத்தியோகங்கள் எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டி விடுவோம்இரண்டாவதாகப் பரீட்சை என்று வைத்திருப்பதை நீக்கி விடுவோம்.

ஏன்அவர்கள் கையில் புத்தகம் இருக்கிறதுபடிக்க வேண்டியதைச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கேட்கிறான்இதற்குப் பிறகு எதற்காகப் பரீட்சைஇவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் படித்த பிறகு ரிசல்ட் வருகிற சமயம் நூற்றுக்கு 40, 50 தான் பாஸ் என்று வருகிறதுஇந்த மாதிரி வருவதற்கு எதற்கு இந்த வாத்தியார்மார்களுக்குச் சம்பளம்? 5.30 மணி நேரம் தான் படிப்புஅதுவும் ஓர் ஆண்டுக்கு பகுதிநாள் தான் படிப்புஇவ்வளவு தூரம் வாத்தியார்மார்களுக்குச் சலுகை கொடுத்தால் பையன் எப்படி பாஸ் செய்வான்ஆனால்போலீஸ்காரர்களிடம்தான் நாள் பூராவும் வேலை வாங்குகிறார்கள்ஏன் அப்படிபோலீஸ்காரன் அவன் பெண்டாட் டியிடம் கொஞ்சும் சமயத்தில்கூட அவன் போலீஸ்காரனாகத் தான் இருக்கிறான்மந்திரி வருகிறார் என்றால் வாத்தியார்மார்களுக்கு லீவுஆனால்போலீஸ்காரன் ரோட்டில் நட்ட மாக நிற்க வேண்டியதுதான்அவனும் மனிதன் தானேஇவர்களுக்குள் ஏன் வித்தியாசம்அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருப்பதனால்தான் இந்த சலுகைகள் காட்டப்படுகிறதுஆகையால் முக்கியமாக நாம் பரீட்சை முறையை எடுத்துவிட வேண்டும்அனேக நாடுகளில் பரீட்சை என்பதே கிடையாதுஇவ்வளவு இன்ன விஷயங்களை இத்தனை நாளைக்கு படிக்க வேண்டும் என்கிற முறைதான் உண்டு.

இந்த விகிதாசாரம் வேண்டுமென்று நாம் இவ்வளவு பாடுபடுகிறோமேஅது எதற்குஇங்குள்ள படிப்புக்கும்உத்தியோகத்திற்கும்தானேமற்றபடி டில்லி உத்தியோகங்களுக்கும்டில்லி படிப்புக்கும் நமக்கு விகிதாசாரமோஉரிமையோ கிடையாது.

அதெல்லாம் டில்லியில் உள்ளவர்கள் இஷ்டப் படிதான்ஜில்லா கலெக்டர்ஜில்லா போலீஸ் சூப்ரரெண்டு வேலைக்குப் படிக்க வேண்டுமானால் டில்லிக்குத்தான் போக வேண்டும்அதற்கு டில்லியில்தான் நியமனம் செய்வார்கள்சென்னை ராஜ்யத்தில் வேண்டிய வேலைக்கு சென்னையிலே படித்தால் போதாதுஇப்படி எல்லாம் செய்து வைத்திருப்பதால் நம்மவர்களால் எப்படி வர முடியும்இனி ஜில்லா சூப்பிரண்ட் வேலைக்குப் பார்ப்பானேதான் வரமுடியும்ஏனெனில்அங்கு படிக்கப் பார்ப்பானைத் தானே தெரிந்துஎடுத்தும் அனுப்பி இருக்கிறார்கள்.

விகிதாசார அளவுப்படி வேண்டும்

ஆதலால் நமது கிளர்ச்சிஇந்த நாட்டில் உள்ள உத்தியோகத்திற்கு மாத்திரமல்லபடிப்புக்கு மாத்திரமல்லமத்திய அரசாங்கத்தில் எவ்வளவு உத்தியோகங்கள் இருக்கிறதோ அவற்றில் எல்லாம் நம் விகிதாசார அளவுப்படி நமக்கு வரவேண்டும்.

இன்று இருக்கும் மத்திய சர்க்காருக்கு உத்தியோகத்திற்காக எடுத்திருக்கும் ஆட்கள் அவ்வளவும் பார்ப்பனர்கள்தான்இதிலே எவ்வளவு சுயநலம் இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாகிறதுஎவ்வளவு லஞ்சம் நடக்கிறது பாருங்கள்.

உதாரணமாக ரயில்வேயை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்கோபால்சாமி அய்யங்கார் ரயில்வே மந்திரிஉதவி மந்திரி சந்தானம்இதுவுமல்லாமல் கோபால்சாமி அய்யங்காருடைய மருமகன்தான் ரயில்வே ஏஜெண்ட்-மேனேஜர்கோபால்சாமி அய்யங்காருடைய பேரன்தான் ஸ்டோர் மேனேஜர்இப்படியாக ரயில்வே உத்தியோகம் எல்லாம் ஒரு குடும்பத்தின் கையில் போய்விட்டது.

 இந்த நாட்டிலே உள்ள மக்களில் 100-க்கு 90 பேர்கள் இன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால்இதைப் பற்றிக் கேட்கவோகிளர்ச்சி செய்யவோ நம் இயக்கத்தைத் தவிரவேறு கட்சிஆள் கிடையாதுநம் கிளர்ச்சியால்தான் அரசியல் சட்டத்தை சிறிது திருத்தினார்கள்ஆனால்அதை நம் மந்திரிகள் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. 100-க்கு 15 விகிதமுள்ள ஷெடியூல் வகுப்புக்கு 100-க்கு 15 என்று ஒதுக்கி வைத்து விட்டு, 100-க்கு 80 விகிதமுள்ள நமக்கு கல்வியில் பிற்பட்ட வகுப்பிற்கு 100-க்கு 25 தான் ஒதுக்கியிருக்கிறார்கள்இதற்குக் காரணம் என்னஇந்த மந்திரிகள் பார்ப்பனருக்குப் பயந்து நம் தலையில் கல்லைப் போட்டு இருக்கிறார்கள்.

மற்றும்இதைத் தவிர வெளியிலே வேறு ஜாதிகள் இருக்கின்றனஇவ்வளவுக்கும் 25 என்றால் என்ன அர்த்தம்பார்ப்பான் மொத்தமே நூற்றுக்கு மூன்று என்றால் அவன் எப்படி எப்படியோ குறைந்தது 100-க்கு 40 வீதம் சம்பாதித்துக்கொள்கிறான்அப்படி மெம்பர்கள் நம்மவர்களாக இருந்தாலும் தாட்சண்யமும்பயமும் கொண்டு அவர்களுக்கு ஒன்றுக்கு 10 வீதம், 15 வீதம் கொடுத்து விடுகிறார்கள்இதை எப்படி சரி செய்ய முடியும்?

மற்றும் இந்த 25 விகிதமும் நமக்குக் கொடுத்த பிச்சையே தவிரஉரிமை அல்லஇதுவும் உண்மையான பிற்பட்ட வகுப்புக்குக் கிடைக்கும் என்று நிச்சயமாக நினைப்பதற்கு இல்லைஇந்த 25லேயும் பார்ப்பானுக்கு சேர்ந்து இருக்கிறது என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள்.

கல்லூரிகளிலே பிள்ளைகளைச் சேர்க்கிறதென்றால் கல்லூரி செலவுக்கு யார் வரி கொடுக்கிறார்கள்நம்முடைய பணம்நம்முடைய வரிநம்முடைய பள்ளிக்கூடங்கள்இதிலே நமக்கு விகிதாசார இடம்கூட இல்லையென்றால் என்ன நியாயம்ஆதி திராவிடர்களுக்கு 15 கொடுத்தார்கள் என்றால் அதுவும் அம்பேத்கரை ஏமாற்றுவதற்காக கொடுத்தார்கள் என்பதோடுஅவர்களில் 100-க்கு 15 பிள்ளைகள் கிடைக்க மாட்டார்கள் என்கிற தைரியம்தான்உதாரணமாக சென்ற வருடத்தில் ஜில்லா முன்சீப் வேலைக்கு ஷெடியூல்டு வகுப்பாருக்கு 12 இடங்கள் ஒதுக்கினார்கள்ஆனால்அந்த 12 இடங்களுக்கு விண்ணப்பம் போட்டவர் ஒரே ஒரு ஆதிதிராவிடர் தான்மீதி அத்தனையும் பார்ப்பனர் ஒதுக்கிக்கொண்டு போய்விட்டார்கள். 12 பேருக்கு ஒதுக்கினதாகக் கணக்கு மட்டும் சரி செய்துவிட்டார்கள்இதற்கு இவர்களைப் போய் கெஞ்சவேண்டுமாஎனவே இவர்களுடைய வேலைகள் எல்லாம் நம்மவர்கள் முட்டாள்தனத்திலே இருக்க வேண்டும் என்பதுதான்.

 பெருத்த கிளர்ச்சி செய்ய வேண்டும்

நம்மவர்களை ஒழிக்க வேண்டுமென்று சொல்வதை நாம் எதிர்த்து நிற்க வேண்டுமானால்நம்முடைய முயற்சி பலமாக இருக்க வேண்டும்இதுவரை செய்தது போல் இல்லாமல்இன்னும் பெருத்த கிளர்ச்சி செய்ய வேண்டும்நாம் ஒரு கட்சியார் செய்ததனாலேயே இவ்வளவு காரியம் ஆகி இருக்கும்போது நம்மவர்கள் ஒழுங்கும்கட்டுப்பாடாகக் கிளர்ச்சி செய்தால் எவ்வளவு தூரம் இருக்கும்என்று கருதியே நமக்குப் பயந்து கொண்டு அவர்களும் சகல பெரிய உத்தியோகங்களையும் டில்லிக்கு கொண்டு போய் விட்டார்கள்.

இந்த வருடத்திலே பார்ப்பான் எத்தனை பேர்மற்றவர்கள் எத்தனைபேர் என்று ஜாதி பிரித்து தெரியக்கூடாது என்று சொல்லி விடுவார்கள்இன்றைய தினம் பார்ப்பனர்கள் அவர்கள் கூட்டத்திலே ரகசியமாக ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள்இனிமேல் தங்களுடைய பட்டங்களை தங்களுடைய பெயர்களுடன் போடக் கூடாது என்றுஇப்போது அவர்கள் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள்இந்த முயற்சிகள் நம் மக்களுக்குள்ளே இல்லாவிட்டாலும் பார்ப்பானுக்குள்ளே எவ்வளவு கிளர்ச்சியை செய்து இருக்கிறது என்று பாருங்கள்இதை எல்லாம் நாம் உணர்ந்து கிளர்ச்சி செய்து விட்டால் ஒரே அடியாய் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடலாம்.

 நம்மிடம் ஒற்றுமையில்லைஆனால்முஸ்லிம்களிடம் ஒற்றுமையிருக்கிறதுஅவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் உரிமையைக் காப்போம் என்று கூறினார்கள்ஆனால்அது நம்மிடம் இல்லைமற்றும் எதற்காக அப்படி எல்லாம் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்ஆனால்அவர்கள் இன்னும் மோசமாக நடந்து கொண்டிருப்பதால் அந்த நிலைமை கூடிய சீக்கிரம் வந்தாலும் வரும்ஜின்னா தைரிய மாகக் கேட்டார்நீ பிரித்து விடுகிறாயாஇல்லையாஇல்லாவிட்டால் நான் ரஷ்யாவிடம் போய் வாங்கட்டுமா என்று கேட்டார்கொஞ்சம் தகராறு கிளம்பியதுபதினாயிரக் கணக்கான தலைகள் உருண்டோடினகோடை மழைபெய்தாற்போல் இரத்தம் தெருக்களில் ஓடினஇதைக் கண்டதும் பார்ப்பனர் பயந்து போய் கொடுத்துவிட்டார்கள்.  ஆனால்இதெல்லாம் யாருக்கு நஷ்டம்இந்த ரகளையைக் கிளப்பியவர்களுக்குத்தானேஆகையால்தான் நாம் அது வேண்டாம் என்று பொறுத்துக் கொண்டிருக்கிறோம்பலாத்காரத்தால் நம்மவர்களுக்குள்ளேதான் போராட்டம்நஷ்டம் ஏற்படும்ஆகையால்தான் மவுனமாக இருக்கிறோம்.

தேர்தலிலே நாம் நினைப்பதுபோல் நடக்காவிட்டால்பிறகு ஒரு பெரும் கிளர்ச்சி செய்ய வேண்டியதுதான்நம்முடைய வாலிபர்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும்இல்லையென்றால் அடுத்த தேர்தலில் அவர்கள் வந்தால் கட்டாயம் நமக்கு எல்லாம் கெட்ட காலம்தான்நம்முடைய வாழ்வு எல்லாம் எப்படி எப்படி நடக்குமோ என்று சொல்ல முடியாதுஆகையால் நாம் யாவரும் சற்று தீவிரமாகஉணர்ச்சியோடு சிந்திக்க வேண்டும்.

பார்ப்பன மதம் வேண்டாம்

கடைசியாக நம் சமுதாயத் துறையிலே ஒரு பலத்த எதிர்ப்பு இருக்கிறதுபார்ப்பானுக்கு செல்வாக்கு இருக்கும் முறையிலே நாம் நடந்து கொள்கிறோம்இதுதான் நம்முடைய சந்ததியார்களுக்கு கெட்ட வாழ்க்கையைக் கொண்டு போய் விடுகிறதுஆகையால் தோழர்களேபார்ப்பன மதத்தைப் பின்பற்றக் கூடாதுஅவர்களுடைய சாஸ்திரம்மதம்கடவுள் என்று இருப்பவை எல்லாம் நமக்கு சம்பந்தப் பட்டவை அல்லவென்ற உணர்ச்சி நம்மில் ஒவ்வொருவருடைய இதயத்திலும் உதயமாக வேண்டும்.

 ஆதலால்தான் நம் வாலிபர்கள் எல்லாம் ஏன் இப்படிப்பட்ட இழிவு எல்லாம் எதற்கு என்று முன்வருகிறார்கள்இவ்வளவு கிளர்ச்சி இருந்தும் பார்ப்பானுடைய நிலைமை ஏன் கொஞ்சமாவது சரியாகவில்லை என்றால்நாம் மதியீனர்களாய்மான ஈனர்களாய் இருப்பதால்தான்அவர்கள் எல்லாம் உயர்ந்து விட்டார்கள்.

கொள்கைகளைக் காப்பாற்ற

பாடுபட வேண்டும்

இன்றும் நமக்கு விரோதமான சட்டங்கள்தான் செய்து இருக்கிறார்கள்இன்றைய தினம் அரசியல் சட்டப்படி சென்னை ராஜ்யம் ஒரு தனி ராஜ்யம் தான்ஆகையால்தான் நாம் அதை கேட்கிறோம்மூன்றாவது கொள்கை எங்களின் விகிதாசாரப்படி எங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  வேண்டும்வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் மத்திய சர்க்காருக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ரயில்வேதந்திதபால்சுங்கம்இன்கம்டாக்ஸ் போன்ற பெரிய வரிகள்இன்னும் வேறு பல சில்லறை இலாகாக்கள் எல்லாம் நம் கைக்கு வரும் வரையில் நமக்கு விகிதாசாரம் கிடைக்க வேண்டும்இந்த மூன்றையும் யார் செய்ய தயாராக முன்வருகிறார்களோ அவர்களுக்கு நமது ஓட்டுகளைக் கொடுக்க வேண்டும்மேலும்காங்கிரசிலிருந்து வெளியே வந்திருக்கும் தோழர்களும் நம்முடைய திட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள்ஏராளமான மக்கள் இதை அனுசரிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

ஆதலால் தோழர்களேகாங்கிரசுக்குத் தோல்வி வரும் முறையிலே இங்கு தேர்தல் முடிவு வருமானால் மந்திரி சபையைக் கவிழ்த்தோம் என்றுதான் அர்த்தம்.

ஆகவே தோழர்களேநாம் எல்லோரும் நம்முடைய கொள்கைகளை காப்பாற்ற பாடுபட வேண்டும்நாம் எல்லோரும் பாடுபட்டால்தான் நமக்கு விகிதாசார முறைப்படி சகல வசதிகளிலும்சகல சங்கதிகளிலும் நாம் முன்னேற்றமடையவும் முடியும்நான் கண்டிப்பாக சொல்லுவேன்மனிதத் தன்மையோடு வாழவேண்டுமானால்நம் நாடு நம் கையில் வரவும்நாம் எல்லோரும் சமத்துவமாய் வாழ வழி தேடவும் ஒவ்வொருவரும் பாடுபட்டாக வேண்டும்இதற்குச் சரியான சந்தர்ப்பம் அடுத்து வரும் தேர்தலில் நம்முடைய முழு வல்லமையையும் காட்டியாக வேண்டும்எந்த விதத்திலும் அவர்கள் தேர்தலிலே வெற்றிப் பெற முடியாமல் போக வேண்டும்அப்படிச் செய்வோமானால் நம் நாட்டு மக்களின் இழிநிலை மாறிநாம் அனைவரும் சுதந்திர வீரர்களாய் வாழலாம்.

- 8.7.1951 அன்று திருவாரூரில் நடைபெற்ற வகுப்புரிமை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை (விடுதலை 15, 16.7.1951).