வெள்ளி, 20 மே, 2022

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

 

தந்தை பெரியார்

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலேஇந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள்அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப் படுத்திபாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள்வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்மனதறிந்துநமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றதுஎன்றாலும்அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன்என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்ஆக்க இயக்கமல்லஅழிவு இயக்கமாகும்நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும்இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில்சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள்நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள்அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால்நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம்நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லைமக்களை ஏமாற்றி வரவில்லைஎங்கள் கொள்கை கடவுள் இல்லைமதம் இல்லைசாஸ்திரம்சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லைஇவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லிஅதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்புராணம்இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதிய வராவார்பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால்நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கின்றார்கள்என்றாலும்அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லைவெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால்கல்யாணத்திற்குக் கடவுள்மதம்ஜாதிபழைமைதேவையில்லைஓர் ஆணும்பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரேஇது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்திரங்களில்ஜாதிபழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானேஇது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்அதோடு மட்டுமில்லையேஅரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரேஇதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால்இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லைபூசை செய்கிற சிலை இல்லைகடவுள் இல்லைஎன்று சொல்கின்றவன் சிலைஇந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலையாகும்கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்இந்த ஆட்சி இன்னும் 10 வருடம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்லபல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம்ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல்மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்பார்ப்பான் ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறதுபார்ப்பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானேஅதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறதுஇல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சியிலிருப் பார்கள்நம்முடைய தொண்டின் காரணமாகபிரச் சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும்படி ஆயிற்றுநமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லைஅவன் மட்டும் என்ன உயர்ந்தவன்நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பதுஇன்னொருவன் பஞ்சமன்பறையன்தீண்டப்படாதவனாக இருப்பதுஎன்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனைநாவிதனைபள்ளன்பறை யனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங்களில் நம்மவர் இருக்கும் படியாயிற்றுஇந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்தொண்டாற்றிய வர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும்காந்தியும் இந்தத் தீண்டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிரதீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாதுநம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடவுள்மதம்கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால்பின்பற்றுகிற மதத்தால்கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானேஎனக்குக் கடவுளும் வேண்டாம்மதமும் வேண்டாம்என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன்என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான்தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாகதிருவாங்கூர்காரன் கோயிலைத் திறந்து விட்டு நாடார்களை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டிமக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோதுபலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர்மாறியவுடன் அதுவரை ஈழவர்கள்கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும்மேல் சாதிக் காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்கலவரம் ஏற்பட்டதுஅதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட்டான்உடனே கலவரம் முற்ற ஆரம்பித்ததுஇந்து முஸ்லிம் கலவரமாக  ஆரம்பித்து விட்டதுஎங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்றுஇதைப் பார்த்துப் பயந்துஅப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள்கோயில்குளம்பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும்எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டுஎன்று திறந்து விட்டார்அதன் பிறகுதான் இங்கு இவர்கள்தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர்அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனும தித்ததன் மூலம் எங்களையும் பறையனாக்கினீர்களே தவிரபார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில்லையே என்று கேட்டேன்உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழியபார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடுநடைமுறையில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டிருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப்பானின் ஆதிக்கமே இருந்து வந்ததுஆட்சித்துறைஅரசியல் துறைமதத்துறைஎல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க்கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார்முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும்அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என்றால்அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமிழர்கள்மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள்இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும்பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்ததுஇதனால் என்ன பயன் என்பீர்கள்நம் வக்கீல்களுக்கும்நம் மக்களுக்கும் அதனால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும்இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன்நீதித்துறையில் மட்டும் அல்லகல்வி விஷயத்திலும் காமராசரைப் போலஅவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர்இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்ததுஇப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சிவரை இலவசமாக்கி இருக்கிறார்கள்நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றனஇந்தக் கட்சியைப் போல இன உணர்ச்சி யுள்ளஅரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாதுஇந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக்கும் போது நம் படங்களைப் போட்டுகொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும்மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றனஇது மாடு மேய்க்கப் போகாதுஉத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும்இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும்மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோஅவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெற வில்லையேநம் மக்களுக்கு இன உணர்ச்சிஅறிவுப் புத்தி இருக்க வேண்டும்இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும்இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும்இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற் றங்களை அடைந்து இருக்கின்றோம்அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தரமான நிலை யில்லைமுட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண் டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றதுஅந்த நிலை மாறிநிரந்தரமாக நிற்கிற வரைநாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பதுபடம் திறப்பதுஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்லஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான்பெரியார் என்றால் யார் என்று கேட்பான்உடனே அவன் பெரியாரைத் தெரியாதாஅவர் தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான்இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும்அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார்கள்அதனால் தான் சொல்கிறார்கள்வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

24.5.1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

(விடுதலை, 9.6.1969)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக