வெள்ளி, 20 மே, 2022

21 மொழிகளில் தந்தை பெரியார் கருத்துகள்: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை - நன்றியும், பாராட்டும்!

 

 பெரியார் உலக மயமாகிறார் - உலகம் பெரியார்மயம் ஆகிறது!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னைமார்ச் 18  21 உலக மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள்எழுத்துகளைக் கொண்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியும்பாராட்டும் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (18.3.2022)சென்னை பெரியார் திடலில்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

செய்தியாளர்பெரியார் சிந்தனைகள் 21 உலக மொழிகளில்  அச்சிட்டு வெளியிடுவதற்காக இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்டில்  கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதேஅதுகுறித்து தங்கள் கருத்து?

தமிழர் தலைவர்இந்தியாவில் பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் இருந்தாலும்முதல் முதலமைச்சர் என்ற  அந்த சிறப்புத் தகுதியை 10 மாதங்களுக்குள்ளாகப் பெற்றுள்ள நம்முடைய 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த ஆட்சியில்முதல் தனித்த வரவு - செலவுத் திட்டம் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அருமையான நிதிநிலை அறிக்கை

முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற நேரத்தில்கஜானா காலிகருவூலத்தில் கடன்கள் அதிகம்வட்டிகள் கட்டவேண்டியது அதிகம் என்ற சுமைகள் இருந்த நேரத்தில்அவற்றையெல்லாம் சரிப்படுத்திஓர் ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர்பொருளாதார அறிஞர்களின் வழிகாட்டுதலோடு மிக அருமை யானதொரு வரவு - செலவுத் திட்டத்தை இன்றைக்கு மிக சிக்கலான நேரத்தில்சிறப்பாக         அறிவித்திருக்கிறார்கள்.

பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்!

அதிலும் குறிப்பாக, 21 ஆம் நூற்றாண்டு பெரி யாருடைய நூற்றாண்டாக - உலகம் முழுவதும் பெரியார் - பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம் என்று சொல்லக்கூடிய அளவிற்குபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய தனித்த சிந்தனைகள்பல்வேறு பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வை உருவாக்கும் என்கிற காரணத்தினாலேஅதை 21 உலக மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.

இது மிக அற்புதமானதுஒரு சிறப்பான அடித்தளத் தோடு இந்த ஆட்சி - எந்த அடிக்கட்டுமானத்தைப் பெற்றிருக்கிறது என்பதற்கு வலுவான ஒன்றை சான்றாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கும்நிதிய மைச்சர் அவர்களுக்கும்தமிழ்நாடு அரசுக்கும் பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் வாழ்த்திவரவேற்று நன்றி செலுத்துகின்றோம்.

பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் சீரமைப்பு பாராட்டுக்குரியது!

அதுமட்டுமல்லஜாதி வெறிமற்ற பேதங்கள்பெண்ணடிமை இவையெல்லாம் இருக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை மாற்றியமைப்பதற்காகமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதுநாடே சமத்துவபுரமாக இருக்கவேண்டும் என்பதற்காகஜாதி ஒழிந்த பெரியார் நினைவு சமத் துவபுரங்கள் என்பதை ஏராளமாகத் தொடங்கினார்கள்இன்றைய முதலமைச்சர்அன் றைக்குத் துணை முதலமைச்சராக இருந்தபொழுதுஅவரே தொடங்கி வைத்திருக்கிறார்.

ஜாதிகளுக்கு இடமில்லாத அளவிற்கு ஒரு நல்ல  ஒருங்கிணைப்பு அங்கே இருந்ததுஆனால்கடந்த 10 ஆண்டுகளில் அது சீரழிந்து போகக்கூடிய அளவிற்குஅதைப்பற்றி கவலைப்படாத அளவிற்கு இருந்த ஒரு சூழல் கடந்த ஆட்சியில் இருந்தது.

அதனை சீரமைக்கவேண்டும் என்று பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் வற்புறுத்தி வந்தோம்அந்த வகையில்எங்களுடைய கோரிக்கையை ஏற்றுஅதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்து - 190 கோடி ரூபாயை அதற்காக ஒதுக்கிமீண்டும் ஒடுக்கப்பட்ட மக்கள்ஜாதிக்கு அப்பாற்பட்ட மக்கள் வாழுகின்றஜாதியற்ற சமத்துவபுரங்களாக அவை திகழவேண்டும் என்பதற்கான முயற்சிகளுக்கு நிதி ஒதுக்கியிருக் கிறார்கள்.

அதேபோலமகளிர் நலன்மாணவர் நலன்கல்வித் திட்டங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பான  வகையில் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்.

எனவேசமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நீதிதான் ஆட்சி முறை என்று தெளிவாக முதலமைச்சர் அவர்கள் சொன்னதைஇந்த நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது.

அதற்காக  அவருக்கு நன்றி செலுத்திபாராட்டி மகிழ்கிறோம்.

காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன!

வன்கொடுமைகளை அழித்திடவும்பெண்ணடி மைத் தனத்தை ஒழித்திடவும்தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும்பகுத்தறிவைப் பரப்பிடவும்தன் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்அவரின் சிந்தனைகளும்எழுத்துகளும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன.

தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத் திக்கும் எடுத்துச் சென்றுஅவரது முற்போக்குச் சிந்த னையால் அனைவரையும் பயனடையச் செய்வதை இந்த அரசு தன் கடமையாகக் கருதி செயல்படுகிறது.

இதனை நிறைவேற்றும் விதமாக உரிய அறிஞர் குழுவின் பரிந்துரையின்படிபெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு - 21 இந்திய,  உலக மொழிகளில்அச்சு மற்றும் மின்னூல் பதிப்பாகவும் வெளியிடப்படும்இப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள் ளப்படும் என்பது தித்திப்பான செய்திஇதனை வரவேற்கிறோம்நன்றி செலுத்துகின் றோம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக