நாகரீகமென்றால் என்ன?
- ஈ.வெ.இராமசாமி
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் இந்தியாவின் தற்கால நாகரிகம்" என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டது மான நல்ல விஷயத்தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
"நாகரீகம்!" என்கின்ற வார்த்தைக்குப்
பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் 'நாகரீகம்' என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்ற தலைப்பின் கீழ் குறலில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உப யோகப்படுத்தப்பட்டிருக்கிற தாக நான் 10, 20 வருடங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண் ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்த பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.
நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனைகளிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூற முடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க் கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது மறுபடி கீழிறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல்நாட்டு ஸ்திரீகளும் தெருக்களில் தெரு கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளை தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு (Free -யாக) சுயேச்சையாக சீர் தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள்
நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும்.
ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாக கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்தமானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது.
புருஷன் பெண்சாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டாலும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப்பற்றியும், பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு
நம்பிக்கையிருந்ததை சிலாகித் த்துப் பேசினோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டி தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்ற
தான அறிவியக்க நூல்களைக் சுற்றுணர்ந்த வல்லுநர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வருத்தமான - வழக்கத்தையேயொட்டி 'நாகரீகம்' காணப்படுகிறது.
காலப் போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும் புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு பேசினீர்கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கின்றது.
ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலா வணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ - தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி, நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப் பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக் கப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும் தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப் பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்று தலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.
நாம் ஒரு காலத்தில் தேசம், தேசீயம், தேசப்பற்று என்பதை நாகரீகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித்தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள் அபிமானம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரீகமாகக் கருத முன் வந்துவிட்டோம்.
ஒரு காலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு ஒவ்வொருவரும் தாங்கள் அதிக மேல் சாதிக் காரனாவதற்குச் சைவ, வைணவப் போக்கைப்பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்டத்தனமென்றும், முற்போக்குக்கு முரணானது என்றும் கூறி வெருவாகத் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாக கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி தன்மையும் தேச தன்மையும் சிலாக்கியமாக கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்பதையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால், கவனிக்கிறோம். உதாரணமாக வியாபாரிகளை - மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவி காரர்களையும் மனித சமூக நாசகர்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினரையும் மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கின்றோம்.
நாகரீகம் என்பது பிடி படாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன் நம் நாட்டு பெண்கள் எப்படி Belt (பெல்ட்) கட்டாமல் சீலை கட்டுகிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி
- விடுதலை நாளேடு, 29.11.2003

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக