ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)


ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.
குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.
மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை  உடைய)வர்கள்.
- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948
-விடுதலை ஞா.ம.,23.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக