திங்கள், 12 நவம்பர், 2018

நான் யார்?- பெரியார்

வாழ்நாள் எல்லாம் நமக்காக உழைத்த அய்யா பெரியார்
என்ன சொல்கிறார்....
,,*தந்தைபெரியார் தான் தன்னை யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள்*

இவ்வுலகில் உள்ள உயிர் உள்ள பிராணிகளைப் போல நானும் ஒரு பிராணியே! அவைகளை எப்படி நாய் என்றும் ,குதிரை என்றும் ,கழுதை என்றும் பெயரிட்டு இருக்கிறார்களோ ,அதே போல எனக்கு மனிதன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் அதனால் தன்னையும் ஒரு உயிருள்ள பிராணியாகவே அறிவித்துக்கொண்டார்

ஆனால் அந்த நாய் ,குதிரை ,கழுதை இவைகளுக்கு சாதி கிடையாது ,மதம் கிடையாது ,நாடு கிடையாது எங்கிருந்தாலும் அவைகள் நாய் ,கழுதை , குதிரை தான் ஆனால் மனிதனுக்கு மட்டும் சாதி ,மதம் ,இனம் ,நாடு என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்

அதனால்தான் நான் ஒரு நாட்டுக்காரனோ ,ஒரு இனத்துக்காரனோ ,ஒரு மதத்துக்காரனோ ,ஒரு சாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன்

ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய நாட்டிற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாட்டை எதிர்த்து போராடுவேன் !
அந்த நாட்டிற்குள் மதங்களை ஏற்படுத்திக்கொண்டு ஒரு மதத்தினை, ஒருமதம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய மதத்திற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதத்திற்கு எதிராக போராடுவேன் !
அந்த மதத்திற்குள் பல சாதிகளை ஏற்ப்படுத்திக் கொண்டு ஒரு சாதியை, ஒரு சாதி ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய சாதிக்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய சாதிக்கு எதிராக போராடுவேன் !
அந்த சின்ன சாதிக்காரன் ஒரு தொழிற்சாலையை வைத்து நூறு தொழிலாளர்களை அடிமைப்படுத்தினால் நான் அந்த தொழிலாளர்கள் அருகில் நின்று சின்னசாதி முதலாளியை எதிர்த்து போராடுவேன் !
அங்கே பணியாற்றக்கூடிய தொழிலாளி தன்னுடைய வருவாயில்தான் தன்குடும்பம் நடக்கிறது என்று சொல்லி தன் மனைவியை அடிமைப்படுத்தினால் அந்த பெண்ணிற்கு அருகிலே நின்றுகொண்டு அந்த கூலி தொழிலாளியையும் எதிர்த்து போராடுவேன் !

எனக்கு தேவை யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதுதான் என்பதை தவிர வேறொன்றுமில்லை
*பெரியாரை புகழ்பாடாமல் வேற யாரை புகழ் பாடுவது*

- கட்செவியில் வந்தது(ஜெயபால்)..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக