மின்சாரம்
காவிரி நீர் உரிமைக்காக திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், தொடர் பிரச்சாரங்கள் சரித்திர ரீதியாக குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிகழ்வுகளின் பட்டியல் மிகவும் நீளமானது!
இதோ ஓர் அரிமா நோக்கு!
காவிரி நீர்ப் பிரச்சினை: கழகத்தின் செயல்பாடுகள்
19.12.1980: எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம் முதன்முதலாக எடுத்து வைத்த கருத்துதான் காவிரி நடுவர் மன்றம் ஒன்று வேண்டும் என்பதாகும்.
2.10.1982: காவிரியில் நீர் திறந்து விடக் கோரி பிரதமர் இந்திரா காந்திக்குப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கொடுத்த தந்தி தஞ்சை சரசுவதி மகாலில் – காவிரி நீர் பிரச்சினை பற்றி கழகம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு முழுவதும் முழுக் கடை அடைப்புக்கு ஏற்பாடு.
நடுவர் மன்றக் கோரிக்கையும் வைக்கப்பட்டது (8.10.1982).
திருவாரூரில் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு (25.7.1983) மன்னார்குடியில் மாநாடு (16.10.1983).
20.4.1984: சென்னையில் பெரியார் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் காவிரி நீர்ப் பிரச்சினை பற்றிய வல்லுநர் களின் கருத்தரங்கம்.
30.10.1985: தஞ்சை, திருச்சி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம். கழகப் பொதுச் செயலாளர் (திருவாரூரில்) உள்பட ஆயிரக்கணக்கில் விவசாயத் தொழிலாளர்களும், பெண்களும் கைது செய்யப் பட்டு சிறை ஏகினார்கள்.
25.7.1987: அன்று கீழ் வேளூரிலும், 14.8.1987 அன்று மீண்டும் திருவாரூரிலும், 14.4.1988 அன்று நாகப்பட்டினத்திலும், 3.7.1988 அன்று திருமருகலிலும் தொடர்ந்து காவிரி நீர்ப்பிரச்சினைக்காக விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு கழகத்தின் சார்பில் நடத்தப் பட்டன.
22.4.1988: நாகை, திருவாரூர், கும்ப கோணம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
7.10.1988: காவிரி நீர்ப் பிரச்சினையை நடுவர் மன்றத்திடம் (Tribunal) விடவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்துக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் அவர்களின் மனு.
நமது தொடர் போராட்டம் காரணமாகவும், முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அழுத்தம் காரணமாகவும் சமூகநீதிக் காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் மூவர் கொண்ட நடுவர் மன்றத்தை அமைத்தார் (21.6.1990).
24.3.1991: தஞ்சை வல்லத்தில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நடுவர் மன்றம், தமிழ் நாட்டுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில் இடைக்கால ஆணை ஒன்றை வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருநாடகம் 205 டி.எம்.சி., நீரை வழங்கவேண்டும் என்ற நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது (26.6.1991).
13.7.1991 மாலை 3 மணிக்கு திருவாரூரில் உரிமைப் பேரணி.
8.8.1991 : காவிரிப் பிரச்சினையில் ஒன்றிய அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து மேலத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 8.8.1991 முதல் 14.8.1991 முடிய ஒருவாரம் மாவட்டம் முழுவதும் தீவிரப் பிரச்சாரப் பயணம் நடத்தப்பட்டது. கல்லணையில் 8.8.1991 முற்பகல் புறப்பட்ட பிரச்சாரப் படை மாவட்டக் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங் கன், மாவட்டக் கழகச் செயலாளர் ராஜகிரி கோ. தங்கராசு முன்னிலையில் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா. குப்புசாமி துவக்கி வைத்தார்.
9.11.1991: தமிழ்நாட்டுக்கும் கருநாடக மாநிலத்திற்குமான காவிரி நீர் ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று கூறிய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர் களுக்கு கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை மீனம்பாக்கத்தில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – கழகத் தொண் டர்கள் கைது!
3.12.1991: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக்குழு பிரதமரைச் சந்தித்தது. அக்குழுவில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி பங்கேற்றார். நடுவர் மன்ற தீர்ப்பினை அரசு கெசட்டில் வெளியிட வேண்டுமென்று பிரதமரை அக்குழு வலியுறுத்தியது.
20.1.1992: நடுவர் மன்ற தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியது. இதன் காரணமாக கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட் டனர்; சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் கழகக் குடும்பத்தினர் பல்லாயிரக் ணக்கானோர் மறியல் செய்து ைகது செய்யப்பட்டனர்.
30.4.1992: காவிரி நீர் உரிமைக்காக கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திருவாரூரில் மறியல் நடந்தது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாவட்டங்களிலும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மறியலில் கழகத் தோழர்கள் விவசாயிகள் (இருபாலரும்) ஆயிரக்கணக்கில் கைது.
27.12.1995: தஞ்சாவூர், திருச்சி, காவிரி டெல்டா பகுதிகளில் ரயில் நிறுத்தப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது.
தஞ்சையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 1,400 பேர் கைது.
22.7.1997: காவிரி நீர் உரிமைக்காக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்.
21.9.1999: காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப் பட்டது. அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய், சி.பி.எம், ஜனதாதளம், மக்கள் நல உரிமைக் கழகம், தமிழ்ப் பாட்டாளி மக்கள் கட்சி, ராஷ்டிரீய ஜனதா தளம், முஸ்லிம் லீக், விவசாயிகள், தொழிலாளர் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தீர்மானப்படி 28.9.1999 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரிப் படுகையில் ஒன்றியங்கள் அளவிலும் மற்ற இடங்களில் மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
5.10.1999: காவிரி பிரச்சினையும் ஒன்றிய – மாநில அரசுகளும் என்னும் தலைப்பில் உண்மை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, பண்ருட்டி ச. இராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
5.9.2002: திருவாரூரில் காவிரி நீர் உரிமைக்காக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
21.9.2002: கருநாடகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரைச் சந்திக்கச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் பங்கு பெற்றார்.
19.2.2005: திருவாரூரில் திராவிடர் விவசாய நலன் பாதுகாப்பு மாநாடு – பேரணியுடன்; காவிரி உரிமை நதி நீர் இணைப்பு கருத்தரங்கம் – தீர்மானம்.
8.7.2005: தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, கும்பகோணம், லால்குடி, நாகப் பட்டினம், திருவாரூர், கீழ்வேளூர், திரு மருகல், .வேதாரண்யம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருத்துறைப் பூண்டி, திருவையாறு, பாபநாசம், அம்மாப் பேட்டை, நாச்சியார் கோவில், வலங்கை மான், பட்டுக்கோட்டை, பேராவூரணி, உரத்தநாடு, மயிலாடுதுறை, மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களை உள்ளடக் கிய காவிரி நதி நீர்ப் படுகையில் திரா விடர் கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இன்னும் எவ்வளவோ உண்டு. தொடர்ச்சியாக வரும் 23.7.2024 செவ் வாய் மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் காவிரி நீர் உரிமைகோரும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற் போம்!
போராட்டம் எங்கள் ரத்த ஓட்டம் – இலட்சியத்தைக் காணாமல் ஓய மாட்டோம்!
வெற்றி நமதே! வாழ்க பெரியார்!
வெல்க காவிரி நீர் உரிமைப் போராட்டம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக