செவ்வாய், 29 நவம்பர், 2016

பொதுநலத்தில் விருப்பமுள்ள எவரும் அரசியல் அதிகாரத்தில் இருக்க முடியாது.

திராவிடர் கழகம் இன்று அரசியலைக் கைப்பற்றும் வேலையில் முயற்சி செய்யாமல், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தேடுமுகத்தான் மக்களுக்கு அரசியல் ஞானத்தை ஏற்படுத்தி அவர்களை பகுத்தறிவு உள்ள மக்களாக ஆக்க பாடுபட்டு வருகிறது. மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப்படாத வரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டாலும்,அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்துவிட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்துகொள்ள முடியுமே தவிர, மக்களுக்கு பயனளிக்கக்கூடிய காரியங்களை செய்ய முடியாது. சுயநலத்தில் விருப்பமுள்ள கோஷ்டிதான் இன்று அதிகாரத்தில் இருக்க முடியுமே தவிர, பொதுநலத்தில் விருப்பமுள்ள எவரும் அரசியல் அதிகாரத்தில் இருக்க முடியாது.

- தந்தை பெரியார்
(விடுதலை - 19.01.1948)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக