செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

பெரியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள்

பெரியார் சென்னைக்கு வந்ததும் பல ஆசிரியர்களும் ஆசிரியைகளும் பெரியார் இல்லத்திற்கு வந்து ஆச்சாரி யார் நம் பிள்ளைகளின் கல்வியின் வாயில் மண்ணைப் போட்டு விட்டாரே, இதற்கு கேள்வி இல்லையா? என்று கேட்டார்கள்.


அதற்கு பெரியார், நீங்கள் இதற்காக ஆச்சாரியாரை ஒன்றும் செய்ய முடியாது. அவர் அவரது வகுப்பு நலத் திற்கு உண்மையாக நடந்து அவரால் கூடியதையெல்லாம் செய்கிறார்.

நீங்கள் உங்கள் வகுப்பு நலத்திற்கு ஆக உண்மையான கவலையுடன் பற்றுடன் நடந்து ஆச்சாரியார் வகுப் பின் கடவுள்கள் வாயில் மண்ணைப் போடுங்கள்.

பிறகு ஆச்சாரியாரால் இதெல்லாம் செய்ய முடியுமா என்று பார்க்கலாம். உங்களில் பலர் நெற்றியே சொல்ல கிறதே நீங்கள் ஆச்சாரியாருக்கு மாத்திரம் அல்ல; ஆச்சாரியார் வர்க்கத்திற்கே அடிமை என்று - உங்களால் அவரை அசைக்க முடியுமா?

திராவிடர் கழகம் சொல்லுகிறபடி கேளுங்கள். உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் ஏற்பட்ட, ஏற் படும் ஆபத்துகளை 'ஒருவாறு  ஒழிக் கலாம்.'' - என்று சொல்லி அனுப்பினார்.

- விடுதலை' (7.5.1953)
- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக