பெரியார் ஈ.வெ. ராமசாமி, தோழர் கள் மணியம்மை, ஆனைமலை நரசிம் மன் ஆகியவர்கள் கல்கத்தா, கான்பூர் ஆகிய இடங்களில் முறையே நடந்த ராய்பார்டி மாநாட்டுக்கும், பிற்படுத்தப் பட்ட (பார்ப்பனரல்லாதார்) மாநாட்டுக் கும் மற்றும் சில ஊர்களுக்கும் 21.12.1944-இல் புறப்பட்டுச் சன்று இன்று (6.1.1945) காலை ஈரோடு வந்து சேர்ந்தார்கள்.
கல்கத்தா மாநாட்டில் வாலிபர் களுக்கு அறிவுரையாக சிறிது நேரம் பெரியார் தமிழில் பேசினார். அதைத் தோழர் எஸ். முத்தைய்ய முதலியார், சி.அய்.இ., அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார்.
பின் கான்பூர் எல்லா இந்திய பிற்பட்ட (பார்ப்பனரல்லாதார்) வகுப்பு லீக் மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரம் பேசினார். அதை லீக்காரியதரிசி கவுரி சங்கர் லால் எம்.ஏ.பி.எல்., அவர்கள் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். மாநாட்டில் இரண்டாவது மூன்றாவது நாள் நடவடிக்கைகளிலும் 2வது நாள் விஷயாலோசனைக் கமிட் டிக் கூட்டத்திலும் பெரியார் தலைமை வகித்து திராவிட கழக இயக்க தீர்மா னம் பலவற்றை அதில் நிறைவேற்றச் செய்தார். முடிவுரையாக அரைமணி நேரம் ஆங்கிலத்தில் பேசினார்.
நடவடிக்கைகளும் சொற்பொழிவு களும் அடுத்த வாரம் வெளி வரும்.
அங்கு நடந்த தீர்மானங்களில் முக்கியமானது எல்லா இந்திய பிற்பட்ட இந்துக்கள் லீக் என்று இருந்து வந்த பெயரை மாற்றி பிற்பட்ட வகுப்புப் பெடரேஷன் ஆப் இந்தியா என்று மாற்றப்பட்டது முக்கியமானதாகும். இந்தியா முழுவதிலுமுள்ள பிற்பட்ட வகுப்பார் (பார்ப்பனரல்லாதார்) தாங்கள் இந்துக்கள் (ஆரியர்கள்) அல்ல என் பதை ஒப்புக் கொள்ளும்படி பெரியார் செய்துவிட்டார்.
மனுஸ்மிருதி, இராமாயணம், கீதை ஆகியவை எரிக்கப்பட வேண்டும் என் கின்ற ஒலி, கான்பூரையே கலக்கி விட்டது.
இராவணனுக்கு ஜே! சம்பூகனுக்கு ஜே! என்று காவி உடை தரித்த சாமி யார்கள் வானம் முட்டக் கூவினார்கள்.
மேற்கண்ட பெடரேஷனுக்குத் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு 60 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டிகளில் இருந்து ஒரு காரியக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்படவும், அதில் பெரியார் தன் இஷ்டப்படி 5 பேர்களை நியமித்துக் கொள்ளவும் தங்கள் பெட ரேஷனோடு இணைத்துக் கொள்ளவும் தீர்மானம் செய்யப்பட்டது. அங்கு வந்த பல மாகாண பிரதிநிதிகளும் இந்தியா முழுவதுக்கும் திராவிடர் பெடரேஷன் ஏற்படுத்த ஒப்புக் கொண்டார்கள்.
மாநாட்டிற்குத் தலைமை வகித்த டாக்டர் M.N.சர்க்கார் அவர்களுக்கு இவை பிடிக்காததால் அவர், பகுதியில் எழுந்து போய் விட்டார். பிறகு இரண்டு நாளும் பெரியாரே தலைமை வகித்து நடத்தினார்.
-குடிஅரசு 6.1.1945
-விடுதலை,13.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக