பூதங்களின் வேலையாம்!
இலேசான பாத்திரம் ஒன்றையும், கனமான பாத்திரம் ஒன்றையும் உயரமான ஒரு இடத்திலிருந்து கீழே போட்டால், கனமான பாத்திரம் சீக்கிரம் கீழே விழுந்து விடும் என்றும், இலேசான பாத்திரம் கீழேவிழ அதிக நேரம் பிடிக்கும் என்றும் மக்கள் கருதி வந்தார்கள். 15, 16ஆம் நூற்றாண்டுவாக்கில், கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி இத்தாலியில் உள்ள சாய்வுக் கோபுரத்தின் மேல் ஏறி நின்று இலேசான பாத்திரம் ஒன்றையும் கனமான பாத்திரம் ஒன்றையும் ஒரே நேரத்தில் கீழே போட்டுக் காட்டி இரண்டும் ஒரே சமயத்தில்தான் விழுகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். ஆனால் மதவாதிகள் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். கனமானதும், இலேசானதும் ஒரே நேரத்தில் வீழ்வது ஏதோ பூதங்களின் வேலைதான் என்று அஞ்சினார்கள்.
-விடுதலை,7.8.15
ஜாதி
ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனித மானது என்ற உணர்ச்சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆதலால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல. ஜாதி ஆச்சாரங்களைப் புனித மென்று வற்புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக