திங்கள், 19 ஜூன், 2017

டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும் - சித்திரபுத்திரன்

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. 

புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஒடிப் போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப் போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்.

ஒரு மனிதன் உள்ளே வந்தால்  தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்யமுடியும். ஆதலால் நாம் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டு மேயல்லாமல் இந்த மாதிரி சக்தியல்லாத, கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

                            குடி அரசு - கட்டுரை -  28.08.1927

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக