வியாழன், 24 ஜனவரி, 2019

கல்வி



தற்காலம் கல்வியானது நமது நாட்டில் மிக்க மோசமான நிலைமையிலிருக்கின்ற தென்பதுதான் என்னுடைய அபிப்பிராய மாகும்.

அரசாங்க அறிக்கைகளின் மூலமாகவும், அடிக்கடி பிரசுரிக்கப்படும் புள்ளிகளின் மூலமாகவும் நமது நாட்டில் படித்த மக்க ளென்பவர்கள் 100க்கு 10 பெயர்கள் தானிருக் கின்றார்கள்.

பாக்கியுள்ள 90 பெயர்களும் தற்குறி களாய் தானிருக்கின்றார்கள். இவைகளிலும் பிராமணர்களைத் தள்ளி, பிராமணரல்லா தார்களில் 100க்கு எத்தனை படித்த மக் களிருக்கின்றார்களென பார்த்தோமேயா னால்,

அவர்களோ 100க்கு 5 பெயர் கூட படித்தவர்கள் இருக்கமாட்டார்கள்.

நாம் தான் அவ்வறிக்கைகளின் கடைசி வரியிலிருக்கின்றோம்.

அரசாங்க அறிக்கையிலும் பார்ப் பனரல்லாதாரில் அநேக வகுப்பார் கல்வியில் பின்னடைந்திருப்பதால்  அவர்களுக்கு என்று கல்வி சம்பளம் கூட குறைத்திருக் கிறார்கள்.

பெண்களுக்கு சம்பளமே இல்லை என்றும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆனால் மற்ற நாடுகளில் 100க்கு 50, 60, 70 சதவீதமும் இன்னும் சில நாடுகளில் நமது நாட்டுப் பார்ப்பன சமூகம் போல் 100க்கும் 100 மக்களும் படித்தவர்களாயிருக் கின்றார்கள்.

நமது நாட்டில் மட்டும் 100க்கு 90 பெயர்கள் தற்குறிகளாயிருப்பதற்கு காரண மென்ன?

அதுவும் பார்ப்பனரல்லாதார் சமூகம் 100க்கு 95,

தீண்டாதவர் சமுகம் 100க்கு 99வு ம்

பெண்கள் சமுகம் 100க்கு 99லு யும்

தற்குறிகளாயிருப்பதற்குக் காரணம் என்ன?

இதற்கு அரசாங்கமா காரணம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இதற்குக் காரணம் கண்டுபிடிக்க இது வரை நாம் என்ன செய்திருக்கிறோம்? என்ன செய்கின்றோம்? என்பதை கவனித்துப் பாருங்கள். அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா? அல்லது அரசாங்கத்தில் பணமில்லையா? அல்லது மக்களுக்கு கல்வி கற்க வேண்டுமென்கிற ஆசையில்லையா? என்பவையெல்லாம் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை? என்பதற்குக் காரணம் விளங்கும்.

சகோதரர்களே!

நமது சமுகம் இதற்கு முன் என்றைக் காவது கல்வி அறிவுடன் இருந்ததாக சொல்லக்கூடுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அப்பொழுது அதன் உண்மை தெரியும்.

சர்க்காரார் பார்ப்பனர்களுக்கு மட்டும் தானா படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்? இல்லவே இல்லையே. எல்லோரையும் ஒன்றாய்த்தானே பாவிக்கிறார்கள். ஆதலால் இதில் உள்ள சூழ்ச்சியை அறிந்தீர்களானால் விடுதலையின் உண்மை தத்துவம் விளங்கும்.

நமது மத தத்துவப்படிக்கு ஆதி காலத்திலின்னின்ன ஜாதிதான் கல்வி கற்க வேண்டுமென சட்டதிட்டங்களிருந்தன.

படிக்க ஒரு ஜாதியும், படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு ஜாதியும் இருந்து வந்ததோடு அதிலும் இன்னது இன்னது தான் படிக்க வேண்டுமென்பதுமாகிய திட்டங்களும் ஆதியிலிருந்தது.

இவைகளை, நாம் வெளியிலெடுத் துரைத்தால் எல்லோரும் ஒத்துக் கொள் கிறார்கள் ஆட்சேபனை செய்பவர்களெ வருமேயில்லை.

- தந்தை பெரியார்

“குடி அரசு”, 28.6.1931,

தொகுதி 12, ப.361

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக