வியாழன், 24 ஜனவரி, 2019

மதன் கார்க்கி எழுதிட சிலம்பரசன் பாட ஒரு குத்துப்பாடல்

சாதனைகள் பெருக வேண்டும்


‘பெரியார் குத்து’ குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு




'பெரியார் குத்து' எனும் தலைப்பில் நடிகர் எஸ்டிஆர் என்ற டி.ஆர்.சிலம்பரசன் நடித்துப் பாடியுள்ள ஆல்பம் கடந்த 15.12.2018 அன்று ‘ரிபெல் ஆடியோ’ நிறுவனத்தின் சார்பில்  வெளியாகியுள்ளது.

‘பெரியார் குத்து’ பாடல் குழுவினர் ஏற்கெனவே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

‘பெரியார் குத்து’ பாடலை திரைப்பட நடிகர் எஸ்.டி.ஆர் எனும் சிலம்பரசன் பாடி நடித்துள்ளார். கருத்துமிக்க இந்த பாடல், ஆட்டம் என காட்சிப் பதிவு அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

தந்தை பெரியார் சிலையைத் தகர்க்க நினைக்கும் கும்பலின் சதியை எதிர்த்து உடைக்கும் இளைஞர் படையின் எழுச்சியாக இப்பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையின்  முன்பாக கருப்புச்சட்டையுடன் ஆடும் இளைஞர் களின் ஆவேச ஆட்டம், கருத்துமிக்க பாடல் வரிகள் அனைவரையும் சிலிர்த்தெழச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ‘பெரியார் குத்து’ பாடல்

‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டு பிற இணைய தளங்களிலும், வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங் களிலும் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

சாதனைகள் பெருக வேண்டும்


தமிழர் தலைவர் பாராட்டு


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘பெரியார் குத்து’ பாடல் குறித்து தெரிவித் துள்ளதாவது:

பெரியார் குத்து என்ற இந்தப் பாட்டினை நம்முடைய அருமைக் கவிஞர் மதன்கார்க்கி எழுதி, எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய ‘புலிக்குப் பிறந்த புலிக்குட்டி’ எஸ்.டி.ஆர். என்று எல்லோரும் அழைக்கக்கூடிய சிலம் பரசன் அவர்கள் பாடி நடித்திருக்கிறார். இளமைக்காலம் முதற்கொண்டே நடிப்பாற் றலில் சிறந்த ஒருவர், சிறந்த இசையாற் றலையும் பெற்றிருக்கிறார் என்பதைக் கேட்கும்போது எல்லையற்ற பூரிப்பை அடைகிறோம்.

நம்மவர்கள் யார் எந்தத் துறையிலே சிறந்து விளங்கினாலும், அது எம்முடைய வெற்றி, பெரியாருடைய வெற்றி என்று மகிழ்கின்ற போக்கு திராவிடர் கழகத்துக்காரர் களாகிய பெரியார் பெருந்தொண்டர்களாகிய எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு.

நேரடியாக நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை.  அவர் தந்தையார் நமக்கு அறிமுகமானவர்.  என்றாலும், சிறு வயது முதற்கொண்டே இருக்கக்கூடிய அவருடைய நடிப்பாற்றலை அங்கொன்றும் இங்கொன் றுமாக சில நேரங்களிலே தொலைக் காட்சி களிலே, திரையரங்கங்களுக்கு  அதிகமாகப் போகாத எங்களைப் போன்ற வர்கள் பார்க்கிறோம்.

துடிப்பாக முன்னேறக்கூடிய இளைஞர். எல்லாவற்றிலுமே ஒரு தனித்தன்மையுடன் முத்திரை பதிக்கக்கூடியவர் தோழர் எஸ்.டி. ஆர். என்று அழைக்கப்படக் கூடிய அருமைப் பேரன் சிலம் பரசன் என்று சொல்லுவது பொருந்தும்.  எம்முடைய பேரர்கள் இவ் வளவு பெயரெடுக்கக்கூடிய வர் களாக புகழோடு வருகிறார்கள் என்று சொன்னால் மகிழ்ச்சி.

பொதுவாக, திரைப்படங் களுடைய குத்துப்பாட்டுகள் எல் லாம் குறிக்கோளற்ற பாட்டுகளாக இருக்கும். இது குறிவைத்த, குறிக் கோள் உள்ள ஒரு பாட்டு.

இசை அமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி  அவர்கள் காலத்தை அறிந்து, இளைஞர் களுடைய உள்ளத்தைப் புரிந்து  எல்லோ ரையும் ஈர்க்கக்கூடிய இசையைத் தந்திருக் கிறார். அந்த இசைக்கு, பேரன்களுடைய பாட்டுக்கு யாராக இருந்தாலும், வயது வேறுபாடு இல்லாமல் தாத்தாக்கள் கூட தாளம் போடுவார்கள் என்று சொல்லக்கூடிய அள விற்கு, இளைஞர்களை மட்டும் இது ஈர்க்க வில்லை, எல்லோரையும் ஈர்த்தி ருக்கிறது.  வெறும் இசையால் மட்டுமல்ல, கருத்தாலும் ஈர்த்திருக்கிறது என்பதுதான், இந்த வெங்காயத்தை உரிக்க உரிக்கத் தெரிகின்றது.

கண்களிலே நீர் வருகிறது வெங் காயத்தை உரித்தால், அது துன்பக்கண்ணீர் அல்ல,  ஆனந்தக் கண்ணீர்.

சாதனைகள் பெருக வேண்டும்.

அருமையான ஒரு குழு இதனைச் செய்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி ஆனாலும், சஞ்சய் ராகவன் ஆனாலும், ரமேஷ் தமிழ் மணி ஆனாலும், மதன் கார்க்கி ஆனாலும், இதைப் பாடிய, இளமையில் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கக்கூடிய அருமைப் பேரன் சிலம்பரசன் அவர்கள் ஆனாலும் கூட, அவர்களுடைய ஆற்றல் பெருக வேண்டும். அவர்கள் இதுபோன்ற பல முத்திரைகளைப் பதிக்க வேண்டும்.  குறிக்கோளற்று செல்வது வேறு, குறிவைத்துக்கொண்டு செல்வது வேறு. இவர்கள் குறி வைத்துச் சென்றிருக்கிறார்கள். காரணம், பாதை இல்லாத  ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை உண்டு என்பதை இவர்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் முயற்சி வெல்க.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

வளர்க இவர்களுடைய கலை ஆற்றல். நன்றி வணக்கம்

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப் பிட்டார்.

 


பெரியார் குத்து


பாடல்: மதன் கார்க்கி


பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழு


இசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி


 


ராக்கெட் ஏறி


வாழ்க்க போகுறப்ப


சாக்கடைக்குள்ள


முங்காதவே


 


சாதிச்சவன்


சாதி என்னவுன்னு


கூகுள்ள போயி


தேடாதவே


 


நான் ஒரு வார்த்த சொன்னா


உன் மதமே காலியின்னா


உன் மதத்த மூட்ட கட்டி


தூக்கி எறிவே


 


எதுத்து பேச மூளை இல்ல


உனக்கு வேற வேலை இல்ல


கண்ணுக்குள்ள ஏன் இந்த


வெறி வெறி வெறி வெறிவெறி


குழுவினர்:


{வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெங்காயம் வெங்காயம்}             (2)


 


ஆலைங்க வாழணும்


ஏழைங்க சாகணும்


போராளி நசுங்கணும்


வெக்கத்த மானத்த


ரோஷத்த கூட நீ


ஆதாரில் இணைக்கணும்


 


மானத்தோட கோடி பேரு


சண்டை போட நின்னா


நான் அவங்களோட போருலதான்


ஜெயிச்சுடுவேன் கண்ணா


 


மானம் இல்லா நீ எல்லாம்


சண்டையின்னு நின்னா


நான் மூக்க மூடி


வேற பக்கம் போயிடுவேன்


கண்ணா கண்ணா


குழுவினர் :


வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெங்காயம் வெங்காயம்               (2)


குழுவினர்


பெரியாரு குத்து


இங்க எல்லாம் பொத்து


இது யாரு குத்து


பெரியாரு குத்து


குழுவினர்


பெரியாரு குத்து


இங்க எல்லாம் பொத்து


இது யாரு குத்து


பெரியாரு குத்து


குத்து குத்து


 


அட ஓட்டுக்குத் தலைவனும்


நோட்டுக்குத் தொண்டனும்


கை ஏந்தி தான் நிக்கணும்


ஆட்சியப் புடிச்சிட


தாவியும் கூவியும்


பல்டி தான் அடிக்கணும்


 


கெழவன் சிலைய


உடைக்கும் கழுத


என்ன செஞ்சு கிழிக்கும்


அந்த பழைய


நெருப்ப திருப்பி கௌப்பி


குழம்பி நின்னு முழிக்கும்


 


உண்மையான நாயி


அது நன்றியோட கெடக்கும்


அட வேஷம் போட்டு வந்த நாயி


மானங்கெட்டு குலைக்கும்


 


உண்மையான நாயி


அது நன்றியோட கெடக்கும்


அட வேஷம் போட்டு வந்த நாயி


மானங்கெட்டு குலைக்கும்


என்ன ராசா... ஆ...


 


குழுவினர்


வவ்வவ்வோவ் வவ்வோவா


வவ்வவ்வோவ் வவ்வோவா


வவ்வவ்வோவ் வவ்வோவா


வவ் வவ் வவ் வவ்                                (2)


வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெவ்வே வே வெவ்வே வே


வெங்காயம் வெங்காயம்                (2)

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக