புதன், 2 அக்டோபர், 2024

கல்வி



ஈரோடு 'லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் ஸ்கூலில்' பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கல்வி என்னும் பொருள் பற்றி 2.3.44-ஆம் தேதி ஆற்றிய சொற்பொழிவு: 

தோழர்களே!

கல்வி என்னும் விஷயமாய் நான் பேசுவது என்றால், அதிக தைரியம் வேண்டும். ஏனெனில், மக்கள் பெரும்பாலோர்  கல்வி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக்கிறார்களோ அந்தக்கல்வி எனக்குக் கிடை யாது, பிழையற எழுதக்கூடத் தெரியாதவன் - அவையடக்கமாக  நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு வல்லினம், இடையினம் கூடச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாது. அது மாத்திரமல்ல, ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு வாக்கியத்தில் ஒரு வார்த்தை இரண்டு தடவை வருமானால் ஒரு தடவை வல்லினம் போடுவேன்; மறு தடவைக்கு இடையினம் போடுவேன் அந்த மாதிரியான நான், உங்கள் முன் கல்வி என்பதைப்பற்றிப் பேசுவது என்றால் எவ்வளவு கஷ்டமான காரியம் என்று பாருங்கள். ஆனாலும் உங்கள் விருப்பத்திற்கும் ஆசைக்குமாக ஏதோ என் அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் அதை அப்படியே ஒப்புக் கொண்டுவிடாமல், நன்றாய் ஆயோசித்துக் கொள்வது கொண்டு, தள்ளுவதை தயங்காமல் தள்ளி விடுங்கள்.

கல்வி

கல்வி என்றால் என்ன? பள்ளிக்கூடத்தில் சர்க்கார் பள்ளிக்கூட அதிகாரிகள் ஏற்படுத்தினத் திட்டப்படி அவர்கள் குறிப்பிடும் விஷயங் களைக் கொண்டு புத்தகங்களை உருப்போட்டு பரிஷை கொடுத்து தேர்வு அத்தாக்ஷி பெறுவதுயை அனேகம்பேர்  கல்வி என்று கருதி இருக்கிறார்கள். அன்றியும் இப்படிப் பட்ட கல்வி கற்பது என்பது அறிவு விளக்கத்திற்காக என்றும் சொய்யப்படுகிறது. ஆகவே கல்வி என்பதற்கு கருத்து ஒன்றும் சொல்லக் கூடியதாய் இருப்பதோடு கல்வியின் பயனாய் நடந்து கொள்ளும் நடத்தை மற்றொன்றாக இருக்கிறது. அதாவது கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படியாவது வாழ்க்கை நடப்புக்கும் பெருமைக்கும் தான் பயன்படுத்தப் படுகின்றது. இப்படி மூன்று விதமாக பயன்படுத்தப்படும் கல்வியில் மக்களுக்கு ஏற்படும் பணச் செலவும், நாள் செலவும், ஊக்கச் செயவும். அளவு சொல்ல முடியாததும் சாதாரண மக்கள் தாங்க முடியாததுமாகலே இருக்கிறது.

கல்விக்கு லக்ஷியமில்லை

 பொதுவாகவே, நான் சொல்லுவேன் நம் மக்களுக்கு கல்வி கற்பிப்பதில் நடிக்கு வணியம் ஒன்றுமே கிடை யாது. யார் எதைப் படிக்க வேண்டும் படித்த படிப்பு எதற்குப் பயன்படும்? கின்ற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடை யாது. படிப்பது என்பது எதையோ படிப்பதும் படிப்புவரக் கூடிய பிள்ளையாய் இருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் நிறுத்திவிடுவதும்,  படித்து பட்டம் பெற்றுவிட்டால்  அன்று முதலே வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக்  கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன்  தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப்பார்ப்பதும், அதற் காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவைதான் தங்களது கவ்வியின் தன்மையாய் இருக்கிறது. எந்த வேலைக்கு  எவ்வளவு படிப்பு வேண்டும்  என்பதில் மனிதனுக்கு சிறிதும் ஞானமே கிடையாது. தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே கல்வியைப் பயன்படுத்துவது என்பது கல்வியின் பயனாக ஆகி விட்டதால், கல்விகல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம் என்பதை விட கற்றவர்கள் என்பவர்களுடைய ஞானமும் ஒழுக்கமும் மிக மிக மோசமாகவே இருக்கும்படி படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டுவிட்டது. கல்வி தந்திரத்திற்கும் மற்ற மக்களை ஏய்ப்பதற்கும் கற்றிருக்கிறோம் என்பதற்காக சராசரி மனிதத்தன்மையை விட பல மடங்கு தங்களை பெரியவர்களாக எண்ணிக் கொள்ளவும் நடவடிக்கையில் சராசரி மனித நாணயத்தை நடத்தையை விட பல மடங்கு மோசமாய் நடக்கவும் ஏற்பட்டு விடுகிறது.

கல்வி மக்களைச் சுரண்டுகிறது 

இன்றைய கல்வி, கல்வியின் பேரால் மற்ற மக்களைச் சுரண்டுவதற்கே பயன்படக் கூடியதாக ஏற்பட்டு விட்ட தால் கல்வி கற்றவர்கள் என்பவர்களுக்கு மற்ற மக்கள் நலத்தைப்பற்றிக் கவலையே இல்லை. அதிலும் இராஜ தந்திரம், அரசியல் என்கின்ற இரண்டு தலைப்பின்கீழ் எவ் வளவு அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் குறை கூறப்படுவதில்லை. ஆத லால் கற்றவர்கள் என்பவர்கள் தங்களது நாணயமற்ற தன் மையை நடத்திப் பயன் பெற அரசியலையும் இராஜதந்திரத் தையும் கையாள மோகம் ஏற் பட்டு விடுகின்றது. ஆகவே இன்றைய கல்வி; அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும், அன்புக்கும் பயன்படுவது இல்லை என்பது மாத்திரமில்லாமல் பல கேடுகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.

இதில் மற்றொரு தன்மை  என்னவென்றால் கல்வி கற்பது என்று செல்வவான்களுக்கும், செல்வ சௌகரி யம் இருப்பவர்களுக்கும் எவ்வளவும் ஒழுக்கம், நாணயமும்,மானமும் இல்லாமல் பணம் தேடத் துணிகின்றவர் களுக்கும் தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிகின்றது. சிறிய பணக் காரர், சிறிய வரும்படிக்காரர் சராசரி வாழ்க்கைக்காரர்கள், நாணயத்துக்கும் மானத்துக் கும் பயந்து வாழ்க்கை நடத்து கிறவர்கள் ஆகியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தார்களேயானால் அவர்கள் மிக்க ஏழ்மைக் குடும்பஸ்தர்களாகவும் தரித்திரர்களாகவும் சதா துன்ப வாழ்க்கை நடத்துகிறவர் களாகவும் ஆகிவிட நேரிடுகின்றது.

சர்க்கார் நிலை

சர்க்காருக்கு இந்தக் கல்வியைப்பற்றிய ஒரு பொறுப்புணர்ச்சியே கிடை யாது என்றே சொல்லலாம். சாதாரணமாக சர்க்காரின் கல்வித் திட்டத்தின் கருத்து என்னமாயிருக்குமென்று யூகித்தறியவே முடியாமல் போகின்றது. ஆனால் அது எப்படி முடிகின்றது என்று பார்த்தால், அநாகரீக மக்கள் அல்லது கீழ்தர மக்கள் செல்வவான்கள் ஆகாமல் கஷ்ட வாழ்வு நடத்தும்படி செய்வதறகு கள்ளுக்கடைகள், சூதாடுமிடங்கள், விபசாரி இல்லங்கள் எப்படி இருந்து வருகின்றனவோ அதே போல் நாகரீக உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டு வறுமை வாழ்வுவருகின்றனவோ அதே போல் நாகரீசு உணர்ச்சி உள்ள மக்கள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டு வறுமை வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கவும் கையில் ஏதாவது ஒரு சிறு அளவும் சேர்த்து வைக்க முடியாமல் அடிமைத் தன் மைக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவும் மக்களைக் கட் டாயப்படுத்துவதற்கு அனு கூலமாக யோசித்துச் செய்யப்பட்ட காரியம் என்றுதான் கருத வேண்டியதிருக்கிறது.

கோவில், பண்டிகை, திரு விழா, சடங்கு முதலியவை களும் பெருவாரியான மக் களை இந்த நிலைக்குத்தான் கொண்டு போகிறது என்று சொல்லப்பட்டாலும் அது வருணாச்சிரம தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த காரியம் என்னலாம். ஆனால் இந்தப் படிப்பு முறை அரசியல் ஆதிக்கத்தைக் குறி வைத்து ஒரு கூட்ட மக்களை அரசியல் அடிமையாக இருப்ப தற்கு ஆகச் செய்த காரியம் என்றால் எண்ணத்தில் மாற்றம் இருந்தால் இருக்கலாமே ஒழிய பயனில் மாற்றமிருக்காது என்பேன்.

Β.Α. Μ.Α.

சர்க்காரார் மக்களை பி.எ.. எம்.ஏ., படிக்க வேண்டும் என்று சொல்லுவதிலோ, அந்த யோக்கியதாம்சம் வேண்டு மென்று கேட்பதிலோ, அதற்கு ஆக சர்க்கார் பொருள் செலவழித்து ஸ்தாபனம், இலாகா ஏற்படுத்தியிருப்பதாலோ என்ன நியாயமும் அவசியமும் கண்டுபிடிக்க முடிகிறது என்று கேட்கிறேன். 

சர்க்கார் உத்தியோகத்துக்கு பி.ஏ வகுப்பு தேர்வு வேண்டியிருக்கிறது. அந்த பி.ஏ தேர்வுக்கு இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் (சயின்ஸ்) முதலியதை படித்து உருப்போட்டு சேர வேண்டியிருக்கிறது. இந்த படிப்புக்காரர்களுக்கு சர்க்கார் கொடுக்கும் உத்தியோகங்களுக்கு அவர்கள் உத்தியோகம் பார்க்கும் காலங்களில், அல்லது தன்மைகளில் மேற்கண்ட இலக்கியம், பூகோளம், சரித்திரம், கணக்கு, சயின்ஸ் இவ்வளவு தேவை இருக்கிறதா? என்று கேட்கிறேன். அல்லது பயன்படுகிறதா என்று கேட்கிறேன் தேவை இல்லை என்றால் சர்க்கார் செய்வது தப்பான காரியமா இல்லையா என்று கேட்கிறேன் ஒரு முஸ்லிம்கத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக்கியதாம்சம் இருந்தால் போதும் என்றும், ஒரு ஆதிதிராவிடன் வேலைக்கு வந்தால் அவனுக்கு ஒரு யோக்கிய தாம்சம் இருந்தால் போதும் என்றும், ஒரு திராவிடனும், ஒரு ஆரியனும் (பார்ப்பனனும்) உத்தியோ கத்திற்கு வந்தால் அவனுக்கு ஒரு மாதிரி யோக்கியதாம்சம் இருக்க வேண்டுமென்றும் ஒரு அய்ரோப்பியனுக்கோ, அல்லது ஒரு ஆங்கிலோ இந்தியனுக்கோ வேறு மாதிரி -யோக்கியதாம்சம் இருந்தால் போதும் என்றும் தரம் பிரித்திருப்பதின் கருத்து என்ன?

முஸ்லீமுக்கும், ஆதிதிராவிடனுக்கும் சற்று குறைந்த படிப்பு யோக்கியதாம்சம் போதும் என்று சர்க்கார் ஒரு பத்ததி வைத்திருக்கிறார்கள். இந்த இரு சமூகத்தாரும் திராவிடர், ஆரியர் என்கின்ற இரு சமூகத்தாரைவிட அதி புத்திசாலிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்கு கல்வி யோக்கியதை குறைக்கப் பட்டு இருக்கிறதா? அல்லது அவர்கள் புத்திசாலித்தனத்துக்கு அவ்வளவுதான் படிக்க முடியும் என்று கருதி குறைக்கப்பட்டிருக்கிறதா?

(குடிஅரசு'1.4.1944)

விடுதலை ஞாயிறு மலர்,23.9.2001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக