10.01.1948 - குடிஅரசிலிருந்து..
நம் எதிரிகள் காலித்தனம் செய்து கல்லையும் மண் ணையும் வாரி இறைத்துக் கழுதைகள் போலவும், நாய்கள் போலவும், கத்தி ஊளையிட்டும் மக்கள் ஓடாமல் வந்து கூடி இவ் வளவு நிசப்தமாக உட்கார்ந்து கவனிப்பதின் கருத்து என்ன? இன்றைய இந்தியா பூராவும் முக்கியமானதாகக் கருதிக் கவனித்துப் பேசப்பட்டு வரும் பாகப்பிரிவினைச் சங்கதியைப் பற்றி மக்கள் கொண் டுள்ள ஆர்வமும் கவனமுமேயாகும்.
பாகப்பிரிவினை துரோகமோ பாவமோ அல்ல
பாகப்பிரிவினை என்பது துரோக மானதோ குடும்ப பற்றில்லாததோ அல்லது பாவமானதோ ஆன காரியம் அல்ல. அதிலும் இன்று நாம் கேட்கும் பாகப்பிரிவினை எந்த விதத்திலும் புதியதோ சாத்திய மற்றதோ ஆன காரிய மல்ல.
இந்தியர் ஏக குடும்பம் என்பது சூழ்ச்சி
இந்தியா என்று, ஒரு பொதுக் குடும்பம் (நாடு) எப்போதும் இருந்த தில்லை. நம் குடும்பத்தின் (நாட்டின்) பயனை மற்றவன் அனுபவிப் பதற்கு ஆகப் பல குடும்பங் களை ஒன்றாகப் பிணைத்து வெள்ளையர் உருவாக்கிப் பயன் அனுபவித்து வரு கிறார்கள். குடும்ப மக்கள் கூப்பாடு போடாமல் இருப் பதற்கு முன்னணியில் இருப் பவனை (ஆரியனை) சுவா தீனப் படுத்திக் கொண்டு அவனுக்குச் சற்று அதிக போஷனைக் கொடுத்து மற்றவர்களை அந்தகாரத்தில் ஆழ்த்தி வைத்து பலன் அனு பவிக்கச் செய்த சூழ்ச்சிதான் இன்று இந்தியர் ஏக குடும்பம் என்பது. இந்தியாவில் உள்ள நாம் எல்லோரும் ஒரு குடும்ப மக்கள் அல்ல. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையுமல்ல. நம் எல்லோருக் குமாக ஒரு தகப்பனும் இல்லை. நாம் வேறு வேறு குடும்பத்தவர்கள். நம் தாய் தந்தையர்கள் வேறு வேறு. சிறையில் இருப்பவர்களுக்கு சூப் ரெண்டும், ஜெயிலரும் குடும்பத் தலைவராக முடியுமா? காண்விக்ட் வார்டர்கள் நமது காப்பாளர்களாகி விடுவார்களா? அதுபோல் வெள்ளை யருக்காவது, அவர்களின் சமீபத்திய வர்க்கத்தாரான ஆரியர்களுக்காவது, நமக்குத் தலைவர்களோ காவலாளர் களோ ஆக உரிமையில்லை. இதை நான் ஆங்கிலேயர் எழுதிய சரித்திரப் படியும் ஆரியர்கள் எழுதி வைத் திருக்கும் சரித்திரபடியுமே சொல் லுகிறேன்.
பிரிவினை இன்றேல் பெரும் நாசமே
சொந்த சகோதரர்கள், தாங்கள் ஒருவருக்கொருவர் பிரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதை மூத்த வன் கேட்காமல், தன் சுயநலத்தையும், சுரண்டுதலையும் உத்தேசித்துப் பிரிந்துகொள்ள சம்மதிக்கா விட் டாலே, கலகம் ஏற்பட்டு மொத்தக் குடும்பமும் நாசமாய்ப் போய் வருவதை நாம் தினமும் பார்த்து வருகிறோம். அப்படியிருக்க, வேறு வேறு குடும்பத்தார் அதுவும் வேறு வேறு நாட்டாரும், வேறு வேறு மதத்தாரும், வேறு வேறு வர்க்கத்தாரு மானவர் களைச் சேர்த்துப் பிணைக் கப்பட்ட குடும்பத்தார் பிரிந்து போக வேண்டுமென்றால், மூத்தவன் மேல் பார்வை பார்த்து வருபவன் இணங்காவிட்டால், தடுத்தால், கலகம், குத்துப்பழி, வெட்டுப்பழி ஏற்படுவது சகஜம்தான். வீட்டையும் கடையையும் இழுத்துப் பூட்டுவதும், நிலத்தை தரிசு போடச் சண்டித்தனம் செய்வதும் அதிசயமல்ல. கண்டிப்பாய் இது நடந்துதான் தீரும். அதிலும் இந்த நாட்டின் உண்மையான மக்களாகிய நாம், இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்த அந்நிய மக்களிடமும், சுரண்ட வந்த அந்நிய கூட்டத் தாரிடமும், பங்கு கேட்பது போலவும், அவன் மகா சொந்தக்காரன் கரிசனக் காரன் போல் மறுத்து வேஷம் போட்டுக் கள்ள அழுகை அழுது தடுப்பதும் எப்படி இருக்கிறதென் றால், ஒரு தனவானின் உண்மையான மக்கள் குடும்பத்தை, தகப்பனின் வைப்பாட்டி மகன் வந்து பாத்தியம் கொண்டாடி, சொந்த மக்களை அடக்கி ஆள்வது போல் இருக்கிறது. முஸ்லிம்கள் தாங்கள் அதிகமாக வசிக்கும் நாட் டைப் பிரித்து, அந்நாட்டு நலனுக்கு வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்து கொள்ளத் தங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்று தங்களை ஜெயித்துச் சுவாதீனம் கொண்ட வெள் ளைக்காரர்களைக் கேட்கிறார் தவிர, ஆரியனிடம் கெஞ்சவில்லை.
காட்டிக்கொடுத்த என்னை, கைவிடலாமா என்கிறான் ஆரியன்
திராவிடர்கள் தங்களுடைய, தாங்கள் பாரம்பரியமாய்ச் சரித்திர காலம் தொட்டு ஆண்டு அனுபவித்து வந்த திராவிட நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட வெள்ளையரைத் தங் களுக்கும் பிரித்துக் கொடுத்துத் தங்கள் தேவைகளுக்குப், பழக்க வழக்கமான உணர்ச்சிக்கு ஏற்றபடி சட்டதிட்டம் செய்துகொண்டு முற்போக்கடையச் சுதந்திரமும், சவுகரியமும் செய்துகொடுக்கும்படி (வெள்ளைக்காரர்களைக்) கேட்கின் றார்கள். இந்நிலையில் குறுக்கே நிற்க ஆரியர்களுக்கு என்ன உரிமை? இவர்கள் இதைப்பற்றி பேசவோ கலந்துகொள்ளவோ என்ன பாத் தியம் என்றுதான் நான் கேட்கிறேன்.
ஆரியனுக்கு வெள்ளையனிடம் உள்ள உரிமை எல்லாம் நான் உள்ளாளாயிருந்து சூழ்ச்சி செய்தும், சதி செய்தும், முஸ்லிமிடமிருந்தும், திராவிடன் இடமிருந்தும் உன் கைக்கு நாடு வரும்படி செய்தேனே, மறுபடியும் அவர்கள் ஆதிக்கத்திற்கு விடுகிறாயா பிறகு என்கதி என்ன? என்று கேட்பது போல் தடுப்பதல் லாமல் வேறு என்ன பாத்தியம் என்று கேட்கிறேன். வெள்ளைக்காரன் இந்தியாவின் பல நாடுகளையும் கைப்பற்றும் போது ஆரியனுக்கு எங்காவது நாடு இருந்ததா என்று கேட்கிறேன்.
ஏன் பிரிவினை?
ஆதலால், நாம் வெள்ளையனிடம் நமது நாட்டுச் சுதந்திரத்திற்கும், நமது நாட்டு முற்போக்குக்கும், நமது நாட்டு மக்கள் சுயமரியாதைக்கும் பிரிவினை கேட்டால் இந்த ஆரியன் யார் இதைத் தடுக்க, என்கிறேன்.
தோழர் காந்தியார் முதலில் சொன்னார் அவரவர்கள் நாடுகளை அவரவர்கள் பிரித்துக்கொள்ள வேண்டுமானால் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று. பிச்சைக்கு வந் தவன் பெண்டுக்கு மாப்பிள் ளையா? ஆனால் ஆச்சாரியார் தாயை வெட் டுவதா, பிள்ளையை வெட்டுவதா, மாட்டை அறுப்பதா, கூரையைப் பிரிப்பதா என்று பழங்கால விதவை கள் போல் ஒப்பாரி வைத்தழுகிறார். தோழர் சத்தியமூர்த்தியார் வீட்டைப் பிரிக்க வேண்டுமென்பவர்களை வெளியில் பிடித்துத்தள்ள வேண்டி யதுதான் என்றார். தோழர் சவர்க்கார் நாட்டைப் பிரித்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டால் அதை பலாத்காரத்தால் அடக்கிவிட வேண் டும் என்றார். இவர்கள் எல்லோரும், பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை யாகப் பார்க்கிறான் என்பது போலல்லாமல், வேறு என்ன பாத் தியம் கொண்டு இப்படிப் பேசு கிறார்கள் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
வேதகால முதல், பேதம் தானே!
நாம் கேட்கும் பிரிவினை இன்று நேற்றுக் கிளம்பியதில்லை. குறிப்பாக திராவிடர்- ஆரியர் விஷயமும் இவர் களுக்குள் ஒற்றுமை இல்லாத தன்மையும், போராட்டமும் வேத காலம் முதல் இருந்து வருகிறது.
திராவிடர்கள் ஆரியர்களால் பல கஷ்ட நஷ்டங்களும் இழிவுகளும் அனுபவித்ததாகவும், ஆரியர்களைத் திராவிடர்கள் தங்களது பிறவி எதிரிகளாகக் கருதி வந்ததாகவும், ஆதாரங்களும் அனுபவ பூர்த்தியான நடத்தைகளும் இன்றும் காணப் படுகின்றன.
இன்றும் ஆரியன் திராவிடனை சூத்திரன், தொடக் கூடாதவன் என் கிறான்.
- விடுதலை நாளேடு 24. 5. 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக