பெரியார் ஈ.வெ.ரா. பிராமணத் துவேஷி - பிராமணர்கள் அவருக்குப் பிடிக்காது என்று பெருவாரியான பிராமணர்கள் நினைப்பதோடு பிரச்சாரமும் செய்து வருகின்றார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறு. இது பெரியாரைப் பற்றிய அவதூறுப் பிரச்சாரமாகும். பெரியார் அவர்களே பல கூட்டங் களிலும் நேரடியாக பலர் அவருடன் உரையாடிய காலத்திலும் பிராமணர் களையல்ல.
பிராமணீயத்தை யேதான் நான் எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் பிராமணீயத்தை எதிர்த்தது நாத்திக கண்ணோட்டத்தால் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. இந்தத் தத்துவமும், சமயமும் வருணாசிரம தருமம் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடங்கள் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
பிராமணீயம் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை யாகும் - வருணாசிரம தர்மம் ஜாதிப் பிரிவினை யையும், அவரவர் ஜாதிக்குரிய வேலையைச் செய்வதும் தான் அவரவர்க்கு ஈசன் விதித்த கட்டளை என்று கூறுவதையும், ஜாதிக் கொடுமைகள் சமுதாய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை போன்ற பல சீர்கேடுகளையும் நியாயப் படுத்துகின்றது.
இத்தீமைகளையே பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் கடுமையாக, வன்மையாக எதிர்த்துச் சாடி வந்தார். இந்த தத்துவ சாத்திரம் பிராமணீயத்தை தூக்கிப் பிடித்து தாங்கி நிற்கின்றது.
ஆகவே இவை எல்லா வற்றையும் எதிர்ப்ப தென்றால் கண்டதற்கெல்லாம் கடவுள் என்ற கற்பனைப் பொருளை முன் கொண்டு வந்து நிறுத் துவதை எதிர்ப்பதா கும் சுருங்கக் கூறின், கடவுள் நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங் கள் முதலியவற்றை எதிர்ப்பதென்றால் அது நாத்திகம் தான். நாத்திகத்தின் அடுத்த உயர்நிலைப்படி தர்க்க இயல்பொருள் முதல் வாதமாகும்.
இவற்றின் அடிப்படை விஞ்ஞானம் தழுவிய பகுத்தறிவேயாகும். பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் பகுத்தறிவின் சிகரமாக விளங்கி வந்தார். புகழ்பெற்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே.அய்யங்கார் (பார்ப்பனர்) பகுத்தறிவின் சிகரம் ஈ.வெ.ரா. என ஒரு நூல் எழுதியுள்ளார். பெரியாரைப் பற்றிய நூல் எழுதுவதற்கு காரணமாக இதை குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,18.7.14
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக