புதன், 11 ஜனவரி, 2017

நாம் யார்?




சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டிக் கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதியிருக்கின்றார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, நாம் அம் மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர் திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில், அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பித்து என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கிறபடியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அனேகர் நினைத் திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கை யையும் உடையவராய் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

- தந்தை பெரியார்,  குடிஅரசு: 3.5.1931

-விடுநலை,17.9.14

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக