வெள்ளி, 27 ஜனவரி, 2017

மதக் கொடுமை


10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து..

நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதாரணமாக வேத தர்ம சாஸ்திரங்களைப் பாருங்கள் அவற்றில் இன் னார்தான் படிக்கலாம். இன்னாருக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனையிருக்கிறது. இதனா லேதான் நம் நாட்டில் கல்வி இல்லை. சூத்திரன் படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப்பட்டதால் சூத்திரா என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.

மி. மேயோ பனகால் அரசரைக் கண்ட போது பார்ப்பன ரல்லாதாருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை என்றார். அதற்கு பனகால் அரசர் அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே பார்ப்பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.

திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி இந்தக் குற்றத்தை மறுக் கையில் மாட்டிக் கொண்டார். அவர் சூத்திரர்கள் வேத சாஸ்திரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாஸ்திரம், இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீசுகாரன் வந்த பிறகு தான் புதகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை.

நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை வெள்ளைக் காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100க்கு 7 வீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது. இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால் அவர்கள் மாத்திரமே படிக்கச் சவுகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.
-விடுதலை,27.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக