நான் என்னுடைய நாட்டிலே - வீட்டிலே இன்று இருந்திருந்தால் இந்த நாளைக் குடும்பத்தோடு கொண்டாடியிருந்திருப் பேன். ஆனால் இன்றைக்கு உங்களிடையே வந்ததாலே என்னுடைய குடும்பத்தை மட்டுமல்ல; மிகப் பெரிய குடும்பத்தைப் பார்க்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றிருக் கிறேன். மக்கள் வெள்ளத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கின்றேன். இங்கே என் உடன் பிறப்புகளைக் காண்கிறேன்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
மனித நேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் 25 ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிக் கொண்டி ருந்தால்கூட இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை." நான் காலையிலே ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கே நான் தந்தை பெரியாரின் தொண்டர்களை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்பதைப் பற்றிக் கூறினேன்.
நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். செய்தித்தாள்களிலே சில செய்திகளைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடிய வர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பெரியாரின் கொள்கைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.
நான் சென்னைக்கு வந்தபோது விமான நிலையத் திலிருந்து ஒரு டாக்சியிலே போய்க் கொண்டிருந்தேன். அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, மிகப்பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் வியப்பு. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை இவ்வளவு பெரிய சாலைக்கு வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்கே கண்டேன்.
இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால் இங்கர்சாலுக்கு நியூயார்க் நகரிலே இங்கர்சால் பெயரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்கமுடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்கமுடியாத ஒன்று.
(பன்னாட்டு மனித உரிமைக் கழகத் தலைவரும், நார்வே நாட்டைச் சேர்ந்தவருமான லெவி ஃபிராகல், சென்னையில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டமைப்பு மாநாட்டில் (24.12.1996) உரையாற்றுகையில் குறிப்பிட்டது)
- லெவி ஃபிராகல்
தந்தை பெரியார் 119ஆம் ஆண்டு
பிறந்த நாள் 'விடுதலை' மலர்
- விடுதலை ஞாயிறு, மலர் 14. 9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக