வெள்ளி, 4 டிசம்பர், 2015

பெரியார் சொன்ன தேங்காய் மூடி கதை


எங்கள் ஊரில் ஒரு முதியவர் இருந்தார். தேங்காய் மூடி என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும். உடனே கோபம் வந்துவிடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார், எனது சிறுவயதில் எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதேபோல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும்; ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன்? இனி தேங்காய் மூடி என்றாலே போதும், அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன்? அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையைப் பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால், நான் அடிக்கடி இங்கு வர வேண்டியது மில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி நூற்றுக்கணக்காய் இருக்கிறது தேங்காய் மூடிக் கதை.
தந்தை பெரியார்
(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய தாய்மார்களைப் பாராட்டி 14.11.1938 அன்று சென்னை பெத்துநாயக்கன் பேட்டை தமிழ்க் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)
-விடுதலை,8.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக