வெள்ளி, 4 டிசம்பர், 2015

உச்சிக் குடுமி ஒழிக! தர்ப்பைப் புல் ஒழிக!


நேற்றுவரை சட்டமீறலைத் தவறெனக் கண்டித்து வந் தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக் கூடாது என்று நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக் கூடத்தை மாமனார் வீடு போலவும் படுக் கையறை போலவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில் லை. ஒருவரை வையவோ, அடிக்கவோ வேண்டுவதில்லை. தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே, தம்பி! வா வென ஆச்சாரியார் (சென்னை மாகாண பிரதம அமைச்சராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார்) அழைத்துக் கொள்வார் நான் பிழைக்க வேண்டுமென்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாகவேண்டுமென நினைக்க வேண்டாம்.
தமிழன் வாழ்வு அவர்கட்கு பொறுக்கவில்லை. என்றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகிறார்களென்று சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன்.
பனகல் அரசர் வெற்றி பெற்ற காலத்து பனகல் இறந்தார் என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரிகளை இராட்சதர்க ளென்றும், அரக்கர்களென்றும், இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று உச்சிக்குடுமி ஒழிக! எனத் தொண்டர்கள் கூறினார்களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப்பார்த்துக் கொள்ளுகிறார். உச்சிக்குடுமி ஒழிக என்றால் என்ன?  உச்சிக்குடுமி தன்மைதானே ஒழியவேண்டுமென்பது. இதற்கு இவ்வளவு நோவும் வருவானேன்?  சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று சரிகைக் குல்லாய் ஒழிக என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000 தர்ப்பையோ இன்றி உச்சிக் குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிக என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்) பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான் இரா வணன் என்று கதை எழுதி வைத்து அந்தப் பெயரால் தமிழர்களை அழைக்கும் போது, உச்சிக்குடுமி டவாலி தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத் தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள். - தந்தை பெரியார்
(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தாய்மார்களைப் பாராட்டி 14.11.1938 அன்று சென்னை பெத்துநாயக்கன் பேட்டை தமிழ்க் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து. விடுதலை 21.11.1938, பக்கம் 1)
-விடுதலை,1.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக